PDA

View Full Version : அன்பா காதலா



மீனலோஷனி
06-04-2003, 06:03 PM
ண்ணே கண்மணியே
நான் கண்டெடுத்த சித்திரமே


கண்ணன் என் மேல்
நீ வைத்த பாசம்
கண்முன் இன்னும்
நிழலாடுதடி


கரையில்லா அன்பு
என் மேல் நீ வைத்தாய்
காற்றாய் என்னைத்
தழுவியே நின்றாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்


என் கையில் அடிபடவே
கதிகலங்கிப்போனாய்
கண்களில் நீர் கசிய
கருணையுடன் நின்றாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்


காய்ச்சலில் நான்
துடித்துக் கிடக்கவே
கண்ணே உன் கவனிப்பால்
கடல் கடக்க வைத்தாய்
காதலா என்றேன்
கண்டித்து அன்பு என்றாய்


கல்யாண பத்திரிகை
கையில் நீ தரவே
அன்பா என்றேன்
அழுதுகொண்டே
இல்லை காதல் என்றாய்

rambal
06-04-2003, 06:13 PM
காதலாய் இருந்த பொழுது அன்பென்பர்..
பிரிவு வருகையில்
அன்பா என்றால் காதலென்பர்..
இதுதான் காதல்..
அழகாய் சொல்லிய மீனாவிற்கு பாராட்டுக்கள்

இளசு
06-04-2003, 07:16 PM
உப்பென்றால் பப்பென்றும்
பப்பென்றால் உப்பென்றும்
எப்போதும் ஆடுகின்ற
தப்பாட்டம் இது.....

நல்ல கவிதை மீனா அவர்களே, பாராட்டுகள்......

gans5001
07-04-2003, 03:43 AM
காலம் கடந்த பின் யாசிப்பதே காதலின் இலக்கணமாய் மாறிவிட்ட்தே

Narathar
07-04-2003, 04:42 AM
நல்ல கவிதை.......
நீங்கள் எதற்கும் முதலில் பொய்யாய் ஒரு கல்யாணப்பத்திரிகை கொடுத்துப்பார்த்திருக்கலாம்!!

muthuvel
10-01-2010, 05:14 PM
நல்ல கவிதை.......
நீங்கள் எதற்கும் முதலில் பொய்யாய் ஒரு கல்யாணப்பத்திரிகை கொடுத்துப்பார்த்திருக்கலாம்!!

காதலன் ,
கவிங்கன் ஆனேன்,
நீ என்னை காதலித்ததால்......