PDA

View Full Version : இளவரசி..



rika
03-12-2003, 03:18 PM
ஒருங்குறியாக்கம்-அன்புரசிகன்

இளவரசியாய் இருந்தாள்..
ஆமாம்,
இருந்ததாகச் சொல்லப்பட்டது..

பார்வை பிளம்புகள்
தாக்கியதில்
பித்தமாயினர் பலர்..
கவிஞனாயினர்கள் சிலர்..

கோலத்தை
மாற்றிப்பார்த்த காலம்
இன்று பரிதவிக்கவிட்டுவிட்டது..

மகவை மனநலமருத்துவமனையில்
அடைத்துவிட்டதற்கு
காரணமாயிருந்த
இந்நாள் இளவரசி கண்டு
கண்ணீர் விடுகிறாள்
முந்நாள் இளவரசி..

இளவரசிகள்
கொடூரமானவர்கள்..

அவள் இளவரசியாய் இருந்தாள்..

பாரதி
03-12-2003, 03:43 PM
அன்பு ரிகா,
இன்று பதிக்கப்பட்டுள்ள பல கவிதைகள் குறியீடுகளைக் கொண்டுள்ளன என்பது போல தோன்றுகிறது.
கேள்வி பதில்களாய்.... விதவிதமாய்...வெவ்வேறு நடையில்....
ஒரு விதத்தில் கவி மழையில் நனைவது மகிழ்ச்சியே...

இளசு
03-12-2003, 11:24 PM
புரியவில்லை. விளக்கம் தாருங்கள். பின்னர் புரிந்து விமர்சனம் தருகிறேன்.

நன்றி ரிகா அவர்களே..

கவிப்பயணம் தொடரட்டும்.

இக்பால்
04-12-2003, 04:39 AM
ரீகா தங்கை...

விளக்கம் தந்தால் பாராட்டு உண்டு.

-அன்புடன் அண்ணா.

அலை...
05-12-2003, 05:25 AM
ம்ம்..

அலை...

இக்பால்
05-12-2003, 02:55 PM
என்ன ரீகா தங்கை ... எங்கள் பாராட்டுக்கள் தேவை இல்லையா?

-அன்புடன் அண்ணா.

பூமகள்
25-10-2007, 06:40 PM
இளவரசி..

இளவரசியாய் இருந்தாள்..
ஆமாம்,
இருந்ததாகச் சொல்லப்பட்டது..

எனக்கு இருவேறு பரிணாமங்களை அர்த்தங்களாக அளிக்கிறது இக்கவிதை..!

1. இளவரசி போன்ற பேரழகியாய் ஒரு பெண் இருந்தாள். அப்படித்தான் எல்லாராலும் சொல்லப்பட்டது. இங்கு பெண்ணாகவும் எடுத்துக் கொள்ளலாம்..

2. இளவரசியை "காதல்" ஆகவும் உருவகப்படுத்தலாம்.


பார்வை பிளம்புகள்
தாக்கியதில்
பித்தமாயினர் பலர்..
கவிஞனாயினர்கள் சிலர்..
1. அந்த இளம்பெண்ணின் வேல்விழித்தாக்குதலில் பலர் சித்தம் மயங்கி பித்தராகவும் பலர் கவிஞராகவும் ஆகினர்.

2. காதலின் பார்வை பட்டவர்கள் பலர் பித்தராகவும் சிலர் கவிஞராகவும் மாறிப்போயினர்.


கோலத்தை
மாற்றிப்பார்த்த காலம்
இன்று பரிதவிக்கவிட்டுவிட்டது..
1. அப்பெண்ணின் கன்னிக் கோலத்தைத் தவிர்த்து மணக்கோலத்தில் பார்க்க எண்ணிய காலம், காதல் கைகூடாததால் பரிதவிக்கவிட்டது கன்னியவளை..!!

2. காலமாற்றம்... காதலை தோல்வியில் முடிக்கிறது. வஞ்சிக்கப்பட்டவரை தவிக்கவிட்டு காதல் தடம்புரள்கிறது.


மகவை மனநலமருத்துவமனையில்
அடைத்துவிட்டதற்கு
காரணமாயிருந்த
இந்நாள் இளவரசி கண்டு
கண்ணீர் விடுகிறாள்
முந்நாள் இளவரசி..
1. தனது மகனை மருத்துவமனையில் சேர்ப்பித்த தாய், அதற்கு காரணமான பெண்ணைப் பார்த்து அழுகிறாள்..! அந்த தாயும் முன்னாளில் காதல் வயப்பட்டவளே.. ஆகவே... முந்நாள் இளவரசி..என்பது அவன் தாய்.

2. காதல் தோல்வியில் தவித்து இருக்கும் அவனது நெஞ்சில் பழைய முன்னால் காதல் நினைவுக்கு வந்து மேலும் அழச்செய்கிறது.


இளவரசிகள்
கொடூரமானவர்கள்..

அவள் இளவரசியாய் இருந்தாள்..1. காதலில் சிக்க வைக்கும் பேரழகிப் பெண்கள் மிகவும் கொடுமையானவர்கள்..!!

2. காதல் என்றுமே மென்மையான வன்மை தான்.
வலி மிகுந்த சுகம் தான் காதல். காதல் அழகாய் இருந்தது.

நல்லதொரு கவிதை. அர்த்தம் தான் விளங்கவேயில்லை. எனது விளக்கம் சரியா என்று யாரேனும் சொல்லுங்களேன்.

அமரன்
25-10-2007, 06:42 PM
அன்று
அவள் இளவரசி..!
இன்று
இவள் இல்லத்தரசி...!

மனமில்லாத கொடூர இளவரசிகள்
மனநல காப்பகத்தில் இளவரசர்கள்
இக்கால சாத்திய நிகழ்தகவு
அதிகரித்து செல்வது அரிது...!

அமரன்
25-10-2007, 07:35 PM
அப்பெண்ணின் கன்னிக் கோலத்தைத் தவிர்த்து மணக்கோலத்தில் பார்க்க எண்ணிய காலம், காதல் கைகூடாததால் பரிதவிக்கவிட்டது கன்னியவளை..!!

அவளைப் பார்த்த பலரை
பார்வையால்
பித்துப் பிடிக்கவைத்த பாவை

சத்தமின்றி புளுங்குகின்றாள
சித்தங்கலங்கிய
இளவரசன் அருகாமையில்..!

அமரன்
25-10-2007, 08:00 PM
இளவரசியை "காதல்" ஆகவும் உருவகப்படுத்தலாம்.
காத(ல்)லாய் இருந்தது
ஆமாம்
இருந்ததாக சொல்லப்பட்டதோ..!

காதலின் சுயம்வரத்தில்
பார்வையின் கூர்மையால்
பித்துப் பிடித்ததோ பலருக்கு..!

கவிஞர்களும் பித்தர்களே...!

(சோலைகளிலும், மலைகளிலும்
பாடித்திருந்த பாரதிக்கு
பித்தன் பட்டம் சூட்டவில்லையா?)

காதலால் தரித்த சூல்
அவதரித்த வேளையில்
காலம் மாறியபோது.
மணக்கோலம் மாறியதோ..!

மனமகள்
மணமகள் ஆகவில்லையோ..!

இப்போது காதல்
இல்லத்து அரசியானதோ..!
மகவை காப்பகத்தில்
பத்திரப் படுத்தியதோ..!

அவளை
இல்லத்தரசி ஆக்கிய
இந்நாள் காதல் கண்டு
கண்ணீர் வடிக்கிறதோ
அந்நாள் காதல்...!

காதலுக்கு
இலக்கணம் இலக்கு
ஏதும் இல்லையோ..!

இலக்கணம் இல்லாக்காதல்(கள்)
கொடூரமானதில்
வேடிக்கை ஏதுமில்லையோ....!

பலர்பால், பலவின்பால்
இரண்டிலும் காதல் உள்ளதோ...!

எது எப்படியோ...

அன்று
அவள் இளவரசி..!
இன்று
இவள் இல்லத்தரசி...!

யவனிகா
25-10-2007, 08:05 PM
அசல் கவிதையை விட பின்னூட்டக் கவிதைகள் பின்னியெடுக்கின்றன.