PDA

View Full Version : அமாவாசையும் ஆண்குழந்தையும்



M.Jagadeesan
25-02-2011, 11:52 AM
அமாவாசை அன்று
ஆண்குழந்தை பிறந்தால்
திருடன் ஆவான் என்று
ஜோஸியர் சொன்னார்.

அமாவாசை அன்று பிறந்த
ஆண் குழந்தையைக் கண்டு
ஆனந்தம் அடைந்தான்
அரசியல் வாதி.

sarcharan
25-02-2011, 12:00 PM
மனிதன் படம் பாத்த மாதிரி இருக்கு சார்

M.Jagadeesan
25-02-2011, 12:13 PM
மனிதன் படம் பாத்த மாதிரி இருக்கு சார்

மனிதன் படம் நான் பார்க்கவில்லை.

முரளிராஜா
25-02-2011, 12:33 PM
அருமையா இருக்கு சார்

aathma
25-02-2011, 12:33 PM
நண்பரே நன்றாக இருக்கிறது உங்களது குறுங்கவிதை .



ஆனந்தம் அடைந்தான்
அரசியல் வாதி.


அந்த திருடன் , ஒருநாள் தன் மடியிலேயே கைவைத்துவிடப் போகிறான் என்ற கலக்கத்துடனும் இருந்தான் அரசியல்வாதி என்ற ஒரு வார்த்தையையும் உங்கள் கவிதையில் சேர்த்துகொள்ளுங்கள் . நன்றாக இருக்கும் .

வாழ்த்துக்கள்

M.Jagadeesan
25-02-2011, 12:34 PM
அருமையா இருக்கு சார்

முரளிராஜாவுக்கு நன்றி!

M.Jagadeesan
25-02-2011, 12:35 PM
நண்பரே நன்றாக இருக்கிறது உங்களது குறுங்கவிதை .



அந்த திருடன் , ஒருநாள் தன் மடியிலேயே கைவைத்துவிடப் போகிறான் என்ற கலக்கத்துடனும் இருந்தான் அரசியல்வாதி என்ற ஒரு வார்த்தையையும் உங்கள் கவிதையில் சேர்த்துகொள்ளுங்கள் . நன்றாக இருக்கும் .

வாழ்த்துக்கள்

நன்றி! ஆத்மா!!

உமாமீனா
26-02-2011, 05:42 AM
ஆகா அற்புதம் - அரசியல்வியாதி புள்ளையா?!

M.Jagadeesan
26-02-2011, 06:02 AM
உமாமீனாவுக்கு நன்றி!

சிவா.ஜி
26-02-2011, 06:32 AM
அரசியல்வாதிகளின்
வீட்டுப் பெண்களின்
எல்லாப் பிரசவமும்
அமாவாசையிலே
ஆகும்படி ஏற்பாடு..
தப்பித்தவறியும்
நல்லவராய் எந்த வாரிசும்
பிறந்துவிடக்கூடாது...!!!!

நல்லாருக்குங்க ஜெகதீசன். வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
26-02-2011, 07:02 AM
வாழ்த்துக்கு நன்றி! சிவா.ஜி அவர்களே!