PDA

View Full Version : அன்றும்....இன்றும்..:பாகம்:4ராஜாராம்
24-02-2011, 06:45 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT9V7Gx8HanWRLYDIctezdFcnb2Zxnp7pIy_9AjDEPc4Ua7BHsbGQKhyQ


நிகழ்கால நிகழ்வுகள்:
இன்று நடப்பது.....
2011.....

இரவு 10மணி,
ராஜாவின் செல்ஃபோன்னில்,ஷோபாவின் அழைப்பு மணி ஒலித்தது.

"ஹலோ...சொல்லு ஷோபா..என்ன விஷயம்?",
ராஜா கேட்டதும்,

"நம்ம எதிர்கால வாழ்க்கைப் பற்றி..ஒரு முக்கியமான விஷயம்.
அதை உங்களிடம் சொல்லனும்..",என்றாள்,

"என்ன...சொல்லு.",

"எங்க ஊரில்,ஒரு பெரியக் கடை ஒன்று விற்பனைக்கு,,வருதாம்.
அதன் மதிப்பு எப்படியும்,,12லட்சம் இருக்கும்.நம்ம நிச்சயதார்த்தம் முடிஞ்சதும்,
அதை உங்கப் பேரில் வாங்கிடலாம்னு அப்பா ஆசைப்படுறாரு...",அவள் கூறியதும்,

"ஏய்..லூஸா நீன்னு?இங்க நான் சொந்தமா கடைவெச்சுருக்கேன்.அப்படி இருக்கயில்,,.
உங்கப்பா உங்க ஊரு ஈரோடில் கடைய வாங்கிப்போட்டு என்ன பன்னப்போறாரு?
அதை யார் பார்த்துப்பா?",
என்றான் ராஜா.

"கல்யாணத்திற்கு பிறகு இங்க ஈரோட்டிலே செட்டில் ஆயிடுவோம்...
உங்க ஊரைவிட இங்க நல்லா பிசினஸ் பன்னலாம்...
அப்பா வாங்கித் தருகிற கடையை நீங்கப் பார்த்துக்கிங்க....
கை நிறையா சம்பாதிக்கலாம்..",
அவள் கூறியதும்,

"சாரி ஷோபா...நான் வரட்டுக்கவுரவம் பார்க்கிறேன்னு நெனைக்காதே..
இங்க என் அம்மாவுக்கு இடுப்பு எலும்பு முறிந்து நடக்க முடையாமல் இருக்காங்க...
அது உனக்கே தெரியும்,,..என் அண்ணனும் தனியா குடும்பம் நடத்துகிறாரு...
இப்படி இருக்கையில்,நான் வீட்டோட மாப்பிள்ளையா வருவது நியாயம் இல்லை..",
என்றவன்...மேலும்,

"எனக்கு சொந்தமா முன்னேறனும்தான் ஆசை...10ரூபா சம்பாதிச்சாலும்,,.அது
முழுக்கமுழுக்க என் உழைப்பாகவும்,என் முயற்சியாகவும்தான் இருக்கனும்",
என்று முடித்தான்,..

"வீட்டோட மாப்பிள்ளைன்னு தப்பா நினைக்காதிங்க..
உங்க அம்மா அப்பாவையும் நம்மலோடவே வெச்சுப்போம்...
நாம நல்லா இருக்கனும்னு தானே அப்பா இதையெல்லம் செய்யறாரு..",
என்று அவள் கூறியதும்,

"உனக்கு நல்லது பன்னனும்னு அவரு நெனச்சா...அந்தப் பணத்தை உன் பேரில் வங்கியில் டெப்பாசிட் பன்னச்சொல்லு...
அதுதான் முறை.அதைவிட்டு விட்டு என்பேரில் இடம் வாங்கிறதெல்லாம்...
எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை...",
தன் கருத்தை திடமாக கூறினான் ராஜா.

"என்மேல கொஞ்சம்கூட உங்களுக்கு பிரியமே இல்லை...
இதே கோரிக்கையை உங்க சுஜாதா சொல்லியிருந்தால்,,
உடனே சரின்னு சொல்லியிருப்பிங்க...
நான் உங்க லவ்வர் இல்லையே,அதான் நான் சொனதும் மறுக்கிறிங்க...",
என்று அழத்தொடங்கினாள்..

"ஏன்டி இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுகிறாய்?
உன்மேல பிரியம் இல்லாமலா இப்படி தினம் போன்னில் பேசுறேன்....
அதுவுமில்லாமல்,இப்ப சுஜாதாவ ஏன் அநாவசியமா இழுக்கிறே?".அவன் கேட்டதும்.,

"சுஜாதாவைப் பற்றி பேசினதும் கோவப்படுறிங்களே?
கடைசியாக் கேட்கிறேன்...கல்யாணம் முடிஞ்சதும் ஈரோடிற்கு வருவிங்களா?மாட்டிங்களா?",
கறாராக அவளது கேள்வி வந்ததும்,

"சரி அதைவிடு...அதை கல்யாணத்திறிகு பிறகு பேசிமுடிவுப் பன்னிப்போம்...
இப்ப வேறயெதாவது பேசு..",
பேச்சை திசைத் திருப்பினான் ராஜா...

"அதெல்லாம் இல்லை...எனக்கு இப்பவே முடிவுத் தெரியனும்...",
அவள் கூறியதும்,'

"முடியாது...எனக்கு ஈரோடில செட்டில் ஆக விருப்பமில்லை..",
சற்று கோவமாகவே தன் பதிலைக் கூறினான் ராஜா...
அவன் அப்படிப் பேசிய மறுவிநாடியே...

"இனிமே என்கூடப் பேசாதிங்க...உங்களுக்கு உங்க காதலி சுஜாதான் முக்கியம்",
என்ற ஷோபா,
தனது அழைப்பை சட்டென துண்டித்துவிட்டள்...

ராஜா அவளை விடுவதாக இல்லை.மீண்டும் மீண்டும்,அவள் நம்பருக்கு டயல் செய்தான்.

"நீங்கள் தொடர்புகொள்ளும் சந்தாதாரார் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்....
சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..."

என்று தொலைத்தொடர்பு மையத்தின் பதிவுக் குரல்,அதையே கூறிக் கொண்டிருக்க...
குழப்பத்துடன்..மனம்நொந்தபடி,
கண்களை இருக மூடியவன்னம்,
மெல்ல தலையணயில் தலைசாய்ந்தான்...ராஜா...

நாட்கள் நகர்ந்தன
ஒருவாரகாலமாக......ஷோவிடம் இருந்து எவ்வித தொடர்பும் இல்லமல் போனது....

"காதலே நீக் கல் எறிந்தால்,
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி வீழ்வதா......
இல்லை போவதா......
உயிர் வாழ்வதா......
இல்லைப் போவதா...
அமுதென்பதா.......
விஷமென்பதா,...
உன்னை அமுதவிஷம் என்பதா.......
என்காதலே என்காதலே....
என்னை என்னசெய்யப் போகிறாய்....",
நான் ஓவியன் என்று தெரிந்து நீ
ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்...........",

என்ற பாடல் வரிகள்...நிகழ்வுகளில் நிஜமாகின..............

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSAL-O3ddjAYag7k_ez81S_DyeD191mh5Bk_2wh4O1LWJCQNcVaO4Q5pXx1fQ
இறந்தகால நினைவுகள்:-
அன்று....நடந்தது...
செப்டம்பர்,18,.2002....
(திருவண்ணாமலை...
காலை..10மணி
உன்னாமலையாள் ஜோதிட நிலையத்தில்...)

சுஜாவின் தந்தை:என் பேரு செளந்தராஜான்,,
நானும் என் மனைவியும் காதல் திருமணம் செஞ்சிகிட்டவங்க..
அங்களுக்கு சுஜான்னு ஒரு பொண்ணு.அவளுக்கும்,
அவள் காதலிக்கும் ராஜா என்ற பையனுக்கும்
திருமணம் பன்னலாம்னு இருக்கோம்..'
ரெண்டு பேருக்கும் பொருத்தம் பார்க்கனும்",
என்றதும்,

"காதல் திருமணத்திற்கு ஏன் ஜாதகம் பார்க்கனும்?",
என்று ஜோதிடர் சிரிக்க.,

"நானும் என் மனைவியும் ஜாதகமெல்லாம் பார்க்காமல்தான்
கல்யாணம் பன்னிக்கிட்டோம்.. ஆனால்...இதுப் பொண்ணோட வாழ்க்கை
அதானாலதான் கொஞ்சம் பயமா இருக்கு.. பொருத்தம் பார்த்துவிட்டால் நல்லது..",
என்றார்.

ஆழ்ந்த தியானத்தில் இறைவனை வழிப்பட்டுவிட்டு....
இரெண்டு ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார் ஜோதிடர்.
சிறிது நேரத்தில்,,..சிரித்தமுகத்துடன் .

"பேஷா...பன்னலாம்...ரெண்டுப் பேருக்கும் பொருத்தம் ஜோரா இருக்கு....",
என்றவர்....

"ஆனால் ஒரு சின்னப் பிரச்சனை..
உங்கப் பொண்ணுக்கு,6மாசத்திற்குள் கல்யாணம் பன்னிடுங்க...
இல்லையென்றால் அதன்பிறகு...12வருஷத்திற்கு கல்யாண திசையே இருக்காது...
அவளுக்கு வயசும் அதிகம் ஆயிடும்...
எனவே சீக்கிரம்,அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் பன்னிடுங்க...",
என்று கூறி முடித்தார்.

அதைக் கேட்டதும் சுஜாவின் தந்தை அதிர்ச்சி அடைந்துவிட்டர்.


(செப்டம்பர்....22..2002.)
(திருவண்ணாமலையில் ஜோதிடர் கூறியதை,
ராஜாவிடம் விளக்கிய சுஜாவின் தந்தை.

"அவளுக்கு தோஷம் இருப்பதால்.,6மாததிற்குள் உங்களுக்கும்
சுஜாவிற்கும் கல்யாணாம் பன்னனும்,.
நீங்க உடனே உங்க அம்மா அப்பாவிடம் பேசுங்க...",
என்றார்....

"என் அக்காதான் வீட்டில் மூத்தவள்.அவள் பி.ஹெச்.டி.,படிச்சவள்..
அவளுக்கே இன்னமும் கல்யாணம் ஆகலை...இரண்டாவது அண்ணன்,,
அவரு டாக்டர்,.அவருக்கும் கல்யானம் ஆகலை.
இப்ப என் அக்கவிற்கும்,என் அண்ணனுக்கும்,..
வரன் பார்த்துக்கிட்டு இருக்காங்க வீட்டில்...
இந்த நேரதில் எனக்கு கல்யாணம் பன்னிவைங்க என்று எப்படி சொல்றதுன்னு தெரியல...",
என்று ராஜா கூறியதும்,'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது,,,.என் பொண்ணுக்கு 6மாசத்தில் கல்யாணம் பன்னனும்..",
கறாராக கூரினார் சுஜாவின் அப்பா.

"என்னங்க பேசுறிங்க? வீட்டில் எனக்கு மூத்தவங்க ரெண்டுபேர் கல்யாணம் ஆகாமல் இருக்கும்போது
எனக்கு எப்படி கல்யாணம் பன்ன்னுவாங்க...நானும் நிறையா சம்பாதிக்கனும்...
அப்பத்தானே சுஜாவை நல்லா வெச்ச்சுக்க முடியும்..",
ராஜாவின் குரலில் ஆதங்கம் இருந்தது,

"உங்க வீட்டுக்குத் தெரியாமல் கோவிலுக்கு வாங்க..
அங்க உங்களுக்கும்,சுஜாவிற்கும், கல்யாணம் பன்னிடலாம்....
உங்க அக்க்கா அண்ணன் செட்டில் ஆனதும்...
உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை
அப்ப உங்க வீட்டில் சொல்லிடலாம்",
என்று அவர் கூறியதும்,,

(தன் அறையில் நின்றிருந்த சுஜா....அவனை அதற்கு ஒற்றுகொள்ளவேண்டாமென
சைகைசெய்தாள்)

"சாரி...அப்படி திருட்டுத்தனமா கல்யாணம் பன்னிக்கிட்டால்...
என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும்....
என்னால நிம்மதியாய் வாழவும் முடியாது..",
என்றவன்,..

"கொஞ்சம் பொருத்துகுங்க....
எப்படியும் 3மாசத்துகுள்ள...அக்கா அண்ணன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடும்...
பிறகு,..எங்க கல்யணத்தை விமர்சையா எங்கப்பாவே நடத்தி வைப்பாரு..",
என்று ஏக்கத்துடன் அவரைப் பார்த்தான் ராஜா.

"நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியேபோங்க....
நல்ல முடிவை எடுத்த பிறகு வீட்டுக்கு வாங்க..",
என்று மூஞ்சி அரைந்தாற்போல் கூறி விட்டு உள்ளே சென்றுவிட்டர் .

தனது அறையிலிருந்து கண்கள் கலங்கியபடி நின்றிருந்த சுஜா,...
இருக் கரங்களாலும் ராஜாவைப் பார்த்து வணங்கியபடி...
தலை அசைத்தாள்...
"கோச்சுக்காதிங்க....ப்ளீஸ்...",
என்பதை அவள் ஜாடைகளில் உணர்த்தியதும்.....
குனிந்த தலையுடன்,மெளனமாக,
மெல்ல வெளியேறினான் ராஜா...

கண்னீருடன் அவன் போகும்வரை
அவனையே வைத்தக்கண்வாங்காமல் பார்த்த்க்கொண்டிருந்தாள்....அவள்

"பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு..
இணைக்கத் தெரியாதா...
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா...
தலைவா என்னைப் புரியாதா...
நினக்கத் தெரிந்த மனமே...
உனக்கு மறக்கத் தெரியாதா....
பழகத் தெரிந்த உயிரே உனக்கு..
விலகத் தெரியாதா....
உயிரே விலகத் தெரியாதா....",.........

என்றப் பாடல்வரிகள் நிகழ்வுகள் ஆகின..........
தொடரும்...........

Nivas.T
24-02-2011, 07:24 AM
பிரச்சனை ஆரம்ப ஆகிடுச்சு

முரளிராஜா
24-02-2011, 07:30 AM
ராரா இந்த சிச்சுவேசனுக்கு இந்த டியுன் நல்லா இருக்கும்மா பாரு.
:music-smiley-019::musik010::music-smiley-008::medium-smiley-045:

மதி
24-02-2011, 08:37 AM
ம்ம்ம். அப்புறம்..? ஷோபா கதை என்னாச்சு..?

ராஜாராம்
24-02-2011, 09:40 AM
நன்றி நிவாஸ் அவர்களுக்கும்,
முரளிராஜாவிற்கும்,
மதி அவர்களுக்கும்,

மதி அவர்களுக்கு,
நாளை ஷோபாவின் கதையின் தொடர்ச்சி.....பிரசுரம் ஆகும்....

முரா,
பின்னனி இசையா வாசிக்கிறே......
என்னா ஒரு வில்லத்தனம்.....

ஷீஜா ப்ரியா
24-02-2011, 10:27 AM
அன்று நடந்தது,இன்று நடக்கும் கதைக்கு தேவை இல்லையே.useless topic.come to our present........புரிஞ்சிதா?நல்லா இருக்கு.தூரநின்னுப் படிக்கும்போது மட்டும்.

ராஜாராம்
24-02-2011, 10:30 AM
நன்றி

ஷீஜா ப்ரியா
24-02-2011, 10:35 AM
இன்று நடந்தது சரி,நாளை?

ராஜாராம்
24-02-2011, 10:42 AM
தெரியவில்லை...

ஷீஜா ப்ரியா
24-02-2011, 10:46 AM
சூப்பரான பதில்.convey my enquires to all

ராஜாராம்
24-02-2011, 10:49 AM
நன்றி.(தயவுசெய்து ஆங்கில வார்த்தைகளை நம் மன்றத்தில் தவிர்க்கவும்)

sarcharan
24-02-2011, 11:03 AM
அன்று நடந்தது கண்டு ஆவி துடித்தது
இன்று நடப்பது கண்டு நெஞ்சு துடிக்குது

இது எப்படி இருக்கு ராரா :D

ஷீஜா ப்ரியா
24-02-2011, 11:08 AM
இனி இதில் இங்லீஸ் வார்த்தை இல்லாமல் மெசேஜ் பன்றேன்.

p.suresh
24-02-2011, 11:19 AM
[QUOTE=ராஜாராம்;514669]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT9V7Gx8HanWRLYDIctezdFcnb2Zxnp7pIy_9AjDEPc4Ua7BHsbGQKhyQ
"முடியாது...எனக்கு ஈரோடில செட்டில் ஆக விருப்பமில்லை..",
சற்று கோவமாகவே தன் பதிலைக் கூறினான் ராஜா..

என்னப்பா... இப்படியா பட்டுன்னு முறிச்சிக்கிறது? இங்க ஆட்சில பங்கு கேட்கிறவங்கள ஒருத்தரு என்னா அட்டகாசமா டீல் பண்றாரு

முதல்ல நீ இத :icon_rollout: நல்லா பழகிக்கோ

ராஜாராம்
24-02-2011, 12:19 PM
அருமையான நகைச்சுவையான பின்னூட்டம் சுரேஷ்.
அருமை.
பல்டி அடிக்க கற்றுக்கன்னு மறமுகமா காட்டிவிட்டாய்....சுரேஷ்

முரளிராஜா
24-02-2011, 12:21 PM
என்ன ராரா,
தங்கச்சி வந்தவுடன் பயந்திட்டிய்யா?
கொஞ்சநேரம் மன்றத்துல ஆளையே காணும்.

Nivas.T
24-02-2011, 12:48 PM
என்ன ராரா,
தங்கச்சி வந்தவுடன் பயந்திட்டிய்யா?
கொஞ்சநேரம் மன்றத்துல ஆளையே காணும்.

விடு விடுப்பா

படம்னா ஒப்னிங்ள பைட்டு வைக்கிறதும்
பஞ்சய்த்துனா லைட் வைக்கிறதும்
சகஜம்தானப்பா

ராஜாராம்
24-02-2011, 12:49 PM
பயமா எனக்கா?????ஹா ஹா ஹா......
நாங்கலெல்லாம் கட்டப்பொம்மன் பரம்பரை...
சிங்கமே எங்களைக் கண்டு சிதறி ஓடிருக்கு....
பாளையங்கோட்டை ஜெயிலில்லே எங்க சப்ஜக்டைத்தான் பாடமா நடத்துராங்க....
பயப்படுறாங்களாமே....பயபடுறாங்க...!!!
யாரைப் பார்த்து....

(இப்படியெல்லாம் வீரமா பேசனும்னு ஆசைதான்....ஆனால் முடியலையேப்பா..... :frown:)

Nivas.T
24-02-2011, 12:52 PM
பயமா எனக்கா?????ஹா ஹா ஹா......
நாங்கலெல்லாம் கட்டப்பொம்மன் பரம்பரை...
சிங்கமே எங்களைக் கண்டு சிதறி ஓடிருக்கு....
பாளையங்கோட்டை ஜெயிலில்லே எங்க சப்ஜக்டைத்தான் பாடமா நடத்துராங்க....
பயப்படுறாங்களாமே....பயபடுறாங்க...!!!
யாரைப் பார்த்து....

(இப்படியெல்லாம் வீரமா பேசனும்னு ஆசைதான்....ஆனால் முடியலையேப்பா..... :frown:)

விடுப்பா விடுப்பா

சிங்கம்னா அசிங்கப் படறதும்
சங்கம்னா கலைக்கப் படறதும்
சகஜம்தானப்பா

ராஜாராம்
24-02-2011, 12:55 PM
நிவாஸ்....நீங்க சொல்றிங்களேன்னு விட்டு விடுறேன்...:sauer028::sauer028:

Nivas.T
24-02-2011, 01:08 PM
நிவாஸ்....நீங்க சொல்றிங்களேன்னு விட்டு விடுறேன்...:sauer028::sauer028:

:D:D:D:D:D:D:D

dellas
24-02-2011, 03:21 PM
நல்ல காட்சி நகர்வுகள். பாராட்டுக்கள்.

(உழைப்பும் தன்மானமும் கதிகலங்க வைக்கிறது ராஜாராம். . ஆனால் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வீட்டின் நடுக் கூடத்தில்.)

அன்புரசிகன்
24-02-2011, 09:42 PM
இப்போதைக்கு இரண்டு சீன் தான் போகுது. மூன்றாவதா ஒரு சீன் வராரதே???? :D

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அதென்ன நீங்க போனா மட்டும் வீட்டோட மாப்பிள்ளை. அசிங்கம். அவங்க வரும் போது அப்படி இல்லையா? :lachen001:

தொடருங்கள்.

ராஜாராம்
25-02-2011, 03:33 AM
நன்றி டெல்லாஸ் அவர்களுக்கு(இலவச வண்ணத்தொலைக் காட்சி பெட்டிப் பற்றி கூறியது....அருமையான சிந்திக்க வேண்டிய வரிகள்)

அன்புரசிகனுக்கு என் நன்றிகள்

முரளிராஜா
25-02-2011, 03:52 AM
இப்போதைக்கு இரண்டு சீன் தான் போகுது. மூன்றாவதா ஒரு சீன் வராரதே???? :D
ராஜாராமிடம் இது போல பல சீன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்:lachen001::lachen001: