PDA

View Full Version : கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2ரங்கராஜன்
24-02-2011, 05:23 AM
வணக்கம் உறவுகளே...

தலைப்பை பார்த்தவுடன் பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்து இருப்பீர்கள்.. நீங்கள் எந்த பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்தீர்களோ, அதைவிட அதிகமான பதட்டத்துடன் தான் இந்த திரியை நான் தொடங்கியுள்ளேன். இந்த பதட்டத்திற்கு காரணம் பயம் அல்ல, மற்றவர்களின் இறை நம்பிக்கையை நோகடித்து விடுவோமோ என்ற பதட்டமும், உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற பதட்டமும் தான். நாம் விஷயத்திற்கு போகும் முன்பு.. சில வேண்டுகோள்...

முன்குறிப்பு : இந்த திரியை கண்ணியமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் தொடங்கியுள்ளேன். இதை படிப்பவர்கள் கொஞ்சம் மெச்சூரிட்டியுடன் இந்த விஷயங்களை பார்க்கவும், அணுகவும் வேண்டிக் கொள்கிறேன். நான் இந்த திரியில் யார் மதத்தையும் குற்றம் சொல்லவோ, கிண்டல் செய்யவோ போவதில்லை... நம்மை ஆட்டிப் படைக்கு அந்த சக்தி இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது... சோ, இந்த திரியை அணுகும் நீங்கள்... உங்களுக்குள் இருக்கும் அனைத்து விதமான முகமூடியையும், மத உணர்வையும், மூடநம்பிக்கைகளையும் கழட்டி விட்டு வந்தால், நாம் விவாதித்து உங்களின் உண்மைகளை நானும், என்னுடைய உண்மைகளை நீங்களும் புரிந்துக் கொள்ளவும் தெரிந்துக் கொள்ளவும் உபயோகமாக இருக்கும். இந்த திரி யாருக்கு முக்கியமோ இல்லையோ, எனக்கு மிக முக்கியம் காரணம் நான் பல ஆண்டுகளாக தேடும் கேள்வி இது... சோ அனைத்து உறவுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்... தேவைப்பட்டால் இந்த திரியை பண்பட்டவர் பகுதிக்கும் மாற்றலாம்.

இந்த திரியை நான் தொடங்கியவுடன், நான் எதோ நாத்திகவாதி என்று எண்ணி விடவேண்டாம். பைக்கில் போகும் போது எதிரிலோ, பக்கவாட்டிலோ கோவிலைப் பார்த்தால் என்னை அறியாமல் கையை விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ளம் அளவிற்கு நான் சுத்தமான ஆத்திகவாதி,.......... ஆனால் யோக்கியமான ஆத்திகவாதியா, நம்பிக்கையான ஆத்திகவாதியா என்றால் இல்லை...... இந்த இல்லை என்ற பதிலை சொல்லும் அந்த இடைவெளியில் தான் என்னுள் சில நாத்திக சிந்தனைகள் ஒலிந்து இருக்கிறது... இவை எங்கிருந்து என்னுள் வந்தது, புத்தக வாசிக்கும் பழக்கத்தில் இருந்தா, கண் எதிரே அம்மா விபத்தில் பலியானாலே அதிலிருந்தா, என்னை பார்த்து எழுதிய பையன் தேர்வில் தேர்ச்சி பெற்று, நான் தோல்வியை தழுவினேனே அதிலிருந்தா, ஒவ்வொரு முறை கோவிலுக்கு போகும் போதும் ஒரு 90 வயது கிழவி பசியில் துடித்தபடி பிச்சை கேட்பாளே அதிலிருந்தா........ தெரியவில்லை...

இந்த குழப்பத்தின் விளைவு தான் இந்த திரி. கடவுள் உண்மையா? கட்டுக்கதையா?... எவ்வளவு பெரிய கேள்வியை இப்படி சாதாரண கேட்டு இருக்கேனே என்று என்னை பார்த்தால் உங்களுக்கு சிரிப்புக் கூட வரலாம். ஆண்டு ஆண்டுகாலமாக பல ஞானிகளும், பல அறிஞர்களும், பல பெரியவர்களும் தேடி அலைந்த கேள்வி இது.... இப்படி சாதாரணமா இணையதளத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் தளங்களில் ஒன்றான இந்த மன்றத்தில் இதற்கான விடை கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் நான் இதை தொடங்கினேன் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.

விடை கிடைக்காவிட்டாலும், தெளிவு கிடைக்கும் இல்லையா... இந்து, கிறித்துவன், இஸ்லாமியன், புத்த மதம், ஜென், சீக்கிய மதம், இப்படி உலகத்தில் எத்தனையோ மதங்கள்... அதற்குள் பல உட்பிரிவுகள், அதிலும் பல கடவுள்கள்... ஒரு சாமிக்கு நெய் பருப்பு சாதம் படையல் என்றால் இன்னோரு சாமிக்கு சாராயம் பச்சை ரத்தம் படையல், ஒரு சாமிக்கு அப்பமும் திராட்சை ரசமும் என்றால், இன்னோரு சாமிக்கு படையலே கிடையாது. என்னுடைய முதல் சந்தேகம் எந்த சாமி இப்படி உலக மக்களை குழுகுழுவாக பிரித்தது. இரண்டாவது சந்தேகம் ஏன் பிரித்தது. கடவுள் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தானே, இதில் எங்கிருந்து வந்தது இந்த பாகுபாடுகளும், வரைமுறைகளும்.

இயற்கையாக அமைந்த தட்பவெட்பத்திற்கு தகுந்த மாதிரி குளிர்பிரதேச மனிதர்கள் வெள்ளையாகவும், அதுக்கு தகுந்த தடிமனான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர், வெட்பம் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் கருப்பு நிறத்திலும் மெலிதான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர். இப்படி மக்களின் உருவ அமைப்பு, உடல் அமைப்பு, வாழ்க்கை முறை இவை அனைத்தும் இயற்கை அளித்த தட்பவெட்பத்தின் வழியாக இயற்கையாக அமைந்தது என்பது ஏற்றுக் கொள்ள முடிகிறது... ஆனால் கடவுள் எப்படி தனிதனியாக பிரிக்கப்பட்டு இந்த குழுவினர் இந்த மதத்தை கும்பிடுங்கள், இந்த தேசத்து மக்கள் இதனை கும்பிடுங்கள்... என்று தனிதனியாக பிரித்தது யார்....

கர்த்தர் பிறந்த காலத்திலோ, கிருஷ்ணர் பிறந்த காலத்திலோ, அல்லா தோன்றிய காலத்திலோ கண்டிப்பாக உலகத்தில் மற்ற மனிதர்கள் இருந்து இருப்பார்களே அவர்கள் எந்த மதத்தை பின்பற்றி இருப்பார்கள்... சரி அப்படி அவர்கள் பின் பற்றி இருந்தால், அப்புறம் ஏன் அதன் பின் இந்த மதங்கள் தோன்றின..... சரி தோன்றி விட்டது பரவாயில்லை, பிற்காலத்தில் இந்த மதங்கள் அழிந்து வேறு மதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கா..... அப்போ, இதுக்கு முன்பு இருந்த மதத்தின் நம்பிக்கை பொய்ப்பிக்கப்பட்டு தானே, நாம் அடுத்த மதத்திற்கு போகிறோம்.....

சில நாட்களுக்கு முன்பு ஆதனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அமெரிக்காவின் சீக்ரெட் மிஷின் பற்றி பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கெங்கோ சென்று கடைசியில் மதத்தில் முடிந்தது. அப்போது நான் ஆரம்பித்தில் கிறித்துவர்கள் தங்கள் மதத்தை பரப்புவதை கொள்கையாகவே எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று, மதத்தை பரப்புவதே தங்களின் வாழ்நாள் சேவையாக செய்தார்கள், இப்படி மற்றவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி, சில பல சலுகைகள் மூலமாக மக்களை இவ்வாறு மதம் மாறச்சொல்வது தப்பில்லையா என்று கேட்டேன்... கேட்டு சில நிமிடங்களுக்கு அப்புறம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது... ஆதன் ஒரு கிறித்துவன் என்று, எனக்கு மிகவும் சங்டமாப் போச்சு... இதுவரை அவன் பலமுறை அவனுடைய உண்மையான பெயர் சொல்லி எனக்கு அது நினைவில் இல்லை... இப்போ கூட எனக்கு அவன் பெயர் தெரியாது.... ஏன் மன்றத்தில் இருக்கும், மதி, அமரன், விகடன், நாரதர் இப்படி நிறைய பேரின் உண்மையான பெயர் எனக்கு தெரியாது... காரணம் நாம் தமிழால் இணைந்தோம், மன்றத்தால் நட்புக் கொண்டோம், அந்த அடையாளமே போதும் என்று இருந்து விட்டேன். இப்பக் கூட சில போன் செய்து எனக்கு அவர்களின் உண்மையான பெயரை சொல்லி ஹலோ சொன்னால் சில நிமிடம் நான் தெனறி விடுவேன்.

அப்படி ஆதனிடம் அந்த கேள்வியை தெரியாமல் கேட்டுவிட்டேன்... அவன் கோபப்படுவான் என்று நான் நினைத்தேன், அவன் கோபப்படவில்லை, மாறாக... கிறித்துவத்தின் தோற்றம் முதற்கொண்டு வரலாறையே எனக்கு பொறுமையாக சொன்னான். அதில் என்னை கவர்ந்தது ஒரு விஷயம் அவன் சொன்னான்.

"மதமாற்றுவது ஏன் கொஞ்சம் யோசித்து பார்த்தால், அதில் இருக்கும் அர்த்தம் புரியும்,... நம் இந்து மதத்தில் (இந்து மதத்தை கூட அவன் நம் இந்து மதத்தில் என்று கூறினான்.. நடுநிலையானவன்) ஆரம்பித்தில் இருந்து ஒரு பிரச்சனை இருந்தது, அதாவது மக்கள் பல பிரிவுகளாக ஆதி காலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன, இவன் கோவிலுக்கு போலாம், அவன் போகக்கூடாது, இவன் எதிரே வரலாம், அவன் வரக்கூடாது, இவன் தொடலாம், அவன் தொடக்கூடாது இப்படி நிறைய கட்டுப்பாடுகள்....மீறினால் அடி உதை, கொலை, இப்படி இருக்கும் போது, புதிதாக கிறித்துவம் என்று ஒரு மதத்தை சிலர் கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வரும் போது அவர்கள் சொன்னது, எல்லாரும் வாங்க, கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார்கள், உங்களுக்காக தான் கடவுள் பிறந்து இருக்கிறான் என்றார்கள்........ நீ கடவுளைப் பார்க்க கூட அருகதையில்லாதவன், கீழ் ஜாதி என்று துரத்தப்பட்ட அவனுடம், உனக்காக தான் கடவுள் பிறக்கிறான் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்.......... சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான்" என்று கூறினான். அதன்பின்னர் அவன் கூறிய சில நியாயமான நடுநிலையான விஷயங்களை இங்கு நான் இப்போ கூறமுடியாது காரணம், அது ஒரு கிறித்துவனாகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ அவன் பேசவில்லை... அறிவை வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனாக அவன் பேசினான்.... அப்படி அவன் பேசுவதை கேட்க நானும் நம்முடைய முகமூடிகளை கழட்டி எறிந்து விட்டு ஆராயத்துடிக்கும் மனிதனாக வந்தால் அதைப் பற்றி பின் வரும் தொடர்களில் பேசுவோம்...

அவன் சொன்னதில் தப்பில்லை, யாராக இருந்தாலும், தன்னை மதிப்பவர்களை தான் நாம் திரும்ப மதிப்போம், அது கானா இருந்தாலும் சரி, கந்தசாமியாக இருந்தாலும் சரி, கர்த்தராக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி...... மனிதனின் ரத்தத்தில் எழுதப்படாத சட்டம் அது, மதிப்பவர்களையும், முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் திரும்பவும் மதிக்க வேண்டும் என்பது. சோ, மனிதனை மேம்படுத்த மனிதனால் தான் முடிகிறது, கடவுளை நம்பவைக்கவும், மறுக்கவைக்கவும் மனிதனால் தான் முடிகிறது... தானாக உருவான கோவிலும், சர்ச்சும், மசூதியும் இதுவரை இல்லையே, அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டது தானே.... கடவுளின் உருவத்தையும், புகைப்படத்தையும் அவன் தானே உருவாக்குகிறான்.

ஆக்ரோஷமாக கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு கவலைப்படாதே உனக்கு ஒன்று என்றால் நான் வருவேன், தற்காப்போடு என்பது போல புகைப்படங்கள், சிலைகள். அல்லது சாந்த சொரூபமாக, வாழ்க்கையில் அனைத்தையும் பொறுமையாக தான் டீல் பண்ணவேண்டும் என்று ஒரு பக்கம். இன்னோரு பக்கம் எனக்கு உருவமே இல்லை, ஜோதி வடிவம் தான் கடவுள் என்றார்கள்... இவை அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனநிலைக்கும், மனக்கட்டுப்பாடுக்கும் படைக்கப்பட்டன, கொஞ்சம் அனைத்து மதத்தில் உள்ள தெய்வங்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிடம் இல்லாதது மற்றொன்றிடம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஹார்ஷாக சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு, என்னிடம் இது இருக்கிறது உன்னிடம் அது இல்லை என்பது போல தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.... இவை தெய்வத்தின் மீது நான் சாடுவதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். தெய்வங்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப சித்தரித்தார்களே அவர்களை தான் நான் சாடுகிறேன்..

நம்முடைய தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, பாட்டிக்கு பாட்டி எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, சில நூற்றாண்டு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் எப்படி இருப்பார்னு தெரியாது, அதற்கு முன்பு வாழ்ந்த ராஜராஜசோழன் எப்படி இருப்பார்னு தெரியாது, இப்படி வரலாறு இருப்பவர்களையே நாம் திரித்து சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில், வரலாறும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் எப்படி கடவுள் மட்டும் இப்படி தான் இருப்பார், இப்படித்தான், அவர் அசுரர்களை கொன்றார், இப்படி தான் சிலுவையில் அரையப்பட்டார் என்று நாம் கூறுகிறோம்..... கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா, இல்லை... அப்படி பார்த்தால் அவர் பார்த்ததுக்கு என்ன அத்தாட்சி, மற்றொருவரும் நானும் பார்த்தேன் என்று கூறினால், அவர் பொய் சொல்லவில்லை என்பதற்கு அத்தாட்சி என்ன???? இப்படி கேள்விகள் சங்கிலிப் போல சென்றுக் கொண்டே தான் இருக்கும் இதற்கு காரணம் நம்பிக்கையின்மை....

இந்த நம்பிக்கை நமக்கு எதி்ல் இருந்து வருகிறது ஒன்று ஆன்மீகத்தின் மூலமாக, அல்லது விஞ்ஞானத்தின் மூலமாக... உலகம் இத்தனை மாற்றங்களை கண்டுக் கொண்டு இருப்பதற்கு சாட்சி யார், நீயும் கிடையாது நானும் கிடையாது உன் பரம்பரையும் கிடையாது என் பரம்பரையும் கிடையாது... நமக்கு இருக்கும் ஒரே சாட்சி அந்த சூரியன் மட்டும் தான்... (தேர்தல் நேரம் என்பதால் தப்பான அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம்)நான் சொல்வது தி சன், அது மட்டும் தான் நம்முடைய பூமி வரலாற்றின் சாட்சி, நிலாக்கூட தேய்ந்து தேய்நது லீவு எடுத்து வருகிறது. ஆனால் சூரியன் எதோ ஒரு பக்கத்தில் மறைந்தாலும், மற்றொரு பக்கத்தில் பூமியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது... நம் பூமியின் அனைத்து உயிர்களும் தோன்றியதற்கு காரணம் அது மட்டும் தானே, அதனால் தானே, மாயன் கலாச்சாரத்தில் இருந்து, ஹரப்பா, மொஹன்ஜிதாரோ போன்ற கலாச்சாரங்கள் வரை அனைத்து மக்களும் சூரியனையே கடவுளாக வழிபட்டனர். அப்போ நம்முடைய சாமிகள் எல்லாரும் எங்கே சென்றனர், இன்று நம் சூரியன் இருக்கிறானே, ஆனால் எத்தனை கடவுள்கள் தோன்றி மறைந்துள்ளனர்.

நம் அண்டசராசரத்தில் சூரியனைப் போல பல கோடி மடங்கு பெரிய தான நட்சத்திரம் ஒன்று இருக்கிறதாம், அப்போ சூரியனை நாம் இத்தனை நாளாய் கடவுளாக வழிபட்டோமே, அதுவும் பொய்யா,.... சரி விஞ்ஞானமும், அறிவியிலும் தான் உண்மை என்று அதை நம்பினால், அறிவியல் கண்டுபிடிப்பிலே மிக முக்கியமான கண்டுபிடிப்பு, புவியீர்ப்பு விசை தான். ஆனால் அதையும் பொய்யாக்கி, அண்டசராசரத்தில் மிதக்கும் செயற்கைகோளையே கண்டுபிடித்து இருக்கோமே, காரணம் கேட்டால் அங்கு புவியீர்ப்பு விசை வேலை செய்யாது என்று சொல்கிறோமே, அப்போ பூமி தன்னுடைய ஆதர்சன வாட்டில் இருந்து கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பினால் என்ன ஆகும், நிலம் எல்லாம் கடலாகும், கடல் எல்லாம் நிலமாகும்.. புவியீர்ப்பு விசை அதிகரிக்கலாம், குறையலாம், அல்லது முற்றிலும் அனைத்தும் மறைந்து அனைத்தும் வெடித்து சிதறலாம்...

அதற்கும் விஞ்ஞானம் விடை சொல்லும், இது இப்படி இருந்ததால, அது அப்படி வந்ததால, இப்படி ஆச்சி இதன் பெயர் தான் இந்த தியரி, இதை இந்த ஆண்டில் இவன் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டான்... என்று. அவன் பொய் சொல்லி இருந்தால், கூட இருந்தவனும் பொய் சொல்லி இருந்தால், ஆன்மீகத்தில் மட்டும் அத்தனை கேள்வி கேட்கிறோமே, விஞ்ஞானத்தில் மட்டும் ஏன் கேட்பதில்லை... ஜூரோ என்ற எண்ணுக்கு முன், வேறு ஒரு நெகட்டிவ் இல்லா எண் இருக்கிறது என்று யாராவது இப்போ கண்டுபிடித்தால் என்ன ஆவது, நம்முடைய நூற்றாண்டுகால கணக்கு எல்லாம் இப்போ, தப்பாகிப் போகுமே... அண்டசராசரமே தப்பாகி போகுமே...

இல்லை ஆகாது,

ஏன் ஆகாது..

கண்டிப்பாக ஆகாது..

ஏன்னு விளக்கமா சொல்லு

விளக்க தெரியாது, ஆனால் ஆகாது

எதை வச்சிட்டு அப்படி சொல்ற

தொணுது சொல்றேன்...

அப்போ இந்த நம்பிக்கை தான் கடவுளும், விஞ்ஞானமுமா??????

(உறுப்பினர்கள் அனுமதி அளித்தால் இன்னும் பேசலாம்...)

Mano.G.
24-02-2011, 06:19 AM
யப்பா என்னது இது
புறியாத விஷயத்த இங்க
கேட்டுட்டே ??????????,

இதுக்கு விடை யாரு சொல்ரது

முரளிராஜா
24-02-2011, 06:26 AM
உங்களது அசத்தலான திரிகளில் இதுவும் ஒன்று. விசயத்துக்கு வருவோம்.
எனது தாய் மிகவும் கடவுள் பக்தி உடையவர். நான் எட்டாம் வகுப்பு
படிக்கும் பொழுதே எனக்கு கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி என
பல தெய்விக பாடல்களை கற்று தந்தவர். நான் தினமும் இதை சொன்ன
பிறகுதான் எனக்கு காலை உணவு. எங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு
பிள்ளையார் சிலை ஒன்று இருக்கும். வெள்ளி, செவ்வாய் போன்ற தினங்களில்
அந்த கடவுள் சிலைக்கு அனைத்து அபிசேகங்களும் நடக்கும். இவையெல்லாம்
முடிந்தபின் உணவருந்தி பிறகு தாயும், நானும் பள்ளிக்கு செல்வோம். என் தாய்
அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியை. தாயோடும்,தந்தையோடும்
நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை.

ஒரு நாள் கேன்சர் எனும் எமன் என் தாய்க்கு இருப்பது தெரியவந்த்து
அதர்க்காக எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு
மேலாக படாதபாடுபட்டாள் அந்த நோயால் என் தாய். அந்த சமயத்திலும் என்
தாய் ஸ்வாமி பூஜைகளை கைவிடவில்லை.

பத்து நாட்கள் படுத்த படுக்கையாய் இருந்து துடியாய் துடித்து இறந்து
போனாள் என் தாய். என் தாய் இறந்த மறு நிமிடமே நான் அணிந்திருந்த பூணூலை
தூக்கி எறிந்தேன். நீங்கள் கேட்கலாம் இறப்பு என்பது பொதுவானதுதானெ
இதற்க்கு கடவுள் மீது கோபம் எதற்க்கு என்று. என் கேள்வி அதுவல்ல இவ்வளவு
பக்தியோடு இருந்த என்தாயை அந்த கடவுள் இப்படியா துடிதுடிக்க வைத்து
சாகடிக்க வேண்டும் என்பதுதான்.
நானும் நாத்திகன் இல்லை,என் குடும்பத்தில் யாரேனும் கோயிலுக்கு
செல்ல வேண்டும் என்றால் அவர்களை அழைத்து கொண்டு சென்று
வருவேன். என் இல்லத்திலும் ஸ்வாமிக்கென தனி அறை உள்ளது
அதில் என் தாயின் உருவபடம் உட்பட அனைத்து ஸ்வாமி படங்களும்
உள்ளன. அங்கு இருகை கூப்பி வணங்கும் பொழுதும், நமஸ்க்காரம்
செய்யும் பொழுதும் என் தாய் மட்டுமே எனக்கு கடவுளாய் தெரிகிறாள்

ஆதி
24-02-2011, 06:32 AM
சில விடயங்களை உணர்வுரீதியாக அணுக வேண்டும், சிலவற்றை அறிவுரீதியாக அணுக வேண்டும், இந்த விடயத்தை அறிவுரீதியாக அணுக முயற்சிப்போம்..

பூராணங்களை படித்தவர்களுக்கு புரியும், அரக்கர் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் கூட கடவுள்களின் பெரும்விசுவாசிகளாக இருந்திருக்கிறார்கள், தம் கடுந்தவத்தால் இறைவனை குளிர்வித்து வரம் பெற்றிருக்கிறார்கள்..

மாமரமான நின்ற பத்மாசூரனை, தம் வேலால் இரண்டாக பிளந்த முருகக்கடவுள், அவன் வேண்டுதலுக்கு இணங்க ஒரு பகுதியை சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும் மாற்றி, அதன் பிறகு சேவல் தன்ன் கொடியாகவும், மயில் தன் வாகனமாகவும் வைத்துக்கொண்டார்..

நன்றாக சிந்தித்து பார்த்தோம் ஆனால், யாரை கொல்வதற்காக முருக கடவுள் பிறந்தாரோ அவனையே அவரின் கொடியாகவும், வாகனமாகவும் மாற்றிக் கொண்டார்..

கொல்லிமலையில் இருந்து திரும்பி வருகையில், தாமரையண்ணாவிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்..

அக்கர்களை கூட நம்பின கடவுள் ஏங்கண்ணா ஒரு மனுசன கூட தன் வாகனமாகவோ, வேறெதுவாகவோ வச்சுக்கள ?

தாமரையண்ணா சொன்னார், கடவுளை, அரக்கர்கள் புரிஞ்சுக்கிட்ட அளவு கூட மனுஷன் புரிஞ்சுக்கள டா.

சரியா சொல்லனும் னா சூரபத்மன் அவன் வேலைய சரியா செஞ்சான், மனுஷன் கடவுள வச்சுக்கிட்டு எல்லா வேலையும் செய்றான்..

இது கடவுள் உண்மையா ? கட்டுக்கதையா ? எனும் விவாதம் தான், நான் இங்க புராணம் பற்றி பேசுனதுக்கு காரணமிருக்கு, அடுத்தவனை நாம் புண்படுத்தாத வரை கடவுள் இருக்கார், அடுத்தவன் மனதை கடவுள் பெயராலும் காயப்படுத்தினாலும் கடவுள் இல்லை என்பதையாவது நம்புவோம். இது வெறும் குறைந்தபட்ச வேண்டுகோள் தான், இதை குறைந்தது இந்த திரி முழுக்க கடைப்பிடிக்க முயற்சிப்போம்..

ரங்கராஜன்
24-02-2011, 06:33 AM
என் இல்லத்திலும் ஸ்வாமிக்கென தனி அறை உள்ளது
அதில் என் தாயின் உருவபடம் உட்பட அனைத்து ஸ்வாமி படங்களும்
உள்ளன. அங்கு இருகை கூப்பி வணங்கும் பொழுதும், நமஸ்க்காரம்
செய்யும் பொழுதும் என் தாய் மட்டுமே எனக்கு கடவுளாய் தெரிகிறாள்

சூப்பர் முரளிராஜா, உங்களின் கஷ்டம் எனக்கு புரியும் நானும் தினமும் பூஜை அறையில் கும்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன், உங்களைப் போல என் தாயையும்....

மிகச்சிறந்த மனிதன் தான் கடவுள்....

மிக மோசமான கடவுள் தான் மனிதன்...

பகிர்வுக்கு நன்றி...

ரங்கராஜன்
24-02-2011, 06:38 AM
யப்பா என்னது இது
புறியாத விஷயத்த இங்க
கேட்டுட்டே ??????????,

இதுக்கு விடை யாரு சொல்ரது

என்ன அண்ணா வாழ்க்கையை பிரித்து மெய்ந்து பின்னி பெடல் எடுத்தவரான நீங்கள் இப்படி ஜகாவாங்கினால் என்ன அர்த்தம், உங்கள் கருத்துகளை சொன்னால் தானே எங்களைப் போல தம்பிகளுக்கு உபயோகமாக இருக்கும்...

ரங்கராஜன்
24-02-2011, 06:42 AM
அடுத்தவனை நாம் புண்படுத்தாத வரை கடவுள் இருக்கார், அடுத்தவன் மனதை கடவுள் பெயராலும் காயப்படுத்தினாலும் கடவுள் இல்லை என்பதையாவது நம்புவோம். இது வெறும் குறைந்தபட்ச வேண்டுகோள் தான், இதை குறைந்தது இந்த திரி முழுக்க கடைப்பிடிக்க முயற்சிப்போம்..

கடவுள் இருக்காரோ இல்லையோ, நாம் அனைவரும் உங்க தான் இருக்கோம், அதனால் சந்தேகத்திற்கு உள்ளவருக்காக, சந்தேகம் இல்லாமல் கண்முன்னே இருக்கும் நாம் யாரும் நோகடித்துக் கொள்ள வேண்டாம்... உறுப்பினர்களே..

பொறுப்பாளர் ஆதன் அவர்களே நீங்க கவலைப்படாதீர்கள்... அப்படி இந்த திரியில் எதாவது இறைநம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போல நானோ, அல்லது உறுப்பினர்களோ வார்த்தைகள் இட்டால்.... விளக்கத்தை அளித்து விட்டு இந்த திரியை உடனடியாக பூட்டும் படி நான் கேட்டுக் கொள்கிறேன்...

நன்றி...

ஆதி
24-02-2011, 06:44 AM
//பொறுப்பாளர் ஆதன் அவர்களே நீங்க கவலைப்படாதீர்கள்... //

இதுக்கு நீ என்ன கெட்ட வார்த்தையலயே திட்டிருக்கலாம் டா..

கோவத்தின் உச்சுல இருக்கியா இன்னும் :)

ரங்கராஜன்
24-02-2011, 06:56 AM
இதுக்கு நீ என்ன கெட்ட வார்த்தையலயே திட்டிருக்கலாம் டா..
((% (%) %&^*$(# #%*%)^)) %))^U$Y$&#(#)@

ஆதி
24-02-2011, 06:59 AM
((% (%) %&^*$(# #%*%)^)) %))^U$Y$&#(#)@

ஹாஹ்ஹா :D :D :D

aathma
24-02-2011, 08:45 AM
ஒரு பெண்மணியும் ( என் உறவினர் ) அவரது கணவரும் கோவிலுக்கு சென்றனர் அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற .

அவர்களது வேண்டுதல் என்ன தெரியுமா ?

கணவருக்கு நோயின் காரணமாக உடல்நிலை மோசமானது .

நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறினால் கோவிலுக்கு வருவதாக வேண்டிக்கொண்டார் அந்த பெண்மணி

கணவரின் உடல்நிலை தேறியது . எனவே இருவரும் கோவிலுக்கு சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர் .

கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் வாகன விபத்து ஏற்பட்டு அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரும் விதி வலியது என்றனர் .


அவ்வாறு எனில் கடவுளைவிட விதிதான் பெரியதா ?


மனிதன் , பல பிறவிகளில் தான் செய்த பாவ , புண்ணியங்களுக்கு தகுந்தபடியான வாழ்க்கையை அடைகிறான் . தான் செய்த பாவ , புண்ணியங்களுக்கு உண்டான பலனை கிரஹங்களின் வாயிலாக இறைவன் மனிதனுக்கு அளிக்கிறான் . மனிதன் அனுபவிக்கும் இன்ப , துன்பங்களைப் பார்த்து ரசிக்கிறான் இறைவன் .

நவகிரங்களின் கையில் சாட்டை மற்றும் மலர்மாலை ஆகியவற்றை கொடுத்து எந்த மனிதனுக்கு எதை தரவேண்டும் ?
( சாட்டையால் அடி கொடுப்பதா ? அல்லது அவனுக்கு மலர் மாலை அணிவிக்க வேண்டுமா ? ) என்பதை அவைகளிடத்தில் சொல்லிவிட்டு , நிம்மதியாக , வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு , கிரஹங்கள் மனிதனுக்கு சாட்டை அடி கொடுப்பதையும் , மலர் மாலை அணிவிப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான் இறைவன் .

ஆக இறைவன் ஒரு பார்வையாளன் மாத்திரமே

நாஞ்சில் த.க.ஜெய்
24-02-2011, 09:36 AM
மிக அருமையான பதிவின் துவக்கம் ....நண்பரே அன்றைய புராண இதிகாசகங்கள் இன்றைய மனிதனை செதுக்கும் சிற்பிகளாகத்தான் இருந்திருக்கின்றன ,,,இன்று அந்த புராணங்களையே ஆராயும் அளவிற்கு இன்றைய மனிதன் பெற்றுள்ள அறிவிற்கு அந்த புராணங்களே காரணம் ...இது எவ்வாறெனில் முதலில் சக்கரங்களும் நெருப்பும் கண்டறிந்து ஒரு நாகாரீக வாழ்விற்கு முன்னோடியாக இருந்த மனிதன் எவ்வாறு என்று பேச ஆரம்பித்தான் ..முதலில் தன்னுடைய சைகைகள் மற்றும் மற்றவர்களுக்கு புரியும் வகையில் அவன் சுயமாக சிந்தித்து எழுதிய சித்திர எழுத்துகள் என்றுதான் ஆரம்பித்தான் இதனை எவ்வாறு தமது சந்ததியினருக்கு இது இன்னது என்று வரையறுத்து கூறுவது அதுபோல் ஒவ்வொரு மனிதனும் இப்படி பட்டவர் என்று கூறுவது என்று தன அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகளை கூறுவது அதுபோல் இந்நோய் வந்தால் இந்த மருத்துவம் என்று தன அனுபவங்களை தமது சந்ததியினருக்கு கூற விளைந்ததன் விளைவே புராணங்கள் ...ஒருகுழந்தையிடம் அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறும் போது அந்த குழந்தைக்கு அதனை செய்யத்தான் தோன்றும் அதனை ஒரு கதையின் மூலம் உண்மையினை கூறும் போது அந்த குழந்தை அதனை உணர்ந்து அதன்படி செய்யும் ..இவ்வாறு வாய்மொழியாக வந்த புராணங்கள் தவறு செய்யும் மனிதனை எவ்வாறு திருத்தும் ..இந்த நிலையினில் தோன்றியவர் தான் கடவுள் ..தவறுகள் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற எண்ணம் அன்றைய மனிதருக்கு இருந்ததால் தான் தவறுகள் குறைவாக இருந்தது வாழ்வும் நிறைவாக இருந்தது .. மனமும் அமைதியான வாழ்வினை நாடி இருந்தது ..அன்றைய மனிதரில் இருந்த சிலர் நாகரீகம் முன்னேற முன்னேற அவர்கள் தொழில் செய்தனர் முதலில் செய்த தொழில் விவசாயம் தமக்கென விளைவித்தான் முதலில் பின்னர் பிறருக்கென விளைவித்து அதற்க்கு பதில் அவனுக்கு தேவையானவற்றை பண்டைமாற்று முறையில் மாற்றி கொண்டான் ..அவ்வாறு செய்யும் போது இன்னாரிடம் சென்று இதனை வாங்கி வா என் கூறும் போது அவன் இன்று பிரிவுபட்டிருக்கும் அவன் செய்யும் தொழிலின் பெயரால் தான் கூறி இருப்பான் ...இவ்வாறு வந்ததுதான் சாதி ..என்று தனக்கு பெயர் சூடி மற்றவர்கள் தன்னை இவ்வாறுதான் அழைக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்தானோ அதுவரை அவர்கள் செய்யும் தொழிலின் பெயரில்தான் அவன் அழைத்திருப்பான்...பின்னர் மனிதரில் சில மிருகங்கள் என்று ஒருவருக்கொருவர் அடக்கி ஆள ஆரம்பித்தார்களோ அன்றுதான் தோன்றியது நீ தாழ்த்தபட்டவன் நான் உயர்ந்தவன் என்று ....முதலில் இயற்கையை கண்டு பயந்த மனிதன் அந்த இயற்கையை வணங்கினான்...பின்னர் அந்த இயற்கையை ஆளும் தெய்வம் என்று அதற்கு ஒரு உருவம் வரைந்தான் ...நீ வணங்கும் உருவம் உன் கடவுள் நான் வரைந்த உருவம் என் கடவுள் என்று பிரித்திருப்பான் இது அன்றைய அடக்கி ஆளும் தன்மையில் தோன்றியதுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் ....
ஆனால் ஒன்று இன்றும் இறைவன் உள்ளான் அதில் ஐயமேதும் இல்லை அவனை வணங்கும் முறைதான் வேறே தவிர சேரும் இடம் ஒன்றே ..அந்த இறைவன் விதி எனும் பெயரில் இன்றும் அழைக்க படுகிறான் ...இந்த விதிவசத்தால் தான் இன்ற விஞ்ஞானமும் கண்டு பிடிப்புகளும் ...இங்கு விதி என்பது ஒரு காரியம் செய்யும் போது தவறுதலாக ஏற்படும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு நன்மை அல்லது தீமை ...உதாரணத்திற்கு மருத்துவவுலகில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்த பென்சிலீன் கண்டுபிடிப்பு ...அதுபோல் இரண்டாயிரத்து நான்கில் ஏற்பட்ட பூகம்பம் அதனால் விளைந்த சுனாமி ..இங்கு இறைவன் என்பவன் தம்மை அறியாமல் தான் செய்யும் செயல்களுக்கு மூலம் இதனை நம்மில் ஒருவரும் மறுக்க இயலாது ...
இந்த பதிவின் மூலம் நமது நண்பர்களின் மனம் புண்படும்படி கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை தகுந்த விளக்கத்தின் பேரில் நிர்வாகிகள் நீக்கலாம்...

sarcharan
24-02-2011, 11:41 AM
மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட சக்தி தான் கடவுள்... கடவுள்: அனைத்தையும் கடந்தவர்.

மனுஷனுடைய இருதயத்தை கொண்டோ, மனதை கொண்டோ கடவுளை பூரணமாக அறிந்து கொள்ள முடியாது..

நம்மில் நல்ல குணங்கள் இருப்பின் அது கடவுளுடைய குணாதிசயம் ஆகிறது, கேட்டகுணங்கள் இருப்பின் அது கடவுள் அல்லாத ஒன்றினோடு பொருந்துகிறது.

நம்மையே உதாரணத்திற்கு எடுத்துகொள்வோமே, சாலையில் ஒருவன் அடிபட்டு கிடக்கின்றான், நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டும்...

நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்வோம், கடவுளே இவன காப்பாத்துன்னு சொல்லீட்டு போய்கிட்டே இருப்போம்.

இதுல நாம கடவுள எப்படி குத்தம் சொல்ல முடியும்? உண்மைய சொன்னா நாம அதுக்கு யோக்கியதை இல்லாதவர்கள்.

இந்தியாவில் சைவம், வைணவம் பரவியது ஆரியர்களது வரவினால் தான்.

அவர்கள் வந்து செய்யும் தொழிலின் அடிப்படையில் ஜாதிகள் பிரித்தார்கள், சூரியனையும் சந்திரனையும் வழிபட்டார்கள்...

நான் சிறுவனாய் இருந்த பொழுது தினமும் பூஜை செய்துவிட்டு தான் பள்ளி செல்லுவேன். அப்படி ஒரு ஆத்திகன்.

சில நேரங்களில் நினைத்து பார்ப்பேன். தவறாக நினைக்க வேண்டாம், புள்ளையாரை உதாரணத்திற்கு எடுத்துகொள்வோம்.

ஒரு யானையின் தலையை மனிதனின் தலையோடு இணைக்க முடியுமா? இருவரது உடற்கூறும் வெவ்வேறு. தலை துண்டிக்கப்பட்ட மனிதன் எப்படி உயிர் வாழ்வான். இது ஒரு மூட நம்பிக்கை அல்லவா? சற்று சிந்தியுங்கள்...

இசுலாமியர்களுக்கு அவர்களது மதகுருமார் என்ன போதிகிர்ரர்கள் தெரியுமா?
இசுலாமியன் அல்லாத யாரையும் அவர்கள் கொல்லலாம். மற்ற ஜாதிக்காரர்களை போல வாழக்கூடாது. அவர்களது கொள்கைப்படி ஜிஹாத், தீவிரவாதம் சரிதானாம்

ஒரு உயிரின் விலையை என்று மனிதன் உணருகிறானோ அன்று கடவுள் அவனுள் பிறக்கிறார்..


எந்த ஒரு இசுலாமியனயவது இது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும், இது என்னுடன் பணிபுரியும் ஒரு இசுலாமிய நண்பன் கூறியது

ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான். மீசை வைத்து தாடியை மழித்துக்கொள்கிறான். இசுலாமியன் தாடி வைத்து மீசையை மழித்துக்கொள்கிறான்.

இதை எல்லாம் விட்டு மனிதனை மனிதனாக பார்த்து ஒற்றுமையோடு வாழ்ந்தால் மனிதம் சிறக்கும்... உலகம் செழிக்கும்

மதங்கள் என்னும் தடைகளை உடைத்து மனிதநேயம் என்னும் வெள்ளி முளைத்து நாம் மனிதர்கள் என்ற எண்ணம் உயிர்த்தால் ஓங்கி வளரும் மனிதம்..


இந்த பதிவின் மூலம் நமது நண்பர்களின் மனம் புண்படும்படி கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை தகுந்த விளக்கத்தின் பேரில் நிர்வாகிகள் நீக்கலாம்...

ரங்கராஜன்
24-02-2011, 11:47 AM
நண்பர்கள் அனைவரும் மிக அருமையாக தங்களின் பங்களிப்பை தந்துக் கொண்டு இருக்கிறீர்கள்...

ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து மற்றவர்களின் மனதை நோகடித்து விடக்கூடாது என்ற நினைப்புடன் நாம் சொல்லுவதில் இருந்தே தெரிகிறது கடவுள் எங்கு இருக்கிறான் என்று, நம் நினைப்பிலும் நம் பண்பிலும் தான் கடவுள் இருக்க வேண்டும்.... அது நம்மில் பலருக்கு இருக்கிறது...

இன்னும் இன்னும் பேசலாம், .....

ஆதி
24-02-2011, 11:54 AM
யூத மறையின் தனாக்கில் ஒன்றான தோரா, மோசேவால் வழங்கப்பட்டது, இந்த நூல் விவிலியம், குர்-ஆன், மற்றும் தனாக் அனைத்திலும் ஒரு புத்தகமாக கருதப்படுகிறது, இஸ்லாமிய நாடுகள் தங்களின் சட்டங்களை இந்த நூல் கொண்டே வகுத்து வைத்திருக்கின்றன, இந்த புத்தத்தில் "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்று பேசக்கூடிய ஒன்று..

ஆனால் இதனை முழுமையாக கற்றுணர்ந்தால் நமக்கு தோன்றுவது என்னவென்றால், பிறர் உனக்கு எதை செய்ய கூடாதென்று நினைக்கிறாயோ, அதை நீ பிறருக்கு செய்யாதே, என்பதுதான்..

இந்த ஒரு வரி போது உலக நெறிகள்/மறைகள் அனைத்தையும் பின்பற்ற.

Mano.G.
24-02-2011, 12:33 PM
அன்பே சிவம்

சக்தி என்று ஒன்று உள்ளது
நாம் ஆறியா சக்தி,

வடிவமைப்பும் உறுவங்களும்
அவர் அவரின் எண்ணங்களுக்கேப்ப
அமைந்ததே , அதோடு நம் முன்னோர்கள்
தங்கள் மூதாதையர்களையே
காவல் தெய்வமாக பூஜிக்கின்றனர்

என்னை பொறுத்தவரை நம்மை
வழிநடத்தும் சக்தியே கடவுள்

தம்பி என்னை திரும்பி கேட்கலாம்
அப்படின்னா எதுக்கு வருஷம்
வருஷம் திருப்பதிக்கு போரிங்கன்னு
அது ஒரு மன திருப்திக்கு பா!!!!

Nivas.T
24-02-2011, 01:26 PM
எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
கடவுள்
இல்லை என்பவனுக்கு இல்லை
உண்டு என்பனுக்கு உண்டு

இது அவரவர் மனநிலை பொறுத்தே அமையும்

இல்லை என்று சொன்னாலும் கடவுளுக்கு அசிங்கமில்லை

உண்டு என்று சொன்னாலும் கடவுளுக்கு பெருமையுமில்லை

Nivas.T
24-02-2011, 01:27 PM
"புத்தரிடம் குழந்தை பிணத்துடன் வந்த பெண்மணி ஐயா என்குழந்தை பாம்பு தீண்டி இறந்துவிட்டது தயவு செய்து மீண்டும் உயிர்பெறச் செய்யுங்கள் இவன் என் ஒரே மகன் என்று புலப்பினாள்

அதற்கு புத்தர் கர்ம பலனை நாம் அனுபவித்துதான் ஆகா வேண்டும் என்று ஆறுதல் கூறியும் அவள் கேக்கவில்லை

உயிர்பெறச் செய்யவில்லை என்றால் கடவுள் நம்பிக்கை விடுத்து தன் வாழ்க்கையும் முடித்துகொள்வேன் என்று அவள் கூற

புத்தர் கூறினார் "இதுவரை இறப்பே நடக்காத வீட்டில் இருந்து சிறுது கடுகு வாங்கி வா" என்றார்.

கடைசிவரை அவளால் முடியவில்லை

"இதை நான் யாரையும் காயப்படுத்த சொல்லவில்லை, வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு கடவுளை வெறுப்பது தவறு"

ஆதி
24-02-2011, 02:47 PM
நிவாஸ், கடவுள் மறுப்பு என்பது வேறு, கடவுள் வெறுப்பு என்பது வேறு..

இல்லை என்றால் மறுப்பு, பிடிக்கவில்லை என்றால் வெறுப்பு..

வெறுப்பென்று பார்த்தால், பலரும் நமக்கு பிடிக்காத மற்றக் கடவுளை வெறுத்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்..

இல்லை என்று சொல்லவும், இருக்கு என்று சொல்லவும் நம்ப வேண்டும். நம்பிக்கை தான் எல்லாம் என்றால், நம்பிக்கை தான் கடவுள்..

ஆத்திகனும் நம்புறான், நாத்திகனும் நம்புறான், இருவரின் நம்பிக்கையும் வேறு வேறு..

புத்தன் என்று சொல்கிறோமே அதில் பல குழப்பம் உண்டு தெரியும்... பல புத்தர்கள் இருந்திருக்கிறார், ஔவை மாதிரி..

ஔவை என்றால் முதியவள் என்று பொருளுள்ளது மாதிரி புத்தன் என்றால் விழிபுணர்வு உற்றவன் என்பது பொருள்..

நீங்கள் சொல்லும் புத்தன் புத்தமதத்துக்கு சொந்தக்காரனா என்பதே சந்தேகம் தான்..

சூரபத்மனை பற்றி தாமரையண்ணா சொன்னரே அந்த மாதிரி தான் கடவுளை வெறுப்பது கூட நமக்கு வழங்கப்பட்ட ஒரு உரிமைதான் ஆனால் அதனையும் ஒழுங்க செய்யனும்..

Nivas.T
24-02-2011, 03:17 PM
ஆனால் ஆதன்,

வாழ்க்கையில் தொண்ணூறு சதவிகிதம் வாழ்க்கையில் வரும் துன்பங்களால் கடவுலை வெறுக்கவும் செய்கிறார்கள், மறுக்கவும் செய்கிறார்கள்.

வெறுப்பவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள், மறுப்பவர்கள் நபிக்கை இழந்து கடவுள் இல்லவே இல்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

இங்குதான் கடவுள் பற்றிய சந்தேகம் முளைக்கிறது. நான் சொன்னது கௌதம புத்தரைத்தான். ஏனென்றால் அவர்தான் எந்த ஒரு மாயாஜால வித்தைகளும் நிகழ்த்தாமல் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்

dellas
24-02-2011, 04:17 PM
நல்ல விவாதம்தான். இதில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

கடவுள்..அதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

ஒருசில கணங்களில் நம்மை அறியாமல் நடந்துவிடும் சில செயல்களில் , நம்சக்தியைத் தாண்டிய ஒரு காரியத்தை நாம் செய்துவிடிருக்கக் கூடும். அல்லது பிறர் நமக்கு செய்திருக்கக் கூடும். இதில் நாம் வியப்பது என்னவென்றால், மனித சக்தியென்று நாம் வரையறுத்த எல்லையை மீறி இச்செயல்கள் நடப்பதால் இன்னொரு சக்தி கண்டிப்பாக இதில் இடைப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.

நமக்கு புரிபடாத செயல்கள், சக்திகள், உண்மைகள் எல்லாம் நம்மை ஒரு முடிவிற்கு வர வைக்கிறது. அதுவே கடவுள். பாம்பின் விஷத்தில் மரணம் கண்டவுடன் பாம்பை வணங்கினோம். இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் பயமுறுத்தியதால் அதையும் வணங்கினோம். அடிமைகளாக வாழ்ந்து தவித்தவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து விடியலுக்கு வித்திட்டவர்கள் கடவுள் ஆனார்கள். மன அமைதியில்லாமல் தவித்த மனிதனுக்கு அமைதியின் தத்துவத்தை போதித்து வாழ்ந்தவர்கள் கடவுள் ஆனார்கள். யாரும் கண்டிராத விண்ணுலகம் பற்றிப் பேசி அதற்கான கோட்பாடுகளை வகுத்தவர்கள். மனிதர்களில் இருந்து வேறுபட்டமையால். கடவுள் ஆனார்கள்.

நல்லொழுக்கம் அனைவருக்கும் நல்வாழ்வைத் தரும் அதை பின்பற்றவேண்டும், ஆனால் அதை மறுப்பவர்களை என்ன செய்வது. எனவே ஒழுக்கம் மோட்சம் தரும், ஒழுக்கமின்மை நரகம் தரும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

புரியாத சக்திகள் உலகில் உள்ளவரை கடவுள்களும் அதனை தாங்கிவரும் தூதுவர்களும் மக்களிடம் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.

ஆதி
24-02-2011, 04:28 PM
//வெறுப்பவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள்//

இது யாரையும் புண்படுத்தும் ஆதலால் தவிர்த்தேன்..

//நான் சொன்னது கௌதம புத்தரைத்தான். ஏனென்றால் அவர்தான் எந்த ஒரு மாயாஜால வித்தைகளும் நிகழ்த்தாமல் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் //

எப்பொழுது அவரை கடவுளாக ஏற்றுக்கொண்டோமோ அப்பொழுதே அவர் தோற்றுவிட்டார் நிவாஸ், எல்லாம் பூஜ்ஜியம் என்று சொன்னவன் அவன், அவனை ஹிமாயன, மஹாயனவில் அடைத்தோன் நாம்..

புத்தனை பிந்தொடர்தல் என்பதே முழுமையாக புத்தனை அறியாதவர்கள் செய்யும் செயல் நிவாஸ், புத்தனாக வாழ்தலே புத்தத்தின் தத்துவம்..

இது போலத்தான் கிறிஸ்துவமும், கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்து அவன் என்று பொருள், கிறிஸ்துவாக வாழ்தல் யார் இதை எல்லாம் செய்கிறார்கள் சொல்லுங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25810

இந்த கவிதையில் மறை பொருளாக வைத்திருப்பேன் நேரிய பொருள் வேறாக இருக்கும்...

ஆதி
24-02-2011, 04:30 PM
//நமக்கு புரிபடாத செயல்கள், சக்திகள், உண்மைகள் எல்லாம் நம்மை ஒரு முடிவிற்கு வர வைக்கிறது. அதுவே கடவுள். பாம்பின் விஷத்தில் மரணம் கண்டவுடன் பாம்பை வணங்கினோம். இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் பயமுறுத்தியதால் அதையும் வணங்கினோம். அடிமைகளாக வாழ்ந்து தவித்தவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து விடியலுக்கு வித்திட்டவர்கள் கடவுள் ஆனார்கள். மன அமைதியில்லாமல் தவித்த மனிதனுக்கு அமைதியின் தத்துவத்தை போதித்து வாழ்ந்தவர்கள் கடவுள் ஆனார்கள். யாரும் கண்டிராத விண்ணுலகம் பற்றிப் பேசி அதற்கான கோட்பாடுகளை வகுத்தவர்கள். மனிதர்களில் இருந்து வேறுபட்டமையால். கடவுள் ஆனார்கள்.

//

இதை அப்படியே வழி மொழிகிறேன்..

அக்னி
24-02-2011, 05:36 PM
இந்தக் கேள்விக்கு விடையை நான் இத்திரியிலேயே, அதுவும் உங்கள் பதிவிலேயே கண்டு கொண்டேன்.மிகச்சிறந்த மனிதன் தான் கடவுள்....

மிக மோசமான கடவுள் தான் மனிதன்...

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு...

மனிதனின் வாழ்வின் ஆதாரமான அனைத்துமே உணர்வுகள் தொடர்பானவை எனலாம் என நினைக்கின்றேன்.
பாசம், காதல், சோகம், இன்பம், துன்பம், வஞ்சம், பொறாமை...
இப்படியானவைதானே மனிதனை ஆட்டுவிக்கின்றன...

இவற்றில் எவற்றைத் தொட்டறிந்தோம்... பார்த்தறிந்தோம்...
உருவமில்லாத இவற்றின் இயல்புகள்தானே மனிதரிடத்தில் வித்தியாசங்களைப் பிரதிபலிக்கின்றன...???

இவ்வுணர்வுகளின் தோற்றுவாய் எங்கிருக்கின்றது என வினவினால்..,
எனக்கு அதுவே கடவுளாகத் தெரிகின்றது...

நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மனிதன் சமூகத்தில் போற்றப்படுவதும்,
தீயவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மனிதன் சமூகத்தால் ஒதுக்கப்படுவதும்,
உண்மைதானே...???

அப்படியானால், ஏன் தீயவுணர்வுகள்...???
நல்லுணர்வுகள் உருவாகையில் அதற்கு எதிர்மாறானவை தீயவுணர்வுகளாகத் தானே உருப்பெற்றுவிடுமே...
உருப்பெறாவிட்டால், இவைதான் நல்லுணர்வுகள் என்று எப்படித் தெரியும்...

ஆரம்பப்பாடசாலையில் சேருவதற்கே நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலையில்,
வாழ்க்கைப்பாடத்திற் தேறுவதற்கு இவற்றைக் கற்றறிந்து, பட்டறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகத்தானே உள்ளது.

நாவைத் தாண்டினால் சுவை தெரியாது என்பதற்காக,
எப்படியும் எதையும் உண்ணுவதில்லையே...
ஆக, இறப்பின் பின் தெரியாத வாழ்க்கைக்காக,
எப்படியும் எப்படி வாழ்ந்துமுடிப்பது...

பிறப்பின் முன்பும் இறப்பின் பின்பும்
எம் வாழ்வை அறியமுடியாத அச்சம்,
ஏதோ ஒரு சக்தியிடம் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது.
அந்த சக்தி... கடவுள்...

மனிதனின் நல்லுணர்வு அவனுக்குக் கடவுளைக் காட்டும்...
மனிதனின் தீயவுணர்வு அவனே கடவுள் என்றாக்கும்...

என்ன சொல்லவந்தேன் என்றும் தெரியவில்லை.
என்ன சொல்லியிருக்கின்றேன் என்றும் புரியவில்லை.
எப்படி எழுதினேன்... எதற்கு எழுதினேன்... தெரிந்து எழுதினேனா... தெரிந்தமாதிரி எழுதினேனா...

எது என்னை இதையெல்லாம் எழுத வைத்தது...
என்னைப் பொறுத்தவரையில் ‘கடவுள்’

p.suresh
24-02-2011, 11:52 PM
மனிதனின் நல்லுணர்வு அவனுக்குக் கடவுளைக் காட்டும்...
மனிதனின் தீயவுணர்வு அவனே கடவுள் என்றாக்கும்...


வைர வரிகள்.குழம்பியிருந்த எனக்கு தெளிவைத் தந்தது.மனமாரப் பாராட்டுக்கள் அக்னி.

aathma
25-02-2011, 04:47 AM
இங்கு கூறப்பட்டு இருக்கும் எனது கருத்துகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல . உண்மையை அறிந்துகொள்ளும் ஆவலுடன் எழுதப்பட்டவையே

கடவுள் உண்மையா ? கட்டுகதையா ?

இக்கேள்விக்கு பதிலாக சில சம்பவங்களை இங்கே நம் மன்றத்தின் முன் வைக்கிறேன் . இந்த சம்பவங்களின் அடிப்படையில் , மன்ற நண்பர்கள் அந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

Nivas.T
25-02-2011, 04:52 AM
//வெறுப்பவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள்//

இது யாரையும் புண்படுத்தும் ஆதலால் தவிர்த்தேன்..

//நான் சொன்னது கௌதம புத்தரைத்தான். ஏனென்றால் அவர்தான் எந்த ஒரு மாயாஜால வித்தைகளும் நிகழ்த்தாமல் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் //

எப்பொழுது அவரை கடவுளாக ஏற்றுக்கொண்டோமோ அப்பொழுதே அவர் தோற்றுவிட்டார் நிவாஸ், எல்லாம் பூஜ்ஜியம் என்று சொன்னவன் அவன், அவனை ஹிமாயன, மஹாயனவில் அடைத்தோன் நாம்..

புத்தனை பிந்தொடர்தல் என்பதே முழுமையாக புத்தனை அறியாதவர்கள் செய்யும் செயல் நிவாஸ், புத்தனாக வாழ்தலே புத்தத்தின் தத்துவம்..

இது போலத்தான் கிறிஸ்துவமும், கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்து அவன் என்று பொருள், கிறிஸ்துவாக வாழ்தல் யார் இதை எல்லாம் செய்கிறார்கள் சொல்லுங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25810

இந்த கவிதையில் மறை பொருளாக வைத்திருப்பேன் நேரிய பொருள் வேறாக இருக்கும்...

ஆதன்,
நான் அந்த புத்தக் கதையை கூறியது கௌதம புத்தரை கடவுளாக கொள்ளவேண்டும் என்று இல்லை. அவர் கூறிய அந்த போதனைக் காகத்தான்.

ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.

கோவிலின் வாசற்படியும் கோவில் தானே. அதில் ஒன்றும் தவறில்லை. எவ்வளவு தான் மனிதன் சிந்தித்தாலும் உயிர் எங்கிருந்து வருகிறது என்று அறிந்தவருமில்லை, இந்த உடலை விட்டு எங்கே போகிறது என்று தெரிந்தவரும் இல்லை. இந்த இயற்கையின் வடிவமைப்பு செயல்பாடுகள், விண்வெளியின் நீளம் என்ன? அதன் எல்லை அடைந்துவிட்டால் அதற்கடுத்து என்ன? இது போன்ற விடையில்லாக் கேள்விகளுக்கு பதில் கொண்டால் கடவுளுக்கான பதிலும் ஒருவேளை கிடைக்கலாம் அதுவும் உறுதியில்லை.

சூரியனை கடவுளாக கொண்டதும் தவறில்லை. கண்ணுக்கு தெரிந்த சூரியன் கடவுள் தான். விண்வெளியில் பலகோடி சூரியன் இருக்கலாம். ஆனால் இந்த பூமிக்கு, அதன் உயிருக்கு மூலாதாரம் இந்த சூரியன்தான்.

Nivas.T
25-02-2011, 04:56 AM
இங்கு கூறப்பட்டு இருக்கும் எனது கருத்துகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல . உண்மையை அறிந்துகொள்ளும் ஆவலுடன் எழுதப்பட்டவையே

கடவுள் உண்மையா ? கட்டுகதையா ?

இக்கேள்விக்கு பதிலாக சில சம்பவங்களை இங்கே நம் மன்றத்தின் முன் வைக்கிறேன் . இந்த சம்பவங்களின் அடிப்படையில் , மன்ற நண்பர்கள் அந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்

கேளுங்கள் ஆத்மா

aathma
25-02-2011, 05:02 AM
இங்கு நான் கூறப்போகும் சம்பவங்களில் சில செய்திதாளில் நான் படித்த சம்பவங்கள் , சில என்னை சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள்

சம்பவம் 1

30 வயதிற்கு மேல் ஆகியும் தன் மகளுக்கு திருமணமே ஆகவில்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலாவது திருமணம் நடைபெறாதா ? என்ற ஏக்கத்துடனும் , எதிர்பார்ப்புடனும் கோவிலுக்கு சென்றனர் தந்தை , தாய் , மகள் மூவரும் .

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் வாகன விபத்து ஏற்பட்டு , தந்தை , மகள் இறந்துவிட ,தற்போது அந்த தாய் மட்டும் தனியே அனாதையாக துடிதுடித்து வாழ்கிறார் தனது கணவரையும் , மகளையும் நினைத்து அழுதுகொண்டே .

அந்த தாய் கோவிலுக்கு சென்று கடவுளிடம் என்ன வேண்டியிருப்பார் ?

தன் மகளுக்கு தாலி பாக்கியத்தை தரவேண்டும் என்றுதானே கடவுளிடம் வேண்டியிருப்பார் . ஆனால் நடந்தது என்ன ? அவரது தாலியே பறிபோய்விட்டதே ? இதற்காகவா அவர் கடவுளைத் தேடி நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று முறையிட்டார் ?

மரணம் - எந்த மனிதனும் சந்தித்தே தீரவேண்டிய யதார்த்தமான உண்மை . இதை நான் ஒப்புகொள்கிறேன் .

ஆனால் என் ஆதங்கம் என்னவெனில் , இறந்தவர்கள் நிம்மதியாக போய் சேர்ந்துவிட , உயிரோடு இருக்கும் அந்த தாயின் நிலை என்ன ? தன் கணவரையும் , மகளையும் நினைத்து நினைத்து பாசத்தால் துடித்து வாடிக்கொண்டு இருக்கிறாரே ? ஏன் இந்த வேதனை ? இந்த வேதனைக்கு காரணம் என்ன ? பாசம் .

ஆம் , பாசம் என்ற மாயவலையில் மனிதனை சிக்கவைத்து , அவன் தவிக்கும் தவிப்பை வேடிக்கை பார்கிறானே இறைவன் . இது என்ன நீதி ? இதுதான் விதியா ? . இதுதான் இறைவனின் இரக்க குணமா ?

இறந்தது அவர்கள் விதிவசத்தால் , அந்த தாய் கதறி துடிப்பதும் விதிவசத்தால் ஆக இங்கு விதிதான் வலிமையானது எனில் கடவுள் எதற்கு ?

Nivas.T
25-02-2011, 05:26 AM
இங்கு நான் கூறப்போகும் சம்பவங்களில் சில செய்திதாளில் நான் படித்த சம்பவங்கள் , சில என்னை சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள்

சம்பவம் 1

30 வயதிற்கு மேல் ஆகியும் தன் மகளுக்கு திருமணமே ஆகவில்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலாவது திருமணம் நடைபெறாதா ? என்ற ஏக்கத்துடனும் , எதிர்பார்ப்புடனும் கோவிலுக்கு சென்றனர் தந்தை , தாய் , மகள் மூவரும் .

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் வாகன விபத்து ஏற்பட்டு , தந்தை , மகள் இறந்துவிட ,தற்போது அந்த தாய் மட்டும் தனியே அனாதையாக துடிதுடித்து வாழ்கிறார் தனது கணவரையும் , மகளையும் நினைத்து அழுதுகொண்டே .

அந்த தாய் கோவிலுக்கு சென்று கடவுளிடம் என்ன வேண்டியிருப்பார் ?

தன் மகளுக்கு தாலி பாக்கியத்தை தரவேண்டும் என்றுதானே கடவுளிடம் வேண்டியிருப்பார் . ஆனால் நடந்தது என்ன ? அவரது தாலியே பறிபோய்விட்டதே ? இதற்காகவா அவர் கடவுளைத் தேடி நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று முறையிட்டார் ?


கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் நடக்கும் என்றும் கடவுளிடம் சென்று கேட்டால் அவர் கொடுக்க வேண்டும் என்றும் யார் சொன்னது? கடவுள் சொன்னாரா? இல்லை போகும் வழியில் மரணம் வாறது என்று கடவுள் உறுதி தந்தாரா?

சரி அவருடைய கணவன் அடுத்தநாள் இறந்திருந்தால் அப்பொழுது கடவுள் நல்லவரா? அனைவருக்கும் தான் ஆசை என் அப்பா என் அம்மா நான் எல்லோரும் சாகவே கூடாதென்று நடக்குமா. இப்பொழுது கடவுள் இல்லையா?

அது என்னக அவங்க நினைப்பது நடந்துவிட்டால் கடவுள் உண்டு. அல்லது வேறு எதுவும் நடந்து விட்டால் கடவுள் கடவுள் இல்லை. எவ்வளவு பெரிய சுயநலம்.

திருமணம், பணம் வேண்டும், வியாதி குனடய வேண்டும், வேலை வேண்டும். வீர் என்ன என்ன வேண்டும்? கடவுள் என்ன திருமான் புரோக்கரா? இல்லை சாப்ட்வேர் கம்பெனி ஓனரா?

aathma
25-02-2011, 05:48 AM
நன்றி நண்பர் திரு . நிவாஸ் அவர்களே ,

என் கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன் . நான் எழுதியதில் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு பதில் அளித்திருக்கிறீர்கள் . மீதியையும் எடுத்துக் கொண்டு பதில் கூற வேண்டுமாய் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் .


என் கேள்வி

மரணம் - எந்த மனிதனும் சந்தித்தே தீரவேண்டிய யதார்த்தமான உண்மை . இதை நான் ஒப்புகொள்கிறேன் .

ஆனால் என் ஆதங்கம் என்னவெனில் , இறந்தவர்கள் நிம்மதியாக போய் சேர்ந்துவிட , உயிரோடு இருக்கும் அந்த தாயின் நிலை என்ன ? தன் கணவரையும் , மகளையும் நினைத்து நினைத்து பாசத்தால் துடித்து வாடிக்கொண்டு இருக்கிறாரே ? ஏன் இந்த வேதனை ? இந்த வேதனைக்கு காரணம் என்ன ? பாசம் .

ஆம் , பாசம் என்ற மாயவலையில் மனிதனை சிக்கவைத்து , அவன் தவிக்கும் தவிப்பை வேடிக்கை பார்கிறானே இறைவன் . இது என்ன நீதி ? இதுதான் விதியா ? . இதுதான் இறைவனின் இரக்க குணமா ?

இறந்தது அவர்கள் விதிவசத்தால் , அந்த தாய் கதறி துடிப்பதும் விதிவசத்தால் ஆக இங்கு விதிதான் வலிமையானது எனில் கடவுள் எதற்கு ?

Nivas.T
25-02-2011, 05:56 AM
நன்றி நண்பர் திரு . நிவாஸ் அவர்களே ,

என் கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன் . நான் எழுதியதில் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு பதில் அளித்திருக்கிறீர்கள் . மீதியையும் எடுத்துக் கொண்டு பதில் கூற வேண்டுமாய் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் .

இல்லை ஆத்மா

நான் முழவது படித்து விட்டுத்தான் பதிப்பிட்டேன். இந்த பின்னூட்டம் நீங்கள் குறிப்பிட்ட முதல் மூன்று வரிகளுக்கு. அது மட்டுமல்ல இரு கடவுள் உண்டா? இல்லையா? என்னும் கேள்வியை எழுப்பும் மூடத்தனமான செயல்பாடுகள்.

உங்களது இறுதி கேள்விக்கு பதில் இதோ - இப்பொழுது நான் சொல்கிறேன். விதிதான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள். அது செய்வது நன்மையா தீமையா என்பது இருக்கட்டும். கடவுள் உண்டு என்பது இப்போது கொள்ளப்படும் சரிதானே

aathma
25-02-2011, 06:06 AM
சம்பவம் 2

மகனுக்கு திருமணம் முடிவாகி திருமண பத்திரிக்கை அச்சடித்தாயிற்று . முதல் பத்திரிக்கையை குலதெய்வம் கோவிலில் வைத்து சாமி கும்பிடவேண்டும் என்று அந்த தாய் , தந்தை காரில் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர் .

திரும்பி ஊருக்கு வரும் வழியில் , ஆளிலா ரயில்வே கேட்டை கார் கடக்க முயலும்போது , ரயில் பாதையின் பாதியில் கார் சென்று கொண்டு இருக்கும்போது , எதிர்பாராவிதமாக ரயில் வந்தது . ஓட்டுனர் எப்படியும் தப்பித்துவிட எண்ணி காரை வேகமாக செலுத்த முயற்சித்தார் . ஆனால் விதி வசத்தால் காரின் எஞ்சின் off ஆகிவிட , காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்வதற்குள் ரயில் காரின் மீது மோதி தாய் , தந்தை , ஓட்டுனர் மூவரும் உடல் சிதறி இறந்தனர் .

அவர்கள் விதிவசத்தால் இறந்தனர் , விதிவசத்தால் மகன் பெற்றோரை இழந்தார் . ok நான் அதை ஒத்துக் கொள்கிறேன் . அவர்களின் மகனுக்கு அவர்களது இழப்பு பேரிழப்பு . அந்த இழப்பில் இருந்து மகன் கொஞ்சம் , கொஞ்சமாக மீண்டு விடுவார் .
அதுவும் ok . ஆனால் அந்த மணப்பெண்ணின் கதி என்ன ?

திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனேயே மாமனார் , மாமியாரை விழுங்கி விட்டாளே ? இவளை திருமணம் செய்துகொண்டால் கணவனின் நிலை என்னவாகும் ? என்று ஊரார் அந்த பெண்ணை தூற்றி , அப்பெண்ணுக்கு திருமணமே நடை பெற விடாமல் செய்வார்களே ? இதையும் அந்த பெண்ணின் விதி வசத்தால் நடந்தது என்று சாக்குபோக்கு கூறுவாரோ அந்தக் கடவுள் ?

எதற்கெடுத்தாலும் விதியை காரணம் காட்டும் கடவுள் நமக்கு தேவையா ? அல்லது

விதி , கடவுள் எல்லாமே வெறும் கட்டுக்கதையா ?

aathma
25-02-2011, 06:14 AM
நன்றி ஐயா , எனக்கொரு சந்தேகம்


விதிதான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்

அவ்வாறெனில் கடவுளை ஏன் கும்பிடவேண்டும் ?

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் நீ என்னிடம் எவ்வளவுதான் அழுதாலும் , தொழுதாலும் நான் மனமிரங்கி , உனக்காக எதையும் செய்யப் போவது இல்லை என்று கூறுபவரே கடவுள் எனில் கருணையே வடிவானவர் கடவுள் என்பது வெற்றுவார்த்தைகள்தானே ?.

ஐயா , இக்கேள்வியை நான் விதண்டாவாதமாக கேட்கவில்லை . ஒருவேளை எனக்கு தெரியாத விளக்கம் , பதில் மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் . மற்றவரின் பதில் எனக்கு மனத் தெளிவை ஏற்படுத்தலாம் .
அவ்வாறு எண்ணியே நான் கேள்வியை கேட்டு இருக்கிறேன்

ஆதி
25-02-2011, 06:17 AM
//நான் அந்த புத்தக் கதையை கூறியது கௌதம புத்தரை கடவுளாக கொள்ளவேண்டும் என்று இல்லை. அவர் கூறிய அந்த போதனைக் காகத்தான்.
//

நீங்க அப்படி சொன்னதா, நானும் சொல்லலியே நிவாஸ்..

//ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.

கோவிலின் வாசற்படியும் கோவில் தானே. அதில் ஒன்றும் தவறில்லை.//

மேலுள்ள இரு வரிகளிலும் உள்ள முரண்களை கவனியுங்கள்..

அவர்கள் சொல்லவில்லை நாம்தாம் ஆக்கினோம், ஆனால் அதற்கு நாம் சொல்லும் காரணங்கள் என்ன பாருங்கள். நம் மனவோட்டம் அப்படி அலை மாதிரி மேலெழுந்து தாழும், அதன் விழைவே இது, இன்னொரு காரணம் என்ன தெரியுமா, நமெல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு நாம் சொல்லுவது மாதிரி கடவுள் இருக்க வேண்டுமென்று, ஒரு வேளை நாமெண்ணியவாறு கடவுளில்லை என்றால், நாம் கடவுளை கடவுளாகவே ஏற்க தயாராக இருப்பதில்லை..

நபியை யாரும் கடவுளா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனிக்க..

அவர் வாழும் காலத்திலேயே தனக்கு கோவில்கள் கட்டுதல் கூடாது என்று சொல்லி இருக்கிறார்..

இதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிடலாம், அதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிலாம் என்று சொல்லும் அளவுதான் கடவுளா, நிவாஸ் ?

இந்த பேரண்டத்தில் அண்டங்கள் ஒரு துளி, அந்த அண்டங்களில் சூரியகுடும்பங்கள் ஒரு துளி, அதிலொரு சூரியகுடும்பத்தில் பூமி ஒரு துளி, அந்த பூமியில் மனிதன் ஒரு துளி..

ஆனானப்பட்ட கடவுள், எல்லாத்தையும் விட்டுவிட்டு, துளியின் துளியின் துளியின் துளியையா கவனிச்சிட்டு இருக்க போகிறான்.. நம் கவலைக்கு பதில் சொல்வதுதான் அவன் வேலையா ? நிச்சயமாயில்லை..

கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை....

Nivas.T
25-02-2011, 06:35 AM
நன்றி ஐயா , எனக்கொரு சந்தேகம்அவ்வாறெனில் கடவுளை ஏன் கும்பிடவேண்டும் ?

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் நீ என்னிடம் எவ்வளவுதான் அழுதாலும் , தொழுதாலும் நான் மனமிரங்கி , உனக்காக எதையும் செய்யப் போவது இல்லை என்று கூறுபவரே கடவுள் எனில் கருணையே வடிவானவர் கடவுள் என்பது வெற்றுவார்த்தைகள்தானே ?.

ஐயா , இக்கேள்வியை நான் விதண்டாவாதமாக கேட்கவில்லை . ஒருவேளை எனக்கு தெரியாத விளக்கம் , பதில் மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் . மற்றவரின் பதில் எனக்கு மனத் தெளிவை ஏற்படுத்தலாம் .
அவ்வாறு எண்ணியே நான் கேள்வியை கேட்டு இருக்கிறேன்

ஆத்மா நீங்கள் என்னை நிவாஸ் என்றே அழைக்கலாம். ஐயா வேண்டாம்.

மன்னியுங்கள் நான் சிறுது தவறு செய்து விட்டேன். இதோ பதில் -

கடவுளை பொறுத்தவரை பாசம், நேசம், இறக்கம், வெறி, கோபம் எதுவும் இல்லை இவையனைத்தும் மனிதனுக்குத்தான்.

கீத உபதேசம் பார்த்தால்
"கொல்பவனும் கண்ணன் கொல்லப்படுபனும் கண்ணனே" இதில் யார் மீது இறக்கம், யார் மீது கோவம் கொள்வது, அனைத்தும் கண்ணன்.

விதியின் அம்சம் அதுதான் அது பக்தன், நாத்திகன் என்று பேதமில்லை. அவரவர்க்கு அந்த கால கட்டத்தில் எதுவோ? அதுவே என்பது சாராம்சம்.

ஒரு குழைந்தை பிறந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் அப்போது யாரும் சொல்வதில் நான் அளவுக்கு அதிகமா மகிழ்ச்சியாக இறுக்கிறேன் கடவுள் கொடியவன் விதி கொடுமை என்று.

இதுதான் மனிதனின் எண்ணம். தவறு நமது எண்ணத்தில் மட்டும், கடவுளில் இல்லை. கடவுள் தன்மை என்பது எதனையும் சாராதது.

எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக வே நடக்கும்.
எதை நீ இழந்து விட்டாய் அதற்காக அழுகிறாய்.
எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
எதை நீ படைத்தாய் அது வீனாவதற்க்கு.
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது.

Nivas.T
25-02-2011, 06:59 AM
இதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிடலாம், அதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிலாம் என்று சொல்லும் அளவுதான் கடவுளா, நிவாஸ் ?


இயலாது என்பதைத்தான் அப்படி சொல்கிறேன் ஆதன் நீங்கள் நேரடியாக பொருள் கொண்டீர்கள்இந்த பேரண்டத்தில் அண்டங்கள் ஒரு துளி, அந்த அண்டங்களில் சூரியகுடும்பங்கள் ஒரு துளி, அதிலொரு சூரியகுடும்பத்தில் பூமி ஒரு துளி, அந்த பூமியில் மனிதன் ஒரு துளி..

ஆனானப்பட்ட கடவுள், எல்லாத்தையும் விட்டுவிட்டு, துளியின் துளியின் துளியின் துளியையா கவனிச்சிட்டு இருக்க போகிறான்.. நம் கவலைக்கு பதில் சொல்வதுதான் அவன் வேலையா ? நிச்சயமாயில்லை..

கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை....

இதில் ஒரு சிறு கருத்து வேறுபாடு உள்ளது ஆதன்

கடவுள் இவற்றிலிருந்து விலகி நிற்கவில்லை

இவையனைத்துமாகவே இருக்கிறார் என்பது மறுக்க இயலாதது.

வானாகி மண்ணாகி ஒளியாகி வெளியாகி ஊனாகி உயிராகி உமையுமாய் யம்மையுமாய் எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்

ஆதி
25-02-2011, 07:05 AM
///இந்த இயற்கையின் வடிவமைப்பு செயல்பாடுகள், விண்வெளியின் நீளம் என்ன? அதன் எல்லை அடைந்துவிட்டால் அதற்கடுத்து என்ன? இது போன்ற விடையில்லாக் கேள்விகளுக்கு பதில் கொண்டால் கடவுளுக்கான பதிலும் //ஒருவேளை கிடைக்கலாம்// அதுவும் உறுதியில்லை.
//

ஒரு வேளை எனும் வார்த்தைதான் என்னை நேரடியாக பொருள்கொள்ள வைத்தது...

எங்கும் வியாப்பித்திருக்கும் இறைவனை ஏன் தினம் தினம் கொள்கிறோம்..

ஆடாய், மாடாய், கோழியா,ஞமலியாய், செடியாய், நீராய், நெருப்பாய், காற்றாய், மண்ணாய், கல்லாய் நிவாஸ் ?

ஏன்னா இது வெறும் பேச்சளவே! நாம் இதை மதிப்பது கூட இல்லை....

Nivas.T
25-02-2011, 07:08 AM
எங்கும் வியாப்பித்திருக்கும் இறைவனை ஏன் தினம் தினம் கொள்கிறோம்..

ஆடாய், மாடாய், கோழியா,ஞமலியாய், செடியாய், நீராய், நெருப்பாய், காற்றாய், மண்ணாய், கல்லாய் நிவாஸ் ?

ஏன்னா இது வெறும் பேச்சளவே! நாம் இதை மதிப்பது கூட இல்லை....

ஏனெனில் கொல்வதும் இறைவனாய் இருப்பதனால்..
எதுவே தான் ஆத்மாவுக்கும் பதிலாய் கூறினேன் மேலே உள்ள பதிப்பில்.

ஆதி
25-02-2011, 07:19 AM
வாசித்தேன், இறைவனாய் இருபதால் கொல்லலாமோ ?

இல்லையென்றாலும் கொல்லலாம் இல்லையா ?

இல்லைக்கும் இருப்புக்கும் பிறகு வேறென்ன வேறுபாடு ?

//எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக வே நடக்கும்.
எதை நீ இழந்து விட்டாய் அதற்காக அழுகிறாய்.
எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
எதை நீ படைத்தாய் அது வீனாவதற்க்கு.
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது.
//

இந்த வரிகள் கீதையில் எங்குமே கிடையாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. சிலபல பிழைகளை மறைக்க பலசிலரால் கூறப்பட்ட ஒன்று அவ்வளவே..

கொல்லப்படுவது கிரிஷ்ணனாலும், கிறிஸ்துவானாலும் கொல்தல் பாவம். கொல்லப்படுவது இறைவன் என்றால், ஒரு அட்டூழியம் நடக்கும் போது அமைதி காக்கலாமே ஏன் குமுற வேண்டும் ??

துன்பம் செய்வது இறைவன் துன்பப்படுவதும் இறைவன் என்றால், அரக்கம் தேவம் என்பது ஏன் ? அரக்கனும் நானே தேவனும் நானே மனிதனும் நானே, நீ எங்கே துன்பப்பட்டாய் நான் தானே துன்பபடுகிறேன் என்று சொல்லி இருக்கலாமே, வதங்கள் தேவை இருந்திருக்காதே, அவதாரங்கள் தேவைப்பட்டிருக்காதே ? பிறந்தது இறைவன் இறந்ததும் இறைவன் என்றால் கர்மப்பலன் என்பதே இல்லை தானே ?

கர்மபலனே இல்லை என்றால் பாவமென்ன புன்னியமென்ன எல்லாம் ஒன்றே ? கர்மாவே கடவுள் இல்லையா ?

Nivas.T
25-02-2011, 07:54 AM
//எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக வே நடக்கும்.
எதை நீ இழந்து விட்டாய் அதற்காக அழுகிறாய்.
எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
எதை நீ படைத்தாய் அது வீனாவதற்க்கு.
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது.
//

இந்த வரிகள் கீதையில் எங்குமே கிடையாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. சிலபல பிழைகளை மறைக்க பலசிலரால் கூறப்பட்ட ஒன்று அவ்வளவே..


இல்லை ஆதன் இவையனைத்தும் கீதசாரமே. வெறும் வரிகளாக இல்லை ஒவ்வொரு பகுதியும் ஓவ்வொரு விளக்கமும் பொருள் தருவது இந்த வரிகளை தான்.

இவை யாரோ சொல்லி வைத்தவை என்றால், இவ்வுலகில் உள்ள அனைத்து இதிகாசங்களும், மதக்கோட்பாடுகளும் இவ்வாறுதான். நான் இந்துவம் தான் கடவுள் என்பதை கூறவில்லை. இதில் கூறப்பட்டுள்ளது மக்களுக்கான விளக்கங்கள் தெளிவாகப் பொருந்தும்.
கொல்லப்படுவது கிரிஷ்ணனாலும், கிறிஸ்துவானாலும் கொல்தல் பாவம். கொல்லப்படுவது இறைவன் என்றால், ஒரு அட்டூழியம் நடக்கும் போது அமைதி காக்கலாமே ஏன் குமுற வேண்டும் ??உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மீது கல் எறியுங்கள்

நான் கடவுளின் பிள்ளை, நீயும் தான்

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு

மன்னித்து விடுங்கள் அவன் அறியாமல் செய்துவிட்டான்

மன்னிக்கக் கற்றுக்கொள் கவுளாவாய்

அனைவரும் கடவுளின் பிள்ளைகள்

(இதில் யார் கொலைகாரன்? யார் நல்லவன்? யார் தொழு நோயாளி? யார் விபச்சாரி?

ஆனால் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்?

இங்கு பிள்ளைகள் எனக்கூறப்படுவது அன்கு கடுவுளாகவே கூறப்படுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்.

கர்மாவும் அந்தக் கடவுளுக்கே,
விதியின் வலிமையையும் கடவுளுக்கே
அதன் பலனும் கடவுளுக்கே
கர்மாவின் வினையும் கடவுளுக்கே

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கடவுளுக்கே

aathma
25-02-2011, 08:36 AM
மிகப் பொறுமையுடன் பதில்களை அளித்துக்கொண்டு இருக்கும் அன்பு நண்பர் திரு . நிவாஸ் அவர்களுக்கும் ,

நான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டு ,
என் பணியினை குறைத்து , எனக்கு உதவிய
திரு .ஆதன் அவர்களுக்கும்

எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

திரு . நிவாஸ் அவர்களே தங்களிடமிருந்து நான் இன்னும் நிறைய விளக்கங்களை எதிர்பார்கிறேன் . உங்கள் பதில்களின் முடிவில் உங்கள் தரப்பு நியாயமே சரியானது என என் மனதிற்கு தோன்றினால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் .

எனவே நான் மீண்டும் சம்பவங்களின் அணிவகுப்பை தொடரப் போகிறேன் . இதில் தங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்

ஆதி
25-02-2011, 08:49 AM
நிவாஸ் :)

பார்த்தீங்களா ? விவாதம் வேறும் மார்க்கம் போகுது..

நான் எப்போ மதத்தை பற்றி பேசினேன்..

திருக்குறள் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கீதை, வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மற்றுமே சொந்தமானது என்று சொல்வது..

குர்-ஆன், விவிலியம், தனாக், தாவ் தீ சிங், தி செண்ட் அவஸ்தா, தம்மனபட, ஸ்ரீ குரு கரந் சாஹிப், அபுதுல் பாஹா போன்ற நூல்களும் இது போலவே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்த மானவை அன்று, அப்படி சொந்தமாய் நினைத்தால், ஆன்மிக, எங்கும் வியாபித்து இருந்தல் என்று சொல்வது எல்லாம் பொய் இல்லையா ?

நீங்க கீதை பற்றி பேசினாலும், குர்-ஆனை பற்றி பேசினாலும், விவிலியம் பற்றி பேசினாலும் குறுகிய வட்டத்துக்கு வெளியில் வந்து பேசுங்கள் பேசுவோம்..

மறைகளை பற்றி பேசும் போது மதப்பெயர் பற்றி பேசுவாதானால் விவாதத்தை தொடர்தல் தேவையற்றது..

குறிப்பு:-

மேலே குறிப்பிட்டிருக்கும் நூல்களில் பலவற்றை கல்லூரி காலத்திலேயே ஆர்ந்து படித்து எல்லா மறைகளையும், அவற்றை ஒப்புமை படித்து 38 பக்க அளவில் ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன், இதை இங்கு குறிப்பிடுவது தற்புகழ்ச்சி பாடவல்ல, தெரியாமல் எதுவும் பேசவில்லை என்பதை சொல்லவே, எந்த நூல் பற்றியும் பேசுவோம் மதத்தை தவிர்த்து பேசுவோம்

aathma
25-02-2011, 08:49 AM
சம்பவம் 3

பள்ளியில் தீ பிடித்தது . மழலை மொழி பேசும் பிஞ்சு உயிர்கள் அந்த கொடுந்தீக்கு இரையாகின .

சாலையில் செல்லும் குழந்தை கால் தடுக்கி கீழே விழுந்து அம்மா என்று கதறி அழுகிறது . அந்த அம்மா என்ற வார்த்தையை கேட்ட மாத்திரத்தில் , அந்த குழந்தை அழுவதைக் கண்டு மனம் தாளாமல் , பதறி கொண்டு ஓடோடி போய் அந்த குழந்தையை தூக்கி அதற்கு சமாதானம் சொல்லி , அதன் அழுகையை துடைத்து , அமைதி படுத்துவோம் நாம் , இல்லையா ?

ஒரு மனிதனுக்கே குழந்தை மீது இவ்வளவு இரக்கம் இருக்கும் போது , கடவுளுக்கு குழந்தைகள் மீது எவ்வளவு கருணை இருக்க வேண்டும் ?

கடவுளுக்கு கருணை இல்லையா ?

அல்லது

கடவுளே இல்லையா ?

அந்த பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி , வெந்து துடிதுடித்து இறந்தார்களே , அதற்கு காரணம் என்ன ? அவர்களின் விதியா ?

விதிதான் எனில், ஒரு உயிர் துடித்துக் கொண்டு இருக்கும்போது ஓடிவந்து காப்பாற்றாத கடவுள் எதற்கு ?

aathma
25-02-2011, 09:04 AM
சம்பவம் 4

மரணபடுக்கையில் நோயுடன் போராடும் தாய் ,

மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் தந்தை ,

இவர்களை கவனித்துக் கொள்ள மனம் இல்லாமல் தனிகுடித்தனத்தில் மகனும் , மருமகளும்

நோய் வென்று தாய் இறந்தாள் .

கவனிக்க ஆள் இல்லாமல் பட்டினியால் இறந்தார் தந்தை .

தாய் , தந்தை இறந்த பின் , மிக்க மகிழ்ச்சியுடன் ,
அவர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து சம்பாதித்த வீட்டை
அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார் மகன் .

கடைசீவரை சுகபோகமாக வாழ்ந்து மறைந்தனர் மகனும் , மருமகளும் .

தாய் தந்தையை கவனித்துக் கொள்ளாமல்
அவர்களை சாகவிட்ட மகனுக்கு எந்த தண்டனையும்
அவரது வாழ்நாளில் இறைவன் அவருக்கு அளிக்கவே இல்லை ?

இது எந்தவிதத்தில் நியாயம் ?

இதுதான் இறைவனின் நீதியா ?

அல்லது

இறைவன் என்ற ஒருவனே இல்லையா ?

இல்லாத இறைவனிடம் நான் நியாத்தை எதிர்பார்கிறேனா ?

அந்த தாயும் , தந்தையும் இறந்தது வேண்டுமானால்
யதார்த்த உண்மையாக இருக்கலாம் .

பிறந்த மனிதன் என்றாவது ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் .
நான் அதை மறுக்கவில்லை .

ஆனால் மகன் அந்த தாயையும் தந்தையையும்
மரண அவஸ்தையில் இருந்து காப்பாற்றி
அவர்களுக்கு அமைதியை தந்து இருக்கலாமே ?

அவர்கள் படு அவஸ்தைப்பட்டு இறப்பதற்கு பதில் ,
அமைதியான மரணத்தை தழுவி இருப்பார்கள்
மகன் அவர்களை கவனித்து இருந்தால் .

ஆதி
25-02-2011, 09:09 AM
//கர்மாவும் அந்தக் கடவுளுக்கே,
விதியின் வலிமையையும் கடவுளுக்கே
அதன் பலனும் கடவுளுக்கே
கர்மாவின் வினையும் கடவுளுக்கே
//

எல்லாம் கடவுள் என்றால் கடவுளை அடையும் பிரயத்தனங்கள் எதற்காக ?

மறைகள் எதற்காக ?

வழிகாட்ட வந்த ஞானிகள் எதற்காக ?

ஒவ்வொரு பதிவிலும் என் சில கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்குறீர்கள் இல்லையா ?

இப்போதைக்கு கடவுள் என்பது "கேள்வி"

aathma
25-02-2011, 09:30 AM
சம்பவம் 5

பாடுபட்டு கண்ணும் கருத்துமாக மகளை வளர்த்தனர் பெற்றோர் .

அவளை பட்டப்படிப்பெல்லாம் படிக்க வைத்தனர் .

நல்ல இடத்தில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவனை
அவளுக்கு திருமணம் செய்துவைத்தனர்
மிக அதிக அளவு வரதட்சினை கொடுத்து .

வந்த மருமகனுக்கு மாமனாரின் செல்வத்தை
கொள்ளை அடிக்க ஆசை .

மகளோ , தன் பெற்றோர் என்று கூட நினைக்காமல் அவர்களை பணம் காய்க்கும் மரமாகவே நினைத்து நன்றாக அவர்களை ஏமாற்றி அவர்களது சொத்துகளையும் பறித்துக் கொண்டு அவர்களது உழைப்பையும் உறிஞ்சினாள் , பாசம் என்ற போர்வையில் தன் சுயரூபத்தை ஒளித்துக்கொண்டு .

மகள் பாசத்தினால் அனைத்தையும் இழந்த அந்த பெற்றோரை ,
ஊரைக் கூட்டி அவமரியாதை செய்தாள் அந்த மகள் ,
அவளின் தவறை எடுத்து சொன்ன ஒரே காரணத்திற்க்காக

நல்ல வசதியான வாழ்கையில் வாழ்வாங்கு வாழ்கிறாள் மகள் .
பாசத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோரோ வாடுகின்றனர் .

பெற்றவரையே வஞ்சித்துவிட வேண்டும், தான் நன்றாக வாழவேண்டும் எனில் . ஆம் , இதுதான் அந்த மகள் உலகுக்கு உணர்த்தும் நீதி . அவள் செய்த பச்சை துரோகத்திற்கு இறைவன் அவளுக்கு அளித்த பரிசு , சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தான வாழ்க்கை

இதுதான் இறைவனின் தீர்ப்பா ?

அல்லது

இறைவனே இல்லையா ?

அல்லது

இறைவன் என்ற ஒருவன் இருந்தும் ,
அநியாயவாதிகளைக் கண்டும் காணாமல்
கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானா ?

aathma
25-02-2011, 09:45 AM
சம்பவம் 6

இன்னொருத்தியின் கணவனை அபகரித்துக் கொண்டாள் ஒருத்தி .

கணவனை உயிருடன் பறிகொடுத்த மனைவியோ பரிதவித்தாள் , துடிதுடித்தாள் , கதறினாள் , அப்பெண்ணுக்கு சாபமிட்டாள்

பின் ஒருவழியாக தன் கணவனை அந்த பேயிடமிருந்து மீட்டுக் கொண்டு , கணவனுடன் ஊரைவிட்டே ஓடிபோய்விட்டாள் , எங்கே அந்த ஊரிலேயே இருந்தால் அந்த பேய் மறுபடியும் தன் கணவனை பிடித்துக் கொண்டு விடுமோ என்ற பயத்தினால் .

எதுவுமே நடக்காதது போல் , அந்த பேய் sorry அந்த பெண் இன்னொருவனை ( ஏமாந்தவன் !!) திருமணம் செய்துகொண்டாள்.

மிக மகிழ்ச்சியுடன் நல்ல அந்தஸ்தான வாழ்க்கை வாழ்ந்து மறைந்து போனாள் .

கணவனை இவளிடம் பறிகொடுத்த அந்த மனைவி இவளுக்கு இட்ட சாபம் ஏன் பலிக்கவில்லை ? அந்த மனைவி எப்படியெல்லாம் கதறி துடித்து கண்ணீர் விட்டு இருப்பாள் தன் வாழ்கையை இன்னொருத்தி பறித்துக் கொண்டாளே என்று நினைத்து .
அந்த கண்ணீருக்கு என்ன பதில் ?

இவள் செய்த துரோகத்திற்கு கடவுள் ஏன் தண்டனை அளிக்கவில்லை ?

அல்லது தண்டனை அளிக்க கடவுளே இல்லையா ?

ஆதி
25-02-2011, 09:51 AM
//சம்பவம் 6//

இதில் மட்டும் ஒரு கேள்வி, அந்த கணவன் மாசற்ற மாணிக்கமாகவே இருந்தாரா ?

//இவள் செய்த துரோகத்திற்கு கடவுள் ஏன் தண்டனை அளிக்கவில்லை ?//

அவளுக்கு துரோகம் செய்தது யார் கணவனா ? இவளா ?

aathma
25-02-2011, 09:59 AM
இப்படி பல சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .

நான் மேற்கூறிய சம்பவங்களில் உள்ள ,
வஞ்சிக்கப்பட்ட அனைவருமே ஆன்மீகவாதிகள்தான் .

கடவுளிடத்தில் அளவிலா பக்தியை உண்மையாக ,
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வைத்தவர்கள்தான் .

ஆனாலும் அவர்கள் அடைந்த பயன் என்ன ?

ஆக மொத்தத்தில் ,
கடவுள் உண்மையா ? அல்லது கட்டுகதையா ?
என்ற கேள்விக்கு எனது பதில்

கடவுள் என்ற ஒருவன் இல்லை .

ஒருவேளை கடவுள் என்பவன் இருந்தாலும் ,
அவன் விதியின் பெயரால் கையை கட்டிக்கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பான் .
மற்றபடி அவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை

எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை .

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் , மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள், வாழ்கையில் வருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு .

கடவுள் இருக்கிறான் என்று கூறுபவர்கள் , அவன் தனக்கு எந்த வகையிலாவது உதவி செய்து தன்னை காப்பாற்றுவான் என்று அவனிடத்தில் நம்பிக்கை வைத்து , ஏமாந்து நிற்கிறார்கள் , தனது நம்பிக்கை தன் கண்முன்னே தவிடுபொடியாவதை கண்டு
கண் கலங்கி

aathma
25-02-2011, 10:16 AM
By Aathan
அவளுக்கு துரோகம் செய்தது யார் கணவனா ? இவளா ?

இருவருமேதான் .

ஆனாலும் நான் பெண்ணைமட்டும் குறைகூற காரணம் இருக்கிறது
நண்பர் ஆதன் அவர்களே .

ஒரு ஆண் பெண்ணிற்கு துரோகம் செய்கிறான் ,
அது மன்னிக்கமுடியாத தவறுதான் .
பெண்ணின் மனதை ஆண் புரிந்துகொள்வதில்லை .
இவ்வளவு ஏன் ? தன் மனதை அடக்கவே அவனுக்கு திராணி இல்லை .
எனவே எடுப்பார் கைபிள்ளையாக அவன் இருக்கிறான் . மலருக்கு மலர் தாவவே அவனுக்கு தெரியும் மற்றபடி தன் மனைவியின் அன்பையும் , அவளது பரிதவிப்பையும் புரிந்துகொள்ளதெரியாது .

ஆனால் ஒரு பெண் , மற்றொரு பெண்ணின் மனதை நன்கு அறிவாள் . கணவனை தான் பறித்துக் கொண்டால் , அந்த மனைவியானவள் எவ்வாறெல்லாம் துடிப்பாள் , கதறுவாள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் . அப்படி தெரிந்து இருந்தும் துரோகம் செய்கிறாள் என்றால் அவள்தானே முதல் குற்றவாளி .

அந்த கணவன் இரண்டாம் குற்றவாளி

ஆதி
25-02-2011, 10:25 AM
இதுக்கு பெயர் தான் ஆணாதிக்கமா ஆத்மா ?

தலைவி கற்புநெறி தவராதவள், பரத்தை கற்புநெறி தவரியவள் என்று சொன்னவர்கள், கற்புநெறி தவறினாலும், தவறாமல் இருந்தாலும் ஆணை தலைவன் என்றுமட்டுமே அழைத்தது..

கண்ணகி, மாதவியின் கற்பை பற்றி பேசும் நாம் கோவலனை கண்டு கொள்வதே இல்லை, கற்பிழந்தவன் கோவலன் தான் என்று சொல்ல தைரியம் இல்லை, காரணம் அவன் ஆம்பள இல்லயா ?

ரங்கராஜன்
25-02-2011, 10:31 AM
எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை .ஆத்மா சார்

இந்த திரியில் உங்களின் பங்களிப்பு பாராட்டதக்கது... கடவுள் இருக்கிறானா இல்லையா, இல்லையா என்பது ஆராய்வது இந்த திரியின் நோக்கம் அல்ல, ...... அது முடியவும் முடியாது..... தலைப்பு அப்படி இருந்தும், இதில் நாம் பேசப் போவது அதை சார்ந்த மற்ற பல விஷயங்களை தான் .......இந்த விஷயத்தை சென்டிமென்டாக பார்க்காமல், கடவுள் என்ற சக்தியை விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப்பூர்வமாக பார்க்க விரும்பப்படுகிறேன்..

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தையை இந்த திரியை நீங்கள் படித்து விட்டு, உங்கள் முதல் பதிலாக போட்டு இருந்தால் நான் ஏற்றுக் கொண்டு இருப்பேன்... காரணம் அது உங்களின் கருத்து......

ஆனால் பல சம்பவங்களையும் கருத்துகளையும் சொல்லி விட்ட இந்த வாக்கியத்தை நீங்கள் எழுதியது உங்களின் கருத்தில் நீங்கள், நிலையாக இல்லை என்பதைப் போல இருக்கிறது... நீங்கள் மேலே சொல்லியுள்ள வார்த்தையை சொல்வதற்கு இத்தனை பின்னூட்டங்கள் இட்டு உங்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டாமே..... இந்த இரண்டே வாக்கியத்தில் முடித்து இருக்கலாமே....

நீங்கள் ஏன் அப்படி செய்யவில்லை, இதை ஏன் முதலிலே போடவில்லை, உங்களை வழிநடத்துவது எது, எதோ ஒரு

சக்தியா
விதியா
மெய்ஞானமா
விஞ்ஞானமா
அல்லது
கடவுளா...

ஏன் ஆத்மா சாரின் கண்க்கு எதிரே மட்டும் இத்தனை சம்பவம் நடைபெறவேண்டும், அல்லது மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை ஏன் ஆத்மா சாருக்கு மட்டும் அந்த பாதிக்கப்பட்டவர்கள் மீது வர வேண்டும்........ அது இன்னும் மறக்காமல் ஏன் உங்கள் மூளையில் இருக்க வேண்டும்.... ஆத்மா சாருக்கும் கடவுள் அம்சம் இருக்கலாம் இல்லையா...

யோசியுங்கள்.... ஆராய்ச்சி தேவை... பங்குக் கொள்வது கொள்ளாததும் உங்கள் சவுகரியம்... சார்...

இருந்தாலும் இந்த திரியில் இதுவரை உங்களின் பங்கு பாராட்டதக்கது...

aathma
25-02-2011, 10:33 AM
திரு .ஆதன் எழுதிய கருத்து

கண்ணகி, மாதவியின் கற்பை பற்றி பேசும் நாம் கோவலனை கண்டு கொள்வதே இல்லை, கற்பிழந்தவன் கோவலன் தான் என்று சொல்ல தைரியம் இல்லை, காரணம் அவன் ஆம்பள இல்லயா ?

ஆம் நண்பரே , இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . ஏனெனில் நாம் வாழ்வது ஆணாதிக்க சமுதாயத்தில்தான் .

ஆண் எத்தனை பெண்களை வைத்துக் கொண்டாலும் அவன் ஆண்தான் .
ஆனால்
பெண் தன் கணவனைத் தவிர்த்து வேறு ஒரு ஆணை ஏறுஎடுத்து பார்த்தாலும் அவள் பெயர் -----

ஆனாலும் நண்பரே , நான் அந்த ஆணிற்கு சாதகமாக பேசவில்லை . அவரையும் குற்றவாளி என்றுதான் கூறியிருக்கிறேன் .

பெண்ணை முதல் குற்றவாளி என்று நான் கூறியிருப்பதற்கு காரணத்தையும் நான் முன்பே சொல்லியிருக்கிறேனே ?

அக்னி
25-02-2011, 10:34 AM
ஆத்மா, அடுக்கிச் செல்லும் சம்பவங்கள் மனதை உலுக்கும் விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...

இதனை விடவும் மோசமான விளைவுகளை சுனாமி, பூகம்பங்கள், வெள்ளம், காட்டுத்தீ, எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன...
இவற்றின் தாக்கத்தால், கடவுளை மறுதலிக்கலாம் என்றால்...

உலகம் தோன்றிய காலம் முதலாக இன்றுவரையான காலம்வரையில்,
இதுபோன்ற கொடும்நிகழ்வுகளை எண்ணிச்சொல்லிடலாம்.
ஆக, இந்நிகழ்வுகளைத் தவிர்த்துப் பார்த்தால்,
எண்ணமுடியாத நல்நிகழ்வுகளினை நிகழ்த்தியவர்
கடவுள் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது...

வெள்ளைச் சுவரில் கறுப்பாய் இருக்கும் புள்ளியைச் சொல்வதுதானே மனித இயல்பு...
நிறம்மாறி இருந்தாலும் நிலை மாறாது...

இதுபோலத்தான்,
கடவுள் இல்லை என்று மறுதலிக்க காரணங்களைத் தேடும் மனங்கள்,
கடவுளினை ஏற்றுக்கொள்ள நிறைந்திருக்கும் காரணங்களைக் கண்டு கொள்வதில்லை...

aathma
25-02-2011, 11:52 AM
நண்பர் திரு .ரங்கராஜன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்


உங்கள் ஆக்கம்

கடவுள் இருக்கிறானா இல்லையா, இல்லையா என்பது ஆராய்வது இந்த திரியின் நோக்கம் அல்ல, ...... அது முடியவும் முடியாது..... தலைப்பு அப்படி இருந்தும், இதில் நாம் பேசப் போவது அதை சார்ந்த மற்ற பல விஷயங்களை தான் .......இந்த விஷயத்தை சென்டிமென்டாக பார்க்காமல், கடவுள் என்ற சக்தியை விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப்பூர்வமாக பார்க்க விரும்பப்படுகிறேன்..

நண்பரே , நீங்கள் கடவுள் சார்ந்த விசயத்தைப் பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்ய விழைந்திருக்கிறீர்கள் .

ஆனால் நான் , கடவுள் என்ற ஒரு கருத்தை , நம்பிக்கையின் ஆதாரத்தை ஆராய்ச்சி செய்ய எண்ணுகிறேன் .

எனது இந்த எண்ணம் முட்டாள்தனமானது என்றுகூட நீங்கள் நினைக்கலாம் . கடவுளை ஆராய்வது என்பது எந்த மனிதனாலும் இயலாத காரியம் என்றும் நீங்கள் நினைக்கலாம் .

ஆனால் நண்பரே , மனிதன் தொடர்ந்து முயற்சி செய்து செய்தேதான் ஒவ்வொன்றாய் இந்த உலகில் கண்டு பிடித்தான் . தன்னால் முடியாது என்று அவன் நினைத்து இருந்தால் இந்த உலகில் நாம் இன்று நிதர்சனமாய் காணும் உண்மைகள் நம் அறிவுக்கு எட்டாமலே போயிருக்கும் .

எனவே எவ்வளவு பெரிய காரியமானாலும் , அதை முயன்றுதான் பார்ப்போமே என்றுதான் நான் நினைத்து என் ஆக்கங்களை படைத்து இருக்கிறேன்


ஒரு பொருளோ அல்லது ஒரு கோட்பாடோ , ஒரு கொள்கையோ , எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிருபிக்கப் பட்டால்தானே பின் தொடர்ந்து அதனை சார்ந்த விசயங்களை ஆராயமுடியும் .

இங்கு கொள்கையே , கோட்பாடே நிரூபணம் ஆகாமல் கேள்விக்குறியுடன் நின்றால் பின் எப்படி , எதன் அடிப்படையில் அந்த கோட்பாடை சார்ந்த விசயங்களை ஆராய்வது ?

கடவுள் இங்குதான் இருக்கிறார் , அவர் இப்படிதான் இருக்கிறார் , இன்ன வேலைதான் அவர் செய்துகொண்டு இருக்கிறார் என்று யார் ஒருவராலும் மற்றொருவருக்கு நிருபித்து காட்ட முடியாது . நான் இதை ஒத்துக் கொள்கிறேன் .

ஆனால் " இந்த ஒரு நிகழ்வின் காரணமாக நான் ஆணித்தரமாக சொல்கிறேன் , இந்த உலகில் கடவுள்தன்மை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது " என்று எவரேனும் ஏதாவது ஒரு நிகழ்வை உதாரணத்திற்கு கூறி கடவுள் மீது அசைக்க முடியாத , மறுக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் நமக்கு என்பதே என் எண்ணம் . இவ்வாறு மறுக்க இயலாத நம்பிக்கை கடவுள் மீது வந்தால்தானே பின் அவர் சார்ந்த விசயங்களை ஆராயமுடியும்


உங்கள் கருத்து

பல சம்பவங்களையும் கருத்துகளையும் சொல்லி விட்ட இந்த வாக்கியத்தை நீங்கள் எழுதியது உங்களின் கருத்தில் நீங்கள், நிலையாக இல்லை என்பதைப் போல இருக்கிறது..

ஆம் நண்பரே , நான் என் கருத்தில் நான் நிலையாக இல்லை .
நான் , கடவுளே இல்லை என்று கூறி எனது இந்த கருத்துதான் மிகச் சரியானது என்று வாதாடித விரும்பவில்லை .
அதே சமயம் என் தரப்பு வாதத்தை வெறுமனே மேம்போக்காக எவ்வித நிரூபணமும் இல்லாமல் கூறாமல் , தக்க ஆதரங்களுடன் , சம்பவங்களின் அடிப்படையில் கூற விரும்பினேன் .
எனவே தான் பல சம்பவங்களை இங்கு கூறியிருக்கிறேன்

கடவுள் நம்பிக்கை பொய்யாய் போய்விட்ட சம்பவங்களை நான் இங்கு எடுத்து கூறியிருக்கிறேன் . இதேபோல் கடவுள் இருக்கிறார் , அவர் தன்னை நம்பியவரை காப்பாற்றத்தான் செய்கிறார் என்பதை எவரேனும் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எடுத்து கூறுவாரேயானால் நான் நிச்சயம் கடவுள் மீது நம்பிக்கை கொள்வேன் .

எனது இந்த முயற்சி , கடவுளைப் பற்றி நான் தெளிவான விசயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே


எனது கருத்து

எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை

நண்பரே , நான் இவ்வாறு கூறியதால்
உங்கள் மனம் வருந்தியிருந்தால் , இந்த சிறியவனை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

தங்களது இந்த திரியே தேவை அற்றது என்ற அர்த்தத்தில் நான் இதை கூறவில்லை . தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம் .

நான் கூறிய அந்த வார்த்தைகள் , கடவுள் மீதான எனது ஆதங்கத்தினால் எழுதப்பட்ட வார்த்தைகளே .

நல்லவர்கள் துன்பத்தினால் வருந்தி வாடுவதும் , பொல்லாதோர் சீருடனும் , சிறப்புடனும் வாழ்வதும் இன்றைய உலகில் மிக யதார்த்தமாக நாம் காண்கின்ற ஒன்றாக இருக்கிறது .

ஏன் இந்த நிலைமை ? ஏன் கடவுள் நல்லவர்களை காத்து இரட்சிக்காமல் , பொல்லோருக்கு துணையாக நிற்கிறான் ?
என்று மனம் வெதும்பி , நல்லவர்களுக்கு உதவாத கடவுள் இருந்தால் என்ன ? இல்லாமல் போனால் என்ன ? என்ற விரக்தியின் காரணமாக எழுதப்பட்ட வார்த்தைகள்

"இந்த பூவுலகில் ஒருவேளை சோற்றுக்கு மனிதனை தவிக்கவிட்டுவிட்டு அவன் பட்டினியால் இறந்தபின்பு அவனுக்கு சொர்கலோகத்தில் இடமளிப்பேன் என்று சொல்லும் கடவுளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் "

இதை கூறியது சுவாமி விவேகனந்தர்


உங்கள் கருத்து

உங்களை வழிநடத்துவது எது, எதோ ஒரு

சக்தியா
விதியா
மெய்ஞானமா
விஞ்ஞானமா
அல்லது
கடவுளா...

நண்பரே , நானும் அதையேதான் கேட்கிறேன் விடை தெரிந்துகொள்ளும் ஆவலுடன் .

உங்களுக்கு விடை தெரிந்தால் கூறுங்கள் , நான் அதை மறுக்க இயலாதபடியான நிகழ்வுகளின் அடிப்படையில் .

உங்களது விளக்கமான பதில் மனத்தெளிவை ஏற்படுத்துமானால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே .

நானே இப்படி ஒரு திரியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து நம் மன்றத்திற்கு வந்தேன் . எனக்கு முன் நீங்கள் இந்த திரியை உருவாக்கி , எனக்கு உதவி இருக்கிறீர்கள் .

தங்களுக்கு நன்றிகள் பல .

Nivas.T
25-02-2011, 12:04 PM
நிவாஸ் :)

பார்த்தீங்களா ? விவாதம் வேறும் மார்க்கம் போகுது..

நான் எப்போ மதத்தை பற்றி பேசினேன்..

திருக்குறள் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கீதை, வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மற்றுமே சொந்தமானது என்று சொல்வது..

குர்-ஆன், விவிலியம், தனாக், தாவ் தீ சிங், தி செண்ட் அவஸ்தா, தம்மனபட, ஸ்ரீ குரு கரந் சாஹிப், அபுதுல் பாஹா போன்ற நூல்களும் இது போலவே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்த மானவை அன்று, அப்படி சொந்தமாய் நினைத்தால், ஆன்மிக, எங்கும் வியாபித்து இருந்தல் என்று சொல்வது எல்லாம் பொய் இல்லையா ?

நீங்க கீதை பற்றி பேசினாலும், குர்-ஆனை பற்றி பேசினாலும், விவிலியம் பற்றி பேசினாலும் குறுகிய வட்டத்துக்கு வெளியில் வந்து பேசுங்கள் பேசுவோம்..

மறைகளை பற்றி பேசும் போது மதப்பெயர் பற்றி பேசுவாதானால் விவாதத்தை தொடர்தல் தேவையற்றது..

குறிப்பு:-

மேலே குறிப்பிட்டிருக்கும் நூல்களில் பலவற்றை கல்லூரி காலத்திலேயே ஆர்ந்து படித்து எல்லா மறைகளையும், அவற்றை ஒப்புமை படித்து 38 பக்க அளவில் ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன், இதை இங்கு குறிப்பிடுவது தற்புகழ்ச்சி பாடவல்ல, தெரியாமல் எதுவும் பேசவில்லை என்பதை சொல்லவே, எந்த நூல் பற்றியும் பேசுவோம் மதத்தை தவிர்த்து பேசுவோம்

ஆதன்,

சிறு தடங்களில் தொடர் முடியவில்லை. சரி விசயத்துக்கு வருவோம் நான் இதை மதத்தின் பெயரால் திசை மற்ற விரும்ப வில்லை. ஆனால் எந்த மதமாக இருந்தாலும் உட்கருத்து என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.

உங்கள் அனைத்து வாதங்களும் நான் நன்கு உணர்கிறேன். இங்கு ஒரு குழப்பம் என்வென்றால் நான் நிற்கும் புள்ளி வேரூ நீங்கள் நிற்கும் புள்ளி வேராக உள்ளதுதான் பிரச்சனை. நான் இப்பொழுதும் சொல்வது அதுதான்.

நீங்கள் கடவுளை தேடுவது என்பது இந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது கூடவும் கூடாது. நீங்கள் சொல்லும் இந்த வலி, கொலை, கணவன், மனைவி, நாகரீகம், காசு, பணம், குழந்தை, பெரியவர், சிறியவர், ஆண், பெண், விலங்கு, உயிருள்ளது, உயிரற்றது, ஆசை, கோபம், பாவம், துக்கம், கடமை, புனிதம், அசிங்கம், ஆடை, அவமானம், இழிதல், பழித்தல், கண்ணியம், நேர்மை, பச்சாதபம் இவரோடு ஒப்பிடக் கூடாது கடவுளை.

விலங்குகளை ஒப்பிட்டு மனிதனை காணலாம். மனிதத் தன்மை ஒப்பிட்டு கடவுளைத் தேடாதிர்கள்.

மூன்று வேலை உணவு கொண்டவனுக்கு மலர் அழகு.

மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவை பார்ப்பவனுக்கு பழையசாதம் அழகு

இதற்க்கு ஏன் கடவுள் வரவேண்டும்.

Nivas.T
25-02-2011, 12:08 PM
ஆத்மா, அடுக்கிச் செல்லும் சம்பவங்கள் மனதை உலுக்கும் விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...

இதனை விடவும் மோசமான விளைவுகளை சுனாமி, பூகம்பங்கள், வெள்ளம், காட்டுத்தீ, எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன...
இவற்றின் தாக்கத்தால், கடவுளை மறுதலிக்கலாம் என்றால்...

உலகம் தோன்றிய காலம் முதலாக இன்றுவரையான காலம்வரையில்,
இதுபோன்ற கொடும்நிகழ்வுகளை எண்ணிச்சொல்லிடலாம்.
ஆக, இந்நிகழ்வுகளைத் தவிர்த்துப் பார்த்தால்,
எண்ணமுடியாத நல்நிகழ்வுகளினை நிகழ்த்தியவர்
கடவுள் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது...

வெள்ளைச் சுவரில் கறுப்பாய் இருக்கும் புள்ளியைச் சொல்வதுதானே மனித இயல்பு...
நிறம்மாறி இருந்தாலும் நிலை மாறாது...

இதுபோலத்தான்,
கடவுள் இல்லை என்று மறுதலிக்க காரணங்களைத் தேடும் மனங்கள்,
கடவுளினை ஏற்றுக்கொள்ள நிறைந்திருக்கும் காரணங்களைக் கண்டு கொள்வதில்லை...

இதை நான் வழிமொழிகிறேன்

aathma
25-02-2011, 12:14 PM
திரு .அக்னி அவர்களின் கருத்து

எண்ணமுடியாத நல்நிகழ்வுகளினை நிகழ்த்தியவர்
கடவுள் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது...
திரு .நிவாஸ் அவர்களின் கருத்து

இதை நான் வழிமொழிகிறேன்

நண்பர்களே , கடவுளால் செய்யப்பட பல நல்ல நிகழ்வுகளை , தக்க நிரூபணங்களுடன் இங்கே எடுத்து சொல்லி என் சந்தேகத்தை தீர்த்து வைத்து மனத்தெளிவை ஏற்படுத்தினால் நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வேன்

Nivas.T
25-02-2011, 12:14 PM
மேலே குறிப்பிட்டிருக்கும் நூல்களில் பலவற்றை கல்லூரி காலத்திலேயே ஆர்ந்து படித்து எல்லா மறைகளையும், அவற்றை ஒப்புமை படித்து 38 பக்க அளவில் ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன், இதை இங்கு குறிப்பிடுவது தற்புகழ்ச்சி பாடவல்ல, தெரியாமல் எதுவும் பேசவில்லை என்பதை சொல்லவே, எந்த நூல் பற்றியும் பேசுவோம் மதத்தை தவிர்த்து பேசுவோம்

தெரியும் ஆதன் :)

நீங்கள் எழுத்தும் கவிதைகளில் இருந்து
நீங்கள் தரும் பின்னூட்டகளில் இருந்து
கருத்தாடுவதிலிருந்தும் நன்கு உணர முடியும்:icon_b:

நான் இவையத்து படிக்கவில்லை:frown:, ஆனால் கொஞ்சம் கொஞ்சம் :) :D:D:D:D

Nivas.T
25-02-2011, 12:23 PM
//கர்மாவும் அந்தக் கடவுளுக்கே,
விதியின் வலிமையையும் கடவுளுக்கே
அதன் பலனும் கடவுளுக்கே
கர்மாவின் வினையும் கடவுளுக்கே
//

எல்லாம் கடவுள் என்றால் கடவுளை அடையும் பிரயத்தனங்கள் எதற்காக ?

மறைகள் எதற்காக ?

வழிகாட்ட வந்த ஞானிகள் எதற்காக ?

ஒவ்வொரு பதிவிலும் என் சில கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்குறீர்கள் இல்லையா ?

இப்போதைக்கு கடவுள் என்பது "கேள்வி"

நீங்கள் நான் சொல்வதை புரிந்துகொள்ள வில்லை ஆதான்

கடவுளை தேடுபவனும் கடவுள்
ஞானிகளும் கடவுளே
கடவுள் இல்லை என்பவனும் கடவுளே

சரி இவை ஏன் என்று மீண்டும் கேட்டால்?

ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்?
இதுவே அதன் ஆரம்பம்? வாழ்க்கை என்றால் என்ன? ...................... கடைசியில் வரும் ஒரு கேள்வி கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இது ஒரு வட்டம் இல்லை பூஜ்யம், வெறுமை, மாயை

பூஜ்யத்துள் ராஜ்யம் செய்வான் இறைவன்

ரங்கராஜன்
25-02-2011, 12:52 PM
பாகம் 2

மன்ற உறவுகள் அனைவரும் கண்ணியமான முறையில் இந்த திரியை கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

நீ எழுதுறதை எதோ நாங்கள் படிப்பதால், நீ கண்ட கருமாந்திர திரியை தொடங்கி என்ன வேண்டுமானாலும் எழுதுவாயா......... என்று நினைக்காமல், என்னுடையமனவோட்டத்தை புரிந்துக் கொண்டு, திரியில் பல உறவுகள் பங்கு பெற்றுவருவது மிகுந்த நிறைவை தருகிறது.. மற்றவர்களின் கருத்தைப் படிப்பதே பெரிய விஷயம் அதை உள்வாங்கிக் கொண்டு, அதை ஆமோதித்தோ அல்லது எதிர்தோ கருத்து போடுவது அதைவிட பெரிய விஷயம் காரணம்... இவை அனைத்திற்கு நேரம்
மிகவும் முக்கியம், ஒருவர் தன்னுடைய நேரத்தை ஒருவருக்காக செலவு செய்வதில் இருந்து தெரிந்து விடும் அந்த சந்திக்க போகும் நபரின் மதிப்பு..... சாதாரண மனிதர்களுக்கே இப்படி என்றால்... நாம் பேசிக் கொண்டு இருப்பது நம்மை காட்டிலும் மிகப்பெரிய சக்தி ஒன்றைப் பற்றி.... அதற்கான பொதுப் பெயர் தான் கடவுள்...... சோ, இதற்கு நேரம் செலவழிக்காமல் வேறு எதுக்கு நேரம் செலவழிப்பது..... நான் திரியின் ஆரம்பத்திலே சொல்லி விட்டேன், கடவுள் இருக்காரா இல்லையா என்பது
மிகப்பெரிய கேள்வி அதற்கு விடை கிடைத்தால், நம்முடைய மனித வாழ்க்கையின் பயனே முடிந்து விடும்... உலகமே முடிவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. அதனால் இந்த திரியில் கண்டிப்பாக அந்த கேள்விக்கு விடை கிடைக்காது.... ஆனால் இந்த திரியை படிப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

சிறிது நேரத்திற்கு முன்பு தம்பி சூரியனிடம் பேசிக் கொண்டு இருந்த போது, திரியைப் பற்றி பேசினான், அதில் என்ன போடுவது என்றே தெரியவில்லை என்று கூறினான்.. ஏன் என்று கேட்டேன்... எனக்கு கடவுளை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா என்றே தெரியவில்லை என்று கூறினான். உண்மையில் அவன் நிலை தான் எனக்கும், எனக்கு மட்டுமில்லை, உலகத்தில் பலருக்கும் அந்த நிலை தான். என் தாத்தா கும்பிட்டார், என் அப்பா கும்பிட்டார், அதனால் நான் கும்பிடுகிறேன், நாளை என்
மகனும் பேரனும் கண்டிப்பாக கும்பிடுவார்கள்.. இதற்கு பெயர் பக்தி இல்லை, நம்பிக்கை இல்லை, ஆன்மீகம் இல்லை..இந்த திரியில் அனுபவம் வாய்ந்தவர்களும் சில ஆன்மீகவாதிகளும், சில அறிஞர்களும் தரும் விளக்கங்கள் மூலமாக சில விஷயங்கள் நமக்கு தெளிவாகலாம். ஆன்மீகவாதியாக இருந்தால், நாம் ஏன் சாமி கும்பிடுகிறோம், எதற்காக அதற்கு பணிவிடை செய்கிறோம், இதிகாசங்கள் என்பது என்ன, எதற்காக சில கோட்பாடுகளை முன்னோர்கள் வகுத்தார்கள் போன்ற விஷயங்கள் தெளிவாகலாம். அல்லது விஞ்ஞானத்தை நம்புபவராக இருந்தால், அந்த உலக மகா சக்தி என்பது என்ன, எதற்காக நாம் அதை மதிக்க வேண்டும், நாளைய உலகில் கடவுள் என்று சொல்லப்படும் அந்த இயற்கை மகா சக்தி நம்மை வந்தடையுமா, அல்லது நாம் அதை அடைய முடியுமா.. இப்படி பட்ட சில தெளிவுகள் பிறக்கலாம்....முக்கியமாக நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள் அழியலாம்.. அதற்காக தான் இந்த திரி தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதில் சில உறவுகள் தங்களின் வாதங்கள் தான் சரி என்ற ரீதியில் பேசுவதையும் கவனித்தேன், உங்களுக்கு ஒரு விஷயத்தை நான் புரியவைக்க விரும்புகிறேன், இந்த திரியின் முடிவில் யாரும் ஜெயிக்கப் போவதுமில்லை, தோற்றுப்போவதுமில்லை...... நான் முதலிலே சொன்னதைப் போல நம்முள் இருக்கும், அனைத்து முகமூடிகளையும்
கழட்டி விட்டு இந்த திரியை நோக்கி நிர்வாணமாக வந்தால், இதில் இருக்கும் உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு செல்லலாம், ஆனால் வரும் போதே கை நிறைய கால் நிறைய மூளை நிறைய வாய் நிறைய நீங்கள் வந்தீர்கள் என்றால், இங்கிருந்து எடுத்துச் செல்ல எதுவும் இருக்காது... சோ இதுவரை கொடுத்த ஒத்துழைப்பைப் போல வரும்
பாகங்களிலும் இதே ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்.... காரணம் மன்றத்திற்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது.. அந்த விதிகளை நாம் மீற முடியாது. ஒருகட்டத்திற்கு மேல் செல்லும் பட்சத்தில் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.. பாவம் அவர்களை நாம் குறை சொல்ல முடியாது, அவர்கள் இருக்கும் பொறுப்பு
அப்படி, சோ அவர்களுக்கு வேலைக் கொடுக்காமல் இந்த திரியை நாம் நகர்த்த விரும்புகிறேன்... சரி நான் இப்போ திரிக்கு வருகிறேன்

இதுவரை வந்த பதில்கள் அனைத்தையும் படித்தேன், பங்காளி நிவாஸூம், மச்சான் ஆதனும்

"தக்காளி விடுறா வெட்டிப்புறேன்" என்ற ரீதியில் சொற்போர் நடத்தியதை கவனித்தேன்... நான் ஏற்கனவே சொன்னேனே, கீதை ஆகட்டும், குரான் ஆகட்டும், பைபில் ஆகட்டும் இவை அனைத்தும் எதோ ஒரு கட்டத்தில் கடவுள் சொன்னார் என்றும், கடவுள் சொல்ல எழுதப்பட்டது என்றும், கடவுளின் தூதுவரால் சொல்லப்பட்டு என்றும் நமக்கு யாரோ ஒருவரின் மூலமாக வாழையடி வாழையாக வந்துக் கொண்டு இருக்கிறது... அதற்காக அவை அனைத்தும் பொய் என்று சொல்ல வரவில்லை... இப்போ ஒரு பேச்சுக்கு நான், ஒருவனிடம்

"டேய் அது யாரு, ரொம்ப நாளா பார்த்துட்டே இருக்கேன் யாருனே தெரியலையே" என்ற வாக்கியத்தை சொல்கிறேன். அவன் மற்றொருவனிடம்

"டேய் தக்ஸு ரொம்ப நாள அந்த ஆள பார்த்துனே இருக்கானாம் டா" மற்றொவன், இன்னொருவனிடம்

"டேய் தக்ஸு, அந்த அள எப்படியாவது அடிச்சிடுவான்னு நினைக்கிறேன், ரொம்ப நாளா அவனை கட்டம் கட்டிட்டு இருக்கான்டா" இவன், அடுத்தவனிடம்

"விஷயம் தெரியுமா, நேத்து ஒருத்தன், ரயில் விபத்தில் அடிப்பட்டு செத்தானே, அவனை தக்ஸு தான் ரொம்ப நாளா கவனிச்சிட்டு இருந்தான், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பெனர்ஜிக்கிட்ட சொல்லி தக்ஸு தான் கரைட்டா அவன் வரும் போது ரயிலை விட்டு இருக்கான்"


இதை நான் விளையாட்டாக சொன்னாலும், இந்த பிரச்சனை தான் நம்முடைய பல வரலாற்றிலும், பல இதிகாசங்களிலும், கிருஷ்ணர், இயேசு, நபி போன்ற இறைவன்களின் விஷயத்திலும் நடந்து இருக்கிறது.
நமக்கு விஷயத்தை கடத்தியவர்கள் அனைவரும் தங்களின் சொந்தக்கருத்தை அதில் சேர்த்து சேர்த்து, எது நடந்தது, எது அவர்களின் சேர்ப்பு என்று தெரியாமலே போய் விட்டது. எதுவாக இருந்தாலும் என்ன இவை அனைத்தும் உண்மையாக தான் இருக்கும் என்று நாமும் அவற்றை பின்பற்றி வருகிறோம். காரணம் இந்த மதங்களால் பெரும்பாலும் ஆரம்பத்தில் நன்மை தான், நடந்து இருக்கிறது. அதாவது எல்லா மதத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது... இதனால் குளிக்கிறோம், சுத்தமான உடைகளை அணிகிறோம், சுத்தமான உணவை உட்கொள்கிறோம், இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். அனைத்து மதத்திலும் பிறருக்கு உதவ சொல்கிறது, அதனால் உன்னால் எனக்கு லாபம் என்னால் உனக்கு லாபம் என்ற முயூச்சுவல் உறவு முறையின் காரணமாக செல்கிறோம்.


ஆனால் ஒருகட்டத்தில் சிலரால் சேர்க்கப்பட்ட சகமனிதத்திற்கு எதிரான விஷயங்கள் அனைத்தும் இன்று மதங்களை தனிதனியாக துண்டாக நிற்கவைத்துக் கொண்டு இருக்கிறது. இன்று அந்த இறை நம்பிக்கை வெறியாக மாறி, அனைத்து மதங்களும், ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், குண்டு வைத்து சிதற வைத்தும் சாவடித்துக் கொண்டு இருக்கிறோம். ஏன் நிகழ்காலத்திலே பாபர் மசூதி கேஸை எடுத்துக் கொண்டால், அந்த கேஸ் ஆரம்பித்தாலே மத்திய அரசில் இருந்து அனைவரும் பயப்படுகிறார்கள், இதுவரை தீர்ப்பே அதில் எழுத முடியவில்லையே, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது, அடுத்து மேல் முறையீடு, அப்புறம் உச்ச நீதிமன்றம், அப்புறம் வன்முறை... உன் கோவிலா, என் கோவிலா என்று பேசி பேசி அந்த இடத்தில் சுடுகாட்டை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். அந்த இடத்தை இடித்து விட்டு பள்ளிகளை கட்டுங்கள் என்றும் நடுநிலைவாதிகள் கூறுகிறார்கள். அப்போ கூட அங்கு ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலா அல்லது, அல்லா மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல் கட்டுவதா என்ற பிரச்சனை செய்வார்கள்.... பிரச்சனை செய்பவர்கள் செய்துக் கொண்டே தான் இருப்பார்கள்...

அதனால் பங்காளியும் மச்சானும் மற்ற மேற்கொள்களைக் காட்டி பேசுவதை விட உங்கள் மனதில் இருப்பதை பேசுங்கள் நான் ஏற்கனவே சொன்னது போல இதில் யாரும் ஜெயிக்க போவதுமில்லை, தோற்றுப்போவதுமில்லை, இந்த திரியை படிப்பவர்களுக்கு எதாவது ஒருவிதத்தில் லாபம் இருக்க வேண்டுமே தவிற நஷ்டம் இருக்க கூடாது என்ற பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிக் கொள்கிறேன். இது அனைத்து உறவுகளுக்கும் என் வேண்டுகொள், காரணம் இந்த திரியின் தலைப்பு கத்தியின் மீது நடப்பதைப் போல, சோ நம்முடைய வார்த்தைகள் யோசித்து வர வேண்டும்.. அதனால் தான் சொன்னேன்.

நமக்கு தெரிந்த அனைத்து மத தெய்வங்களையும் ஒன்றாக சேர்த்து ஒப்புட்டு பார்த்தால், ஒன்றிடம் இல்லாதது மற்றொன்றிடம் இருக்கும், நம் சமூகம் எந்த மாதிரியோ, அந்த மாதிரி தான் இந்த சமூக கடவுளும் இருக்கும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், மனிதன் உருவாக்கியதற்கு இதை விட பெரிய உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. சில தெய்வங்கள் நேருக்கு எதிராக உருவாக்கப்பட்டு இருக்கிறது, அதாவது கோபமே சொரூபமாக கொண்ட தெய்வம் என்றால், உடனே ஒரு கூட்டம் சாந்தமே உருவான தெய்வம் என்று ஒன்றை கண்டுபிடித்து, கோபத்தை மட்டுமே பார்த்து போர் அடித்துப் போய் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தை தனியாக பிரித்தான். இதைக் கண்ட கோபக்கார தெய்வத்தின் ஆட்கள், சாந்தமாக ஒரு தெய்வத்தை படைத்து, கோபமான தெய்வத்தின் மறு அவதாரம் தான் இது என்று மேலும் ஆட்கள் தங்களின் கூட்டத்தில் இருந்து குறையாமல் பார்த்துக் கொண்டனர். பெண்களை மட்டும் முன்னிலைப் படுத்தி பல தெய்வங்கள் ஒரு மதத்தில் இருப்பதை பார்த்த, ஒருவன் ஆண் மட்டுமே கடவுள் என்ற ரீதியில் ஒரு மதத்தை உருவாக்கினான். அதில் பெண்களுக்கு மற்ற மதத்தில் கிடைக்கும் மரியாதைகளும், சலுகைகளும் கிடையாது. இவை அனைத்தையும் பின் வருபவர்களுக்கு வாய் வழியாக சொல்லிக் கொண்ட இருக்க முடியாது என்பதால், எழுத்து வடிவாக எழுத ஆரம்பித்தான். பின்னர் அதை சுவாரஸ்யமாக எப்படி எழுதுவது
என்று யோசித்து இதிகாசங்களை உருவாக்கினான்.

நேத்து தான் நான் மளிகை சாமான் லிஸ்டு எழுதி கடையில் கொண்டு போய் கொடுத்தேன்.. அதை வாங்கி பார்த்த கடைக்கார நண்பன் சொன்னான்.

"சார் அடுத்த முறை லிஸ்டு கொடுக்கும் போது தமிழில் எழுதிட்டு வாங்க எனக்கு சீன மொழி தெரியாது" என்று சிரித்தான்.

"யோவ் தமிழ்ல தான்ய்யா எழுதி இருக்கேன்"

"அப்ப நீங்க ஒண்ணு பண்ணுங்க, இனிமே லிஸ்டுக்கு மேலே தமிழில் தான் எழுதி இருக்கேன்னு பெருசா இங்கிலிஷ்ல எழுதி குடுங்க" என்றான்.

அப்போ தான் நான் யோசித்தேன், இந்த கணிணி காலத்தில் நாம் கையில் எழுதுவதையே விட்டு விட்டோம், நம்முடைய எழுத்தே இப்போ பக்கத்தில் இருப்பவர்களுக்கு புரிய மாட்டுதே, அப்படி இருக்கும் போது, பல நூறு அல்லது பல ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்னர், எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளிலும், மிருகங்களின் தோல்களிலும், கற்களிலும் எழுதப்பட்டு இருக்கும் விஷயங்கள் எப்படி அதை கண்டுபிடிப்பவர்களுக்கு விளங்கி இருக்கும்......... கொஞ்சம் யோசித்து பாருங்கள்...
அப்போ கண்டுபிடித்தவர்களின் கற்பனையும் அவர்களின் சுயவிருப்பு வெறுப்புகளும் கண்டிப்பாக அதில் கலந்து இருக்கும் இல்லையா..... அப்போ இத்தனை நாள் நாம் படித்து வந்தது எல்லாம் உன்னைப் போல என்னைப் போல ஒரு மனிதன் சொன்னது என்றால், அப்போ நம் நம்பிக்கையின் ஆணிவேறே அறுந்து விட்டதாக ஆகிவிடும் இல்லையா....... சரி கடவுள் இருக்கிறார் என்ற பட்சத்தில் அவர் சொல்லும் விஷயங்கள் தான் நமக்கு சொல்லப்பட்டனவா என்ற கேள்வி வருகிறது.
அல்லது அவர் இதற்கு நேர் எதிரான சில கருத்துகளை சொல்லி இருக்கலாம் இல்லையா...... எல்லா புராணங்களிலும் பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு வில்லன் இருக்கிறான். ஏன் அப்படி,... எல்லா மத இதிகாசங்களிலும் இந்த வில்லன் கண்டிப்பாக வருகிறான், வந்து கடவுளுக்கு தொல்லை கொடுக்கிறான், பின்னர் கடவுள் அவனை போராடி அழிக்கிறார். சோ, நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை நாம் போராடி அழித்து வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும்
என்பதே இந்த இதிகாசங்களை உருவாக்கியவர்களின் நோக்கம்.... மக்கள் அனைவரும் ஒத்துமையாக இருக்க ஒரு மிரட்டும் சக்தி, நம்பிக்கை சக்தி, புதிரான சக்தி மனிதனுக்கு தேவைப் பட்டது அது தான் இப்போ மதங்களாக மாறியது. பின்னர் ஒவ்வொரு மதத்தில் ஏற்பட்ட ஒப்பிடல் காரணமாக, நீ உயர்ந்தவனா, நான் உயர்ந்தவனா என்ற தர்கத்தில் தொடர்ந்து பல கூத்துகள் நடைபெற்றுக் கொண்டே வருகிறது...

சரி இந்த திரி திசை மாறாமல் போக உறவுகள் இதுவரை கொடுத்த ஒத்துழைப்பை பின்வரும் பகுதிகளிலும் தொடர்ந்து தர வேண்டிக் கொள்கிறேன்...

அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கப்போகும் விஷயங்களில்.....

1. எப்படி கடவுள் டோய்னு வந்து தரிசனம் கொடுத்து விட்டு, டான்னு மறைகிறார் என்று யோசித்தால், ஸ்டிபன் ஹாங்கிங்க்ஸ் சொன்ன டைம் தத்துவம் அதற்கு விடையளிக்கிறது...

2. கடவுள் ஏன் அழகாகவே இருக்கிறார், அவர் அசிங்கமா இருக்க கூடாதா... ஏன் அவர் மற்ற கிரங்களில் வாழும் ஏலியன்ஸா இருக்க கூடாதா..

3. நம்மைவிட திறமையானவரும், அறிவு மிக்கவரும், சக்தி வாய்ந்தவரும் தானே கடவுள்... அப்போ என்னை விட திறமை வாய்ந்த விஞ்ஞானிகள், அறிவு மிக்க அறிவாளிகள், சக்தி வாய்ந்த நாட்டின் அதிபர்கள் இவர்கள் எல்லாரும் கடவுளா..

4. காலப் பயணம் மேற்கொண்டால், கடவுளை நாம் தரிசிக்க முடியுமா...

5. இயற்கை என்பது என்ன...

இன்னும் பேசலாம்...

அக்னி
25-02-2011, 01:02 PM
நண்பர்களே , கடவுளால் செய்யப்பட பல நல்ல நிகழ்வுகளை , தக்க நிரூபணங்களுடன் இங்கே எடுத்து சொல்லி என் சந்தேகத்தை தீர்த்து வைத்து மனத்தெளிவை ஏற்படுத்தினால் நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வேன்

நீங்கள் குறிப்பிட்ட, மற்றும் இதுபோன்ற சில விடயங்களை விட, மற்றனைத்துமே நல்விடயங்கள்தானே நண்பரே...

நான் பிறந்தது கடவுளால் என்கின்றேன்...
நான் இறப்பது கடவுளால், அல்லது கடவுளில்லாததால் என்கின்றீர்கள்...

இதுதான் வித்தியாசம்...

*****

ரங்கராஜனின் பாகம் 2ஐ இன்னும் வாசிக்கவில்லை.
வாசித்ததும் தொடர்கின்றேன்...

ஆதி
25-02-2011, 01:04 PM
ஆதன்,

சிறு தடங்களில் தொடர் முடியவில்லை. சரி விசயத்துக்கு வருவோம் நான் இதை மதத்தின் பெயரால் திசை மற்ற விரும்ப வில்லை. ஆனால் எந்த மதமாக இருந்தாலும் உட்கருத்து என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.

உங்கள் அனைத்து வாதங்களும் நான் நன்கு உணர்கிறேன். இங்கு ஒரு குழப்பம் என்வென்றால் நான் நிற்கும் புள்ளி வேரூ நீங்கள் நிற்கும் புள்ளி வேராக உள்ளதுதான் பிரச்சனை. நான் இப்பொழுதும் சொல்வது அதுதான்.

நீங்கள் கடவுளை தேடுவது என்பது இந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது கூடவும் கூடாது. நீங்கள் சொல்லும் இந்த வலி, கொலை, கணவன், மனைவி, நாகரீகம், காசு, பணம், குழந்தை, பெரியவர், சிறியவர், ஆண், பெண், விலங்கு, உயிருள்ளது, உயிரற்றது, ஆசை, கோபம், பாவம், துக்கம், கடமை, புனிதம், அசிங்கம், ஆடை, அவமானம், இழிதல், பழித்தல், கண்ணியம், நேர்மை, பச்சாதபம் இவரோடு ஒப்பிடக் கூடாது கடவுளை.

விலங்குகளை ஒப்பிட்டு மனிதனை காணலாம். மனிதத் தன்மை ஒப்பிட்டு கடவுளைத் தேடாதிர்கள்.

மூன்று வேலை உணவு கொண்டவனுக்கு மலர் அழகு.

மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவை பார்ப்பவனுக்கு பழையசாதம் அழகு

இதற்க்கு ஏன் கடவுள் வரவேண்டும்.


இந்த வாழ்வோடு ஒப்பிட்டு கடவுளை நான் தேடவில்லை, நான் சொல்ல வந்ததே வேறு நிவாஸ் ?

கடவுள் குறித்த ஆன்மிக பகுதியில் என் விவாதங்களை தேடினீர்களானால் புரியும் ?

இவ்வளவுதான் கடவுளா என்று இதே திரியில் உங்களை பார்த்து கேட்டுவிட்டு, வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளோடு நான் எப்படி ஒப்பிடுவேன்..

நான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது ஒன்றே ஒன்று, அது நாம் நினைக்கிற படி மட்டுமே கடவுள் இல்லை..

கந்தபுராணம் உதாரணம் பார்க்கவும்..

இதற்கு முன் உங்களின் கவிதை திரியில், நான் என்பதில் கடவுள் இல்லை என்று நீங்கள் சொன்ன போது இருக்கிறான் என்று வாதிட்டேன், யாம் வேறு நான் வேறு என்று நீங்கள் சொன்ன போது, இல்லை எல்லாம் ஒன்று என்று சொன்னேன்..

காரணம் இருக்கு, கடவுள் இல்லை என்று சொன்னவுடன், என்ன சொல்கிறோம் அது மூடத்தனம், இல்லை என்று சொன்னவனை இருக்கு என்று நம்ப வைக்க முயல்கிறோம், ஏன் முயல்கிறோம் என்று யோசித்து பாருங்களேன், நாம் நம்புவது தப்பாகிவிடோமோ எனும் குற்ற உணர்ச்சி மட்டுமே அதற்கு காரணமாக இருக்கிறது, இல்லை என்று சொல்பவனை மூடன் என்று சொல்லும் அளவுக்கு கடுமையான செல்கிறோமில்லையா ?

எல்லாம் அவனுக்கு என்று சொன்ன நீங்கள், இல்லை என்று சொல்வதை மூடத்தனம் என்று எப்படி வர்ணித்தீர்கள் ?

காரணம் இருக்கு, நாம் யாவரும் நம்மைவிட, நம்மை சார்ந்தவர்களைவிட, மதம், சாதி, கடவுளை அதீதம்மிக நேசிக்கிறோம், அந்த நேசிப்பின் உணர்வே, இந்த விவாதங்கள்..

போதிமரம் என்றால் புத்தன் நினைவுக்கு வருகிறான், புத்தன் என்றால் கண் மூடிய ஒரு சிலை ஞாபகத்துக்கு வருகிறது, யாருக்கும் புத்தன் என்றால் விழிப்புணர்வு என்று நியாபகத்துக்கு வருவதே இல்லை..

கௌத்தம புத்தனின் கதை ஒன்றை உதாரணம் சொன்னீங்க, அதை பற்றி பேசினப்ப, எந்த மாயாஜாலமும் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று சொன்னீங்க..

புத்தனை பற்றி பேசிவிட்டு, மாயாஜாலம் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று யோசிப்பதே தவறான அணுகு முறையில்லையா, ஆசைப்படாதே என்று சொன்னவன், எப்படி மாயாஜாலம் செய்வன், எப்படி போன ஒரு உயிரை கொண்டு வருவான் ?

அந்த தாய் புத்தனை புரிந்து கொள்ளவில்லை, ஒரு வேளை புரிந்து கொண்டிருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டார். நாமும் அவனை புரிந்து கொள்ளவில்லை, அதனால்தான் ஆசைப்படாமல் இருக்க ஆசைப்பட்டார் புத்தன் என்று தத்துவம் பேசுகிறோம் இல்லையா ?

இது போலத்தான் கிரிஷ்ணரில் இருந்து, அனைவரையும் தப்பாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்..

இஸ்லாத்தில் வஹி என்று சொல்வார்கள், வஹி என்றால் செய்தி..

இஸ்லாத் என்றவுடனே நினைவுக்கு வருவது இதுதான், உலகிலேயே தான் வாழும் காலத்தில் ஒரு மதத்தை தோற்றுவித்து, அதை ஒரு நாடு முழுக்க அல்லது சில நாடு முழுக்க பரப்பிய பெருமை நபிக்கு மட்டுமே சேரும், இதுவரை எந்த நெறியும் இப்படி பரவியதில்லை..

வஹி எனும் செய்தியாவது, அல்லாவிடம் இருந்து நபிக்கு வரும், நபி என்றால் தூதன் என்று பொருள். அவர் நபி என்பதே அவருக்கு 40 வயதான பிறகுதான் தெரியும் சரிங்களா ?

அந்த வஹியாவது அந்த குறிப்பிட்ட காலக்கட்டதுக்கு ஏற்றது, உதாரணமா ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், புனித போரான ஜிகாத் நடந்து கொண்டிருந்த காலத்தில், பலரும் உயிரிழந்தார்கள், துணையில்லாமல் பெண்களும் குழந்தைகளும், பெரிதும் துயருற்றார்கள், சிலபலர் பல கொடுமைக்கும் ஆளானார்கள், தவறானவர்களால் பாதுக்காப்பில்லாமல் வதைக்கப்பட்டார்கள், அதை பார்த்த நபி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார், அதனால் இனப்பெருக்கமும் நிகழும் இல்லையா அதனால் சொன்னார், அதையே இன்று கடைபிட்டிப்பது எவ்வளவு சரி சொல்லுங்கள்..

இது போலத்தான் எல்லா நெறிகளும் இருக்கும் இறைசெய்தியிலும் ஒரு கருத்திருக்கும், வஹி என்பது ஒவ்வொரு காலக்கட்டத்தில் இறங்குவது, பெரியார் சொன்ன கடவுள் இல்லை கொள்கை கூட இறைசெய்தி தான் என்னை பொருத்தவரை..

கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் அவன் பெரியாரியத்திலும் இருக்கிறான், கம்யூனிசத்திலும் இருக்கிறான், மாலியத்திலும் இருக்கிறான், சிவ இயத்திலும் இருக்கிறான், கிறிஸ்துவத்திலும் இருக்கிறான், அல்லா இயத்திலும் இருக்க்கிறான், இன்ன பிற கடவுள்களிலும் இருக்கிறான்..

இல்லை என்பது தவரு என்பது உங்கள் வாதம், இல்லை என்பதிலும் கடவுள் இருக்கிறான் என்பது என் வாதம்..

Nivas.T
25-02-2011, 03:13 PM
இந்த வாழ்வோடு ஒப்பிட்டு கடவுளை நான் தேடவில்லை, நான் சொல்ல வந்ததே வேறு நிவாஸ் ?

கடவுள் குறித்த ஆன்மிக பகுதியில் என் விவாதங்களை தேடினீர்களானால் புரியும் ?

இவ்வளவுதான் கடவுளா என்று இதே திரியில் உங்களை பார்த்து கேட்டுவிட்டு, வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளோடு நான் எப்படி ஒப்பிடுவேன்..

நான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது ஒன்றே ஒன்று, அது நாம் நினைக்கிற படி மட்டுமே கடவுள் இல்லை..

கந்தபுராணம் உதாரணம் பார்க்கவும்..

இதற்கு முன் உங்களின் கவிதை திரியில், நான் என்பதில் கடவுள் இல்லை என்று நீங்கள் சொன்ன போது இருக்கிறான் என்று வாதிட்டேன், யாம் வேறு நான் வேறு என்று நீங்கள் சொன்ன போது, இல்லை எல்லாம் ஒன்று என்று சொன்னேன்..

காரணம் இருக்கு, கடவுள் இல்லை என்று சொன்னவுடன், என்ன சொல்கிறோம் அது மூடத்தனம், இல்லை என்று சொன்னவனை இருக்கு என்று நம்ப வைக்க முயல்கிறோம், ஏன் முயல்கிறோம் என்று யோசித்து பாருங்களேன், நாம் நம்புவது தப்பாகிவிடோமோ எனும் குற்ற உணர்ச்சி மட்டுமே அதற்கு காரணமாக இருக்கிறது, இல்லை என்று சொல்பவனை மூடன் என்று சொல்லும் அளவுக்கு கடுமையான செல்கிறோமில்லையா ?

எல்லாம் அவனுக்கு என்று சொன்ன நீங்கள், இல்லை என்று சொல்வதை மூடத்தனம் என்று எப்படி வர்ணித்தீர்கள் ?

காரணம் இருக்கு, நாம் யாவரும் நம்மைவிட, நம்மை சார்ந்தவர்களைவிட, மதம், சாதி, கடவுளை அதீதம்மிக நேசிக்கிறோம், அந்த நேசிப்பின் உணர்வே, இந்த விவாதங்கள்..

போதிமரம் என்றால் புத்தன் நினைவுக்கு வருகிறான், புத்தன் என்றால் கண் மூடிய ஒரு சிலை ஞாபகத்துக்கு வருகிறது, யாருக்கும் புத்தன் என்றால் விழிப்புணர்வு என்று நியாபகத்துக்கு வருவதே இல்லை..

கௌத்தம புத்தனின் கதை ஒன்றை உதாரணம் சொன்னீங்க, அதை பற்றி பேசினப்ப, எந்த மாயாஜாலமும் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று சொன்னீங்க..

புத்தனை பற்றி பேசிவிட்டு, மாயாஜாலம் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று யோசிப்பதே தவறான அணுகு முறையில்லையா, ஆசைப்படாதே என்று சொன்னவன், எப்படி மாயாஜாலம் செய்வன், எப்படி போன ஒரு உயிரை கொண்டு வருவான் ?

அந்த தாய் புத்தனை புரிந்து கொள்ளவில்லை, ஒரு வேளை புரிந்து கொண்டிருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டார். நாமும் அவனை புரிந்து கொள்ளவில்லை, அதனால்தான் ஆசைப்படாமல் இருக்க ஆசைப்பட்டார் புத்தன் என்று தத்துவம் பேசுகிறோம் இல்லையா ?

இது போலத்தான் கிரிஷ்ணரில் இருந்து, அனைவரையும் தப்பாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்..

இஸ்லாத்தில் வஹி என்று சொல்வார்கள், வஹி என்றால் செய்தி..

இஸ்லாத் என்றவுடனே நினைவுக்கு வருவது இதுதான், உலகிலேயே தான் வாழும் காலத்தில் ஒரு மதத்தை தோற்றுவித்து, அதை ஒரு நாடு முழுக்க அல்லது சில நாடு முழுக்க பரப்பிய பெருமை நபிக்கு மட்டுமே சேரும், இதுவரை எந்த நெறியும் இப்படி பரவியதில்லை..

வஹி எனும் செய்தியாவது, அல்லாவிடம் இருந்து நபிக்கு வரும், நபி என்றால் தூதன் என்று பொருள். அவர் நபி என்பதே அவருக்கு 40 வயதான பிறகுதான் தெரியும் சரிங்களா ?

அந்த வஹியாவது அந்த குறிப்பிட்ட காலக்கட்டதுக்கு ஏற்றது, உதாரணமா ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், புனித போரான ஜிகாத் நடந்து கொண்டிருந்த காலத்தில், பலரும் உயிரிழந்தார்கள், துணையில்லாமல் பெண்களும் குழந்தைகளும், பெரிதும் துயருற்றார்கள், சிலபலர் பல கொடுமைக்கும் ஆளானார்கள், தவறானவர்களால் பாதுக்காப்பில்லாமல் வதைக்கப்பட்டார்கள், அதை பார்த்த நபி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார், அதனால் இனப்பெருக்கமும் நிகழும் இல்லையா அதனால் சொன்னார், அதையே இன்று கடைபிட்டிப்பது எவ்வளவு சரி சொல்லுங்கள்..

இது போலத்தான் எல்லா நெறிகளும் இருக்கும் இறைசெய்தியிலும் ஒரு கருத்திருக்கும், வஹி என்பது ஒவ்வொரு காலக்கட்டத்தில் இறங்குவது, பெரியார் சொன்ன கடவுள் இல்லை கொள்கை கூட இறைசெய்தி தான் என்னை பொருத்தவரை..

கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் அவன் பெரியாரியத்திலும் இருக்கிறான், கம்யூனிசத்திலும் இருக்கிறான், மாலியத்திலும் இருக்கிறான், சிவ இயத்திலும் இருக்கிறான், கிறிஸ்துவத்திலும் இருக்கிறான், அல்லா இயத்திலும் இருக்க்கிறான், இன்ன பிற கடவுள்களிலும் இருக்கிறான்..

இல்லை என்பது தவரு என்பது உங்கள் வாதம், இல்லை என்பதிலும் கடவுள் இருக்கிறான் என்பது என் வாதம்..

ஆதன் உண்மை ஆதன் உண்மை

நான் தேட வேண்டிய இன்னொரு கோணமும் புலப்படுகிறது

நான் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நீளும் என்ற என் எதிர்ப்பார்ப்பு பொய்க்கவில்லை

அலச வேண்டிய வேலை தொடரும் என்ற கணிப்பும் மெய்யாகியது

பார்க்கலாம் எவ்வளவுதூரம் என்னால் பயணித்து இலக்கு இருக்கும் திசையாவது அறிய இயலுமா என்று

வாழ்க்கையின் வளைவுகள் எவ்வளவுதான் என்னை வளைக்குமென்று

அமரன்
25-02-2011, 06:21 PM
யப்பா...

கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? என்ற ஓட்டத்துக்கு எத்தனை பக்கங்கள்.. அத்தனையையும் படிக்க நேரம் போதாது..

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. அந்த ஒன்றுக்கு ‘ஆத்மா’ர்த்தமாக என்றோ, ‘அக்னி’ப் பிரவேசம் என்றோ, ‘ஆதி’யன் பிறபு என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளலாம்.

கடவுள் உண்மை.. என்னில் இருக்கும் உணர்வுகள் எவ்வளவுக்கு உண்மையோ அந்தளவுக்குக் கடவுள் உண்மை.

எனக்கு உணர்வுகள் தந்த அனைத்தையும் கடவுள் தந்ததாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.

எனவே கடவுள் உணர்வு... உண்மை. கட்டுக்கதை இல்லை.

இந்த இடத்தில் இயற்கை இடைமறித்து இடைஞ்சல் செய்யும். அந்த இயற்கையை எனக்கு அடையாளம் காட்டிய வகையில் இயற்கையை எனக்குத் தந்ததும் என் உணர்வுகள்தான்..

அடித்துச் சொல்வேன்.. கடவுள் உணர்வு.. உணர்வு உண்மை.

Nivas.T
27-02-2011, 05:29 AM
யப்பா...

கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? என்ற ஓட்டத்துக்கு எத்தனை பக்கங்கள்.. அத்தனையையும் படிக்க நேரம் போதாது..

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. அந்த ஒன்றுக்கு ‘ஆத்மா’ர்த்தமாக என்றோ, ‘அக்னி’ப் பிரவேசம் என்றோ, ‘ஆதி’யன் பிறபு என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளலாம்.

கடவுள் உண்மை.. என்னில் இருக்கும் உணர்வுகள் எவ்வளவுக்கு உண்மையோ அந்தளவுக்குக் கடவுள் உண்மை.

எனக்கு உணர்வுகள் தந்த அனைத்தையும் கடவுள் தந்ததாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.

எனவே கடவுள் உணர்வு... உண்மை. கட்டுக்கதை இல்லை.

இந்த இடத்தில் இயற்கை இடைமறித்து இடைஞ்சல் செய்யும். அந்த இயற்கையை எனக்கு அடையாளம் காட்டிய வகையில் இயற்கையை எனக்குத் தந்ததும் என் உணர்வுகள்தான்..

அடித்துச் சொல்வேன்.. கடவுள் உணர்வு.. உணர்வு உண்மை.

யப்பா...............

அமரன் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல

தல நீங்க சாதாரண ஆள் இல்ல தல,

ஆளுங்க
21-03-2011, 05:34 PM
இங்கு கடவுள் நம்பிக்கையைப் பற்றியும், அழிவுகளைப் பற்றியும் அதிகம் பேசி இருப்பதால் அங்கிருந்தே துவங்குகிறேன்....

பலரும் கேட்கும் கேள்வி..

கடவுள் ஏன் தன் மேல் பக்தி உள்ளவரையும் அழிக்கிறார்?

சரி...

உலகில் பிறந்த அனைவரும் ஏன் இறக்க வேண்டும்?

இதுவரை மனிதன் கண்டறிந்தவற்றில் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உண்டு!!

இந்த பூமியில் தோன்றும் ஒரு உயிர் எப்போது தான் மகத்துவம் அடைந்ததாக கருதும்?
தனக்கென ஒரு மகப்பேறை உருவாக்கினால் தானே!!

ஆம், உயிர்கள் உற்பத்தி ஆவதில்லை (produce)...அவை ஒரே விதையிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாகிறன (reproduce)...
அதனால், தான் இதுவரை மனிதனால் செயற்கை கருவை உருவாக்க முடிந்தாலலும், அந்த கருவைக் கொண்டே இன்னொரு கருவை உருவாக்க முடியவில்லை!!

ஆக, ஒரு உயிர் தன்னில் இருந்து மற்றொரு உயிர் உருவாகினால் தான் மகத்துவம் அடைகிறது....

அப்படி உயிர்கள் உருவாகிக் கொண்டே போனால்....?

அது ஒரு முடிவிலியை (infinite state) நோக்கி செல்லும் என்கிறீர்களா?
இல்லை.. அது சிறிது வருடங்களிலேயே முற்று பெற்று விடும்...

எப்படி? "நிறை அழியாமை" (Conservation of Matter) என்றொரு விதி உண்டு..
அதாவது, இந்த அண்டத்தில் உள்ள மொத்த நிறையின் அளவு மாறாது என்பது தான்!

எனவே, அது தொடர்ந்தாலும், ஒரு கட்டத்தில் , ஒரு செறிவு நிலை (saturation) ஏற்பட்டு
உயிர் பெருக்கம் தேங்கி விடும்!!

அப்போதைய நிலை என்ன?
உயிர் தன் மகத்துவத்தை இழந்து விடும்...
(நிறை இருந்தால் தானே மற்றொரு உயிர் உருவாக!!)

அதுமட்டுமல்ல....
பசி... புசிக்க உணவு இல்லை!!
உயிர்கள் தங்களின் உணவுத்தேவைக்காக மற்ற எந்த உயிரையும் வேட்டையாட தயாராகும்..
தங்களை உருவாக்கிய உயிரையும், தான் உருவாக்கிய உயிரையும்...

ஆனால், மரணம் என்ற ஒன்றே இல்லை எனும் போது எப்படி கொல்வது/ அல்லது எப்படி உண்பது?

உயிர்கள் மொத்தமாக செறிவு நிலையை அடைந்து அதற்கு மேல் வளர்ச்சியின்றி அப்படியே தேங்கி விடும்!!

அதன் பிறகு, உயிருக்கும் உயிரற்ற பொருளுக்கும் என்ன வேறுபாடு?

இந்த நிலையைத் தவிர்க்க தான் கடவுளுக்கு ஒரு யுக்தி தேவைப்பட்டது..
அதன் பெயர் தான் மரணம்...

ஒரு உயிர் மரணிப்பதால் மற்றொரு உயிர் வாழ இந்த பூமியில் இடம் கிடைக்கிறது!!
ஆக,
இந்த பூமியில் ஒரு உயிர் தோன்றுவதற்கு மற்றொரு உயிர் மரிப்பது அவசியமாகிறது!!

எனது விவாதம் சிலருக்கு முட்டாள்தனமாகத் தெரியலாம்..
ஆனால், ஆராய்ந்து பாருங்கள்!!

உங்கள் மூதாதையர் ஒருவர் மீதமின்றி இன்று இருந்தால் உணவுக்கு என்ன செய்வீர்கள்?

அது எப்படி?
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை எவ்வளவு?
இன்று இருப்பது எவ்வளவு?
என்று கணக்குப் போடாதீர்!!

எண்று எடுத்தாலும், பூமியின் (நிலத்தின்) நிறை நாம் விண்ணில் விட்ட செயற்கைக்கோள்களின் அளவு தான் குறைந்துள்ளது!!
மொத்த பூமி (பூமியின் காந்த விசை செயல்படும் தூரம்) என்று எடுத்தால்..சில வொயேஜர்களும், பயனீர்களும் தான் கம்மியாகி உள்ளது..
அண்டம் என்று எடுத்தால் அதுவும் இல்லை!!

அன்று மரமாக இருந்த நிறை இன்று எரிபொருளாக இருக்கிறது!!
அன்றைய டினோசரின் நிறை இன்று கரியாக கிடைக்கிறது..
நேற்று இறந்த கத்திரிக்காயின் நிறை கழிவுகளைத் தவிர்த்து சக்தி திசுவாய் உங்கள் உடலில் இருக்கிறது!


சரி...
அப்படியெனில்,
கடவுள் உயிர் பெருக்கத்தை மட்டும் தடை செய்யலாமே ?

முடியாது... ஏன்?
அப்படி உயிர் பெருக்கத்தைத் தடை செய்தால் உயிருக்கும் உயிரற்ற பொருளுக்கும் என்ன வேற்பாடு?
உயிர் என்பது தன் மகத்துவத்தை எப்படி அடையும்?

எனவே தான், கடவுளிடம் பக்தியுடன் இருப்பவருக்கும் சரி, அவரை எதிர்ப்பவருக்கும் சரி, அவரை நிந்திப்பவர்களுக்கும் சரி.... மரணமும் ஒன்று போலவே கிடைக்கிறது..
கடவுள் தன்னைத் துதிப்பவர்களிடம் கருணை காட்டி அவர்களை மரிக்காமல் காப்பாற்றினால், அவரைப் பாரபட்சமானவர் என்று மற்றவர்கள் தூற்றுவார்கள்...

எனவே, பாரபட்சமின்றி அனைவரும் பார்ப்பதால் தான் அவர் கடவுள்...

உலகில் ஒருவன் மரணிக்கத் தவறினாலும், அவர் கடவுள் என்கிற மதிப்பை இழந்து விடுவார்!!!

ஆளுங்க
21-03-2011, 05:57 PM
சரி...
மரணம் தான் முடிவென்றால், கடவுள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது நிலையில் இறக்கும் படி செய்யலாமே?

அங்கு தான் இன்னொரு சூட்சமம் இருக்கிறது!!

கடவுள் படைத்தவற்றில் மனிதன் தான் மிகுந்த அறிவாளி.. மிகுந்த சுயநலவாதியும் கூட...
மனிதனின் பேராசைகளுள் ஒன்று "சாகாவரம்"

இந்த இந்நிலையில் இன்ன வயதில் மரணம் நிகழும் என்று அறிந்தால் அதைத் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வான்!!
அதைத் தடுக்கவே கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக இறக்க வைக்க வேண்டியதாயிற்று...

மனிதனால் இன்று வரை தன் மரணத்தைக் காலம் தாழ்த்த முடிந்துள்ளதே தவிர தவிர்க்க முடியவில்லை!!!

இதைத் தான் பல புரானக் கதைகளில் அசுரர்களாகவும், அவர்கள் கேட்கும் சாகாவரமாகவும், அதைக் கடவுள் மிகவும் நிட்பமாக எதிர்கொண்டு அவனைக் கொல்வதையுமாக காட்டுகிறார்கள்..

ஆனால், இந்த கருத்தை மனிதனுக்கு எத்தனை முறை எப்படி சொன்னாலும் புரிவது இல்லை!! கருத்தை எடுத்துக் கொள்ளாமல், மதத்தை எடுத்துக் கொள்கிறான்...

மனிதன் என்ன பாடுபட்டாலும், என்ன சேவை செய்தாலும், ...
சரி...
மரணம் மட்டும் நிச்சயம்!!!

இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்!!


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்...
ஒருவருக்கு இயற்கையாக தூக்கத்தில்..
மற்றொருவருக்கு மாரடைப்பால்..
இன்னொருவருக்கு விபத்தால்..
மற்றும் ஒருவரோ ஆட்கொல்லி நோயால்..
வேறொருவருக்கோ சாதாரண புல் தடுக்கலால்!!
சிலருக்கு கொலை; சிலருக்குத் தற்கொலை; வேறு சிலருக்கு தண்டனையாக தூக்கு...
இப்படி பல...

சில சமயம் கடவுளுக்கு ஒவ்வ்வொரு உயிராய் பறிக்க நேரம் இருப்பதில்லை..
அதற்கு அவர் உருவாக்கிய இயற்கை வழிகள் தான் புயல், பூகம்பம், வெள்ளம், இடி-மின்னல், சுனாமி, இன்னும் பல...


என்னடா இப்படி பயமுறுத்துகிறான் என்றூ பார்க்கிறீர்களா?
இது தான் உண்மை..

உண்மை சில சமயம் கசக்கும்.. ஆனால், அதை ஏற்று கொள்ளத் தான் வேண்டும்!!

செல்வா
23-03-2011, 08:51 AM
கடவுள் நம்பிக்கை...
நம்பிக்கை

கடவுளை நம்பும் ஒருவருக்கும் கடவுளை நம்பாத ஒருவருக்கும் கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? என்ற கேள்வி எழுவதே நகைமுரண் இல்லையா?

கடவுள் என்பவன் எல்லாம் படைத்தவன் எல்லாம் தெரிந்தவன் தன்னிகரற்றவன் அவன் திட்டமிட்டபடியே யாவும் நிகழ்கின்றன என்றால்

அவன் விருப்பப்படி நடக்கிறான்?
அதைக் கேள்வி கேட்க நாம் யார்?

நான் கடவுளை நம்புகிறேனா? என்ற நேரடிக்கேள்விக்கு நான் பதில் சொல்லத் தயங்குவது என்னுள்ளிருக்கும் பயத்தாலே....
இந்தப் பயம் பாலோடு ஊட்டப்பட்டது.

ஆதி
23-03-2011, 09:11 AM
நான் கடவுளை நம்புகிறேனா? என்ற நேரடிக்கேள்விக்கு நான் பதில் சொல்லத் தயங்குவது என்னுள்ளிருக்கும் பயத்தாலே....
இந்தப் பயம் பாலோடு ஊட்டப்பட்டது.

சத்தியம்..............

lolluvathiyar
23-03-2011, 02:32 PM
விதாதம் நன்றாகவே போய் கொன்டு இருக்கிறது.
கடவுளை பற்றி அராய்ச்சி செஞ்சா குழப்பம் தான் வரும். மதங்கள் சொல்வது என்ன கடவுள் சக்தி உண்டு அதை நம்புங்கள், ஏற்றுகொள்ளுங்கள் அவன் தரும் நன்மை தீமைகளை ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்கிறது.

நம்புங்கள் என்று சொல்வதின் நோக்கம் என்ன நம்பிக்கை என்றால் முழுக்க நம்ப வேன்டும், ஆராய்சி செய்யால் நம்ப வேன்டும். இது தான் கடவுள் நம்பிக்கை. எப்ப சாகறோம் எப்படி சாகிறோம் என்பது மேட்டர் அல்ல நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்று கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் உயிருடன் இருக்கும் வரை மன அமைதியா நிம்மதியா இருப்பார்கள் இதுதானே சிம்பிள் கான்சப்ட்.

மெட்டீரியலிசம், பந்தம், பாசம், ஆசை இப்படி பட்ட விசயங்களில் தான் மனிதன் இயற்கையை உனர அல்லது ஏற்க மறுக்கிறான் இதனால் நிம்மதி இழக்கிறான். அடுத்தவனையும் நிம்மதி இழக்க செய்கிறான். அதிலிருந்து விடுபட விடுபட தான் இயற்கை சக்தி புரியும் கடவுள் புரியும் என்று மதங்கள் தெளிவா தான் சொல்லி இருக்கு.


அடுத்தது ஒரு விசயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். முழுக்க ஆத்திகன் நாத்திகன் என்று யாருமே இல்லை. இந்த ஆத்திகன் நாத்திகன் மேட்டரெல்லாம் சந்தர்பத்துக்கு சமயத்துக்கு சூல் நிலைக்கு ஏற்ற மாதிரி நாமாக போட்டு கொள்ளும் வேசங்கள் தான். உன்மையான ஆத்திகன் கடவுளை நம்பி போய்கிட்டே இருப்பான் கடவுள் இருக்கு என்று சொல்லுவான் ஆனால் நிருபிச்சு கிட்டு இருக்க மாட்டான் (ஏன் என்றால் அது சையின்ஸ் அல்ல அது நம்பிக்கை). நாத்திகன் நம்பாம தன் வேலையை பாத்துகிட்டு போய் கிட்டு இருப்பான். நம்மள மாதிரி அரைகுறைகளும் சந்தேக பேர்வழிகளும் தான் இருக்கா இல்லையா விவாதம் செஞ்சு தானும் குழப்பி மத்தவங்களையும் குழப்பி விடுவது

கடவுள் இருந்துட்டு போறாரு அவரை எதுக்கு வனங்கனும் என்று கேட்டா அது மனிதனுக்குள்ள ஒரு கட்டுபாட்டை வளர்க்க தேவைபடுகிறது. வழிபாட்டு தளங்கள் எதுக்கு தேவைபடுது அது மனிதனின் ஒற்றுமையை ஏற்படுத்த அவ்வளவுதான்.

இங்கு மன்ற நன்பர்கள் ஒரு விசயத்தை தெரிஞ்சுகனும். வேதம், சாஸ்திரம் பைபிள் குரான் இன்னும் எதுவாக இருக்கட்டும் அனைத்தும் முழுக்க கற்று உனர்ந்தவர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. மன்ற நன்பர்கள் மட்டுமல்ல உலகில் எங்குமே முழுக்க கற்று உனர்ந்தவர்கள் கிடையாது.


மதங்கள், கடவுள், வழிபாட்டு தளங்கள், இதிகாசங்கள் மூலம் தான் இன்று பல பிரச்சனை வருது என்று சொல்வது மிக மிக தவறான. பிரச்சனை மதங்களாலோ கடவுளாலோ அல்ல. பிரச்சனைகவள் வருவது நம்புவர்களா நம்பாதவர்களாலோ அல்ல. இடைசொருகலாலும் கூட பிரச்சனை வருவதில்லை.

பிரச்சனை எங்கிருந்து வருது என்று பார்த்தால் நம்புபவதாக நடிப்பவனும் நம்பாதவனாக நடிப்பவனும் செய்யும் விவாதங்கள் தான் ஆதிகாலத்தில் கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சோலைவனம் பாலைவனம் பனி பிரதேசம் இப்படி பட்ட இடங்களுக்கு ஏத்த வாழ்கைமுரையை அக்காலத்துக்கு ஏத்த மாதிரி மதங்கள் வழிகாட்டி இருக்கிறது. இதை எடுத்து எல்லா இடங்களிலும் தினிப்பது மற்ற மதங்களை அல்லது கடவுளை மனிதர்கள் மோசம் என்று சொல்வதாலும் தான் கசப்பு வளர்கிறது.

அடுத்தது மதங்கள் சொன்னதை முழுக்க புரிஞ்சுக்காட்டியும் கூட பரவாயில்ல அரைகுறையா புரிஞ்சா கூட பரவாயில்ல. தப்பும் தவறுமா புரிஞ்சுகிட்டா தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. இப்படி மாற்றி புரிந்து கொன்டவர்களால் தான் உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு மூலகர்த்தா ஆகிறார்கள்.

ரங்கராஜன் அடிகடி குறிப்பிடுகிறார் மதங்களாலும் கடவுளாலும் பிரச்சனை தீவிரவாதம் கலவரம் குண்டுவெடிப்பு வருகிறது என்று அது முற்றிலும் தவறு. வரலாற்றை சிம்பிளாக பார்த்தா பிரச்சனை போர் ஆக்கிரமிப்பு தினிப்பு எல்லாமே அன்று அரசர்களாலும் இன்று சில நாட்டு அரசுகளாலும் நடத்தபடுகின்றன. ஏதோ ஒரு ஆதயத்துக்காக நடத்துகிறார்கள். இதற்க்கு சில அரசியல் சக்திகள் மதத்தின் பெயரை பயன்படுத்துகிறார்கள். மக்கள் மதங்களை தவறாக படிச்சு புரிஞ்சுகிட்டது இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து விட்டது.

காஷ்மீர் பிரச்சனை இஸ்லாமியர்கள் சம்மந்தபட்ட பிரச்சனை அல்ல இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு நேரரி எல்லை அங்கு இருக்கு கொஞ்சம் பயனம் செஞ்சா ரஷ்ய எல்லையும் நமக்கு அருகில் அதை தடுக்க வேன்டும். பிறகு சீனாவுக்கு பாக்கிஸ்தானுக்கு நேரடி எல்லை கரகோம் பாஸ் வழியாக அமைய வேண்டும். இதுக்காக தானே காஷ்மீர் பிரச்சனை இஸ்லாம் ஜிகாத் என்று பெயரில் ஆரம்பமாகி இன்று நடக்கிறது.

ஆப்கானிஸ்தான் ரஷ்யா அமெரிக்கா பிரச்சனை எல்லாம் எதற்காக தலீபனும்க் முஜாயிதினும் உருவாக்கியது எதற்காக கசாப்பியன் பகுதியிலிருக்கும் என்னைவளங்களை சுலபமாக கராச்சி துரைமுகம் வழியாக கொன்டு வர வழிதடம் வேன்டும். அதற்காக தான் குறுக்கே ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக பிரச்சனை. ரஷ்யாவுக்கு எதிராக போர் ஜிகாத் என்ற பெயரில் நடத்த பட்டது. பிறகு ஆக்கிரிமிக்க அதே தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்த பட்டது.

இதே காரனம் தான் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையும். தனக்கு என ஒரு நாடு ஆட்சி செல்வாக்கு அதிகாரம் என்ற ஜின்னாவுக்கு நோக்கம். பெரிய வலுவான நாடாக இந்தியா இருக்க கூடாது என்ற வல்லரசுகளின் நோக்கம். இது தான் பாக்கிஸ்தான் என்ற நாட்டை பிரிக்க மூல காரனம். அதற்க்கு மதம் மற்றும் பல பொய்கதைகள் பயன்படுத்த பட்டது.

ஈராக் போர், இன்று லிபியா நாளை ஈரான் எல்லாம் பெட்ரோலுக்காக நடத்த படுகிறது.

இப்படி டைப் அடிச்சுகிட்டே போனா நேரம் போவதே தெரியாது. ஆனால் வரலாற்றை அறிவுபூர்வமா பார்த்தா தெரியும் கலவரம் தீவிரவாதம் போர் இவை அனைத்துமே சிலரின் சுயநலத்துகாகவும் அல்லது அதை முறியடிப்பதற்காகவுமே நடத்தபட்டன.

இதற்க்கு மதங்களும் கடவுளும் பொருப்பேற்க்க முடியாது. எல்லாமே மனிதன் செயல்.

மனிதனின் கடவுள் நம்பிக்கை குறைய ஆராய்சி மூளை வளர வளர அமைதிக்கும் புரிதலுக்கு ஏற்படுத்திய மதங்களை நம்பாமல் அதிலிருந்து விலக விலக தப்பாக புரிய புரிய மனிதன் சிந்தித்தன் விளைவு தான் தான் இன்றைய கலவரங்களுக்கு பிரச்சனைகளுக்கும் காரனம்

மன்னிக்கவும் இன்று என் பதிவு அனைத்தும் பிரச்சனைகளுக்கு கடவுள் காரனம் அல்ல என்று சொல்லவே பல்கியாயிருச்சு. கடவுள் உன்மையா கட்டுகதையா என்ற விவாதங்களுக்கு பிறகு நான் கலந்து கொள்கிறேன்.

ரொம்ப பேசீட்டனோ?
(இன்னிக்கு ஓவரா விரல் வலிக்க என்னை டைப் அடிக்க வச்ச இந்த ரங்கராஜா மற்றும் நன்பர்கள் இது கடவுள் செயலா அல்லது உங்க லொள்ளு செயலா?)
இன்னொன்னு நான் கடவுளை பற்றி எழுத தான் ஆரம்பித்தேன். ஆனால் அதை விட்டுவிட்டு கலவரம் வரலாறு என்று எதையோ அடிச்சு தொல்லைச்சேன். இது கடவுள் செயலா அல்லது என் லொள்ளு செயலா?

ஆதவா
23-03-2011, 02:42 PM
இனிமேல் என் வாழ்க்கையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தரப்போவதில்லை.. இது சலித்துச் சொல்வதல்ல.... கடவுளை நன்கு புரிந்து கொண்டதால் சொல்கிறேன்.

இருக்கு ஆனா இல்லை/

இந்த ஒற்றை வார்த்தைதான் பதில்.... பார்த்தா காமெடியாத்தான் இருக்கும். ஆனால் பல அர்த்தங்களை உள்ளடக்கியது!!

தாமரை அண்ணாவின் கடவுள் இருக்கிறாரா இல்லையா திரியை ஒருமுறை அனைவரும் படிக்கலாம்!!

Nivas.T
23-03-2011, 02:59 PM
தாமரை அண்ணாவின் கடவுள் இருக்கிறாரா இல்லையா திரியை ஒருமுறை அனைவரும் படிக்கலாம்!!

சுட்டியை தாருங்கள் ஆதவா

ஆதவா
23-03-2011, 03:14 PM
சுட்டியை தாருங்கள் ஆதவா

அந்த திரியின் பெயர் ஆத்திகம் நாத்திகம் ஒரு தெளிவு!!! :)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9946

சுகந்தப்ரீதன்
31-03-2011, 03:59 PM
உன்மையான ஆத்திகன் கடவுளை நம்பி போய்கிட்டே இருப்பான் கடவுள் இருக்கு என்று சொல்லுவான் ஆனால் நிருபிச்சு கிட்டு இருக்க மாட்டான் (ஏன் என்றால் அது சையின்ஸ் அல்ல அது நம்பிக்கை). நாத்திகன் நம்பாம தன் வேலையை பாத்துகிட்டு போய் கிட்டு இருப்பான். நம்மள மாதிரி அரைகுறைகளும் சந்தேக பேர்வழிகளும் தான் இருக்கா இல்லையா விவாதம் செஞ்சு தானும் குழப்பி மத்தவங்களையும் குழப்பி விடுவது?
வாத்தியாரே... வழக்கம்போல உண்மையை ’டொப்பு’ன்னு போட்டு உடைச்சிட்டு போறீங்களே நியாயமா இது..?:D!

சரி... தற்போதைக்கு கடவுள்பற்றிய என்னோட எண்ணம்..?! பெருசா ஒன்னுமில்லை... கோவப்பட்டா திட்டி தீக்கறதுக்கும்... தேவைப்பட்டா உரிமையோட தோள்ல கைப்போட்டு சுத்தறதுக்கும் எனக்கு கிடைச்ச ஒரு தோழமை கோட்பாடு அவ்வளவுதான்..!!:icon_rollout:

selvaaa
13-04-2011, 05:30 PM
வணக்கம்!

இத் தமிழ் மன்றத்திற்கு நான் புதியவன்.

கடந்த ஒர் மணி நேரத்திற்கும் மேலாய் உங்களது இத்திரியை படித்து இப்பொழுதுதான், அடி முடி காணா என்றில்லாமல் கடைசி பக்கத்தைக் கண்டுள்ளேன்.

இம்மன்றத்தில் நான் இணைந்திருந்தாலும், இப்படி ஒர் பதிவை நான் காண்பேன் என்று நினைக்கவில்லை. படித்ததால் பின்னூட்டமும் இடுகிறேன்.

என் கருத்துக்களையும் பதிவிடலாம் என்றால், இம்மன்றம் பற்றி அறியா ஒர் பச்சிளம் குழைந்தையாக நான் இருப்பதால், உங்களை ஒர் திசைக்கு மாற்றிவிடுகிறேன்.

அதாவது இறைவன் இறைவன் என்று தேடி அழையும் நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றிய விவரத்தை தேடக்கூடாது?

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், ஏசு, அல்லா, புத்தன், என பலர் தோன்றுவதற்கு முன்னரே இறைவன் என்ற ஒன்றை தமிழர்களுக்கு சொல்லிவிட்டுச் சென்றவர்கள் இவர்கள்.


ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.

இந்த வாசகத்தை நீங்களும் ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

ஆகையால் சித்தர்கள் பற்றிய தேடலில் நீங்கள் இறங்கினால், இறைவன் என்பவர் எப்படி உருவாக்கப்பட்டார் என்ற உண்மை தெரியும்.

தமிழர்களாகிய நாம் இந்து-கிறிஸ்து-முஸ்லிம் என்ற வட்டத்தினால் சிதறுண்டு போகாமல், சித்தன் வழி என்னும் அவ்வெல்லோர்க்கும் முதன்மையான செய்திகளை தேடுங்கள். என்னும் நிறைய கேள்வியும் பதிலும் கிடைக்கும்.

selvaaa
13-04-2011, 05:34 PM
அச்சோ! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்

என்ற கதையால்லா ஆகிப்போச்சு!

10 நாளா சும்மா கிடந்த திரியில் எண்ணையை ஊத்திப்பிட்டேனா?

அமரன்
13-04-2011, 05:44 PM
நண்பரே..

முல்லை முற்றத்தில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளுங்களேன்.

நீங்கள் காட்டிய் திசை உங்களுக்குப் பரிச்சயமானது போலத் தென்படுகிறது. மன்றத்தில் சித்தர்களைப் பற்றி பேசப்பட்டிருக்கு என்றாலும் நீங்களும் உங்கள் பங்குக்கு சொல்லுங்களேன்.

selvaaa
13-04-2011, 05:51 PM
நண்பரே..

முல்லை முற்றத்தில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளுங்களேன்.

நீங்கள் காட்டிய் திசை உங்களுக்குப் பரிச்சயமானது போலத் தென்படுகிறது. மன்றத்தில் சித்தர்களைப் பற்றி பேசப்பட்டிருக்கு என்றாலும் நீங்களும் உங்கள் பங்குக்கு சொல்லுங்களேன்.

கண்டிப்பா சொல்லிட்டா போச்சு!

அப்புறம், சித்தர்கள் பற்றி நிறைவான பதில் கொண்டவர்கள் இறைவனை தேட மாட்டார்கள், பார்ப்பார்கள்.

அதற்காக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்துவிட வேண்டாம், நானும் அத்தேடலின் முதல் படிக்கட்டில் இருப்பவன்.

jk12
13-04-2011, 06:16 PM
அருமையான திரி
படிக்க வேண்டிய பல கருத்துக்கள்.

செல்வா உங்களின் பதிவுகளுக்காகவும் காத்திருக்கிறேன்

rajureva
15-04-2011, 02:48 PM
மகான் களாய் வலம் வந்தவர்களும்
தோற்றம் அளிப்பவர்களும்
வரபோகிறவர்களும்
சித்த்ர்களே............. இதில் மதம் என்ற வேறுபாடே கிடையாது.
கடவுள் நிலையை உணரலாமே தவிர பார்க்க முடியாது.
இதை உணர்ந்து கொண்டால் ஆத்திகனேது நாத்திகனேது......

Kavi Arasan
04-07-2016, 11:10 AM
அன்பர்களே! இறைவனை அப்படி இருப்பார் இப்படி இருப்பவர் என்று கூறும் இறை சிந்தனையாளர்களே எப்போதாவது நீங்கள் எவ்வாறு உள்ளீர்கள் உங்கள் ரூபம் தான் என்ன என்று என்றாவது அவரிடத்தில் கேட்டிருப்பீர்களா? அப்படி அவரிடத்தில் கேட்டுப்பாருங்கள் அவர் நிச்சயமாக உங்களிடத்தில் நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என்று சொல்லுவார் இது சத்தியம். அவர் எனக்கு சொன்ன சத்தியத்தை இங்கே சொல்கிறேன். எது இல்லையோ அதுவே மாயை. இந்த பூமி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்பொழுது நாம் எங்கிருந்து வந்தோம் நான், நீ என்பதே இல்லை என்பது தான் உண்மை. ஒன்றே ஒன்று மட்டும் தான் இருக்கிறது அதை மிஞ்சும் சக்தி எங்குமே இல்லை இறைவனும் அவ்வாறுதான் இருக்கிறார். அந்த மாபெரும் சக்தி அன்பு என்று தான்.ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் எந்த நிலையில் எப்படி இருந்தாலும் சரி நான் மிக கொடுமையான பாவங்களை செய்த்திருக்கிறேன் என்று நினைப்பவனுன் இறைவனை அடைய தகுதியானவர்களே. அவர் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் , அவன் மிகப்பெரிய கருணையாளன், அவன் எல்லோரையும் தூய்மையாக்க வல்லவன், அவன் எல்லா உயிர்களிடத்திலும் மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறான், அவரை எங்கும் தேடவேண்டாம் உங்களுக்குள்ளே இருக்கிறார். அவர் மட்டும் தான் உண்மை மற்ற அனைத்தும் பொய். நீங்கள் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, நீங்களாக இறைவனிடத்தில் பிரியத்துடன் கேளுங்கள் அவர் எல்லோரிடத்திலும் அவர் விளையாட்டை விளையாடுவான் அவர் மகா அன்புள்ளவர் அவரை பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை பயந்தால் நாம் அவரை காணவே முடியாது. அவர் மீது அன்பு கொள்ளுங்கள் நீங்கள் அவர் எப்படி இருப்பார் என்று எந்த ரூபத்தில் வணங்குகிறீர்களோ அந்த ரூபத்திலே உங்களுக்கு காட்சி தந்து அவருடைய உண்மை வடிவத்தையும் காட்டுவார்.அதற்கு நாம் அவரிடத்தில் மெய்ஞ்ஞானத்தை கேட்க வேண்டும் அதுவே ஒன்றே அவரிடத்தில் கேட்க முடிந்த ஒன்று. மற்றவை அனைத்தும் தாற்காலிகமே அப்படி என்றால் நிலையில்லாதது என்று பொருள். ஆகவே நீங்கள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்தலே போதுமானது வேறெந்த மதமும், சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் இறைவனிடத்தில் நம்மை கொண்டு சேர்க்காது, எவரெல்லாம் இந்த சமுதாயத்தால் சொல்லப்படுகிற தாழ்ந்தோர்,வறுமையில்இருப்போர்என்று உள்ளார்களா அவர்களிடத்தில் அன்பு செய்யுங்கள் உதவி செய்யுங்கள் இறைவனை பார்ப்பீர்கள்.

Mano60
18-11-2016, 09:12 AM
இது மிகவும் சிந்திக்க வைக்கும் தலைப்பு. நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நடித்த பழைய படத்தில் மேஜர் சுந்தரராஜன் எம்.ஜி.ஆரை பார்த்து ஒரு காட்சியில் "உங்களின் குல தெய்வம் எது?" என்று கேட்க அவர் "என்னை பெற்ற தாய்" என்று பதில் சொல்லுவார்.நமது தமிழ் மூதாட்டி அவ்வையார் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று சொல்லி இருக்கிறார். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும்வரை அவர்களுக்கு தொண்டு செய்தும் மறைந்த பின் அவர்களின் உருவங்களை நினைத்து வணங்கியும் காலம் கழித்தால் அதுவே மென்மையாகும் என்பது என் கருத்து. கடவுள் எங்கு இருக்கிறார் என்று கேட்டால் திருநாவுக்கரசர் சொல்கிறார்

"விறகில் தீயினால் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளான் மாமணி சோதியான்"

என்று சொல்கிறார். இவரை போல் பல மகான்கள் பலவிதமாய் சொல்லி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நம்பலாமா வேண்டாமா என்று உணர்வுபூர்வமாக முன்னறி தெய்வங்களான அன்னை தந்தையரின் ஆலோசனைப்படி கேட்டு செயல் படலாம். திரி தொடர்ந்தால் இன்னும் பல நல்ல தகவல்கள் வெளியாகலாம்.