PDA

View Full Version : அன்றும்....இன்றும்..:பாகம்:2ராஜாராம்
22-02-2011, 03:16 PM
நிகழ்கால நிகழ்வுகள்....
இன்று....நடப்பவை.....
2011....
...
"பொண்ணுக்கிட்ட எதுவும் தனியா பேசனும்னா பேசுங்க....
இப்பல்லாம்,பொண்ணும்,பையனும்,தங்கள் எதிர்பார்ப்புகளை,கல்யாணத்திற்கு முன்னவே பேசி முடிவுபன்னிக்கிறது நல்லது....",
என்று மணப்பெண் ஷோபாவின் தந்தைக் கூறியதும்,

"இல்லைங்க....அப்படி எதும் பேசனம்னு அவசியம்மில்லைங்க..",
ராஜா பவ்யமாக கூற,

"அப்பா...நான் ஒருசில விஷயங்களை அவரிடம் பேசனும்...",
தடாலடியாக ஷோபாவிடம் இருந்து பதில் வந்தது.

ஷோபவின் துணிச்சலான அந்தக் கோரிக்கை அவனுக்குப் பிடித்திருந்தது.
(பெரியவர்களின் அனுமதியுடன் இருவரும் மனம்விட்டு பேசிகொள்ள அங்கிருந்த பூஜை அறையில்.... பேசத்தொடங்கினர்,,,)

ஷோபா:-எனக்கு வேலைக்கு போறதுன்னாப் பிடிக்காது...",

ராஜா:-வேலைக்குப் போகாமல் எப்படிங்க குடும்பம் நடத்த முடியும்?",
அப்பாவியாக கேட்க,

ஷோபா:-"எனக்குத்தான் வேலைக்கு போக பிடிக்காதுன்னு சொன்னேன்....
நீங்க வேலைக்குப் போயித்தான் ஆகனும்..",
நக்கலான பதில் அவளிடம் இருந்து வந்ததும்,,,
ராஜாவிற்கு...லைட்டா....கொஞ்சம்,...
கிடிகிடுவென அஸ்திவாரம் ஆடத் தொடங்கியது.
(நாம ஊரையெல்லாம் நக்கல் பன்னின்னா...இது ஓப்பனிங் சீன்னில்லே...
நம்மலையே பிரிக்கட்டி அடிக்குதே....
என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டான்..)

"நான் சொந்தமா மொபைல்ஷாப் வெச்சுருக்கேன்...
மாசம் 10,000,வரும் 15,000வரும்னு பொய்சொல்லமாட்டேன்..
இப்போதைக்கு 6000ரூபா வருது....பார்டைம் ஜாப் ட்ரை பன்னிக்கிட்டு இருக்கேன்...
பிஸினஸையும் டெவலப்பன்ன யோசிச்சுக்கிட்டு இருக்கேன்",என்றவன்,

"உங்க அப்பாவையோ...எங்க அப்பாவையோ எதிர்ப்பார்க்க மாட்டேன்...
என்னால முடிஞ்சவரைக்கும்,,..நல்லா வெச்சுப்பேன்..",
என்று முடித்தான்.

"கெட்டப் பழக்கம் எதாவது உண்டா?கேட்கிறேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க..",
அடுத்த கேள்வி அவளிடமிருந்து வந்தது,

"சிகரெட் சுமோக்கிங் உண்டு...காலேஜ்ஜில படிக்கும்போது டிரிங்ஸ் சாப்பிட்டு இருக்கேன்...
ஆனால் சத்தியமா அதுமட்டும் இப்ப இல்லை",
ராஜாக் கூறியதும்,..

ஷோபா:-"கல்யாணம் ஆனால் சிகரெட்டை நிறுத்தி விடுவிங்களா?",.
,
ராஜா:-"சிகரெட்டுக்காக கல்யாணத்தை வேணும்னா நிப்பாட்டலாம்...கல்யாணத்துக்காக சிகரெட்ட நிப்பாட்ட முடியாதுங்க!!!.",
என்று பஞ்ச் டயலாக் பேசினான் ராஜா....
அதைக் கேட்ட ஷோபா..

என்னங்க இப்படி சொல்றிங்க?",
என்று ஆச்சரியமாய் அவனைப் பார்த்துவிட்டு..

"நீங்க எதுவும் என்னைக் கேட்கனும்மா?",
என்றாள் ராஜாவிடம்,

"அவசியம்மில்லை...நான்தான் ஒன்னு சொல்லனும்ம்",

"சொல்லுங்க..."என்றாள் ஷோபா

"காலேஜ் படிக்கும்போது சுஜாதான்னு ஒருப் பொண்ணை லவ் பன்னினேன்...
ரெண்டு பேரும் தப்பா பழகினதில்லை.தொட்டுக் கூட பேசுனதில்லை.
ஆனால் அந்தக் காதல் நிறைவேறாமல் போச்சு....",
ஷோபா சட்டென ராஜாவைப் பார்த்து..

"அப்படின்னா....என்னை புடிச்சிருக்கா?இல்லையா?'",
என்றதும்,

"புடிச்சிருக்கு.... ",என்றவன்
அவளைப் பார்த்து,'

"உங்களுக்கு??",என்றுக் கேட்டதும்,,,

"எனக்கும் புடிச்சிருக்கு...",
என்று தலைகுனிந்தாள்.

சிறிது நேரத்தில்...
"பொண்ணுக்கும் பையனுக்கும் சம்மதமாம்....
நிச்சயதார்தத்திற்கு...தேதிக் குறிச்சுடுங்க...",
என்று பெரியவர்கள் மத்தியில் பேச்சுஅடிபட,

"வருகிற மார்ச்சு மாதம் 12ம்தேதி,நிச்சயம் வெச்சுக்களாம்..",
என்றார் அங்கிருந்தக் கோவில் குருக்கள்.

"நெஞ்சே நெஞ்சே நீயெங்கே...
நானும் அங்கே...
என் வாழ்வும் அங்கே....
அன்பே அன்பே நானும் இங்கே...
என் ஜீவன் எங்கே.....",.........
பாடல்வரிகள் இன்று நிகழ்வுகள் ஆகின.........இறந்தகால நினைவுகள்:
அன்று.......நடந்தது....
2001...

"சுஜா...எனக்கு நம்ம ஊரு பிரின்ஸ்டவர் ஹோட்டலில் ரிஸப்ஷனில் வேலைக் கிடைச்சிருக்கு...
மாசம் 5000ரூப சம்பளம்..."
என்று உற்சாகமாய் கூறினான் ராஜா...

"அப்படியா...",
என்று ஒரேவார்த்தையில் சப்பென முடித்தாள் சுஜா.

"வேலைக் கிடைச்சிருக்கு,5000ரூபாய் சம்பளம்னு சொல்றேன்...உன் முகதில் சந்தோஷமே இல்லையே",
ராஜாக் கேட்டதும்,

"நீங்க எப்போதும் என்கிட்ட பிரியமா இருந்தா அதுவே நேக்கு போதும்...
500ரூபாய் சம்பாதிச்சாக்கூட அதவெச்சு நான் குடும்பத்தை சமாளிச்சுப்பேன்..",
என்றவள்.

"சாமி சத்தியமா...நெஜாமாத்தான் சொல்றேன்..",
என்று அவனைப் பார்த்தாள்.

"உங்களுக்காக ஒன்னுக் கொண்டாந்திருக்கேன்...",
என்றுக் கூறிவிட்டு,
தன் தாவணிக்குள் மறைத்து வைத்திருந்த ,வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டை அவனிடம் நீட்டினாள்.

"அடிப்பாவி...என்னடி சிகெரட் பாக்கெட்டை நீட்டுறாயே?நீயேன்டி இதையெல்லாம் வாங்கிற?".
என்று கோவமா கேட்டான் ராஜா.

"எங்க சித்தப்பா,சிங்கப்பூரில் இருந்து வந்துருக்காரு..அவரு நிறையா வெச்சுருந்தாரு..
அதில் இருந்து உங்களுக்காக இதைக்கொண்டாந்தேன்",
என்று அசட்டுத்தனமாய் சிரிக்க,

"இன்னிமே இதையெல்லாம் உன் கையால கொண்டு வராதே..",
கண்டிப்புடன் கூறினான் ராஜா.

"வேலைக் கிடச்சிருக்கு...உனக்கு என்னவேணும் சொல்லு,,..என் ஆசைக்கு எதாவது உனக்கு வாங்கித்தரனும்..",
என்று அவன் கூறியதும்,

"லாலிபாப் முட்டாய் இருக்குதுள்ள,..அதில ஆரெஞ்சு முட்டாய் புதுசா வந்திருக்கு...
அது வாங்கித்தாங்க..",என்று அவள் கூரியதும்...

"கஷ்டம்டா சாமி..இப்படி மெச்சூரிட்டியே இல்லாமல் இருக்கியே....
உன்னையவெச்சு எப்படித்தான் நான் காலம் தள்ளப்போறேன்னோ...",
என்று தலையில் கை வைத்தபடி தரையில் அமர்ந்தான் ராஜா...

"எந்தக் கலைஞனும் அவளை சிலைவடிப்பான்....
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்...
அந்த இயற்கையும் அவளிடம் காதல்கொள்ளும்..
நான் பார்த்ததில்லே அவள் ஒரித்தியைத் தான்...
நல்ல அழகி என்பேன்...நல்ல அழகி என்பேன்.... ",


என்றப் பழையப்பாடல் வரிகள் அவன் மனதில் இன்னிசையாய்..ஒலித்தது

dellas
22-02-2011, 03:48 PM
அப்புறம்.. என கேட்கத் தூண்டுகிறது. தொடருங்கள்.

Nivas.T
22-02-2011, 05:04 PM
பிரமாதம் ராஜாராம்

தொடரட்டும் காதல் பயணம்

அன்புரசிகன்
22-02-2011, 10:22 PM
அடுத்த முறை தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணுக்குட்டி நான் என்று படிப்பீங்களோ? ஏன் என்றால் சுஜாதா பாட்டி (நீங்க தான் தாத்தா என்று முன்பு ஒரு திரியில படிச்சிருக்கன்) அடுத்தமுறை அவங்க சித்தப்பா பிரான்சில இருந்து கொண்டுவந்த ஸ்கொட்ச் ஐ தர அத குடிச்சுப்போட்டு படிச்சிருப்பியள்... :D

தொடருங்கள்.

உமாமீனா
23-02-2011, 03:16 AM
விறுவிறுப்பா இருக்க்கு......முழுசும் படிச்சிட்டுதான்.....அதுவரைக்கும் காத்திருப்பேன்

ராஜாராம்
23-02-2011, 06:00 AM
நன்றி டெலாஸ் அவர்களுக்கும்,
நிவாஸ் அவர்களுக்கும்,
அன்புரசிகன் அவர்களுக்கும்,
உமாமீனா அவர்களுக்கும்....
அன்புரசிகா..........இந்த தாத்தா பாவம் ரொம்பா நல்லவரு...ஸ்காட்ச்னா என்னான்னே தெரியாது,,..எனக்கு :redface:

முரளிராஜா
23-02-2011, 06:07 AM
ராரா, பொய் சொன்னா முராவுக்கு பிடிக்காது தெரியுமில்ல.

மதி
23-02-2011, 07:35 AM
நல்லா கொண்டு போறீங்க கதையை. "சிலமணி நேரங்கள் கழித்து,ஷோபா வீட்டு,பூஜை அறையில்....ராஜாவும்,ஷோபாவும்,," இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் இடிக்குது.. மணிய தூக்கிட்டா பொருந்தும்ல.. :)

sarcharan
23-02-2011, 07:53 AM
ரா ரா அப்போ அன்னபூரணி யாரு?

ராஜாராம்
23-02-2011, 08:21 AM
நன்றி மதி.நீங்கள் கூறியபடி அவ்விடத்தை மாற்றம் செய்துவிட்டேன்..

நன்றி சரண்..
அன்னப்பூரணின்னா...சாப்பாடு கொடுக்கிற தெய்வம்...
(அப்பாடா,,,,இப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கே....ஷஷஷப்ப்பாபா!!!):confused:

sarcharan
23-02-2011, 08:24 AM
அன்னப்பூரணின்னா...சாப்பாடு கொடுக்கிற தெய்வம்...


முரா ராரா சொல்வது சரியா?:)

முரளிராஜா
23-02-2011, 09:37 AM
[QUOTE=sarcharan;514452]முரா ராரா சொல்வது சரியா?:)[/QUOTE
சாரா, ராரா சொல்வது பொய். இது மாதிரி நீங்கள் கேள்வி கேட்டவுடன் உடனே என்னை தொடர்புகொண்டு இது சம்பந்தமான விசயம் எதுவும் சாராவிடம் சொல்ல வேண்டாம் என ராரா என்னிடம் கேவிகேவி அழுதததால்
வேறு எதுவும் விளக்கமாக உங்களிடம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியவில்லை.