PDA

View Full Version : நான்...



Nivas.T
26-02-2011, 11:19 AM
சுயநலமில்லா நண்பன்
வெற்றிலைக் காம்பாய்
வெட்டித் தள்ளினான்
என் நட்பை

பாசத்தின் மிகுதியால்
பரவாயில்லை பணிந்துபோவோம்
என்று தேற்றிக்கொண்டாள்
என் தாய்

சந்ததம் மறவாத் தந்தை
தண்ணீர்த் தெளித்து
முகம்கூட பாரமால்
தவிர்த்து வருகிறார் என்னை

தமையன் என்றும் பாராமல்
உதறிவிட்டு ஓடுகிறாள்
பாசத்திற்குரிய தங்கை

சூழநின்ற சுற்றத்தாரும்
கூடிநின்ற குடும்பத்தாரும்
நாடிவந்த நண்பர்களும்
ஓடிப்போகும் வண்ணம்

ஒருமையாய் இருந்தேன்

"நான்" என்ற அகந்தை முகமூடியோடு.....

aren
26-02-2011, 11:52 AM
முதல்வரி கொஞ்சம் புரியவில்லை.

Nivas.T
26-02-2011, 12:43 PM
முதல்வரி கொஞ்சம் புரியவில்லை.

வாங்க ஆரென்
ரொம்ப நாளாச்சு பாத்து

அது ஒன்னுமில்ல

உயிகாக்கும் நட்பும் தலைக்கனத்தால் தடுமாறிப்போகும்
அகந்தையால் அறுபட்டு போகும்

அவ்வளவுதான்

உமாமீனா
27-02-2011, 03:02 AM
"நான்" என்ற அகந்தை முகமூடியோடு.....

நிகழ்கால வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது உமது கவிதை - கவிதை உண்மை பேசுகிறது

கீதம்
27-02-2011, 04:00 AM
உண்மை சொல்லும் கவிதை. பிரச்சனை என்னவென்றால் சுயநலமிக்கவர்கள் அப்படி அறுபடும் உறவுகளைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை. நடைமுறை இப்படிதான் இருக்கிறது.

பாராட்டுகள் நிவாஸ்.



சந்ததம் மறவாத் தந்தை
தண்ணீர்த் தெளித்து
முகம்கூட பாரமால்
தவித்து வருகிறார் என்னை

சந்ததம் மறவா தந்தை? அதன் அர்த்தம் என்ன?

Nivas.T
27-02-2011, 04:31 AM
நிகழ்கால வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது உமது கவிதை - கவிதை உண்மை பேசுகிறது

உண்மைதான் உமாமீனா
ஆணவம் பிடித்தவர்கள் அக்கலாம்முதல் இருந்தாலும்
இக்காலத்தில் அதிகமாகவே காணப்படுகிறார்கள்.
ஆணவம் அழிவுக்கு அடிக்கல் நாட்டிவிடும்

பாராட்டுகளுக்கு நன்றி

Nivas.T
27-02-2011, 04:46 AM
உண்மை சொல்லும் கவிதை. பிரச்சனை என்னவென்றால் சுயநலமிக்கவர்கள் அப்படி அறுபடும் உறவுகளைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை. நடைமுறை இப்படிதான் இருக்கிறது.

பாராட்டுகள் நிவாஸ்.

சந்ததம் மறவா தந்தை? அதன் அர்த்தம் என்ன?

உண்மைதாங்க ஆனால் ஒருநாள் கண்டிப்பாக உண்மை விளங்கும் அப்பொழுது ஒருவரும் இருப்பதில்லை மன்னிப்பு கேட்கக்கூட முடியாது.

சந்ததம் - இக்கணமும், தர்ச்சமயமும் என்னும்
பொருள் படும்

பாராட்டுகளுக்கு - மிக்க நன்றீங்க