PDA

View Full Version : பாடம் - குறுங்கவிதை



கலையரசி
26-02-2011, 04:45 PM
பின்னங்கால் நிலத்தில் பதியாமல்
முன்னங்காலை மட்டும் ஊன்றி
தட்டுத் தடுமாறி
குழந்தை நடை பயின்ற வேளை,
கால் தடுக்கி
கீழே விழுந்து அழுத போது
தவறேதும் செய்யாத
தரையை அடித்துச்
சமாதானம் செய்தாள் அன்னை.

பிடரியில் கண்ணை வைத்து
சுவரில் வந்து மோதிக் கொண்டபோது
’சிவனே’ என்று நின்றிருந்த
குறுக்குச் சுவருக்கு அடி விழுந்தது.

பின் வரும் காலங்களில்
தான் செய்த தவற்றைப்
பிறர் தலையில் சுமத்தி
பழியிலிருந்து எளிதாகத் தப்பிக்கக்
’பாடம்’ கற்றுக் கொண்டது குழந்தை!

M.Jagadeesan
27-02-2011, 12:08 AM
உங்களின் சிந்தனை,கவிதை படைக்கும் திறன் சற்று வித்தியாசமாக*
உள்ளது.தொடரட்டும் உங்கள் படைப்புகள்!

பிரேம்
27-02-2011, 12:20 AM
ஓகே மேடம்...நாளைலேர்ந்து..குழந்தை விழுந்து விட்டால்..
அந்த குழந்தையை அடிக்க வேண்டுமென ஆர்டர் போட்டு விடுவோம்..
கவலைய விடுங்க..:cool:

அருமை..கவிதையும்..கவித்துவமும்..

பாரதி
27-02-2011, 12:29 AM
வேறுபட்ட பார்வை... விளக்கமான கருத்து.
கவிதை மிக நன்று.

உமாமீனா
27-02-2011, 02:25 AM
இப்படிதான் ஆரம்பிக்குதா! சரியாக சொன்னிர்கள் - வாழ்த்துக்கள்

கீதம்
27-02-2011, 04:11 AM
உண்மை. அந்த நேரத்தில் குழந்தை சமாதானமானாலும் பழியுணர்வும் நீங்கள் சொல்வதுபோல் அடுத்தவர்மீது தன் தவறைச் சுமத்தும் எண்ணமும் முளைவிட்டு விடுகிறதே. நல்ல சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி அக்கா.

கலையரசி
27-02-2011, 04:54 AM
உங்களின் சிந்தனை,கவிதை படைக்கும் திறன் சற்று வித்தியாசமாக*
உள்ளது.தொடரட்டும் உங்கள் படைப்புகள்!

பின்னுட்டமிட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஜெகதீசன்!

கலையரசி
27-02-2011, 05:00 AM
ஓகே மேடம்...நாளைலேர்ந்து..குழந்தை விழுந்து விட்டால்..
அந்த குழந்தையை அடிக்க வேண்டுமென ஆர்டர் போட்டு விடுவோம்..
கவலைய விடுங்க..:cool:

அருமை..கவிதையும்..கவித்துவமும்..

குழந்தையை ஏன் அடிக்க வேண்டும்? சரியாகப் பார்த்து நடக்காவிட்டால் இப்படி அடிபட நேரும் என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டுமே தவிர,
தவறை அப்பாவி யார் மீதேனும் சுமத்தலாம் என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதே இக்கவிதையின் கருத்து. குழந்தையைச் சமாதானப்படுத்த சாதாரணமாக நாம் செய்யும் இச்செயல், தவறான எண்ணத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்தி விடக் கூடாது.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பிரேம்!

கலையரசி
27-02-2011, 05:02 AM
வேறுபட்ட பார்வை... விளக்கமான கருத்து.
கவிதை மிக நன்று.

பாராட்டுக்கு மிக்க நன்றி பாரதி அவர்களே!

கலையரசி
27-02-2011, 05:05 AM
இப்படிதான் ஆரம்பிக்குதா! சரியாக சொன்னிர்கள் - வாழ்த்துக்கள்

குழந்தைப்பருவத்தில் நாம் கற்றுக் கொள்பவை தாம், நம் மனதில் ஆழமாகப் பதிந்து பின்னாளில் நாம் செய்யும் பல செயல்களுக்குக் காரணமாக அமைகின்றன.
வாழ்த்துக்கு மிகவும் நன்றி உமாமீனா!

கலையரசி
27-02-2011, 05:06 AM
உண்மை. அந்த நேரத்தில் குழந்தை சமாதானமானாலும் பழியுணர்வும் நீங்கள் சொல்வதுபோல் அடுத்தவர்மீது தன் தவறைச் சுமத்தும் எண்ணமும் முளைவிட்டு விடுகிறதே. நல்ல சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி அக்கா.

மிகச் சரியான பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி கீதம்!

Nivas.T
27-02-2011, 05:11 AM
உண்மை நிதர்சனமான உண்மை

விஷம் விளையும் பொழுதே தூவப்படுகிறது

கவிதை அழகு
சிந்தனை அருமை