PDA

View Full Version : என்னால் மறக்கமுடியாத மனிதர்கள்:4



ராஜாராம்
23-02-2011, 05:08 AM
இது ஒரு உண்மைச் சம்பவம்.இதில் இடம் பெற்றுள்ள நபர்களின் பெயர்களும்,ஊரின் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கதை வடிவம் அளிப்பதற்காக,நேரிடை வசனங்களும்,நடைமாற்றமும் செய்யப்பட்டுள்ளது)

(செப்டம்பர் 17...2004.வெள்ளிக்கிழமை.._கடலூர்..)
சிவாவும்....காயத்ரி..கணவன் மனைவி .சிவா தனியார் கம்பெணி ஒன்றில் பனியாற்றி வந்தான்.

காயத்ரி,ஒரு சூப்பர்மார்க்கெட்டில் பகுதி நேர வேலை செய்து வந்தாள்.
கல்யாணத்திற்குப் பின் 2வருடம் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை.
அது ஒரு பெரிய குறையாகவே இருந்து வந்தது,.

காயத்ரியின் குடும்பம் ஆச்சாரமான குடும்பம்.
கல்யாணத்திற்குப் பின்..6மாதங்கள் வேலைக்கு சென்றாள்,
.பின் அதையும் விட்டுவிட்டாள்.
குழந்தயில்லாதக் குறையை குத்திக்காட்டி
அவளது மாமியார்,தினம் தினம், அவளை மனஉலைச்சலுக்கு ஆளாக்கினாள்.

தினம் தினம் தன் மாமியார் பேசும் பேச்சுக்களைப் பொறுக்கமுடியாமல்...
கணவனும்,தானும்,,மருத்துவ பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என காயத்ரி முடுவு செய்தாள்.
பரிசோதனை முடிவு தெரிய 2நாட்கள் ஆகும் என்று மருத்துவர் கூறினார்.


(செப்டம்பர்...21..2004)

மருத்துவ ரிப்போர்டிற்கு காத்திருந்த காயத்ரியிடம்,

"காயத்ரி.....மெடிக்கல் ரிப்போர்ட் வந்துவிட்டது....
உனக்கு கருப்பப்பை பலகீனமா இருக்காம்...குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையாம்...
நீ கவலைப்படாதே.....நாம ஒருக் குழந்தையை தத்து எடுத்துக்குவோம்...",
என்று சிவாக் கூறியதும்,
அதிந்துப் போனாள் காயத்ரி.

அதை கேட்ட,
சிவாவின் அம்மா பத்மா,காட்டுக்கத்தலாய் சங்குஊதத் தொடங்கினாள்..

"ஊரில ஒவ்வொருவரும் பேரப்புள்ளைங்களை கொஞ்சுரதைப் பார்க்கும்போது...மனசே ஏங்கிப்போது,,..
இந்த மூதேவியை என் பையனுக்கு கட்டிவெச்சு,ஒரு புழுப்பூச்சியக்கூடக் காணேம்...சனியன்...",

"ஏய் என் பையன் ஆம்பளைடி...
நீ சூப்பர்மார்க்கெட்டில்....மளிகைசாமானை விற்றாயோ....இல்லை.....அங்கே....
............((censored))......,
...அதான்டி உனக்கு குழந்தையே உண்டாகவில்லை....தரித்திரியம் புடிச்சவளே...",
என்று,வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் முன் நாகரீகம் இன்றி திட்டித் தீர்த்தாள்.

ஆனால் சிவா அவளை கண்ணும்கருத்துமாக ,
அவளுக்கு ஆறுதலாக....இருந்தான்..

"நீங்க வேணும்னா...இன்னொருக் கல்யாணம் பன்னிக்கிங்க ",
என்று கதறிஅழுதபடி அவள் கூறியதும்,'

"ஏன்டி,...உனக்கு இப்படி புத்திப்போது...
குழந்தை இல்லைன்னா...என்ன?.ஒருக் குழந்தைய தத்து எடுத்துப்போம்..",
என்றான் சிவா.
காயத்ரியும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்..


(அக்டோபர்...05...2004.)

அறையின் ஒருமூலையில் அழுதபடி அமர்ந்திருந்தாள் காயத்ரி...
"ஏன்டி அழுதுக்கிட்டே இருக்கே?",
என்று அவளதுக் கண்ணீரினைத் துடைத்தான் சிவா.

:நமக்கு குழந்தையேப் பிறக்காதா?
நான் அம்மா ஆகனுங்க...எனக்கு ஏங்க இப்படி நடக்குது?
அத்தை கண்டபடி திட்டினாங்க..",
என்றாள் பாவமாக.

"யார் என்ன சொன்னாலும் நீக் கண்டுக்காதே,,,..
எனக்கு நீ...உனக்கு நான்..",
என்று கூறி அவளை ஆறுதல் அரவணைத்தான்.



(அக்டோபர்...11...2004...ராணிமஹால் திருமணமண்டபம்...கடலூர்)

திருமணத்திற்கு வந்திருந்த,அந்த டாக்டர்
(அவர்களை பரிசோதித்தவர்)

"என்னம்மா...காயத்ரி நல்லா இருக்கியா?",
என்றதும்...
விம்மி விம்மி அழத்தொடங்கினாள் காயத்ரி.
"கவலைப்படாதேம்மா...
.உன் புருஷனுக்கு....,ட்ரீட்மெண்ட் தந்திருக்கேன்...,
மெடிசன்ஸூம் தந்திருக்கேன்,,,
சீக்கிரம்....அவருக்கு இருக்கிற பிராப்ளம் சரியாயிடும்...
அதுக்கப்புறம்...உங்களுக்கு அழகான குழந்தை கண்டிப்பாய் பிறக்கும்",
என்று அவளது கண்களை துடைத்ததும்...

"என்ன டாக்ட்டர் சொல்றீங்க..அப்படின்னா
எனக்கு கருப்பப்பை பிராப்ளம் இல்லையா??",
என்று அதிர்ந்தவளாய் அவள் கேட்க,

'உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையேம்மா...
அவருக்குத்தானே பிராப்ளம்...ஏன்?ஏன் இப்படிக் கேட்க்கிறே?",
என்றார் டாக்டர்..

அவள்,சிவாவின்மேல் வைத்திருந்த நம்பிக்கை தூள்தூள்ளாய் சிதறிப்போனது...

நம்பிக்கை துரோகம் செய்த சிவாவின் செயல் அவளை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு சொன்றது.
மாமியார் அசிங்கமாக தன்னை திட்டியபோதுக் கூட,அவன் உண்மையை சொல்லவில்லையே...
என்ற ஆத்திரம் அவளுடைய அழுகையை நிறித்தியது.

(அக்டோபர்...12...2004)

காயத்ரி சிவாவிடம்,டாக்டர் கூறியதை கூறி நியாயம் கேட்டள்.
"ஏய் ஆமாம்டி...
நான் பொய்தான் சொன்னேன்...அதுக்கு என்னடி இப்ப?
நான் ஆம்பளை அப்படித்தான் செய்வேன்",
என்றான் சிவா.

"என்னடி...என் புள்ளையயே எதிர்த்து பேசுறியா?",
என்ற அவளது மாமியார் அவளை ஓங்கி அறைந்தாள்.

சடசடவென,தனது துணிமனிகளை பெட்டியில் எடுத்துக்கொண்ட காயத்ரி,
"உன்னமாதிரி கேவலமானவன் கூட நான் வாழ்வதற்கு....
வாழவெட்டியாகவே இருப்பது மேல்..",
அவன் கட்டிய தாலியை கழட்டி அவனிடம் தந்துவிட்டு புறப்பட்டாள்.

(21.02.2011...இன்று)

காயத்ரி....சேலம் ,மாற்றுதிறனாளிக்களுக்கான பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
ஒரு பெண்குழந்தை ஒன்றை தத்து எடுத்துக் கொண்டு,
தன் தாய் தந்தையோடு...
புதிய வாழ்க்கையை நடத்தத் தொடங்கினாள்...........
அரசு தேர்வு ஒன்றை எழுதினாள்.
தற்ப்போது,வட்டாச்சியர் அலுவலகத்தில் அலுவலக பணியாளராக
பணியாற்றிக் கொண்டு இருக்கிறாள்.

ஆனால்.இன்றும்
"என் பையனுக்கு ஒரு நல்லப்பொண்ணா பாருங்க...
கைநிறையா சம்பாதிகிறான்...முதல் மனைவி நடத்தை சரியில்லை...
அதனால விவாகரத்து பன்னியாச்சு...",
என்று வீட்டிற்கு வரும் தரகர்களிடம் சிவாவின் ஜாகத்தை
நீட்டிக்கொண்டு இருக்கிறாள்,சிவாவின் அன்னை.............

முரளிராஜா
23-02-2011, 10:11 AM
நம்பிக்கை துரோகம் மிகவும் கொடுமையான விசயம். அதை ஒரு கதையோடு சொல்லி உள்ளாய் ராரா. அருமை

உமாமீனா
23-02-2011, 10:21 AM
கொடுமை... :sauer028: ஒரு சில ஆண்கள் செய்யும் தவறுகளால்......????? :icon_good:நல்ல முடிவு காயத்ரி... சிவாவின் அன்னை :violent-smiley-010:இவளும் ஒரு பெண்.?!

p.suresh
23-02-2011, 11:38 PM
இச் சம்பவம் நல்ல படிப்பினையைத் தருகிறது. ஆணாதிக்கத்தைச் சாடுகிறது.

பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்துகிறது.

திருமணத்திற்குமுன் கட்டாய மருத்துவப்பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.பாராட்டுகள் ராஜாராம்.