PDA

View Full Version : இன்று விடுமுறை..



பிரேம்
26-02-2011, 08:34 AM
இன்னும் தூங்கலாம்
இரண்டு மணிநேரம்..
அதிகாலைக்கு பதில் சொல்லி..
அதன் வேலையில் தலையணை..

அவரவர் வேலைக்கு
அவசரமாய் தயாராகும்..
அண்டை அறையினர்..
மனதிற்குள் எண்ணம்-இந்த
மனிதர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று..

அழுகையோ கூச்சலோ..
சண்டையோ கோபமோ..
எப்படியாயினும்..
இசையாகவே மொழிபெயர்ப்பாகும்..
சிட்டுக் குருவியின் சிணுங்கல்கள்..

நில்லாமலே முதுகில்..
பட்டும்..
சொல்லாமலே கன்னம்
தொட்டும்...செல்கிறாள்..
என்ன திமிர் இந்த தென்றல் தோழிக்கு..

மனதை சொல்ல வரும்
மழலையாய் நிலவு..அதனோடு
மெலிதாய் விளையாடும்
மேகமெனும் தற்காலிக வரவு..

வார விடுமுறையில் நன்றாகவே..
காண முடிகிறது..
கவனிப்பாரன்றி..காத்துகிடக்கும்
விருந்தாளிகளை..
இருந்தாலும் மனம் விழைகிறது...
இன்னொரு திங்கட் கிழமைக்கு..

Nivas.T
26-02-2011, 09:13 AM
இம் பிரமாதம் பிரேம்

பாராட்டுகள்

கீதம்
26-02-2011, 09:27 AM
விடுமுறையின் லயிப்பு ஒவ்வொரு வரியிலும் ரசனையாய் வெளிப்பட்டு மனம் தொடுகிறது. பாராட்டுகள் பிரேம்.

govindh
26-02-2011, 09:52 AM
இசையாகவே மொழிபெயர்ப்பாகும்..
சிட்டுக் குருவியின் சிணுங்கல்கள்..

-மிகவும் ரசித்தேன்...
பாராட்டுக்கள் பிரேம்.

ஜானகி
26-02-2011, 10:27 AM
அலறும் அலாரத்தின் தலையைத் தட்டிவிட்டு, இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கும் சுகம் கிடைக்கிறது.....இதைப் படித்தபின்...

aren
26-02-2011, 11:55 AM
அது ஒரு சுகம், ஆனால் அது ஒரு சிலருக்கே கிடைக்கிறது என்பதே உண்மை.

பிரேம்
27-02-2011, 05:02 AM
பின்னூட்டமிட்ட நிவாஸ்-ன்னா, கீதம் மேடம், கோவிந்த் சார், ஜானகி மேடம், அப்புறம் aren .
அனைவருக்கும் நன்றி..

"அது ஒரு சுகம், ஆனால் அது ஒரு சிலருக்கே கிடைக்கிறது என்பதே உண்மை"
ஏன் சார் உங்களுக்கு கிடைச்சதில்லையா..?!!