PDA

View Full Version : வசீகரம்



inban
22-02-2011, 12:49 PM
என்னைப்பற்றி
ஏதேனும் கவிதை தாருங்கள்
என
எப்போதும்
இசைத்தபடி இருக்கிறாய்

உன்னை விடவும்
உயர்வான கவிதையை
எழுத முடியுமா என்னால்?

நிலவினை வெற்றிகொள்ள
மின்மினி ஒன்று
மின்னித் திரிவது போல....

பறவையோடு
போட்டிக்கு நிற்கின்ற
ஒற்றை இறகு போல....

உன்னை விடவும்
உயர்வான கவிதையை
எழுத முடியுமா என்னால்?

முடியாது என்பதிலே
எனக்கு
எவ்வித சந்தேகமும் இல்லை

எனது இயலாமையிலே
எனக்கு
எவ்வித வருத்தமும் இல்லை

எனது சங்கடமெல்லாம்
எனது சஞ்சலமெல்லாம்

உன்னை
அலங்கரிக்க கூட
எனக்கு தகுதியுடோ
என்பது பற்றித்தான்.....

சுகந்தப்ரீதன்
25-04-2011, 01:59 PM
அலங்கரிக்காமலே கவிதை வசீகரிக்குதே.. இன்னுமென்ன தயக்கம் இனபன்..?!:D

ஜான்
04-05-2011, 01:52 PM
உன் சந்நிதியில் ஒரு சுடராக இருக்க ஆசைப் படுகிறேன் --இது மிக புகழ் பெற்ற ஒரு (அரபு?)வாக்கியக் கவிதை
பாராட்டுக்கள்