PDA

View Full Version : இந்திய சீன உரசல்கள் , சிறு ஒப்பீடுshiva.srinivas78
24-02-2011, 10:19 AM
சில மாதங்களுக்கு முன் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் அருணாச்சல மாநிலத்தில் காலாவதியான கெட்டுபோன கறி அடைக்கபட்டிருந்த டப்பாக்களை ஹெலிகோப்டேரில் போட்டுவிட்டு சென்றது ஞாபகமிருக்கலாம் . சீனா எதற்காக இந்தியாவுடன் அடிக்கடி உரசிகொண்டிருக்கிறது என்று பார்த்தால் இது 1959 இல் இந்தியாவால் ஆரம்பிக்கபட்டது ! ஆம் , 1959 -இல் இருந்து இந்தியா தனது படைகளை இந்தியா - சீன எல்லையில் சீனாவின் பகுதிகளாக கருதப்படும் இடங்களில் புகுத்தியது .சிறிது சிறிதாக எல்லை சண்டைகளை இந்தியா ஆரம்பித்தாலும் முதலில் சீனா எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவில்லை .திபெத் பிரச்சனை முற்றிய நிலையில் இந்தியா சீனா உரசல்கள் வலுத்தது .1948 இல் நிசாம் தலைமையிலான தனித்திருந்த ஐதராபாத் மாகாணத்தை அப்போதைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் இந்தியா தரைப்படை மற்றும் விமானபடை அனுப்பி ஐந்தே நாட்களில் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்தார் .1947 இல் ஆங்கிலேய , பிரெஞ்சு ஆதிக்கங்கள் நம்மை விட்டு அகண்ட பிறகும் கோவா தியு டாமன் பகுதிகளை விட்டு வெளியேறாமல் இருந்த போர்துகீசியரகளை 1961 இல் இந்திய அரசு "விஜய் நடவடிக்கை" (operation vijay ) என்ற பெயரில் அவர்களை 26 மணி நேரத்தில் விரட்டியது . 1948 மற்றும் 1961 இல் பெற்ற ஐதராபாத் , கோவா -தியு -தாமன் போர் வெற்றிகளை தவறாக கணகிட்ட இந்த்திய ராணுவம் ,தனது ராணுவ பலத்தை தவறாக கணக்கிட்டு சீன இந்திய எல்லை பிரச்சனைகளை போர் மூலம் முடிவுக்கு கொண்டுவர முற்பட்டது .1962 இல் இந்தியா ராணுவம் பூடான் , அருணாச்சல பிரதேச எல்லையிளுருந்து 5 கி.மீ சீன எல்லைக்குள் முன்னேறி அங்கு முகாமிட்டது .சீனாவும் இந்தியா பகுதிகளை கைப்பற்றி (அகாசி சீன பகுதி ) ,அதில் ராணுவ நடமாத்திற்கு சாலைகள் அமைத்து எதிர் வியுகம் அமைத்திருந்தது.அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் அக்.12 ஆம் தேதி சீனா இந்திய தரைபடையை தக்கள மேடு பகுதியில் திடீரென தாக்கியது , இதை எதிர்பார்க்காத இந்தியா தரைப்படை நிலைகுலைந்தது .
அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் அகாசி சீன பகுதிகளை கைப்பற்றுமாறு வெகு தாமதமாக அளித்த உத்தரவு இந்திய படைகளை சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல் போயிற்று .அதுமட்டுமில்லாமல் சீனாவின் அதிகமான படைகளும் , அதிக இடங்களில் எல்லைகளை ஒருசேர தாக்கியதும் இந்தியா ராணுவம் நிலைகுலைந்து போனது .ஏற்கனவே கைப்பற்றிய அகாசி சீன பகுதிகளுடன் , அருனச்சலப்ரதேசத்தின் பல பகுதிகளையும் கைப்பற்றி , தாம் கோரிய பகுதிகளைவிட அதிக பகுதிகளை கைப்பற்றியவுடன் சீனா இந்தியாவை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தது .ஆனால் இந்தியா சமரசத்தை தவித்து போரில் ஈடுபட்டது . பின்னர் சீனா தாமாகவே அருனச்சலப்ரதேச மாநிலத்தை விட்டு பின்வாங்கியது . இந்திய படைத்துறையின் தலைமையும் ,இந்திய அரசியல் துறையின் தலைமையுமே இத்தோல்விக்கு காரணம் என்றும் , குறைந்த அளவு படைகளை பயன்படுத்தியதும் , வான் படையை தேவையான அளவு நகர்தாததும் காரணங்கள் என்று பின்னர் தோல்வியின் காரணங்களை கண்டறிய அமைக்கப்பட்ட அன்டர்சன் ப்ரூக்ஸ் தலைமையிலான குழு தவறுகளை சுட்டி காட்டியது.

சைனா இந்தியா
மக்கள் தொகை : 1.33 பில்லியன் (1 வது ) 1.15 பில்லியன் (2 வது)

பரப்பளவு :960 மில்லியன் சதுர கி.மீ (4 வது ) 328 மில்லியன் சதுர கி.மீ (7 வது )
ராணுவ சேவை : கட்டாயம் உண்டு
சேவை வயது : 18 - 22

2006 ஆம் ஆண்டு ராணுவ பட்ஜெட்

சீன அரசின் தகவல் படி : 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
இந்திய பட்ஜெட் படி : 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ராணுவ உயர்நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை : 2,255,000 1,325,000

விமான படை எண்ணிக்கை :9,218 விமானங்கள் 3,382 விமானங்கள்

அவற்றுள் 2300 போர் விமானங்கள் 1335 போர் விமானங்கள்

கப்பல் படை எண்ணிக்கை :284 போர்க்கப்பல்கள் 145 போர்க்கப்பல்கள்

இந்திய ரஷ்சிய கூட்டு முயற்சியில் உருவான பிரம்மாஸ் ஏவுகணை அதிகபட்ச வேகத்தில்( mach 2.8) தாக்கும் ஏவுகணை இந்தியாவின் பலமாகும். சீன கப்பற்படையின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அதிக போர் அனுபவங்கள் இல்லை.