PDA

View Full Version : எப்படி சமன் ஆகும்?



M.Jagadeesan
28-02-2011, 02:35 AM
நேற்று நடந்த மட்டையடி விளையாட்டில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 338
ஓட்டங்கள் எடுத்தன.ஆனால் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்கள்
எடுத்தது.விளையாட்டு சமனில் முடிவுற்றதாக அறிவித்தனர்.எப்படி சமன் ஆகும்?
ஓட்டங்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டவர்கள், விக்கெட்டுகளின்
எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாதது ஏன்? விக்கெட் விழுகைகளின் அடிப்படை
யில் பார்த்தால் நம்மைவிட ஒரு விக்கெட் குறைவாகத்தானே அவர்கள் இழந்து
உள்ளனர்.எனவே திறமைசாலி அவர்கள்தானே? வெற்றி அவர்களுக்குத் தானே போய்
சேரவேண்டும்?

கிரிக்கெட் வல்லுநர்கள் விளக்கவும். விதிகள் அப்படி உள்ளது என்று சொல்லவேண்டாம்.

அன்புரசிகன்
28-02-2011, 02:55 AM
இப்படியான கணக்கு முறை டக்வத் முறையில் தான் தேவைப்படுமே அன்றி மற்ற வேளைகளில் அல்ல. அப்படியானால்
இங்கிலாந்து 50 ஓவரில் பெற்ற ஓட்டத்தை இந்தியா 49.5 ஓவரில் பெற்றிருந்தது. அப்படியானால் யாருடைய ஓட்டவீதம் அதிகம். இந்தியாவினுடையதே. அப்போ இந்தியா தான் வெற்றி பெற வேண்டுமா...

விக்கட்டுக்கள் மட்டும் வைத்து நிர்ணயிக்க முடியாதே???

M.Jagadeesan
28-02-2011, 03:58 AM
ஓட்டங்களின் எண்ணிக்கையும், விக்கெட்டு இழப்புகளின் எண்ணிக்கை
யும் சமமாக இருந்தால் வெற்றியை முடிவு செய்ய ரன் விகிதத்தை
அடிப்படையாகக் கொள்ளலாம்.

aren
28-02-2011, 04:21 AM
இந்த மாதிரியான விதிமுறைகள் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே எழுதப்பட்டுவிட்டன. ஆகையால் அதை வைத்தே போட்டியின் முடிவை கணக்கில் கொள்வார்கள். குறைந்து விக்கெட்டில் ரன் குவித்திருந்தால் வெற்றி என்று விதிமுறையில் எழுதியிருக்கமாட்டார்கள். இந்த ஆட்டத்திற்கு பிறகு அந்த விதிமுறையை மாற்றினாலும் மாற்றலாம்.

இருந்தாலும் இரண்டாவதாக ஆடுபவருக்கு எவ்வளவு அடிக்கவேண்டும் என்று தெரியுமாதலால், எனக்குத் தெரிந்தவரை இந்த விதிமுறையை ஏற்றுக்கொள்ளமுடியாது.

நாஞ்சில் த.க.ஜெய்
28-02-2011, 06:16 AM
ஆரோன் அண்ணா கூறுவது மிகவும் சரி .நேற்றைய தினம் இப்போட்டியில் நமது அணியிற்கு எதிரான அந்த அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது ..ஆட்டத்தின் 42 ஓவர் முடிவில் அவர்கள் எடுத்திருந்த ஓட்டங்கள் விகிதம் நமது அணியினரை காட்டிலும் கிடத்தட்ட 20 ஓட்டங்கள் அதிகம் அப்படி இருந்து அந்த அணியினரால் இவ்விலக்கை எட்டவில்லை இது இந்திய அணியினரின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் இறுதிகட்ட பந்தை பிடித்த வீரர்களின் சிறப்பினை இது காட்டுகிறது ..விக்கெட்டுகள் அதிகம் இருந்தும் வெற்றிபெற இயலவில்லை அப்படிப்பட்ட ஒரு அணிக்கு இவ்வெற்றி சாத்தியப்படாது...இவுலககோப்பையில் காலிறுதியில் மற்றும் அதற்கு பிறகு இது போன்ற ஒரு நிலை இருப்பின் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி நிர்ணயிக்கப்படும் ...

கௌதமன்
28-02-2011, 12:37 PM
கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு இத்தனை ஓட்டங்கள் என்ற சமன்பாடு இப்போது இல்லை. [அப்படியும் விளையாடலாம். முன்பு சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் காட்சிப் போட்டிகள் நடத்தினார்கள்.அதில் விக்கெட்டுக்கு ஓட்டங்கள் வழங்கும் முறை இருந்ததது. ] ஆனால் நண்பர் சொன்னது போல் விக்கெட்டையும் கணக்கில் கொள்ளும் முறை எதிர்காலத்தில் வரலாம். கிரிக்கெட்டில் விதிகள் என்பது மாறிக்கொண்டேதானே வந்திருக்கிறது. கிரிக்கெட்டில் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமானால் இதுபோன்ற புதுமைகள் வரத்தான் செய்யும்.

arun
27-01-2012, 07:39 PM
முக்கியமான போட்டிகளில் மட்டுமே விக்கெட்டும் கணக்கெடுத்து கொள்ளப்படும் அதுவும் முன்னரே விதிமுறைகளை வகுதாலொழிய விக்கெட்டை கணக்கெடுத்து கொள்ள மாட்டார்கள்