PDA

View Full Version : எத்தனை முத்துக்கள் - புதிர்



dellas
23-02-2011, 09:24 AM
ஏழு திருடர்கள் கொள்ளையடிக்க செல்கிறார்கள். ஒரு அரண்மனையிலிருந்து முத்துக்கள் உள்ள மூடையினைக் கைப்பற்றி தங்கள் பொது இருப்பிடத்திற்கு வந்துவிட்டார்கள். ஆனால் முத்துக்களின் எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாது. மூடையினை பத்திரமாக வைத்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்று விட்டார்கள்.

ஆனால் ஒருவனுக்கு தான் மட்டும் அந்த முத்துக்களை அடையவேண்டும் என்ற ஆசை வந்து விடவே, தனியாக வந்து அதை எடுத்துப்போக தீர்மானிக்கிறான்.

அவன் பொது இருப்பிடத்தை அடையும்வேளையில் இன்னொருவனும் வந்து சேர்ந்து கொள்கிறான். வேறுவழியில்லாமல் இருவரும் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து முத்துக்களை பகிர்கையில், ஒரு முத்து மீதம் வந்து விடுகிறது. என்ன செய்வது என்று யோசிக்கையில், அடுத்தவன் வந்துவிடவே பங்கு மூன்றாகிவிட, அப்போதும் ஒருமுத்து மீதம்தான்.

இப்படியே நான்கு,ஐந்து, ஆறு பங்குகளிலும் ஒரு முத்தே மீதம் வருகிறது.

நேரம் கடந்து எழாமவனும் வந்து விட , ஏழு பங்குகளில், சரியாக மீதமில்லாமல் முத்து முடிந்து விடுகிறது.

அப்படியானால் எத்தனை முத்துக்கள் மூடையில் இருந்திருக்க வேண்டும்.? ஒருவருக்கு எத்தனை முத்துக்கள் கிடைத்திருக்கும்.?

sarcharan
23-02-2011, 09:51 AM
301 முத்துக்கள்

உமாமீனா
23-02-2011, 09:55 AM
301 முத்துக்கள்

சரி இது தான் சரியான பதில்

dellas
23-02-2011, 10:27 AM
மிகவும் சரி