PDA

View Full Version : மரண ஒத்திகை!



ரசிகன்
26-02-2011, 09:01 PM
வலிகளின்
கூர்மையில் கசியும்
ஒரு துளி கண்ணீர் காட்சி...
சாட்சியும் கூட!

மெதுவாய்
விழிகளை ஈரமாக்கி
இமைகளின் வரப்பில்
ஒரு கணம் தேங்கி நிற்கிறது!

சுதாகரித்துக்கொள்ள
போதிய நேரமில்லை...
பிளந்து விழுகிறது
கன்னப்பரப்பில்!

வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!

மொத்த வலிகளையும்
ஈரமாக்கி
ஒரு நீர் உருண்டையாக்கி
தாடையின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு துளி மட்டும்!

பிரேம்
26-02-2011, 11:59 PM
வலி தரும் துளி..
கவிதை அருமை..:)

உமாமீனா
27-02-2011, 02:31 AM
மரண வலி - கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளிர்கள்

Nivas.T
27-02-2011, 04:53 AM
வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!


பிரமாதம் ரசிகன்
அதுவும் இந்த வரிகள்
அற்ப்புதம்.

மரண ஒத்திகை - உயிர்ப்பு கவிதை

கலாசுரன்
28-02-2011, 03:01 AM
பிளந்து விழுகிறது
கன்னப்பரப்பில்!

வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!

மொத்த வலிகளையும்
ஈரமாக்கி
ஒரு நீர் உருண்டையாக்கி
தாடையின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு துளி மட்டும்
தொங்கி நிற்கும் அந்த ஒற்றைத் துளியில் சோகத்தை அடர்த்தியாக நிரப்பிய வரிகள்...

மிக மிக பிடித்திருக்கிறது இக்கவிதை...

வாழ்த்துக்கள் சதீஷ் தொடருங்கள்...:)

ரசிகன்
28-02-2011, 09:05 AM
வலி தரும் துளி..
கவிதை அருமை..:)
நன்றி
பிரேம்! :)

ரசிகன்
28-02-2011, 09:06 AM
மரண வலி - கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளிர்கள்
நன்றி
உமா :)

ரசிகன்
28-02-2011, 09:06 AM
பிரமாதம் ரசிகன்
அதுவும் இந்த வரிகள்
அற்ப்புதம்.

மரண ஒத்திகை - உயிர்ப்பு கவிதை
நன்றி
நிவாஸ்! :):)

ரசிகன்
28-02-2011, 09:07 AM
பிளந்து விழுகிறது
கன்னப்பரப்பில்!

வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!

மொத்த வலிகளையும்
ஈரமாக்கி
ஒரு நீர் உருண்டையாக்கி
தாடையின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு துளி மட்டும்
தொங்கி நிற்கும் அந்த ஒற்றைத் துளியில் சோகத்தை அடர்த்தியாக நிரப்பிய வரிகள்...

மிக மிக பிடித்திருக்கிறது இக்கவிதை...

வாழ்த்துக்கள் சதீஷ் தொடருங்கள்...:)
நன்றி
கலாசுரன்...

எல்லாம் உங்க வழிகாட்டுதல் தான் :)

ஜானகி
28-02-2011, 09:35 AM
ரணமான மனதின் வலியில் பிறந்த கண்ணீரையும் புனிதமாக்கி, ரசிக்கவைத்துவிட்டீர்கள்.....அருமை !

கண்ணீருக்கு, வலியைத் தற்காலிகமாக அழிக்கும் சக்தி உண்டு....உருண்டோடவிடுங்கள்.....

கீதம்
01-03-2011, 09:07 AM
ஒரு கண்ணீர்த்துளியின் வாழ்க்கைப் பயணத்தை அழகாகக் காண்பித்துள்ளீர்கள். பாராட்டுகள். வலிகள் மரணிக்கட்டும்.

M.Jagadeesan
01-03-2011, 09:29 AM
மரணத்தை சந்திக்கின்றவனுக்கு
உயிரூட்டுகின்ற கவிதை.

அக்னி
01-03-2011, 11:05 AM
இமை விளிம்பில் தொங்கும் வலிச் சுமை
விளிம்பு தாண்டி
வெம்மையாய்த் தடமோடிச்சென்றாலும்,
அத்தடங்களைக்
குளிர்வித்துச் செல்லும் எங்கிருந்தோ ஒரு
ஆறுதல்...

பாராட்டு ரசிகனுக்கு...

shiva.srinivas78
01-03-2011, 05:20 PM
ஞாயிறே
உன்னிடம் ஒளி பெற்ற
கவி விண்மீன்கள்
தமிழ்மன்ற வானில் பிரகாசிக்கிறது .

கவிதை அருமை நண்பா

ரசிகன்
04-03-2011, 12:14 PM
ரணமான மனதின் வலியில் பிறந்த கண்ணீரையும் புனிதமாக்கி, ரசிக்கவைத்துவிட்டீர்கள்.....அருமை !

கண்ணீருக்கு, வலியைத் தற்காலிகமாக அழிக்கும் சக்தி உண்டு....உருண்டோடவிடுங்கள்.....
நன்றி ஜானகி :)

ரசிகன்
04-03-2011, 12:15 PM
ஒரு கண்ணீர்த்துளியின் வாழ்க்கைப் பயணத்தை அழகாகக் காண்பித்துள்ளீர்கள். பாராட்டுகள். வலிகள் மரணிக்கட்டும்.
நீங்களும் அதனோடு பயணித்து பின்னூட்டமளித்தமைக்கு நன்றிகள் கீதம் :)

ரசிகன்
04-03-2011, 12:16 PM
ஞாயிறே
உன்னிடம் ஒளி பெற்ற
கவி விண்மீன்கள்
தமிழ்மன்ற வானில் பிரகாசிக்கிறது .

கவிதை அருமை நண்பா
நன்றிகள் shiva :)

ரசிகன்
04-03-2011, 12:17 PM
இமை விளிம்பில் தொங்கும் வலிச் சுமை
விளிம்பு தாண்டி
வெம்மையாய்த் தடமோடிச்சென்றாலும்,
அத்தடங்களைக்
குளிர்வித்துச் செல்லும் எங்கிருந்தோ ஒரு
ஆறுதல்...

பாராட்டு ரசிகனுக்கு...
நன்றி அக்னி:) / ஜெகதீசன் :)