PDA

View Full Version : அம்மா! (மல்லிகை மகள் (மார்ச்-2011) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
26-02-2011, 01:32 PM
அம்மா!

" ஏம்மா.. அவர் திரும்ப இங்கு வர்ற வரைக்கும் இருக்குறேன்னு வந்த..
ரெண்டு நாளிலேயே திரும்ப ஊருக்கு போயிட்ட? " போனில் கேட்டாள் பிரபா.


"ஆமா! மாப்பிள்ளைகிட்ட போன்ல பேசுறப்பவே பாடா படுத்தி எடுக்குற, இன்னும் நேர்ல எப்படி படுத்துவே!
அதை எல்லாம் என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.. அதான் வந்துட்டேன்.
ஆனாலும் மாப்பிள்ளைக்கு ரொம்பதான் பொறுமை." என்றார் மரகதம்மாள்.


" ஆமா நான் கேட்டுக்குற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா? " என்றாள் பிரபா.


"ஆமா.. நீ ஒரு எஜமானி மாதிரி நீ கேட்குற தோரணையே ஆளை அடிக்குற மாதிரி இருக்கு.
அவருக்கு பெத்தவங்க இல்லைங்கிறதுக்காக உனக்கு அடிமையில்லை.
உன் பிள்கைகள் யாராவது திட்டினா, நீ சும்மா இருப்பியா? அது போலதான் மாப்பிள்ளையோட அம்மா இருந்தா நீ பேசுறத பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா?

உனக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கார்.
தனக்கு வர போற மனைவி, அன்பான அம்மாவா, மணக்கும் மனைவியா தோழமையான தோழியா இருப்பானு நினைச்சிதான் உன்னை கல்யாணம் செய்திருப்பார்.
ஆனால் நீ அப்டியா நடந்துக்குற? அவருக்கும் மனசும், உணர்வும் இருக்குன்னு புரிஞ்சுக்கோ.

ஒரு அம்மா மனைவியாக முடியாது. ஆனா, ஒரு மனைவி அம்மாவாக முடியும். அதை நீ முழுமையா உணர்ந்தாதான் வாழ்க்கையை சந்தோசமா வாழ முடியும்.
நீ மட்டுமல்ல உன் குழந்தைகளும்.” என்றார் மரகதம்மாள்.

பிரபாவுக்கு நெத்தியில் அடித்தார் போல இருந்தது அம்மாவின் வார்த்தைகள். அம்மாவிடம் சொன்னாள்..


“மன்னிச்சிடும்மா, இனிமே அவர் என்னுடைய மூத்த குழந்தை போல பார்த்துக்குறேன்.”


http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_March_2011_f.jpg

பூமகள்
28-02-2011, 07:04 AM
அருமை.. இதைத் தான் சமீபத்தில் கவிதையாக்கினேன் நான்.. தாயுமானவள்.. என்று..

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் அண்ணா. பெருமையாக இருக்கிறது. :)

நாஞ்சில் த.க.ஜெய்
28-02-2011, 07:25 AM
நண்பரே தங்கள் கதை அருமை ..கதை கூறும் அறிவுரை இன்றைய பெண்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ...தொடருங்கள் கமலகண்ணன்....

க.கமலக்கண்ணன்
28-02-2011, 03:31 PM
நன்றி பூமகள்...

நன்றி t.jai

அமரன்
28-02-2011, 09:10 PM
நல்ல அம்மா!

வாழ்த்துகள் கமலக்கண்ணன்.

அக்னி
28-02-2011, 09:11 PM
பூமகளின் தாயுமானவள் கவிதைக்கான எனது பின்னூட்டத்தை இங்கும் மேற்கோளிடலாம் என எண்ணுகின்றேன்.


தரிக்காமல் சுமக்காமல்
தாயுமாகும் தன்மை
மனைவிக்கு மட்டுமே
சாத்தியம்...
கணவனுக்கோ பெரும்
பாக்கியம்...
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் என்றால்,
இப்படியான மாமியார் அமைவது இறைவன் கொடுத்த போனஸ் வரம்...

மல்லிகையில் மணம் வீசியமைக்கு விசேட பாராட்டுக்கள் க.க...




"ஆமா.. ஒரு எஜமானி மாதிரி நீ கேட்குற தோரணையே ஆளை அடிக்குற மாதிரி இருக்கு.
பதிப்பில் சரியாக இருக்கின்றது.
உங்கள் பதிவிலும் திருத்திவிடுங்கள்.

க.கமலக்கண்ணன்
03-03-2011, 01:59 AM
நன்றி அமரன்

நன்றி அக்னி உங்களின் கவிதை பிண்ணூட்டத்திற்கு தலைவணக்கத்துடன் நன்றிகள்

அன்புரசிகன்
03-03-2011, 04:00 AM
சமுத்திரம் படத்தில் வாற மஞ்சுளா மாதிரி அம்மா... அவ்வளவு பொல்லாத மனைவி ஒரு பேச்சில் மனம் மாறினாளா.;) நல்ல மகள் தான்.

மகள் அவ்வாறிருப்பதற்கு தாய் தந்தையர் தானே பொறுப்பேற்க வேண்டும்.

வாழ்த்துக்கள் க.கண்ணன்.

க.கமலக்கண்ணன்
04-03-2011, 02:21 AM
நன்றி அன்பு ரசிகன்... உங்களின் வாழ்த்துக்களுக்கு...

ஆளுங்க
21-03-2011, 02:46 PM
அருமை!!!

முரளிராஜா
22-03-2011, 01:29 AM
மிகவும் அருமை

க.கமலக்கண்ணன்
23-03-2011, 03:31 AM
நன்றி ஆளுங்க

நன்றி முரளிராஜா

இராஜேஸ்வரன்
06-04-2012, 09:30 AM
மிகவும் அருமையான கருத்தை சிறுகதையாக கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-04-2012, 09:45 AM
அருமையான சிறுகதை கமலக்கண்ணன் அவர்களே. பதிவுக்கு நன்றி:)