PDA

View Full Version : "ரா"னாக்களின் ராஜ்ஜியம்11:

ராஜாராம்
25-02-2011, 05:08 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRY3Jlv2JiafKGoZdT21O07SNTRZloDVhwUC5UliP0-N1sOQJRzslhyMl4இது ஒரு கற்பனை கதை.)

(ராராவிற்குப் பெண் பார்க்க,..
சாராவும்,முராவும் துணையாக சென்றனர்.
ராரா முரா சாரா மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர்)

வீட்டைவிட்டு மூவரும் புறப்பட்டு வெளியே வந்ததும்,

"மியாவ்.........",
என்று கத்தியபடி ஒரு பூனை குபீறென குறுக்கே ஓடியது.

"ஸ்டாப்...",
தன் கரங்களால் ராரா,மற்ற இருவரையும் தடுக்க,

"பூனைக் குறுக்காலப் போதேன்னுப் பாக்கிறீயா....அது போகும்போது
நாமதான் குறுக்க வந்திட்டோம்...
நம்ம மூஞ்சில முழிச்சிருக்கு...
அநேகமா அதுக்கு இன்னைக்கு சங்குதான்டா...
நீ வா நாமப் போவோம்",
என்று ராராவின் மனதை தேற்றிப்படி நகர்ந்தான் முரா.
மற்ற இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

(பெண்ணின் ஊர் சிதம்பரம் என்பதால்,
திருச்சி மத்திய பேருந்து நிலயத்திற்கு சென்ற மூவரும்....
சிதம்பரம் பஸ்ஸில் ஏற படிக்கட்டில் காலை எடுத்து வைக்க)

"காகித ஓடம்......
கடல் அலைமீதுப்...
போவதுபோலே.....
மூவரும் போவோம்...",

என்றப் பாடல் உரக்கமாக,பேருந்தில்
ஒலித்துக் கொண்டிருக்க,.
அதை கேட்ட ராரா,

:மச்சான்,.......",
என்று சோகமாக சாராவைப் பார்த்தான்,

"நோநோ...நோ!!!
அழக்கூடாது...இதுக்கும்..பெண்பார்க்கப் போவதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...",என்று சாரா கூற,

"கான்ஃபிடண்ட்...மச்சான்...இதுக்கெல்லாம் கலங்கக் கூடாதுடா...",
என்றான் முராவும்.

(ஒருவழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தனர்...)
"கண்டக்டர்...பாட்டை மாற்றுப்பா...என்னாப் பாட்டு,,இது",
என்று சாரா சலித்துக்கொண்டதும்,
பேருந்தில் பாடியப் பாட்டு சட்டென மாறியது.

"பஸ்ஸை எப்ப எடுப்பிங்க சார்,,,?",
ராரா நடத்துனரிடம் அன்பாக கேட்க,

"அதுவா?
இப்பத்தான்,..சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிருக்கோம்...
எல்லாரும் வந்ததும் எடுத்துற வேண்டியதுதான்.....",
என்று அபசகுனம் கலந்த,நக்கலை,
பதிலாக கூறிவிட்டு டிக்கெட்டை கிழிக்கத்தொடங்கினார்.

"மச்சான் எல்லாமே அபசகுனமா நடக்குதேடா...",
என்று ராரா கூற,

"அப்படியெல்லம் ஒன்னும்மில்லை...
இப்ப நாம பார்க்கப் போறப் பொண்ணு,..உனக்கு நிச்சயம் ஆயிடும் பாரு...",
என்று மீண்டும் அவனை தேற்றிவிட்டு,

ரகசியமாய் சாராவிடம்,
"நடக்கறதையெல்லாம் பார்த்தால்...அநேகமா,
நாம போற விஷயம் ஊ..ஊ....ஊ...ஊ...ஊ.!!!!.,
தான் போலிருக்கு...
ஹிஹிஹி..",
என்று குலுங்கி குலுங்கி சிரித்தான் முரா.

(திருச்சியை விட்டு கிளம்பியப் பேருந்து,,.
மத்தியம் 2மணி அளவில்,மாயவரத்தில் நின்றது)

"பஸ் பத்து நிமிஷம் நிக்கும்...
கீழ இறங்கி சாப்பிடிறவங்க சாப்பிட்டு வரலாம்...",
என்றக் கண்டக்டர் விறுவிறுவென,,,அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்ததும்,
அவரைப் பின்தொடர்ந்தே....முராவும் வேகமாக சென்றான்.

"ஏய்...ஏன்டா அவருப் பின்னாலயே போறே?",
என்றான் ராரா.,
"கண்டக்ட்டர் கூடவே போயி சாப்பிட்டுவிட்டு வந்தால்
பஸ்ஸை மிஸ் பன்னமாட்டோம்...அதானால்தான்...அவர்கூடவே போறேன்",
என்ற முராவின் கருத்து ஏற்றுக் கொள்ளவேண்டியதாய் இருந்தது.

(கிட்டத்தட்ட,அரைமணிநேரம்...முராவும் சாரவும் சாப்பாட்டை
அள்ளி அள்ளி தினித்தனர்.
சிறிது நேரத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த நடத்துனர்,
வெற்றிலைப் பாக்குப் போடத் தொடங்கினார்.
முராவும்,சாராவும்,,அவர் செய்வதைக் காப்பி அடித்தபடி,
தன்பங்கிற்கு.வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டனர்..

வாயில் போட்ட வெற்றிலையை,
கிரைண்டரில் அறைப்பதுபோல்
அறைத்துக் கொண்டே,

"சார்,...வண்டிக்குப் போலாமா...நேரம் ஆச்சே..',
என்று முரா கேட்க...,

(கொல்லென சிரித்துக்கொண்டே)
"எனக்கு டியூட்டி முடிஞ்சுப்போச்சுங்க...
நீங்க வந்த வண்டியில.,வேறக்
கண்டக்டர் போட்டு...
வண்டி எப்பவோ...போயிடுச்சே....",
என்ற கண்டக்டர் அவர்கள் மூவரையும் ஆச்சரியமாய்ப் பார்த்தார்..

"யோவ்...அறிவு இருக்கா உனக்கு?
நீ சாப்பிடப் வந்ததால்தான் நாங்களும் சாப்பிடப் வந்தோம்...
இப்ப என்னடான்னா....டூட்டி முடிஞ்சுப்போச்சுன்னு சொல்றே?",
காட்டுக் கத்தலாய் கத்தத் தொடங்கினான் முரா,
அதை கேட்ட நடத்துனர்..கண்கள் சிவக்க,

"நான் சாப்பிடப் வந்ததால நீங்களும் சாப்பிட வந்திருவிங்களா?
எனக்கு பசிச்சு சாப்பிட வந்தேன்...
உங்கள யாருயா பின்னாலயே வரச்சொன்னா?".
என்று கோபாமாக கேட்க,

"வண்டி 10நிமிஷம் நிற்கும் சொன்னிங்க.
எங்களுக்கு பொழுதுபோகல...
அதனாலத்தான்,ஒரு டைம்பாஸுக்கு சாப்பிட வந்தோம்..."
என்றதும்,

"அட..பக்கிப் பன்னாடைப் பசங்களா...ஒரு ஃபுல் மீல்ஸை..
புல்டோசர் ரேஞ்சிற்கு அடிச்சி நிறைவிட்டு,
டைம்பாசுக்கு...சப்பிட்டோம்னு சொல்றிங்களேடா...",
என்ற கண்டக்டர்...
"போங்கடா...ஊருக்குப் போற வழியப்பாருங்க..",
என்று விருவிருவென நடக்கத் தொடங்கினார்..

(சிறிது நேரத்தில்,,,செல்ஃபோன் அழைப்புமணி அடிக்க,
அதை எடுத்துப் பேசத்தொடங்கிய முரா)
"ஹலோ....
அப்படியா?.......
ஐயையோ...
என்னாச்சு?
அடப்பாவமே....
சரிசரி......நான் பார்த்துக்கொள்றேன்...",
என்று அவசர அவசரமாக,பேசிமுடித்துவிட்டு..

"மச்சான்...நாம பக்கப்போற பொண்ணோடப் பாட்டி
திடீருன்னு
இறந்துட்டாங்களாம்",
என்று,ராராவிடம் தயங்கியப்படி கூற,...

"ஏன்?என்னஆச்சுடா?
நேத்து நல்லாத்தானே இருந்தாங்க...",
என்று பதறினான் ராரா,

"நல்லாத்தான் இருந்தாங்களாம்...
அந்தப் பாட்டி நேத்து ராத்திரி,...
மாப்பிளை போட்டோவைக் காட்டுங்க,
நான் பார்க்கனும்னு சொல்லிருக்கு...
வீட்டில் உள்ளவங்களும்..
உன் போட்டோவைக் பாட்டியிடம் காட்டியிருக்காங்க...",
என்றவன்,,,
சற்றே இடைவெளி விட்டு,

"உன் போட்டோவைப் பார்த்ததும் அந்தப் பாட்டி சாப்பாடுக்கூட சாப்பிடலையாம்...
யார்க்டயும் எதுவும் பேசாமல்,
தேவர்மகன் சிவாஜிகணேசன் போல,
போயி படுத்தவங்கதானாம்...
காலையில செத்து சுண்ணாம்பாயிட்டங்களாம்...",
என்று முடித்தான்..

"மச்சான்....பொண்ணுப்போறேன்னு சொல்லிட்டு
நீ பல உயிர்களை காவு வாங்கிறாய்டா....
வேணாம்டா...வேணாம்....
விட்டுருவோம்...எல்லாத்தையும் விட்டுருவோம்...
இதையெல்லாம் இத்தோட நிப்பாட்டிக்குவோம்...
இன்னையிலிருந்து ஒரு புது மனுஷனா வாழலாம்டா...",
தளபதி படத்து மம்மூட்டி லெவலுக்கு
ஒரு வசனத்தைப் பேசி கெஞ்சினான் சாரா..

"டிங்டி ட்ங்டி டிங்டிடின்...டிங்டிடின்....",
என்ற நாயகன் படத்து சோகமான பின்னனி இசை எங்கோ ஒலிக்க....
சோகமாக....வீட்டை நெறுங்கினர் மூவரும்...
அவர்கள் வீட்டைவிட்டு, கிளம்பும்போது,

குறுக்கே வந்த அந்தப் பூனையோ ,
அவர்கள் தெருவில்...
வாகனத்தில் அடிப்பட்டு பரிதாபமாய் இறந்துக் கிடந்தது...

முரளிராஜா
25-02-2011, 05:39 AM
ராரா, நான்தான் அப்பவே சொன்னேன்ல மூன்று பேரா போனால் எந்த விசயமும் உருப்புடாதுன்னு எங்க எதிர்த்தவீட்டு பாட்டி சொல்லும்.
அதனால வழியிலே எங்கியாவது சாராவை கெழட்டி விட்டுடுவோம்னு சொன்னேன்.
நீதான் அத கேட்கலை.மேலும் உனக்கு பார்க்க போன பொண்னு ஜாதகத்தை நாம
ஜோசியர் கிட்ட குடுத்து பார்த்தப்ப அந்த ஜோசியர் என்ன சொன்னார்.
இந்த பொண்னு ஜாதகப்படி அழகும்,அன்பும்,திறமையும் நிறைந்த மானஸ்த்தன் தான்
இவளுக்கு கணவனா வருவான்னு சொன்னார்ல.
(சிகப்பு வண்ணத்தில் உள்ள விசயத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும்)
இதெல்லாம் தெரிஞ்சும் நீ அழுது அடம்பிடித்தாய் அதனால தான்
சாராவும், நானும் உன்கூட வந்தோம்.

Nivas.T
25-02-2011, 05:48 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

Nivas.T
25-02-2011, 05:49 AM
ராரா, நான்தான் அப்பவே சொன்னேன்ல மூன்று பேரா போனால் எந்த விசயமும் உருப்புடாதுன்னு எங்க எதிர்த்தவீட்டு பாட்டி சொல்லும்.
அதனால வழியிலே எங்கியாவது சாராவை கெழட்டி விட்டுடுவோம்னு சொன்னேன்.
நீதான் அத கேட்கலை.மேலும் உனக்கு பார்க்க போன பொண்னு ஜாதகத்தை நாம
ஜோசியர் கிட்ட குடுத்து பார்த்தப்ப அந்த ஜோசியர் என்ன சொன்னார்.
இந்த பொண்னு ஜாதகப்படி அழகும்,அன்பும்,திறமையும் நிறைந்த மானஸ்த்தன் தான்
இவளுக்கு கணவனா வருவான்னு சொன்னார்ல.
(சிகப்பு வண்ணத்தில் உள்ள விசயத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும்)
இதெல்லாம் தெரிஞ்சும் நீ அழுது அடம்பிடித்தாய் அதனால தான்
சாராவும், நானும் உன்கூட வந்தோம்.

:eek: உண்மையாகவா முரா?:D:D:D

முரளிராஜா
25-02-2011, 06:03 AM
பொய் அப்படின்னா என்ன நிவாஸ்?

அன்புரசிகன்
25-02-2011, 06:34 AM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRY3Jlv2JiafKGoZdT21O07SNTRZloDVhwUC5UliP0-N1sOQJRzslhyMl4இது ஒரு கற்பனை கதை.)

(ராராவிற்குப் பெண் பார்க்க,..
சாராவும்,முராவும் துணையாக சென்றனர்.
ராரா முரா சாரா மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர்)
...
அநேகமா அதுக்கு இன்னைக்கு சங்குதான்டா...
நீ வா நாமப் போவோம்",
என்று ராராவின் மனதை தேற்றிப்படி நகர்ந்தான் முரா.
மற்ற மூவரும் அவனை பின் தொடர்ந்தனர்.
...
பொண்ணு பார்க்கப்போகும் போதும் மப்பில தான் போனீங்களா?

போனது 3 பேரா அல்லது 4 பேரா ராரா???

அதுலயும் அடுத்த முரா வின் பதிவில உள்ள விடையம் இன்னும் தூக்கல்...

அசத்துங்கள்

முரளிராஜா
25-02-2011, 06:48 AM
அன்புரசிகன்,
ஜோசியர் இன்னொரு விசயமும் சொன்னாரு
"நீங்க பொண்னு பார்க்க போற வீட்ல கூடிய சீக்கிரம்
ஒரு எழவு நடக்கப்போது"
நானும்,சாராவும் இவரு(ராரா) கல்யாணத்தைதான் மனுசன்
சூசகமா சொல்றாருன்னு நினைச்சோம்.
(எங்களுக்கு தெரியுமில்ல இவருக்கு பொண்னு கொடுத்தா அந்த வீட்டோட கதி என்ன ஆகும்ன்னு)
அப்புறம்தான் தெரியுது அவர் சொன்னது அந்த பாட்டியன்னு.

Nivas.T
25-02-2011, 07:05 AM

ஆனா இவ்வளவு நாளா கூட இருக்க உங்களுக்கு எதுவும் நடக்கல பாத்திங்களா அத நெனச்சு நீங்க சந்தோசமும் பெருமையும் பட்டுக்கலாம்

sarcharan
25-02-2011, 07:57 AM
இது ஒரு கற்பனை கதை.)

(ராராவிற்குப் பெண் பார்க்க,..
சாராவும்,முராவும் துணையாக சென்றனர்.
ராரா முரா சாரா மூவரும் வீட்டை விட்டு வெளியேறினர்)

வீட்டைவிட்டு மூவரும் புறப்பட்டு வெளியே வந்ததும்,

"மியாவ்.........",
என்று கத்தியபடி ஒரு பூனை குபீறென குறுக்கே ஓடியது.

அமர்க்களமான ஆரம்பம்

"ஸ்டாப்...",
தன் கரங்களால் ராரா,மற்ற இருவரையும் தடுக்க,

"பூனைக் குறுக்காலப் போதேன்னுப் பாக்கிறீயா....அது போகும்போது
நாமதான் குறுக்க வந்திட்டோம்...
நம்ம மூஞ்சில முழிச்சிருக்கு...
அநேகமா அதுக்கு இன்னைக்கு சங்குதான்டா...
நீ வா நாமப் போவோம்",
என்று ராராவின் மனதை தேற்றிப்படி நகர்ந்தான் முரா.
மற்ற மூவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

இப்படியே உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டு உடம்ப ரணகளம் ஆக்குறாங்க

(பெண்ணின் ஊர் சிதம்பரம் என்பதால்,
திருச்சி மத்திய பேருந்து நிலயத்திற்கு சென்ற மூவரும்....
சிதம்பரம் பஸ்ஸில் ஏற படிக்கட்டில் காலை எடுத்து வைக்க)

"காகித ஓடம்......
கடல் அலைமீதுப்...
போவதுபோலே.....
மூவரும் போவோம்...",

என்றப் பாடல் உரக்கமாக,பேருந்தில்
ஒலித்துக் கொண்டிருக்க,.
அதை கேட்ட ராரா,

:மச்சான்,.......",
என்று சோகமாக சாராவைப் பார்த்தான்,

"நோநோ...நோ!!!
அழக்கூடாது...இதுக்கும்..பெண்பார்க்கப் போவதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...",என்று சாரா கூற,

"கான்ஃபிடண்ட்...மச்சான்...இதுக்கெல்லாம் கலங்கக் கூடாதுடா...",
என்றான் முராவும்.

ஒரு முடிவோட தான் கூட வந்திருக்காரு மு ரா

(ஒருவழியாக பேருந்தில் ஏறி அமர்ந்தனர்...)
"கண்டக்டர்...பாட்டை மாற்றுப்பா...என்னாப் பாட்டு,,இது",
என்று சாரா சலித்துக்கொண்டதும்,
பேருந்தில் பாடியப் பாட்டு சட்டென மாறியது.

"பஸ்ஸை எப்ப எடுப்பிங்க சார்,,,?",
ராரா நடத்துனரிடம் அன்பாக கேட்க,

"அதுவா?
இப்பத்தான்,..சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிருக்கோம்...
எல்லாரும் வந்ததும் எடுத்துற வேண்டியதுதான்.....",
என்று அபசகுனம் கலந்த,நக்கலை,
பதிலாக கூறிவிட்டு டிக்கெட்டை கிழிக்கத்தொடங்கினார்.

நாங்கள் எல்லோரும் ஒரு நாள் அலுவலகம் முடிந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். ஓட்டுனர் பேருந்தை வேகமா ஒட்டிக்கொண்டு இருந்தார்...
இதை பார்த்த என் கலீக் நடத்துனரிடம், நாங்க சத்திரத்துக்கு தன டிக்கெட் எடுத்தோம், மேல போக அல்லன்னு சொன்னார். அது மாதிரி இருக்கு இது..

"மச்சான் எல்லாமே அபசகுனமா நடக்குதேடா...",
என்று ராரா கூற,

"அப்படியெல்லம் ஒன்னும்மில்லை...
இப்ப நாம பார்க்கப் போறப் பொண்ணு,..உனக்கு நிச்சயம் ஆயிடும் பாரு...",
என்று மீண்டும் அவனை தேற்றிவிட்டு,

வஞ்சபுகழ்ச்சி அணி

ரகசியமாய் சாராவிடம்,
"நடக்கறதையெல்லாம் பார்த்தால்...அநேகமா,
நாம போற விஷயம் ஊ..ஊ....ஊ...ஊ...ஊ.!!!!.,
தான் போலிருக்கு...
ஹிஹிஹி..",
என்று குலுங்கி குலுங்கி சிரித்தான் முரா.

எதிர்காலத்தை படிக்கும் திறமை உள்ளவர் மு ரா

"உன் போட்டோவைப் பார்த்ததும் அந்தப் பாட்டி சாப்பாடுக்கூட சாப்பிடலையாம்...
யார்க்டயும் எதுவும் பேசாமல்,
தேவர்மகன் சிவாஜிகணேசன் போல,
போயி படுத்தவங்கதானாம்...
காலையில செத்து சுண்ணாம்பாயிட்டங்களாம்...",
என்று முடித்தான்..

ராஜகளை பொருந்திய முகம் போல...

அப்போ ஜோசியம் பாத்தா ஜோசியர் கதை?

வேணாம்டா...வேணாம்....
விட்டுருவோம்...எல்லாத்தையும் விட்டுருவோம்...
இதையெல்லாம் இத்தோட நிப்பாட்டிக்குவோம்...
இன்னையிலிருந்து ஒரு புது மனுஷனா வாழலாம்டா...",
தளபதி படத்து மம்மூட்டி லெவலுக்கு
ஒரு வசனத்தைப் பேசி கெஞ்சினான் சாரா..

உட்டுறுங்க எங்கள உட்டுறுங்க

"டிங்டி ட்ங்டி டிங்டிடின்...டிங்டிடின்....",
என்ற நாயகன் படத்து சோகமான பின்னனி இசை எங்கோ ஒலிக்க....
சோகமாக....வீட்டை நெறுங்கினர் மூவரும்...
அவர்கள் வீட்டைவிட்டு, கிளம்பும்போது,

நாம என்ன பாவம் பண்ணினோம், என் நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது...

குறுக்கே வந்த அந்தப் பூனையோ ,
அவர்கள் தெருவில்...
வாகனத்தில் அடிப்பட்டு பரிதாபமாய் இறந்துக் கிடந்தது...

பூனைக்கும் சங்கா.. ரா ரா நீங்க ரொம்ப அதிர்ஷ்டகாரரு போலிருக்கே..

அன்னபூரணி சாபமா இது?

சூரியன்
25-02-2011, 09:31 AM
முடியலீங்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..:lachen001:

ராஜாராம்
25-02-2011, 10:13 AM
நன்றி:
அருமை நண்பர் நிவாஸ் அவர்களுக்கும்
கதையை ,பிரித்து,பீராந்து, துவைத்து, சிரிக்கும்படி பின்னூட்டம் தந்த சரணிற்குமஅருமை நண்பர் அன்புரசிகனுக்கும்...(தாங்கள் சுட்டிக்காட்டியதை படைப்பில் மாற்றி அமைத்துவிட்டேன்,,நன்றி அன்பிரசிகா,,,.
சூரியன் அவர்களுக்கும்,

முரளிக்கும்..

(முரளி நம்ம,ராசியைப் பற்றிய ரகசியத்தையெல்லாம் போட்டு உடைச்சிட்டியே,,,,, :frown:)

உமாமீனா
26-02-2011, 03:08 AM
:mittelgr124::mittelgr124::mittelgr124::mittelgr124: