PDA

View Full Version : அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக-முதல் கட்ட பேச்சு



முரளிராஜா
25-02-2011, 01:26 AM
http://thatstamil.oneindia.in/img/2011/02/24-jaya-vijayakanth200.jpg
அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக இதுவரை மறைமுகமாக பேரம் பேசிக் கொண்டிருந்த விஜயகாந்த்தின் தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் இறங்கியது.

தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் பெரும் குழப்பமாக இருந்து வந்த கட்சி தேமுதிக. கூட்டணி என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறி விட்டாலும் யாருடன் கூட்டணி என்பதில் இழுத்தடித்து வந்தார்.

அவரது கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று திருப்பதிக்குப் போய் பெருமாளை வணங்கி விட்டு வந்தார் விஜயகாந்த். இதன் மூலம் அவர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக உணரப்பட்டது. அதே போல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இன்று மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்துக்கு சென்று திரும்பினார்.

இந்த நிலையில் இன்று திடீரென அதிமுக அலுவலகத்திற்கு தேமுதிக குழுவினரான அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் வந்தனர்.

அவர்களை அதிமுக குழுவினரான ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் இரு குழுவினரிடையேயும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டது.

இது சம்பிரதாயமான பேச்சுவார்த்தைதான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக தரப்புக்கும், தேமுதிக தரப்புக்கும் இடையே எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும், ஒப்புக்காக இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு இன்று அல்லது நாளைக்குள் ஜெயலலிதாவை, விஜயகாந்த் சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது தேமுதிக. தொடங்கியது முதல் தனித்தே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை கூட கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்று வசனம் பேசி வந்தார் விஜய்காந்த்.

இப்போது அதிமுகவுடன் கூட்டணிக்கு வந்துவிட்டார். இதன்மூலம் முதல் முறையாக தேமுதிக கூட்டணி அரசியலில் குதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை கூட்டணி அமைக்க வைக்க ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தான் திரைமறைவு வேலைகளை செய்து வந்தார். அந்த முயற்சி இப்போது பலித்துவிட்டது.

விஜய்காந்த் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியதும், ஆமாம்.. ஜெயலலிதா தான் ஊத்திக் கொடுத்தார் என்று விஜய்காந்த் பதில் தந்ததும் நினைவுகூறத்தக்கது
நன்றி: தட்ஸ்தமிழ்