PDA

View Full Version : பின்னூட்டம்



M.Jagadeesan
27-02-2011, 05:35 AM
பின்னூட்டம் என்பது ஒரு தனிக்கலை.எல்லோராலும் சிறந்த பின்னூட்டத்தை எழுத
முடியாது.சில சமயங்களில் படைப்புகளைவிட பின்னூட்டம் சிறப்பாக இருப்பதுண்டு.
திருக்குறளுக்கு நிகரான பெருமை பரிமேழலகரின் உரைக்கு உண்டு என்பது நாம்
அனைவரும் அறிந்ததே!

எனவே சிறந்த பின்னூட்டம் இடுபவர்களைச் சிறப்புச்செய்ய வேண்டும் என்பது என்
கருத்து.சிறந்த பதிவாளர்களுக்கு "மனங் கவர் பதிவாளர்" விருது அளிப்பதுபோல
சிறந்த பின்னூட்டம் இடுபவர்களுக்கு "பின்னூட்டத் திலகம்" என்ற விருது அளித்து
சிறப்புச் செய்யலாம் என்பது என்னுடைய கருத்து.இது ஒவ்வொரு மாதமும் அளிக்க
லாம்.

கலையரசி
27-02-2011, 05:43 AM
நல்ல பின்னூட்டமும், விமர்சனமும் படைப்பாளிக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் டானிக்காக செயல்படுகிறன. எனவே நீங்கள் சொன்னது மிகவும் நல்ல யோசனை தான்.

அமரன்
27-02-2011, 06:12 AM
ஜெகதீசன்..

விமர்சகர்களுக்கு விருதளிக்கும் உங்கள் யோசனை சிறந்தது. நன்றியும் வாழ்த்தும்.

எப்படி நடத்துவது என்ற ஆலோசனை நடந்து கொண்டிருக்கு. நண்பர்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.

உமாமீனா
27-02-2011, 06:38 AM
ஆகா இதை இதைதான் எதிர்பார்த்தேன் - அய்யோ..ய்யோ யார்க்கு கிடைக்குமோ நிச்சயமா எனக்கில்லை..எனக்கில்லை கிடைக்காது.....கிடைக்காது ய்யோ..இந்த நேரம் பார்த்து கையும் ஓடலை..காலும் ஓடலையே

கௌதமன்
27-02-2011, 12:12 PM
இது பற்றி ஏற்கனவே ஒரு தனித்திரியில் என் பதிவினை வைத்திருந்தேன்.

---> பின்னூட்டம் ஒரு கலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26150)

நண்பர் ஜெகதீசன் கூறுவதற்கு நான் உடன்படுகிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-03-2011, 07:42 AM
இது போன்ற சில பதிவுகளை மன்றத்தில் கண்டுள்ளேன் ...இது வரவேற்க்கப்பட வேண்டிய ஒரு பதிவு...இதன் மூலம் பின்னோட்டம் இடுபவர்கள் எண்ணிக்கை கூடும்...ஒவ்வொரு சிறந்த பதிவிற்கும் இணையகாசினை உயர்த்தியும் அதே நேரத்தில் தரமற்ற விவாதத்தினை தூண்டும் மற்றவர்கள் மனதினை புண்படுத்தும் பதிவிற்கு மற்றும் பின்னோட்டத்திற்கு இணையகாசினை குறைக்கலாம் ..

Nivas.T
01-03-2011, 07:46 AM
நல்ல யோசனை,

பின்னூட்ட சிங்கங்கள் நிறைய உண்டு

நல்ல வேட்டை தான்

M.Jagadeesan
01-03-2011, 08:29 AM
மன்றத்திலே பின்னூட்டப் புலிகளும் நிறைய உண்டு.

ஜானகி
01-03-2011, 09:00 AM
பின்னூட்ட எலிகளும், கொசுக்களும், மண்புழுக்களும் கூட உண்டு....

எலிகள்...... கடித்துக் குதறுபவர்கள்...

கொசுக்கள்.....நச்சென்று ஓரிரு வார்த்தையில் விமர்சிப்பவர்....

மண்புழுக்கள்..... சுற்றிச் சுற்றி வருவார்கள்.... அவர்கள் சொல்லவருவது அவர்களுக்கே புரியாது....

நான் யாரையும் குற்றிப்பிட்டுச் சொல்லவில்லை.....பொதுவாகச் சொல்கிறேன்.... .

கீதம்
01-03-2011, 09:14 AM
நல்ல ஆலோசனை. நானும் வரவேற்கிறேன்.

sarcharan
01-03-2011, 09:21 AM
சிறந்த பின்னூட்டம் இடுபவர்களுக்கு "பின்னூட்டத் திலகம்" என்ற விருது அளித்து
சிறப்புச் செய்யலாம் என்பது என்னுடைய கருத்து.இது ஒவ்வொரு மாதமும் அளிக்க
லாம்.

மதிக்கு இந்த பட்டம் ஏற்கனவே வழங்கபட்டாகி விட்டது :p

முரளிராஜா
01-03-2011, 09:59 AM
இது போன்ற சில பதிவுகளை மன்றத்தில் கண்டுள்ளேன் ...இது வரவேற்க்கப்பட வேண்டிய ஒரு பதிவு...இதன் மூலம் பின்னோட்டம் இடுபவர்கள் எண்ணிக்கை கூடும்...ஒவ்வொரு சிறந்த பதிவிற்கும் இணையகாசினை உயர்த்தியும் அதே நேரத்தில் தரமற்ற விவாதத்தினை தூண்டும் மற்றவர்கள் மனதினை புண்படுத்தும் பதிவிற்கு மற்றும் பின்னோட்டத்திற்கு இணையகாசினை குறைக்கலாம் ..

நண்பர் ஜெய் சொல்லும் யோசனை நன்றாக உள்ளது

M.Jagadeesan
01-03-2011, 10:29 AM
தரமற்ற பின்னூட்டத்தை ஒதுக்கிவிடலாமே!இணைய காசுவைக் குறைப்
பது போன்ற தண்டனை தேவையில்லை என்பது என் கருத்து.

நாஞ்சில் த.க.ஜெய்
01-03-2011, 11:39 AM
தவறுகள் மறைக்கபடகூடாது அந்த தவறினை செய்தவர்களும் அதனை காண்பவர்கள் அதே தவறினை செய்யாதிருக்க இது போன்ற இணையகாசு குறைப்பு என்பது தான் சரியாக இருக்கும் மற்றொன்று நண்பர் கூறுவது போல் தவறான பதிவுகளை நீக்கினால் அந்த பதிவினை பதிவிட்டவரின் மனநிலையை பாதிக்கும் மேலும் அவர் தம்தவறினை உணராமல் வீண் வாதம் செய்யவும் வாய்ப்புண்டு...

செல்வா
01-03-2011, 05:12 PM
பின்னூட்டங்களைப் பெருக்க சொல்லிய யோசனையை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதில் தற்போதிருக்கும் நடைமுறையான 'தவறான பதிவுகளை பொறுப்பாளர்கள் திருத்தியமைப்பது அல்லது நீக்குவதே' தொடரட்டும்.
இ-காசு குறைப்பு எதுவும் தேவையில்லை
என்பன எனது கருத்தாகும்.

அன்புரசிகன்
01-03-2011, 09:10 PM
மன்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட பதிவுகளை நீக்குதல் தமிழ்மன்றத்துக்கு அழகல்ல... அழகாக பின்னூட்டம் இடுபவர்களை வரவேற்க போட்டிகள் வைக்கலாமே அன்றி மற்றவர்களை ஒதுக்க அல்ல. (இது என் கருத்து)

அமரன்
01-03-2011, 10:01 PM
நண்பர்களே..

எடுத்த வீச்சில் பதிவுகளை நீக்குவதில்லை. மன்ற ஒழுங்கைக் கருத்தில் இருத்தித் திருத்த முடியுமா என்றே பார்க்கிறோம். திருத்த இயலாது என்று ஒருமித்த கருத்துக்கு நிர்வாகம் வரும் போது நீக்குகிறோம்.

பதிவுகளைத் திருத்தும் போதோ நீக்கும் போதோ பதிவருக்கு தனிமடலில் தகவல் தெரிவிக்கிறோம். அந்த மடல் பதிவிலிருந்த தவறையும் நீக்கப்பட்ட/திருத்தப்பட்ட காரணத்தையும் நிச்சயம் உணர்த்தும். (இன்னும் மடல் வரலையேன்னு யாரும் கேட்டுடாதீங்க. வரும்..)

அதனால் பதிவுகளைத் தரப்படுத்துவதில் தற்போதுள்ள நடைமுறையைத் தொடர்வோம்.

சிறந்த பின்னூட்டவாதியை தெரிவு செய்து ஊக்குவிப்பது பின்னூட்டங்களைப் பெருக்குவதுடன் தரமானதாகவும் ஆக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே கேட்டிருக்கிறேன். சிறந்த பின்னுட்டவாதியை எப்படித் தெரிவு செய்யப் போகிறோம். கவிதைப்பகுதியிலிருந்தா? கதைப்பகுதியிலிருந்தா? கட்டுரைப்பகுதியிலிருந்தா? விளையாட்டுப்பகுதியிலிருந்தா? விவாதப்பகுதியிலிருந்தா? அரசியல்பகுதியிலிருந்தா? எல்லாப் பகுதியிலும் இருந்தா...?

இப்படி ஒழுங்குகளை வரையறுத்தால் அடுத்த கட்டத்துக்குப் போகலாம். விரைந்து வரையறுப்போம்.

உமாமீனா
02-03-2011, 08:43 AM
எல்லா பகுதியிலும் இருக்கட்டுமே - ஒரு பகுதிக்கு கொடுத்து மற்ற பகுதி என்ன பாவம் பண்ணுச்சி துணை நிர்வாகி அவர்களே (நாட்டுல துணைக்கு தான்யா மவுசு)

ஜானகி
02-03-2011, 09:17 AM
பின்னூட்டங்கள் பற்றி அலசப்படும் போது, 'பின்னூட்டத் திலகம்' தாமரை அவர்கள் வந்துவிட்டது நம் பாக்கியம் தான்...! களை கட்டிவிடும்...

உதயா
02-03-2011, 09:59 AM
எல்லா பகுதிகளிலும் அவர்களின் பின்னூட்டம் எப்படி இருக்கிறது என்று அலசிப்பார்த்துதான் முடிவெடுக்கவேண்டும். ஒரு பகுதியை மட்டும் பார்த்து தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுத்தப்படாதே.

கிரிக்கெட் விளையாட்டுக்காரர் என்றால், அவருக்கு பேட்டிங், ஃபீல்டிங், பெளலிங் இதெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் தானே....? அதுபோல் இங்கேயும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நன்றி

M.Jagadeesan
02-03-2011, 12:01 PM
ஆல்ரவுண்டர்களைத்தான் பின்னூட்டத் திலகங்களாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-03-2011, 06:53 AM
பதிவுகளை கட்டுபடுத்துவதில் நண்பர் செல்வா கூறுவது போல் தற்போதைய நடைமுறையே தொடரட்டும் ..நான் இறுதியாக பதிவிட்ட பின்னோடோட்டத்தில் தவறான தரமற்ற பின்னோட்டத்திற்கு இணையகாசினை குறைக்கலாம் என்பதற்கு பதில் பதிவிற்கு என்று குறிப்பிட்டுவிட்டேன் ...ஏனெனில் தற்போது சில பதிவுகளில் நகைசுவையாக எழுதுகிறோம் என்று ஒரு சிலர் மற்றவர்கள் மனதினை நோகடிக்கும் வகையில் பின்னோட்டம் இடுகிறார்கள் ..அதுமட்டுமின்றி ஒருவரை நேரடியாக பின்னோட்டம் மூலம் சாடுவதும் நிகழ்கிறது ..இது போன்று நிகழாதிருக்க தவறான பின்னோட்டத்திற்கு இணையகாசு குறைப்பு என்பது சரியாக இருக்கும் .....

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக பின்னோட்டம் இடுபவர்களில் சிறந்த பின்னோட்டம் இடும் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் எடுத்துகாட்டாக முல்லையில் சிறந்த பின்னோட்டம் இடுபவருக்கு முல்லை அன்பர் அதுபோல் மற்ற பிரிவிற்கும் ஒவ்வொருவரை தேந்தெடுத்து இதுபோல் அந்ததந்த பிரிவின் பேரை முன்னாலிட்டு ஏதேனும் அன்பர் என்பது போல் ஏதேனும் பெயரிட்டு அழைக்கலாம் ..முடிவில் அனைத்து பிரிவிலும் சிறந்த பின்னோட்டம் இடும் ஒருவரை தேந்தெடுத்து அவருக்கு இம்மாத சிறந்த பின்னோட்ட பதிவர் எனும் பட்டம் கொடுக்கலாம்...இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்கள் பலர் அப்பட்டம் பெறுவர்..இது மற்றவர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்....