PDA

View Full Version : கனவுயர யூகங்கள்!

ரசிகன்
28-02-2011, 09:03 AM
வெறுமன
பூக்கள் மட்டுமே
நிறைந்திருக்கும் காடு...

செங்குத்தான
ஒரு மர இடுக்கில்
வேட்டையாட காத்திருக்கும்
உங்களின் யூகங்கள்!

யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்
சறுக்கலான பாதைகளில்
வெட்கி ஜீவித்திருக்கும்...

கனவு தேவதைகள்
கருத்தரித்து
விட்டுச்சென்றவையாய் இருக்கலாம்...

பிறந்த பசியில் அழும்
ஒவ்வொரு பத்தியையும்
உயிர் உருவம் அற்ற
ஒவ்வொரு காதலிகள்
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!

அவள்கள்
மிக பரிச்சயமான
முகமாகவும் இருக்கலாம்...
உலகம் கண்டிடாத
ஏவாளாகவும் இருக்கலாம்!

ஜானகி
28-02-2011, 09:25 AM
ஆம், இயற்கையில் பூக்கும் பூக்களில் சில, இறைவன் பாதத்தில் அடைக்கலமாகும், சில பெண்களின் தலையை அலங்கரிக்கும், சில பூச்சாடிகளில் கொலுவேறும், சில ஆத்மாவிற்கு அர்ப்பணிக்கப்படும், சில மிதிக்கப்பட்டு நசுக்கப்படும்.....யாரும் பாதிக்கப் படுவதில்லை....

ஆனால் கவிதை மலர்களோ......உயிருள்ளவை !

நுகர்பவரின் உணர்வுக்கு ஏற்ப மேண்மையுறும் !

ஒவ்வொரு முறை அனுபவிக்கும் போதும் புதுப் புது பொருள் தரும் உயிர் ஓவியங்கள் !

வித்தியாசமான கண்ணோட்டத்தில்.....அவரவர் யூகத்திற்கு ஏற்ப அலசப்படும்

ரசிப்புத் தன்மை இருக்கும் வரை கவிதை மலர்களும் நுகரப்படும்....

கீதம்
01-03-2011, 09:51 PM
நிர்ணயிக்கப்படாத இலக்குகளோடு வேட்டையாடக் காத்திருக்கும் யூகங்களே சிலவமயங்களில் கவிதைகளுக்கு உயிர்பிச்சை அளித்தும் காக்கின்றன. பாராட்டுகள் ரசிகன்.

Nivas.T
02-03-2011, 05:15 AM
எவ்வளவு தான் உங்கள பாராட்றது ரசிகன்

வார்த்தைகள் கிடைக்கவில்லை

கவிதை அழகு

ரசிகன்
04-03-2011, 12:18 PM
ஆம், இயற்கையில் பூக்கும் பூக்களில் சில, இறைவன் பாதத்தில் அடைக்கலமாகும், சில பெண்களின் தலையை அலங்கரிக்கும், சில பூச்சாடிகளில் கொலுவேறும், சில ஆத்மாவிற்கு அர்ப்பணிக்கப்படும், சில மிதிக்கப்பட்டு நசுக்கப்படும்.....யாரும் பாதிக்கப் படுவதில்லை....

ஆனால் கவிதை மலர்களோ......உயிருள்ளவை !

நுகர்பவரின் உணர்வுக்கு ஏற்ப மேண்மையுறும் !

ஒவ்வொரு முறை அனுபவிக்கும் போதும் புதுப் புது பொருள் தரும் உயிர் ஓவியங்கள் !

வித்தியாசமான கண்ணோட்டத்தில்.....அவரவர் யூகத்திற்கு ஏற்ப அலசப்படும்

ரசிப்புத் தன்மை இருக்கும் வரை கவிதை மலர்களும் நுகரப்படும்....
என்ன ஒரு தகுதியான பின்னூட்டம்.... நன்றி நன்றி ஜானகி :)

ரசிகன்
04-03-2011, 12:19 PM
எவ்வளவு தான் உங்கள பாராட்றது ரசிகன்

வார்த்தைகள் கிடைக்கவில்லை

கவிதை அழகு
நன்றி சொல்லவே உனக்கு... நிவாஸ்... வார்த்தை இல்லையே :)

ரசிகன்
04-03-2011, 12:20 PM
நிர்ணயிக்கப்படாத இலக்குகளோடு வேட்டையாடக் காத்திருக்கும் யூகங்களே சிலவமயங்களில் கவிதைகளுக்கு உயிர்பிச்சை அளித்தும் காக்கின்றன. பாராட்டுகள் ரசிகன்.
அடடா! ஹ்ம்ம் ஆம் கீதம்.. நன்றி :)

ஷீ-நிசி
06-03-2011, 12:46 AM
பிறந்த பசியில் அழும்
ஒவ்வொரு பத்தியையும்
உயிர் உருவம் அற்ற
ஒவ்வொரு காதலிகள்
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!

ரசித்த வரிகள்.... பசியாற்றினால் மட்டும் போதுமா.... கொஞ்சவும் வேண்டுமல்லவா?!! :) வார்த்தை பிரயோகம் அழகு..

வாழ்த்துக்கள் நண்பரே!

ரசிகன்
07-03-2011, 12:15 AM
@ஷீ-நிசி

நான் ரசித்த நபரில்... மிக முக்கியமான கவிஞர் நீங்கள்! நீங்கள் பின்நூட்டமளித்திருப்பது... ஒரு அதி உற்சாகத்தை கொடுக்கிறது....
மிக்க நன்றி! :):):)

ஷீ-நிசி
07-03-2011, 04:15 PM
@ஷீ-நிசி

நான் ரசித்த நபரில்... மிக முக்கியமான கவிஞர் நீங்கள்! நீங்கள் பின்நூட்டமளித்திருப்பது... ஒரு அதி உற்சாகத்தை கொடுக்கிறது....
மிக்க நன்றி! :):):)

எனக்கும் :icon_b:

அக்னி
14-03-2011, 02:44 PM
பூக்களைக் கொட்டிச் சென்ற
கனவுகள்,
காம்புகளைக் களவாடிச் சென்றதென்ன...

காம்பில்லாப் பூக்கள்
காடாயிருந்தாலும்
சடுதியில் வாடிடுமே...

இக்கவிப்பூக்களை வாழவைக்க,
ஏவாள் மீண்டும் வரத் தேவையில்லை...
காம்பு கூட ஒட்டி வரத்தேவையில்லை...
ஒரு (இந்த) ரசிகன் மட்டுமே
போதுமானாவன்...

பாராட்டு ரசிகா...

ஜானகி அவர்களின் பின்னூட்டம் சிறப்பு...
கீதம்+அக்காவின் பின்னூட்டம் வித்தியாசக் கவனிப்பு...
ஷீ-நிசியின் பின்னூட்ட ரசிப்பே எனதும்...

கலாசுரன்
21-03-2011, 11:42 AM
யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்

அட்டகாசம் ..!!

ரசிகன்
27-03-2011, 07:40 PM
பூக்களைக் கொட்டிச் சென்ற
கனவுகள்,
காம்புகளைக் களவாடிச் சென்றதென்ன...

காம்பில்லாப் பூக்கள்
காடாயிருந்தாலும்
சடுதியில் வாடிடுமே...

இக்கவிப்பூக்களை வாழவைக்க,
ஏவாள் மீண்டும் வரத் தேவையில்லை...
காம்பு கூட ஒட்டி வரத்தேவையில்லை...
ஒரு (இந்த) ரசிகன் மட்டுமே
போதுமானாவன்...

பாராட்டு ரசிகா...

ஜானகி அவர்களின் பின்னூட்டம் சிறப்பு...
கீதம்+அக்காவின் பின்னூட்டம் வித்தியாசக் கவனிப்பு...
ஷீ-நிசியின் பின்னாட்ட ரசிப்பே எனதும்...
என்னையும் எனது படைப்பையும் ஊக்குவிக்கிறது உங்கள் பின்னூட்டம்.. நன்றி அக்னி :-)

ரசிகன்
27-03-2011, 07:41 PM
யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்

அட்டகாசம் ..!!
@கலாசுரன்
:-) :-) :-)

இளசு
14-04-2011, 07:58 PM
குழந்தையை அலங்கரித்துக் கூடத்தில் இட்டு
வந்த விருந்தினரில் எத்தனை பேர் கொஞ்சினர்
என அடிக்கடி எட்டிப்பார்க்கும்
வெட்கங்கெட்ட தாய்..... எனக்

கவிஞர் தம்மையே வர்ணித்துக்கொண்ட
கவிதை நம் மன்றத்தில் உண்டு..

இங்கே ரசிகனின் படிமம் இன்னொன்றாய்..

பூக்காடு - கவிதைக்காடு
வேட்டையாளி - புதுமுகமா பழைய ரசிகரா
தேனருந்துவதே பூவின் பசியாற்றுமா..

கவிதை அருமை..

ஜானகி, கீதம், ஷீ, அக்னி என அனைவரின் பின்னூட்டங்களும் அபாரம்...

வாழ்த்துகள்..

ரசிகன்
18-04-2011, 09:05 AM
நன்றி நன்றி :-)