PDA

View Full Version : ஆறவிடாமல்...



Nivas.T
24-02-2011, 05:22 AM
என் மனமென்னும் கரையினில்
உன் நினைவுகளாய் பதிந்துவிட்ட
காலடி தடங்களை காத்துவருகிறேன்
களைந்து போகாமல்

உன்னுடன் உருகிய நேரத்தை
நிறுத்தி வைத்துள்ளேன் என்
மனக் கடிகாரத்தின் மணித்துளியில்
கடந்து போகாமல்

உன் இதழ் வழி உதிர்ந்த
வார்த்தைகளை அள்ளி மாலையாக்கி
மாட்டி வைத்தேன் மனக்கிடங்கில்
காய்ந்து போகாமல்

நாம் பரிமாறிக்கொண்ட பரிவர்த்தனைகளை
பட்டியலிட்டு எண்ணி என்னி
பார்க்கிறேன் எதுவொன்றும்
குறைந்து விடாமல்

இவற்றோடு இழத்து இழைத்து
இன்னும் இன்னும் கீறிக்கொள்கிறேன்
நீ தந்துவிட்டு போன காயங்களை
ஆறவிடாமல்.....

பிரேம்
24-02-2011, 07:27 AM
வந்து விழும் வரிகள்
ஒவ்வொன்றும் வலிகளை
அழுத்தமாக உணர்த்துகின்றன..
அருமை...:)

Nivas.T
24-02-2011, 08:46 AM
வந்து விழும் வரிகள்
ஒவ்வொன்றும் வலிகளை
அழுத்தமாக உணர்த்துகின்றன..
அருமை...:)

மிக்க நன்றி பிரேம் :)

கீதம்
26-02-2011, 12:29 AM
அற்புதம். வலியால் செதுக்கிய கவிச்சிற்பம் அழகு. பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
26-02-2011, 08:21 AM
அற்புதம். வலியால் செதுக்கிய கவிச்சிற்பம் அழகு. பாராட்டுகள் நிவாஸ்.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க கீதம்

உமாமீனா
26-02-2011, 08:30 AM
:medium-smiley-045: வலிக்குது :traurig001:

Nivas.T
26-02-2011, 09:10 AM
:medium-smiley-045: வலிக்குது :traurig001:

என்னக நீங்க இதுக்குப்போய் அழலாமா?

சரி விடுங்க விடுங்க

மிக்க நன்றி உமாமீனா

செல்வா
01-03-2011, 03:36 AM
மூடிய கதவுகளுக்குள்
முட்டிக்கிடக்கும் இருளுக்குள்
வெளிச்சம் வேண்டி
நினைவுகளைக் கீறிக் கீறி வழியும்
இரத்தத்தில் சுகம் கண்டு
தனக்குள்ளே மருவிக்கொள்ளும் மனம்

திறந்து விடுங்கள்.... வெளிச்சமும் காற்றும் உள்புகுந்து
காயமாற்றட்டும்....!

வாழ்த்துக்கள் நிவாஸ்...!

Nivas.T
01-03-2011, 08:05 AM
மூடிய கதவுகளுக்குள்
முட்டிக்கிடக்கும் இருளுக்குள்
வெளிச்சம் வேண்டி
நினைவுகளைக் கீறிக் கீறி வழியும்
இரத்தத்தில் சுகம் கண்டு
தனக்குள்ளே மருவிக்கொள்ளும் மனம்

திறந்து விடுங்கள்.... வெளிச்சமும் காற்றும் உள்புகுந்து
காயமாற்றட்டும்....!

வாழ்த்துக்கள் நிவாஸ்...!

நிச்சயமாக!
காலத்தின் கையில் இருக்கும்
காயத்திற்கு மருந்து என்ற
நம்பிக்கையில் நடமாட
நலமாய் ஆறிவறுகிறது காயம்
மன்றம் என்னும் மருத்துவத்தில்

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி செல்வா

dellas
10-03-2011, 11:13 AM
வேண்டாம் நண்பரே. காயங்களை வடுக்களாக்கிக் கொள்ளுங்கள், தேவையென்றால் தொட்டுணர. இன்னும் இருக்கிறது வாழ்வென்ற பேரின்பம் இதைவிடப் பெரிதாக.

Nivas.T
10-03-2011, 11:30 AM
வேண்டாம் நண்பரே. காயங்களை வடுக்களாக்கிக் கொள்ளுங்கள், தேவையென்றால் தொட்டுணர. இன்னும் இருக்கிறது வாழ்வென்ற பேரின்பம் இதைவிடப் பெரிதாக.

மிக்க நன்றி டெல்லாஸ்

ஆறுதலுக்கும், பின்னூட்டத்திற்கும்

மிக்க நன்றி நண்பரே