PDA

View Full Version : பல்லி விழுந்தால் பலன்



M.Jagadeesan
23-02-2011, 04:48 AM
பத்தடி உயரத்தில் இருந்து
பல்லி தலையில் விழுந்தது
பதை பதைப்புடன் அவசரமாய்
பஞ்சாங்கம் எடுத்துப் பார்த்தேன்

பல்லி தலையில் விழுந்தால்
பலிக்கும் மரணம் என்றது
பயத்துடனே தரையைப் பார்த்தேன்
செத்துக் கிடந்தது பல்லி!

உமாமீனா
23-02-2011, 04:53 AM
பல்லி தலையில் விழுந்தால்
பலிக்கும் மரணம் என்றது
பயத்துடனே தரையைப் பார்த்தேன்
செத்துக் கிடந்தது பல்லி!

பலிக்கும் மரணம்.......சிரிப்புதான் போங்க

M.Jagadeesan
23-02-2011, 06:11 AM
நன்றி! உமாமீனா அவர்களே!

ராஜாராம்
23-02-2011, 07:38 AM
அருமையான நகைச்சுவை...
கொஞ்சம் அதிகமாகவே சிரித்துவிட்டேன்...ஜகதீசன் சார்

sarcharan
23-02-2011, 07:51 AM
நல்ல கவிதை...
ஹாசிய உணர்வுகளை தூண்டும் ஒரு கவிதை...
(பி. கு: என்ன சார், பள்ளிக்கு சங்கு ஊதீட்டீங்களே)

ஆதி
23-02-2011, 07:55 AM
ஆக பஞ்சாகத்தில் உள்ளது பளித்துவிட்டது :D

நல்ல கவிதை ஐயா, வாழ்த்துக்கள்..

Nivas.T
23-02-2011, 08:10 AM
பஞ்சாங்கம் நமக்கா இல்லை பல்லிக்கா?
:lachen001::lachen001::lachen001:

sarcharan
23-02-2011, 08:14 AM
பஞ்சாங்கம் நமக்கா இல்லை பல்லிக்கா?
:lachen001::lachen001::lachen001:

இல்ல பல்லிய கொன்னவருக்கா? என்பதுதானே உங்களது கேள்வி...;);)

உமாமீனா
23-02-2011, 09:15 AM
பல்லி விழுந்தால் பலன்

இதில் சிறப்பு என்னான்னா? காதல் கவிதைகள் பகுதியில் பதிந்ததுதான் - 2011 மிக சிறந்த காமடி

Nivas.T
23-02-2011, 09:18 AM
இல்ல பல்லிய கொன்னவருக்கா? என்பதுதானே உங்களது கேள்வி...;);)

அப்படியும் கேட்கலாம்:D

M.Jagadeesan
23-02-2011, 10:43 AM
பின்னூட்டமிட்ட ராஜாராம்,சர்சரண், நிவாஸ்.டி மற்றும் ஆதன் ஆகியோருக்கு நன்றி!

கீதம்
23-02-2011, 10:44 AM
பிரமாதம். சட்டென்று சிரிப்பை வரவழைத்துவிட்டது கவிதை. :lachen001:

தங்களுக்குப் பாராட்டும் பல்லிக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்.

M.Jagadeesan
23-02-2011, 10:47 AM
நன்றி! கீதம்!

செல்வா
23-02-2011, 10:57 AM
ஹா...ஹா.

உங்கள் தலை என்ன இரும்பு எந்திரமா? பல்லி விழுந்ததும் இறக்க... :)

அது சரி இந்த கவிதை ஏன் காதல் கவிதைகள் பகுதியில் இருக்கிறது?

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
23-02-2011, 11:34 AM
ஹா...ஹா.

அது சரி இந்த கவிதை ஏன் காதல் கவிதைகள் பகுதியில் இருக்கிறது?

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

பல்லி தலையில் விழுந்த பதட்டத்தில்,காதல் கவிதைகள் பகுதியில் பதித்துவிட்டேன். வாழ்த்துக்கு நன்றி!

அமரன்
23-02-2011, 07:00 PM
என்னதான் இருந்தாலும் பழைய பஞ்சாங்கத்தை இப்படி நீங்கள் கிழிச்சிருக்கக் கூடாது.