PDA

View Full Version : பருக, தீர்ந்துபோனது கனவல்ல...!



கலாசுரன்
25-02-2011, 07:52 AM
*
மனமுடைந்து சிதறிய
துகள்களின் நிழலில்
குளிர்காயும் ஞாபகங்கள்..

கருவிழி அசையாது
அர்த்தமின்றிப் பார்த்திருக்கும்
கண்முனை வெற்றிடத்தில்
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்..

சொல்வார்த்தை கேட்காமல்
சற்று தனிமை விரும்பி
முன்னிருந்த தேநீர்க் குவளையில்
குதித்தது கனவொன்று..

கடைவிழி முறைப்போடு
மெல்ல மெல்ல பருக,
தீர்ந்துபோனது கனவல்ல
சலனமின்றி சில நினைவுகள் மட்டும் தான்..

வார்த்தைத் தொகுப்புகள் கைகூடாது
நழுவிட
எட்டிப்பிடிக்கையில்
விழுந்து நொறுங்கியது
தேநீர்க் குவளை..

நொறுங்கிய துண்டுகளில்
என் கனவுகளின் உருவங்களும்
மிச்சம் சிந்திய தேநீரில்
என் நினைவுகளின் ஈரமும் கண்டேன்..

கருவிழிகள் சலனமுற்று
சிந்திய
விழிநீர் முத்துக்களின் பிரிதலும்
என்னை மீண்டும்
கனவுகளில் தள்ளிவிட்டு சிரித்தன..

*
***
கலாசுரன்

பிரேம்
25-02-2011, 08:05 AM
கவிதை அருமை..வாழ்த்துக்கள்...:)
..வேணும்னா இன்னொரு டீ சொல்லவா..!:cool:

Nivas.T
25-02-2011, 08:32 AM
அருமை கலாசுரன்
அற்புதமான சிந்தனை
பாராட்டுகள்

M.Jagadeesan
25-02-2011, 10:20 AM
கவிதை நன்று!

கலாசுரன்
28-02-2011, 02:56 AM
நன்றி பிரேம், நிவாஸ் மற்றும் ஜெகதீசன்..:)

உமாமீனா
28-02-2011, 03:00 AM
சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

கலாசுரன்
04-03-2011, 03:18 AM
நன்றி உமாமீனா :)

ஜானகி
04-03-2011, 05:36 AM
எப்போதெல்லாம் கவிதை பிறக்கும் என்பது புதிராகவேயிருக்கிறது...!

நிதானமாக, ஆற அமர கனவுகளுடன் தேநீர் குடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

ரசிகன்
04-03-2011, 12:09 PM
பின்னிரவில் தேநீர் பருகும் ஒரு சுகமான உணர்வு! :)

ஷீ-நிசி
06-03-2011, 12:42 AM
கருவிழி அசையாது
அர்த்தமின்றிப் பார்த்திருக்கும்
கண்முனை வெற்றிடத்தில்
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்..


அழகியல் சொல்லும் அர்த்தமுள்ள வரிகள்..

வாழ்த்துக்கள்

கலாசுரன்
09-03-2011, 11:45 AM
நன்றி ஷீ நிசி :)

ஓவியா
09-03-2011, 11:08 PM
*
மனமுடைந்து சிதறிய
துகள்களின் நிழலில்
குளிர்காயும் ஞாபகங்கள்..

கருவிழி அசையாது
அர்த்தமின்றிப் பார்த்திருக்கும்
கண்முனை வெற்றிடத்தில்
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்..

சொல்வார்த்தை கேட்காமல்
சற்று தனிமை விரும்பி
முன்னிருந்த தேநீர்க் குவளையில்
குதித்தது கனவொன்று..

கடைவிழி முறைப்போடு
மெல்ல மெல்ல பருக,
தீர்ந்துபோனது கனவல்ல
சலனமின்றி சில நினைவுகள் மட்டும் தான்..

வார்த்தைத் தொகுப்புகள் கைகூடாது
நழுவிட
எட்டிப்பிடிக்கையில்
விழுந்து நொறுங்கியது
தேநீர்க் குவளை..

நொறுங்கிய துண்டுகளில்
என் கனவுகளின் உருவங்களும்
மிச்சம் சிந்திய தேநீரில்
என் நினைவுகளின் ஈரமும் கண்டேன்..

கருவிழிகள் சலனமுற்று
சிந்திய
விழிநீர் முத்துக்களின் பிரிதலும்
என்னை மீண்டும்
கனவுகளில் தள்ளிவிட்டு சிரித்தன..
*
***
கலாசுரன்

காதலின் வலியை உணர்ந்து சொன்ன விதம் முற்றிலும் வித்தியாசம். வார்த்தை கோர்வைகள் மிகவும் அழகாக இருக்கின்றன. தெளிந்த சிந்தனையான வரிகள்.

கவிதை அபாரம். வாழ்த்துக்கள்.

அக்னி
14-03-2011, 01:45 PM
*
மனமுடைந்து சிதறிய
துகள்களின் நிழலில்
குளிர்காயும் ஞாபகங்கள்..
துகள்களிற் குளிர்காயும் அளவுக்குச்
சிறு ஞாபகங்கள்...
ம்ம்ம்...
மிக நுணுக்கமாகக்
கணம் கணமாகப்
பதிவுசெய்யப்பட்ட
முக்கியத்துவமிக்க ஞாபகங்கள்,
எது... அல்லது எதிலிருந்து...


கருவிழி அசையாது
அர்த்தமின்றிப் பார்த்திருக்கும்
கண்முனை வெற்றிடத்தில்
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்..
:icon_b:
ஆகாயம் வரைக்கும்
காட்சிகள் அணிவகுத்தாலும்,
கனவென்று வந்துவிட்டால்,
அத்தனையும் வெண்திரையாகிடக்,
கனவு மட்டுமே திரையிடப்படும்..,
பார்வைக் குருடுகள்...


சொல்வார்த்தை கேட்காமல்
சற்று தனிமை விரும்பி
முன்னிருந்த தேநீர்க் குவளையில்
குதித்தது கனவொன்று..
அட...
கனவுக்கு ஏன் இந்தத்
தற்கொலை எண்ணம்..?


கடைவிழி முறைப்போடு
மெல்ல மெல்ல பருக,
தீர்ந்துபோனது கனவல்ல
சலனமின்றி சில நினைவுகள் மட்டும் தான்..
வடிகட்டப்பட்ட கனவுக்குத் தெரியுமா
குதித்ததாற்
கால் முறிந்த அதன் நினைவுகள்...


வார்த்தைத் தொகுப்புகள் கைகூடாது
நழுவிட
எட்டிப்பிடிக்கையில்
விழுந்து நொறுங்கியது
தேநீர்க் குவளை..
முறிந்த வலியில்
வலுவிழந்துபோய்க்..,
கனவின் அழுத்தம் தாங்காது
தவறியும் வீழ்ந்ததோ...


நொறுங்கிய துண்டுகளில்
என் கனவுகளின் உருவங்களும்
மிச்சம் சிந்திய தேநீரில்
என் நினைவுகளின் ஈரமும் கண்டேன்..
தெரிந்தது,
கனவுகளின் உருவங்களல்ல,
கனவின் உருவங்கள்...
நனைந்தது,
நினைவின் ஈரமல்ல,
நினைவின் இரத்தம்...


கருவிழிகள் சலனமுற்று
சிந்திய
விழிநீர் முத்துக்களின் பிரிதலும்
என்னை மீண்டும்
கனவுகளில் தள்ளிவிட்டு சிரித்தன..
திரையிட்ட விழிநீர்
மூடிநிற்கவில்லை...
காட்சி மாற்றுகின்றது...

பாராட்டு கலாசுரன்...
என்னை மிகக் கவந்தது இக்கவித்தலைப்பு...

ஓவியா
21-03-2011, 01:15 AM
அக்னியின் அலசல் கவிதையை கோபுர உச்சியில் ஏற்றி வைத்தது போல் அமைந்து விட்டது.

பலே தம்பி.

கலாசுரன்
21-03-2011, 11:48 AM
நினைவின் ஈரமல்ல,
நினைவின் இரத்தம்...

அது என்னை மிகவும் வேகமாக ஒரு ஆழமிகு பள்ளத்தாக்கிற்கு கொண்டு சென்றது ....நன்றி அக்னி :)///

--------------------------------------------------------------------------

உண்மை சொல்லும் ஓவியங்களென உங்கள் பின்னூட்டம்

அவ்வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஓவியா..:)

ஆளுங்க
21-03-2011, 01:58 PM
இப்ப தான் தெரியுது!


தம்பி..........
டீ இன்னும் வரலை... :lachen001:

கவிதை ரொம்ப நன்றாக இருந்தது!!
தேநீர் கோப்பை உடையும் போதும் நம் மனம்யஉம் உடைகிறது!!

கலாசுரன்
29-03-2011, 11:35 AM
நன்றி ஆளுங்க ..:)

கீதம்
30-03-2011, 06:03 AM
வார்த்தைப் பிரயோகம் வெகு அருமை. கடைசி பத்தி வலிகளின் உச்சம். பாராட்டுகள் கலாசுரன் அவர்களே.

கலாசுரன்
02-04-2011, 06:27 AM
மிக்க நன்றி கீதம் அதை உணர்தமைக்கும் உங்கள் பாராட்டிற்கும்..:)

கலாசுரன்
29-11-2011, 05:44 AM
எப்போதெல்லாம் கவிதை பிறக்கும் என்பது புதிராகவேயிருக்கிறது...!

நிதானமாக, ஆற அமர கனவுகளுடன் தேநீர் குடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

இப்பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல தாமதமானதில் வருந்துகிறேன்..

மிக்க நன்றி

கலாசுரன்
29-11-2011, 05:45 AM
பின்னிரவில் தேநீர் பருகும் ஒரு சுகமான உணர்வு! :)

இப்பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல தாமதமானதில் வருந்துகிறேன்..

மிக்க நன்றி

வசீகரன்
29-11-2011, 11:21 AM
அற்புதமான சிந்தனை வரிகள்...
இயல்பு கவிதை... இனிய வரிகள்...
பாராட்டுக்கள் கலாசுரன்...

கலாசுரன்
03-12-2011, 01:07 PM
அற்புதமான சிந்தனை வரிகள்...
இயல்பு கவிதை... இனிய வரிகள்...
பாராட்டுக்கள் கலாசுரன்...

மிக்க நன்றி வசீகரன் .. :)