PDA

View Full Version : கோவலன் செய்த தவறு



M.Jagadeesan
26-02-2011, 12:36 PM
சிலம்பொன்றை விற்று வாணிகம் செய்து
இலம்பாடு தீர்ப்போம் என்றெண்ணிக் கோவலன்
சிலம்பொன்றை விற்றதால் தானே
சிக்கல் வந்தது?

இருசிலம்பை விற்றிருந்தால்
இன்னல் வந்திருக்குமா?
மங்கையவள் கண்ணகியின்
குங்குமம் அழிந்திருக்குமா?

பாட்டா கடையினிலே செருப்பு ஒன்றைக்
கேட்டால் தருவரோ? சிந்திப்பீர் கோவலரே!

இரட்டைக் காளை மாட்டு வண்டிக்கு
ஒற்றைக் காளையை யாரேனும் வாங்குவரோ?

காதுக்கு அணிய கம்மல் வாங்குவோர்
ஏதுக்கு செலவென்று ஒன்றை வாங்குவரோ?

வணிகக் குடியிலே பிறந்த கோவலன்
கணிகை ஒருத்தியின் காதலில் விழுந்ததால்
வணிகம் செய்ய மறந்து போனானோ?

Nivas.T
26-02-2011, 12:58 PM
நீங்க என்ன சொல்ல வரீங்க?
ஒரு சிலம்ப வித்தது தவறா?
இல்ல மாதவிய காதலிச்சது தவறா?

M.Jagadeesan
26-02-2011, 01:40 PM
நீங்க என்ன சொல்ல வரீங்க?
ஒரு சிலம்ப வித்தது தவறா?
இல்ல மாதவிய காதலிச்சது தவறா?

ஒரு சிலம்பை விற்றது தவறு என்று சொல்கிறேன்.

Nivas.T
26-02-2011, 02:04 PM
செருப்பு, மாடு சரி

சிலம்பு மாணிக்கக் கற்களை கொண்டு தங்கத்தால் செய்யப்பட்டது

அது ஒரு சிலம்பாக இருந்தால் என்ன? பாதி சிலம்பாக இருந்தால் என்ன? தாராளமாக விற்கலாம், அதுவும் பொற்கொல்லனனிடம் தாரளமாக விற்கலாம் ஒரு குண்டுமணி தங்கமாயினும்.

அவர்களுக்கு அதில் வரும் வரவு போதும் என்று நினைத்திருக்கலாம் ஏனெனில் அவை மாணிக்க கற்கள்

அதனால் தான் கேட்டேன்

M.Jagadeesan
26-02-2011, 02:35 PM
ஒரு சிலம்பை வாங்குபவர்கள் அணியமுடியாது.இரு சிலம்பை விற்று
இருந்தால் கோவலன் மீது யாரும் சந்தேகப்பட்டு இருக்கமாட்டார்கள்.

Nivas.T
26-02-2011, 03:02 PM
ஒரு சிலம்பை வாங்குபவர்கள் அணியமுடியாது.இரு சிலம்பை விற்று
இருந்தால் கோவலன் மீது யாரும் சந்தேகப்பட்டு இருக்கமாட்டார்கள்.

உண்மதாங்க,

ரெண்டு சிலம்பையும் எடுத்து போயிருந்தா நீங்க சொல்ற மாதிரி கோவலன் தப்பித்திருக்கலாம். ஒரு சிலம்ப யாரும் அணியவும் முடியாது உண்மைதான்.

ஆனா ஒரு சிலம்ப பொர்க்கொல்லனிடம் விற்றால் அதை அவன் அப்படியே விற்க வேண்டிய அவசியமில்லை, ஒரு சிலபின் தங்கத்தை வைத்து இரண்டு நகைகளாக செய்துவிட முடியும். மாணிக்கங்களை தனியாக விற்கவும் முடியும் இல்லை வேரூ ஒருவரது ஆபரனத்துடன் இணைக்கவும் முடியும்.

அதனால் பொர்க்கொல்லனிடம் ஒரு காதணி, ஒரு வளையல், ஏன் குண்டுமணி தங்கம் கொடுத்தால் கூட வாங்கிக்கொள்வான்.

அதைத்தான் கூற முனைந்தேன்

தாமரை
02-03-2011, 08:59 AM
பாண்டி மாதேவியின் பொற்கொல்லன் ஒற்றைச் சிலம்பைத் திருட, கோவலனும் ஒற்றைச் சிலம்பை விற்க... இரண்டும் ஒரே சமயத்தில் அமையவே கோவலன் மீது குற்றம் சுமத்தினான் பொற்கொல்லன்.

திருடியவன் சர்வ சுதந்திரமாக ஊர்ல வந்து சிலம்பு வாங்கலையோ சிலம்பு என்று கூவியா விற்பான் என்று யோசிக்காத அரசன்.

குற்றம் சாட்டப்பட்டவன் யார்? எந்த ஊர் என்று கூட விசாரிக்காமல் தண்டனை வழங்கிய அரசன்..

ரெண்டு சிலம்பையும் கோவலன் விற்க முனைந்திருந்தால், மட்டும் என்னவாம்? இன்னொரு சிலம்பும் காணோம் என்று புகார் செய்தால் போச்சு. திருடனுக்கு கிடைச்ச வரைக்கும் லாபம் தானே.

கோவலனுக்கு வியாபாரம் த்ரிந்திருந்ததால்தான் ஒற்றைச் சிலம்பை விற்கச் சென்றான்.

அதாவது, நம்மிடம் உள்ள அனைத்தியும் வியாபாரத்தில் ஒரே சமயத்தில் போடக் கூடாது. சில சமயங்களில் வியாபாரத்தில் பண நெருக்கடி ஏற்படும். அதைச் சமாளிக்க நம்மிடம் பொருளாதாரம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தாக்குப் பிடிக்க முடியும். அதனால் தன்னிடம் இருந்ததில் பாதி சொத்தை விற்கச் சென்றான்.

விற்கச் சென்றவன் பொற்கொல்லர் தெருவிற்குப் போவானேன்? பொற்கொல்லர்கள் தான் ஒற்றைச் சிலம்பை வாங்கி உருக்கி உபயோகமுள்ள பொருளாக மாற்ற முடியும்.

அரசனின் மூடத்தனத்திற்கு கோவலனை நோவானேன்?

உமாமீனா
02-03-2011, 09:02 AM
மதுரை எரிந்து போனதுதான் மிச்சம் -

தாமரை
02-03-2011, 09:12 AM
மதுரை எரிந்து போனதுதான் மிச்சம் -

போனது எப்படி மிச்சமாகும்

இருக்கிறதல்லவா மிச்சமாகும்?????:lachen001::lachen001::lachen001:

Nivas.T
02-03-2011, 09:31 AM
போனது எப்படி மிச்சமாகும்

இருக்கிறதல்லவா மிச்சமாகும்?????:lachen001::lachen001::lachen001:

வாங்க அண்ணா

வேலையெல்லாம் முடிச்சாச்சா

உங்களைத்தான் எல்லாரும் தேடுனாங்க

எப்டி இருக்கீங்க ?

உமாமீனா
02-03-2011, 09:36 AM
போனது எப்படி மிச்சமாகும்

இருக்கிறதல்லவா மிச்சமாகும்?????:lachen001::lachen001::lachen001:

சாம்பலை எந்த கணக்கில் சேர்ப்பது?

தாமரை
02-03-2011, 09:41 AM
சாம்பல் இருப்பதா? போனதா? நீங்களே யோசிங்களேன்!!!

உமாமீனா
02-03-2011, 09:43 AM
சாம்பல் இருப்பதா? போனதா? நீங்களே யோசிங்களேன்!!!

சாம்பல் என்பதும் ஒரு பொருள் தானே? அதில் என்ன சந்தேகம்-சாம்பல் என்ன கால் முளைத்து போகுமா என்ன?

ஆதி
02-03-2011, 09:45 AM
சாம்பல் என்பதும் ஒரு பொருள் தானே? அதில் என்ன சந்தேகம்

நீங்க கேள்விய புரிஞ்சுக்கல..

எரிந்து போனது என்று சொன்னீங்க இல்லையா....

போன பிறகு சாம்பல் எப்படி இருக்கும் ?

உமாமீனா
02-03-2011, 09:53 AM
நீங்க கேள்விய புரிஞ்சுக்கல..

எரிந்து போனது என்று சொன்னீங்க இல்லையா....

போன பிறகு சாம்பல் எப்படி இருக்கும் ?

அடிப்படை தவறு சரி சரி - பேசி வழக்கில் பதிவு செய்ததால் வந்த வினை - நன்றி

கௌதமன்
02-03-2011, 01:38 PM
வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பான வைகறை மேகங்களில் (கண்ணதாசன் முன்னுரையுடன், 18 வயதில் எழுதி வெளிவந்த நூலில் வைரமுத்து பெரும்பாலும் சந்தக் கவிதைகளையும், மரபுக் கவிதைகளையும் வடித்திருப்பார்) கோவலனைக் கைக்குள் வைக்காத கண்ணகியே குற்றவாளி என்பது போல் அழகுத்தமிழில் கவிதை வடித்திருப்பார்.

நண்பர் ஜெகதீசனுக்கு ஒரு வினா.

பரல்களில் முத்தோ, மாணிக்கமோ கண்ணுக்குத் தெரியாமல் பொதிந்து சிலம்புக்குள் வைத்திருப்பதால் என்ன பெருமை? அந்த உள்ளீடற்ற சிலம்புக்குள் சாதாரண கற்களைப் போட்டுக் கொண்டும் உள்ளே இருப்பது வைரமாக்கும் என்றும் வீண்பெருமையாய் சொல்லலாம் அல்லவா?

பாலகன்
02-03-2011, 03:07 PM
ஜெகதீசரின் அருமையான பகிர்வும் அதற்கு தாமரை அண்ணாவின் விளக்கமும் பிரமாதம்.

பாராட்டுக்கள் ஜெகதீசரே

M.Jagadeesan
02-03-2011, 03:13 PM
அக்காலத்தில் சிலம்பை எல்லோரும் அணியமுடியாது.சிலம்பு அணிவது செல்வச்
செழிப்பின் ஓர் அடையாளமாகக் கருதப்பட்ட காலம்.விலையுயர்ந்த சிலம்பை வாங்கி
விட்டு உள்ளே பரல்களாகக் கற்களைப் போடுவார்களா?கண்ணகிக்கு சிலம்பின்
காரணமாக ஏற்பட்ட அவல நிலைக்குப்பின், தமிழ் நாட்டில் பெண்கள் காலில் சிலம்பு
அணியும் பழக்கம் முடிவுக்கு வந்தது என்று மு.வ.அவர்கள் எழுதுவார்.

M.Jagadeesan
02-03-2011, 03:51 PM
திரு தாமரை அவர்களுக்கு,

இரண்டு சிலம்பையும் காணோம் என்று பொற்கொல்லன் புகார் செய்ய முடியாது.
ஏனெனில் கோவலனிடம் சிலம்பை வாங்குவதற்கு முன்பாகவே, அரசியின் ஒரு
சிலம்பு காணவில்லை என்று அரசனிடம் ஏற்கனவே அவன் புகார் செய்திருந்தான்.
இப்பொழுது இருசிலம்பு காணவில்லை என்றால் அரசனுக்கு பொற்கொல்லன் மீது
ஐயம் வராதா?

ஒரு சிலம்பை விற்றால்,அதை வாங்குபவர்களுக்குத் தன் மீது ஐயம் (திருடிக்கொண்
டு வந்திருப்பானோ?) ஏற்படும் என்ற அடிப்படை உண்மைகூடக் கோவலனுக்குத்
தெரியாமல் போனது ஏன்? என்பதே என்னுடைய கேள்வி.

நகையை விற்பவர்கள் நகைக்கடை இருக்கும் தெருவிற்குப் (பொற்கொல்லர் இருக்கு
மிடம்) போகாமல் வேறு எங்குப் போவார்கள்?

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பொற்கொல்லனிடம்,சிலம்பைக் கொடுத்துவிட்டு
அவன் திரும்பிவரும் வரையில் காத்திருந்த கோவலன் வணிகம் செய்யத் தெரிந்த
வன் என்று எப்படிச் சொல்லமுடியும்?

தாமரை
02-03-2011, 04:26 PM
திரு தாமரை அவர்களுக்கு,

இரண்டு சிலம்பையும் காணோம் என்று பொற்கொல்லன் புகார் செய்ய முடியாது.
ஏனெனில் கோவலனிடம் சிலம்பை வாங்குவதற்கு முன்பாகவே, அரசியின் ஒரு
சிலம்பு காணவில்லை என்று அரசனிடம் ஏற்கனவே அவன் புகார் செய்திருந்தான்.
இப்பொழுது இருசிலம்பு காணவில்லை என்றால் அரசனுக்கு பொற்கொல்லன் மீது
ஐயம் வராதா?

ஒரு சிலம்பை விற்றால்,அதை வாங்குபவர்களுக்குத் தன் மீது ஐயம் (திருடிக்கொண்
டு வந்திருப்பானோ?) ஏற்படும் என்ற அடிப்படை உண்மைகூடக் கோவலனுக்குத்
தெரியாமல் போனது ஏன்? என்பதே என்னுடைய கேள்வி.

நகையை விற்பவர்கள் நகைக்கடை இருக்கும் தெருவிற்குப் (பொற்கொல்லர் இருக்கு
மிடம்) போகாமல் வேறு எங்குப் போவார்கள்?

முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு பொற்கொல்லனிடம்,சிலம்பைக் கொடுத்துவிட்டு
அவன் திரும்பிவரும் வரையில் காத்திருந்த கோவலன் வணிகம் செய்யத் தெரிந்த
வன் என்று எப்படிச் சொல்லமுடியும்?

இதன் மூலம் பாண்டியன் ஆட்சி மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் உண்மை நிலையும்தான் வெளிப்படுகிறது..

எந்தத் திருடனாவது திருடிய தெருவிலியே கூவி விற்பானா என்ற அடிப்படைச் சந்தேகம் கூட பாண்டியன் கொள்ளவில்லை.

இரண்டு சிலம்புகளையும் ஒன்றாய் விற்றிருந்தால் கோவலன் தப்பி இருக்கலாம் என்பது ஒரு நிமிஷம் பொருத்துப் போயிருந்தால் ஆக்சிடெண்ட் ஆகி இருக்காது என்பது போன்ற யூகம்தான்.

திருடிய பொற்கொல்லனே கோவலனை மாட்டி விட்டான் அல்லவா? கோவலனிடம் இருந்து ஒரு சிலம்பை அபேஸ் செய்ய அவனுக்கு எத்தனை நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கும்? அவனுக்குத் தேவைப்பட்டது பழியைச் சுமக்க ஒரு அப்பாவி அவ்வளவுதான். கோவலனை விசாரிக்காமல் தண்டித்த பாண்டியனுக்கு பொற்கொல்லன் இன்னொரு சிலம்பையும் லபக்கி விட்டான் என்று எப்படித் தெரிந்திருக்கும்?

திருடன்தான் ஒற்றைச் சிலம்பை விற்பான் என்பது தவறாகும். அதனால்தான் அவன் குற்றவாளியாகக் கருதப்பட்டான் என்பது பாண்டியனின் குற்றத்தை மறைக்க வேண்டுமானால் சால்ஜாப்பாக சொல்லலாம். நீங்கள் சொல்லுவது இந்தக் காலத்தில் யோசிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தில் எந்தத் திருடனும் களவாடிய பொருளை வெளிப்படையாக விற்றதாக பதிவுகள் இல்லை. பாண்டியன் தான் உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு முட்டாள்தனமாக நடந்து கொண்டவன். எத்தனை ஜோடி சிலம்பு கொண்டு சென்று விற்றாலும் சதிகாரன் தூண்டினால் முட்டாள் தண்டிப்பான் என்பது மட்டுமே உண்மை.


வியாபாரத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். வியாபாரத்தில்தான் சரக்கை அனுப்பி வைத்துவிட்டு 45 நாட்கள் 60 நாட்கள் என பணத்திற்காக காத்திருக்கிறோம். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவன் எப்படி வியாபாரியாக இருக்க முடியும்? பொற்கொல்லனை நல்ல வியாபாரி என்று நம்பியது கோவலனின் தவறல்ல. பணத்தைக் கொடுத்திட்டு போ என்று துடித்திருந்தால் ஒருவேளை நல்ல பொற்கொல்லனாக இருந்தால் ஒரு வேளை இவன் திருடனோ என்ற சந்தேகம் வரும். வியாபார தர்மப்படி நடவாத பொற்கொல்லனை நம்பியது கோவலனின் தவறல்ல..

ஆதி
02-03-2011, 04:33 PM
திருடியவன் எவனும் திருடிய பொருளை திருட்டுக் கொடுத்தவனிடமே விற்பானா ?

மதி
02-03-2011, 04:49 PM
திருடியவன் எவனும் திருடிய பொருளை திருட்டுக் கொடுத்தவனிடமே விற்பானா ?
காதலித்து திருமணம் செய்கையில் வரதட்சிணை வாங்குபவன்..?!:rolleyes::rolleyes: