PDA

View Full Version : தலைவியின் ஏக்கம்



M.Jagadeesan
26-02-2011, 04:16 AM
மலர் இருக்குது மணம் இருக்குது
வண்டைக் காணவில்லை..அன்பே!
வண்டைக் காணவில்லை.

தலம் இருக்குது கோயில் இருக்குது
தெய்வம் காணவில்லை..அன்பே!
தெய்வம் காணவில்லை.

கல் இருக்குது உளி இருக்குது
சிற்பி இங்கு இல்லை..அன்பே!
சிற்பி இங்கு இல்லை.

வில் இருக்குது அம்பு இருக்குது
வீரன் இங்கு இல்லை..அன்பே!
வீரன் இங்கு இல்லை.

யாழ் இருக்குது நரம்பு இருக்குது
மீட்டும் விரல் இல்லை..அன்பே!
மீட்டும் விரல் இல்லை.

வயல் இருக்குது விதை இருக்குது
உழவன் இங்கு இல்லை..அன்பே!
உழவன் இங்கு இல்லை.

படகு இருக்குது நதி இருக்குது
ஓடக காரன் இல்லை..அன்பே!
ஓடக் காரன் இல்லை.

பண் இருக்குது பாட்டு இருக்குது
பாடக் கலைஞன் இல்லை..அன்பே!
பாடக் கலைஞன் இல்லை.

கடல் இருக்குது அலை இருக்குது
நிலவை மட்டும் காணோம்..அன்பே!
நிலவை மட்டும் காணோம்.

உடல் இருக்குது உயிர் இருக்குது
உன்னை மட்டும் காணேன்..அன்பே!
உன்னை மட்டும் காணேன்.

உமாமீனா
26-02-2011, 05:14 AM
கவிதை நல்ல இருக்கு

தலைவியின் ஏக்கம் - எல்லாம் இருக்கு ஆனா இல்லை - நீங்க இப்ப என்ன சொல்ல வர்ரிகே :wub::icon_shades:

கீதம்
26-02-2011, 05:35 AM
நல்லுதாரணங்களுடன் காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். கவிதை நன்று. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
26-02-2011, 05:59 AM
பாராட்டுக்கு நன்றி! கீதம்!

M.Jagadeesan
26-02-2011, 06:00 AM
உமாமீனாவுக்கு கவிதை புரியவில்லையா?

செல்வா
01-03-2011, 03:40 AM
கொஞ்சம் பின்னால போய் பாரதி பாரதிதாசன் காலக் கவிதை வாசித்த உணர்வு...

பண் இருக்குது பாட்டு இருக்குது...
பாடுவதற்கு பாடகன் தானே வேண்டும்...

கவிஞன் ??

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!

M.Jagadeesan
01-03-2011, 04:37 AM
கொஞ்சம் பின்னால போய் பாரதி பாரதிதாசன் காலக் கவிதை வாசித்த உணர்வு...

பண் இருக்குது பாட்டு இருக்குது...
பாடுவதற்கு பாடகன் தானே வேண்டும்...

கவிஞன் ??

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்...!

கவிஞனும் பாடலாமே! பாரதியார் நன்றாகப் பாடுவாரே!

செல்வா
01-03-2011, 04:56 AM
கவிஞனும் பாடலாமே! பாரதியார் நன்றாகப் பாடுவாரே!

கவிதை இயற்றுபவன் தானே கவிஞன்.
பிறருடைய கவிதையைப் பாடும் போது அவன் பாடகனாகி விடுகிறான் அல்லவா?

தானே இயற்றிய பாடலைப் பாடிய பாரதியை கவிஞன் என்று சொல்லலாம்
பாரதி இயற்றியப் பாடலைப் பாடும் இசைக் கலைஞர்களைப் பாடகர்கள் என்போமா அல்லது கவிஞர்கள் என்போமா?

M.Jagadeesan
01-03-2011, 05:05 AM
கவிதை இயற்றுபவன் தானே கவிஞன்.
பிறருடைய கவிதையைப் பாடும் போது அவன் பாடகனாகி விடுகிறான் அல்லவா?

தானே இயற்றிய பாடலைப் பாடிய பாரதியை கவிஞன் என்று சொல்லலாம்
பாரதி இயற்றியப் பாடலைப் பாடும் இசைக் கலைஞர்களைப் பாடகர்கள் என்போமா அல்லது கவிஞர்கள் என்போமா?


மாற்றிவிட்டேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-03-2011, 05:53 AM
தலைவியின் ஏக்கம் அவள் மனதின் துக்கம் பாடும் போது வெளிப்படும் லயங்களின் சுருதி மிகவும் அருமை ...அழகான அறிவுபூர்வமான வாதங்கள் ..தொடருங்கள்

M.Jagadeesan
01-03-2011, 05:57 AM
த*.க.ஜெய் அவர்களுக்கு நன்றி!

dellas
10-03-2011, 11:16 AM
ஏக்கம் புரிகிறது. ஆனால் அவள் இல்லாமல், கவிதை பொழிய மட்டும் சிந்தை ஒத்துழைப்பது எப்படியோ?
வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
10-03-2011, 11:23 AM
அளவு கடந்த மகிழ்ச்சியிலும், அளவு கடந்த துக்கத்திலும் கவிதை
பிறப்பது இயற்கைதானே!