PDA

View Full Version : அன்றும்....இன்றும்..:பாகம்:5



ராஜாராம்
25-02-2011, 08:04 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTE2yuAwXnb6Pcqnklcrx59K6Ni9FjJek6aBPbWXI6IW-axHSbdkenbhgU


நிகழ்கால நிகழ்வுகள்..
இன்று நடப்பது...
2011..........

"ஹலோ...நான்தான் ஷோபாவின் அப்பா பேசுறேன்...
ஷோபா நேத்து பாய்ஸன் சாப்பிட்டு தற்கொலைப் பன்னிக்கப் போயிட்டாள்...
ஆஸ்பதிரியில் சேர்த்திருக்கோம்..கொஞ்சம் சீரியஸாதான் இருக்கு...",
என்று அவர் கூறியதும்,,,'

"ஏன்டா...என்னாச்சு?",

"உங்களுக்குள்ளே எதும் பிரச்சனையா?",

"நீ எதுவும் அவள்கிட்ட சண்டைப்போட்டியா?",
இப்படி பலக் கேள்விகள்...
ராஜாவின் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து வரத்தொடங்கின....

"அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா...
நான் எதுவும் பிரச்சனை பண்ணவில்லையே",
என்ற ராஜா...

சில நாட்களுக்கு முன் தன்னிடம் அவள் வைத்த கோரிக்கையைப் பற்றியும்,
போன்னில் தன்னிடம் அவள் பேசியதையும்,,விவராமாக கூறினான்",

"என்னடா அந்தப் பொண்ணு எடுத்தஎடுப்பிலே தனியாகப் போகனும்னு சொல்லுது...",

"அதுசொல்றதும் சரிதானே...ஈரோடுப்போல பெரிய ஊரில் இருந்தால்
உனக்கும் வருமானம் நல்லா வரும்தான்..",

"நீ எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்
அதான் எங்கள்ள்ளூக்கு",

"போனாப் போவது நீ விட்டுக்கொடுத்துதான் போயேன்",

"இப்படி ஆரம்பத்தில்லேயே...பிரச்சனைப் பன்றப் பொண்ணு,
நாளைக்கு சின்ன சின்ன விஷயங்களைகூட பெரிசுபன்னும்.
இது உனக்கு ஒத்து வராது....",

இப்படி பலரும் பலவிதமாக அறிவுரைக் கூறத் தொடங்கினர்.

(ஓரிரு நாட்கள் ஓடின)
ஷோபாவின் செல்ஃபோன்னிற்கு தொடர்புக் கொண்டான் ராஜா.

"ஹலோ,,,என்ன விஷயம் சொல்லுங்க?..."
என்று சிரத்தையின்றி அவள் பேசினாள்.

"சாரி...நான் எதுவும் தப்பா பேசிட்டேனா?
அன்றைக்கு நீ பேசினது என்னால ஏற்றுக் கொள்ளமுடியலை...
அதான் அப்படிப் பேசிட்டேன்..",
ராஜா கூற,

"ம்ம்,,,,,",
என்ற வார்த்தை மட்டுமே அவளிடம் பதிலானது..

"நான் உன்னயே ஏமாற்றனும்னு நெனச்சிருந்தால்...
நீ சொன்னதிற்கெல்லாம்,..சரின்னு சொல்லிவிட்டு,,.'
கல்யாணத்திற்கு பிறகு..மறுத்திருப்பேன்",
என்றவன்,,

"எனக்கு இருக்கிற சிகரெட் குடிக்கிற கெட்டப்பழக்கத்தைகூட,
நான் காதலிச்சதைப் பற்றிகூட
உன்னிடம் மறைக்காமல் சொல்லிட்டேன்..
அதுக்காக நான் உத்தம் நல்லவன்னு
சொல்லிக் கொள்ளவில்லை...
ஆனால் நீ ஏன் இப்படிப் பண்ணினாய்?",
என்றதும்..

"உங்களைப் பிடிக்கவில்லை...
மாசம்30000க்கு மேலே,சம்பாதிக்கிறவங்கதான்
என்னைய நல்லா வெச்சுப்பாங்க...
நீங்க நான் சொல்றதைக் கேட்டும் முன்னுக்கு வரமாட்டிங்க..
நீங்களாவும் முன்னுக்கு வரமாட்டிங்க..",
என்றாள் கடுமையாக,

"மாசம் 30000க்கு மேல சம்பாதிகிறவன்தான் வேணூம்னா...
அன்றைக்கே..பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாமே...
உங்க வீட்டு பூஜை அறையில் பேசும்பபோது
எல்லாத்திற்கும்...சரிசரின்னு
மண்டைய ஆட்டுனியே",
என்றவன்,"

"ஓகே...எது எப்படியோ...
இப்பயாவது சொலித்தொலச்சியே....
கல்யாணத்திற்கு பிறகு கழுத்தறுக்காமல்....
நல்லப் பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க.
உனக்கே நீ செஞ்சது தப்புன்னு தோன்றி...மறுபடி
என்னையே கல்யாணம் செஞ்சுக்க ஆசைப் பட்டாலும்...
எனக்கு சரிதான்... குட்பை..மேடம்",

அவனது செல்ஃப்போன்னை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு,
தன் வேலைகளைப் பார்க்கத்தொடங்கினான்....


".சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்....
எனக்கும் அந்தக் குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்...
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்குமென்றேன்...
தயக்கம் என்பது சிறிதுமின்றி..
எனக்கும் எனக்கும் அது பிடிக்கும்மென்றாய்...
அடி உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்கும்..
என்னயேன் பிடிக்காதென்றாய்..
சர்கரை நிலவே
சர்கரை நிலவே
கானும்போதே மறைந்தாயே...".
என்றல் படல்வரிகள் நிகழ்கால நிகழ்வுகள் ஆனது இன்று....





http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRH-7z0dgKcHreZOANLhpNR2XU8lWE7cSIfP__ziUsaKjPe4tXbPPnrbdI

இறந்தகால நினைவுகள்...
அன்று...நடந்தவை...
2003.....மார்ச் மாதம் 28..மாலை 6.30மணி...
(மயிலாடுதுறை வதானேஷ்வரர் கோவிலில்)

"ஏன் இப்படி சோகமாவே இருக்கிங்க...
கொஞ்சம் சிரிங்க...
சிரிப்பு...கிண்டல்கேலி..இதெல்லாம் தான் உங்களிடம்
எனக்குப் பிடிச்சதே....அப்படி இருக்கும்பபோது...
ஏன் உம்ம்ம் ன்னு..உட்க்கார்ந்திருக்கிங்க...",
என்றாள் சுஜாதா..

"இல்லை உங்கப்பா உடனேக் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாரு...
வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் போல
நம்மக் கல்யாணம் நடக்கனும்மா?",
என்று ராஜாக் கூறியதும்,'

"நீங்க அதற்கு ஒத்துகிட்டாலும்...நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்..
உங்க வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டு...'
உங்க அம்மா அப்பா வயிற்றெரிச்சலைக் கொட்டிக்க வேண்டாங்க...
அப்படி அவர்கள் வயிற்றெரிஞ்சால் நாம நல்லாவே வாழமாட்டோம்...",
என்றவள்,
"அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன்....
நீங்க கவலைப்படாமல் உங்க வேலயைப் பாருங்க...
முதலில் உங்க அக்கா அண்ணனுக்குக் கல்யாணம் நடக்கட்டும்..
அதுவரைக்கும்...இப்படியே,,..ஜாலியா...
இருப்போம்..",
என்று ஒரு தாயைப் போல அவன் தலையை வருடினாள்.

அவளது கரங்கள்
அவனதுமேல் பட்டது இதுவே முதல்முறை...
அதில் அன்னையின் பரிவும்...பாசமும்...நிறைந்திருந்தது..

"தாங்ஸ் சுஜா,...
.நீ எனக்குக் கிடைத்ததால்...
உண்மையாவே நான் ரொம்ப லக்கி...
என்றவனின் கண்கள் சற்றேக் கலங்கித்தான் போனது..

(2003...ஏப்ரல்...1.)
காலை8.00மணி.

தனது வேலக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான் ராஜா..
அவன் வீட்டு டெலிபோன் மணி,
முழுமை இன்றி,அரைகுறையாக 2முறை அடித்தது..
டெலிபோன் அப்படி அடித்தால் அது சுஜாவின் அழைப்பு
என்பதை அறிந்துக்கொண்டு//

டெலிபோன் அருகே நின்றான்..
மீண்டு சினுங்கியது டெலிபோன்..
அதை சட்டென எடுத்த ராஜா..

"ஹலோ நான்தான் அபிராமி பேசுறேன்...",
சுஜாவின் சித்திமகள் ,(அவளது தங்கை)யின் குரல்,

"என்ன அபிராமி...என்ன விஷயம்?",
ராஜாக் கேட்டதும்...

"சுஜாதா அக்கா செத்துப்போச்சு....
நம்மையெல்லாம் விட்டுவிட்டு போயிடுச்சி மாமா,....",
என்று கதறி அழுதாள்..

"ஏய் சும்மா விளையாடாதே...
ஏப்ரல்1ன்னு என்னை முட்டாள் ஆக்கப் பார்க்கிறாயா",
என்றவனின் குரலில் நடுக்கம் இருந்தது.

"இல்லை மாமா...சத்தியமா அக்கா செத்துப் போயிடுச்சி",
மேலும் கதறி அழுதாள்.

"ஐயையோ...சுஜா போயிட்டியேடி..."
என்று,அவள் வீட்டில்
யார்யாரோ கதறி அழும் சப்தங்களும்,
டெலிபோன்னில் கேட்கத்தொடங்கியது..

ஒருநிமிடம் ராஜாவின் தலையே விறிவிறுவென சுற்றிவிட்டது....
பிரம்மைப் பிடித்தவன் போல கண்கள் நிலைக்குத்தி விட்டன...
உடலில் நடுக்கம்...
கண்களில் கண்னீர்...

"ஐயோ சுஜா போயிட்டாளா....
ஏன்?
என்ன ஆச்சு?

2நாட்களுக்கு முன் கோவிலில் பார்த்துப் பேசினோம்மே..",

என்னசெய்வது ஏது செய்வது என்று அறியாமல் தடுமாறத் தொடங்கினான்........

"பறந்ததேன்...
மறந்ததேன்...
படித்தை முடித்ததேன் உனதுக் கதையை.......
எரியுதே உலகமே சோக நெருப்பில்...
வார்த்தை தவறிவிட்டய் கண்ணம்மா....
மார்புத் துடிக்குதடி...
காற்றிக் கலந்துவிட்டாய்..கண்ணம்மா..
கண்கள் கலங்குதடி....",
என்றப் பாடல் வரிகள் அன்று நிகழ்வுகள் ஆனது...


(தொடரும்.......)

sarcharan
25-02-2011, 08:19 AM
இரண்டு பாகங்களிலும் திடீர் திருப்பம் கொடுத்து இருக்கீங்க.. நன்றாய் உள்ளது. தொடருங்கள்

முரளிராஜா
25-02-2011, 09:01 AM
தொடர்ந்து எழுது ராரா உன் கதையை

சூரியன்
25-02-2011, 09:10 AM
நன்றாக இருக்கிறது அடுத்த தொடர்ச்சியை எழுதுங்கள்.

மதி
25-02-2011, 10:29 AM
திடீர் திருப்பங்களுடன் போகுது.. உங்க கதை.. 'ஏப்ரல் ஒன்று' என்று இருக்கிறது..!! அப்போ முன் நடந்த சம்பவம்.. மார்ச் இருவத்திஎட்டாம் தேதியா??

ராஜாராம்
25-02-2011, 10:36 AM
நன்றி மதி அவர்களே,
அந்த துயரசம்பவம் நடந்தது ஏப்ரல்1.
மார்ச் 28 அவர்கள் கடைசியாக சந்தித்த நாள்.
படைப்பில் ஏற்பட்ட தவறை உடன் சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி.
தாங்கள் சுட்டிக்காட்டிய தவறை திருத்தி விட்டேன்

sarcharan
25-02-2011, 10:38 AM
தொடர்ந்து எழுது ராரா உன் கதையை

சிலேடை பேச்சு போலுள்ளதே..

ராஜாராம்
25-02-2011, 10:42 AM
நன்றி
*****சரண்
சூரியன்,
மதி,
முரளிராஜா,அனைவருக்கும்.

முரளிராஜா
25-02-2011, 10:42 AM
சிலேடை பேச்சு போலுள்ளதே..
:lachen001: புத்திசாலி சாரா நீங்க

ராஜாராம்
25-02-2011, 12:41 PM
கொஞ்சம் நேரம் நான் லைன்ல இல்லாமப்போயிட்டேன்....
அதுக்குள்ளே எல்லத்தையும் போட்டு உடைச்சிவிட்டயே...முரளி

பொழுதுபோய் ஒன்னும் நடக்கலையேன்னு நெனச்சேன் நடத்திட்ட.... :sauer028: