PDA

View Full Version : சுஜாதாவின் கன்னத்தில் முத்தமிட வேண்டும்...ரங்கராஜன்
22-02-2011, 03:18 AM
பிப்ரவரி 27 : இறந்து மூன்று வருடங்கள்...

சுஜாதா : எழுத்துலகிலும், வாசகர்களின் உலகிலும், மறக்க முடியாத, மறுக்கவும் முடியாத பெயர் .... அறிவியல், கலை, இலக்கியம், வரலாறு, இசை, நாடகம், கவிதை முதலியவற்றை பிரித்து மேயும் ஆல்ரவுண்டர்.

சில வருடங்களுக்கு முன்பு என் நண்பர், ஒருவருடன் நடந்த உரையாடல் இதோ... அவன் கம்யூனிஸ சிந்தனையில் ஊறி, வளர்க்கப்பட்டவன்... இலக்கியம், இலக்கணம், எல்லாத்தையும் பற்றி பேசுவான்... என் நெருங்கிய நண்பன்...

"மச்சி எதாவது சாதிக்க வேண்டும் டா, வெட்டியாவே இருக்கோம் நாம்"

"நீன்னு சொல்லு" என்றான்.

"ஏன்டா, நீ எந்த மாவட்டத்தில் கலெக்டரா இருக்க"

"மக்கள் தொண்டை தானே அவங்களும் செய்றாங்க, நானும் அதான் செய்றேன்"

"சூப்பர்டா, எங்க வீட்டுல கொஞ்சம் பாத்திரம் கழுவனும் வந்து கழுவிக் குடுடா, மக்கள் தொண்டு தானே அதுவும்" அவன் சிரிக்கவில்லை... நானே தொடர்ந்தேன்..

"டேய் லூசு சாதிக்க வேண்டும் என்றால், எழுத்துலகில் எதாவது சாதிக்க வேண்டும் டா"

"எதைப் பற்றி எழுத விரும்புகிறாய்"

"எல்லாத்தைப் பற்றியும்"

"உன்னால் எழுத முடியாது"

"ஏன் எழுத முடியாது, வாழ்க்கையில் எழுத்தாளர் சுஜாதா மாதிரி வரணும் டா... அதுதான் என் லட்சியம்"

"ஹா ஹா சுஜாதாவா.....(நீண்ட நேர யோசனைக்கு பின், என் முகத்தை நேருக்கு நேராக பார்த்து சொன்னான்).... சுஜாதா...... உயர்ஜாதியின் அடக்குமுறைக்கும், ஆதிக்கத்திற்கும் மிகச்சிறந்த உதாரணம்" என்று கூறிவிட்டு என் கண்ணை நேருக்கு நேராக பார்த்தான். என்னால் அவன் கண்ணை பார்க்க முடியவில்லை.... இதுவரை என்னிடம் யாரும் இப்படி பேசியது கிடையாது.... எனக்கு கோபம் பீறிட்டது...சிலருக்கு கோபம் வந்தால், தன்னிலை மறப்பார்கள், சிலர் தடுமாறுவார்கள்.. ஆனால் எனக்கு கோபம் வந்தால், மூளை பயங்கரமாக வேலை செய்யும், கேள்விகளும், சிந்தனைகளும் ஓரே bandwidthல் வெளியே வரும்.... ஆனால் இந்த நேரத்தில் நான் எந்த உணர்வில் இருக்கிறேன் என்று என்னால் வரையறுக்க முடியவில்லை...

"இப்ப எதுக்கு இப்படி சொன்ன"

"எனக்கு தோணுச்சு சொன்னேன்"

"அதான் எந்த காரணத்தினால் இப்படி சொன்னாய்" இப்போது அவன் என் கண்ணை தவிர்த்தான்.

"அவரின் எழுத்தில், பார்ப்பன ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்"

"சரி நீ என்ன ஜாதி"

"கம்யூனிஸ்டு"

"நீ பேசும் போது, பத்து வரியில் கண்டிப்பாக நான்கு வரி கம்யூனிஸ உணர்வைப் பற்றி பேசுகிறாய், அது ஏன்"

"அது உணர்வு"

"அப்ப இதுவும் அது தான், அவர் என்ன பூணூலை கையில் வைத்துக் கொண்டு, எல்லாரையும் மாறுங்கோ, மாறுங்கோ கத்தினாரா, அல்லது அவருடைய புத்தகம் வாங்கும் போது எல்லாம் பூணூல் பார்சல் தந்தாங்களா"

"நான் பூணூல் போட்ட அந்த ஜாதி ஆகி பார்ப்பானா மாறி விடமுடியுமா"

"இதோ பாருடா, இந்த பைத்தியக்கார பேச்சக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது, உண்மையான கம்யூனிஸ்டும், நாத்திகவாதியும், கடவுள் ஜாதி மதம் ஆகியவற்றை பழிக்க மாட்டான்..... அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருப்பான்... அவனை நொண்டினால் தான் அவன் அதை மறுத்து பேசுவான்..... முக்கியமா மற்றவர்களின் நம்பிக்கையை கிண்டலோ, கேலியோ செய்கிறவன் எவனும் அந்த இரண்டு இயக்கத்தை சேர்ந்தவனாகவே இருக்க முடியாது"

"கத்துக்குட்டி தனமா பேசாதே, இவங்கெல்லாம், அவங்க ஆற்றலை வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டி, சம்பாதிக்க மட்டும் தான் தகுதியானவங்க...என்னை பொறுத்தவரை, நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.."

நீண்ட யோசனைக்கு பிறகு... நான்

"சரிடா இதுதான் நாம் பார்த்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு, இனிமேல் வாழ்க்கையில் நானும் நீயும் சந்திக்கவே கூடாதுனு நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்...... நீ காரல்மாக்ஸையோ, ஸ்டாலினையோ வேண்டிக்கோ"

"டேய் என்னடா இது, இந்த சின்ன விஷயத்துக் போய் இப்படி முடிவெடுக்குற, லூசு டா நீ, எவனோ ஒருவனைப் பற்றி பேசினதுக்காக என்னை விட்டு போறீயா"

"என்னை பொறுத்தவரை உங்கப்பனும் எவனோ ஒருவன் தான், அவரைப் பற்றி நான் தப்பா பேசினா நீ பொறுத்துப்பியா அப்படி தான் எனக்கும் சுஜாதா......நான் வரேன்"

வருடங்கள் பல ஓடி விட்டன, இன்று வரை நான் அவனிடம் பேசியதில்லை... அவன் எத்தனையோ முறை என்னை தொடர்புக் கொள்ள முயற்சித்தும் நான் பேசவில்லை.....

இந்த நிகழ்வை சொல்லவந்ததற்கு காரணம் எனக்கு சுஜாதா மீதுள்ள பாசம், நேசம், வெறி, ரசிப்புத் தன்மை இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம்... இதை வெளிப்படுத்துவதற்காக தான்.. நான் எழுதிய முதல் கட்டுரையே சுஜாதாவின் மறைவிற்கு பின்னர், அவரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட அனுபவத்தை பற்றியது தான்... மறக்க முடியாத ஒரு உணர்வு அது.... அதை நான் மன்றத்திலும் பதித்து இருக்கேன்... மன்றத்தில் சில நாட்கள் கழித்து பதித்தாலும், நான் எழுதிய முதல் தமிழ் கட்டுரை அதுதான்...

சுஜாதாவின் நேர்மை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17940&page=2&highlight=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88) என்ற தலைப்பில் எழுதினேன்.

என்னைப் பொறுத்தவரை சுஜாதா என்ற பெயரைக் கேட்டாலே, உத்வேகம், புத்துணர்ச்சி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு..... இப்படி பல உணர்வுகள் என்னில் துளிர்விடும்...... இந்த உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை..... எனக்கு இருக்கும் உணர்வை கூறினேன் அவ்வளவு தான்...

சுஜாதாவை நான் ரசிப்பதற்கு அவரின் எழுத்து மட்டும் காரணமல்ல..... அவரது வாழ்க்கையும் தான்... தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், புலவர்கள் அவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக வறுமையில் தான் இருக்கும், தமிழ் மொழியைத் தவிற வேறு எதுவும் தெரியாத ஆட்களாக இருப்பார்கள், தமிழ்நாட்டை விட்டு தாண்டாதவர்களாக இருப்பார்கள்... பெருமைக்கு அரசியல் பேசுவார்கள்... மறந்தும் கூட அறிவியல் பேச மாட்டார்கள் இப்படி இருந்த அனைத்து பிம்பத்தையும் சுக்கு நூறாக உடைத்து விட்டு வெளி வந்தவர் சுஜாதா என்ற ரங்கராஜன்......

சிறுவயதில் இருந்து அருமையான வாழ்க்கை... நல்ல படிப்பு, சரியான வேலை, சரியான நேரத்தில் திருமணம், சரியான வயதில் பிள்ளை குட்டிகள், நல்ல குடும்பம், நல்ல மரியாதை, புகழ், எழுத்தாற்றல், அனுபவம், சிந்தனை, லட்சக்கணக்கான ரசிகர்கள்.,..முதுமையில் உடல்நலக்குறைவு, போராடி உயிரை விட்டார்....

அவரின் இந்த வாழ்க்கை இந்த வாழ்க்கையை தான் நான் மிகவும் ரசித்தேன்... இப்படி நிறைவான வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கும், சுஜாதா ஐயாவின் எழுத்தை ரசித்த நான், பின்னர் சுஜாதாவின் வாழ்க்கையையே காதலிக்க ஆரம்பித்து விட்டேன்... வாசகனாக இருந்த நான், சுஜாதாவின் காதலனாகவே மாறி விட்டேன்...

பல்வேறு அனுபவங்களை அதாவது கஷ்டம், பசி, பட்டினி, துரோகம், தோல்வி இப்படி பல விஷயங்களை அனுபவித்து இருந்தால் தான் நல்ல கிரியேட்டராக வர முடியும் என்ற மரபை உடைத்து முதல் முறையாக நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஒரு எழுத்தாளன், அவன் வாழ்ந்த காலகட்டத்திலே அங்கீகரிக்கப்பட்டான் என்றால் அது சுஜாதா மட்டும் தான்.

தலைமுறைகளை தாண்டி ரசிக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரனான சுஜாதாவை, தாத்தாவும் படித்து இருப்பார், அப்பாவும் படித்து இருப்பார், மகனும் படிக்கிறான். பேரனும் படிப்பான்.... அறிவியலை தமிழ் வாசகர்களுக்கு இட்லியும் புதினா சட்னியும் போல புரிய வைத்தவர் சுஜாதா... காலத்தின் வரலாறு, உயிரின் தோற்றம், அணு இயற்பியல், இப்படி தலை சுத்தும் விஷயங்களைக் கூட ரசிக்க வைத்தவர் சுஜாதா....

சினிமாவில் வசனம், திரைக்கதை என்ற பல விஷயங்களை சினிமாவிற்கு தொடர்பில்லாத அவர் கையாண்ட விதம், மிகவும் பாராட்டதக்கது... சுஜாதாவின் மனைவி ஒரு பேட்டியில் கூறுவார், அவருக்கு சினிமா சம்பந்தமா ஒன்றும் தெரியாது, அவரின் சொந்தகாரர்கள் கூட யாரும் சினிமாத்துறையில் இல்லை, ஆனால் எந்த படம் வந்தாலும் தவறாமல் பார்த்து விடுவார் என்றார்... சுஜாதா வசனம் எழுதிய படங்களில் வசனங்கள் கண்டிப்பாக தனி முத்திரை பதிக்கும்.... எனக்கு பிடித்த சில வசனங்கள்...

இந்தியன்...

லஞ்சம் வாங்கிய மகனை கொலை செய்ய தேடி அலையும் அப்பனிடம், மகனின் காதலி வந்து மகனை கொலை செய்ய வேண்டாம் என்று கெஞ்சுவாள், அப்போது அப்பன் பேசும் வசனம்..

"உனக்கு எத்தனை வருஷமா சந்துருவை தெரியும்"

"2 வருஷமா"

"எனக்கு 30 வருஷமா தெரியும், கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் கழிச்சி பொறந்த புள்ள, உன்னை விட எனக்கு தான் இழுப்பு ஜாஸ்தி.......(அழுதுக் கொண்டே) சின்ன வயசுல நான் அவனை கொஞ்சும் போது, மீசை குத்துனு அழுவான், அவனுக்காக மீசையை இழந்த இந்த சேனாதிபதி இன்னைக்கு அவனையே இழக்க முடிவு செஞ்சிட்டேன்"

இதைவிட சிறந்த வசனங்களால் ஒரு அப்பன், மகனை கொலை செய்வதை நியாயப்படுத்த முடியாது.. குறிப்பா இந்தியன் படத்தில் லஞ்சத்தை பற்றி பேசும் வசனங்கள் எல்லாம் நமக்கு சவுக்கடி.....

அந்நியன்

"5 பைசா திருடினா தப்பா"

"இல்லைங்க"

"5 முறை 5 பைசா திருடினா"

"தப்பு மாதிரி தாங்க தெரியுது"

"5 கோடி முறை 5, 5 பைசாவ திருடினா"

"பெரிய தப்புங்க"

"அதாண்டா இங்க நடக்குது"

பாட்டா ஷோரூம், சில பெரிய மால்களில் விற்கப்படும் பொருட்களின் விலை எல்லாம், 99.95 பைசா என்று போட்டு இருக்கும், 100 ரூபாய் கொடுப்போம் ஆனால் மீதி 5 பைசா வராது,... நாமும் கேட்க மாட்டோம்... இந்த மாதிரி ஒரு நாளுக்கு எத்தனை கஸ்டமர்கள் இருப்பார்கள்... மாதம்,.... வருடம்...... அப்ப எத்தனை ஐந்து பைசா..... கணக்கு போட்டு பார்த்தால் தலையே சுத்தும்...

கன்னத்தில் முத்தமிட்டால்

சுஜாதாவின் எழுத்தில் வெளி வந்த மிகச்சிறந்த படம்... எனக்கு ஹேராமிற்கு அப்புறம் பிடித்த படமும் கூட... இந்த கதை உருவானதைப் பற்றி ஒரு புத்தகத்தில் சுஜாதாவே சொல்லி இருப்பார்...

ஒரு முறை ரீடர்ஸ் டைஜஸ்டு என்ற ஆங்கில பத்திரிக்கையில், ஒரு தத்தெடுக்கப்பட்ட சிறுமி தன் தாயை தேடி, அலைவதைப் போன்ற ஒரு ஆர்ட்டிக்கல் வந்ததாம்... அங்கு தட்டிய பொறி தான் கன்னத்தில் முத்தமிட்டால் படமாம்...... அந்த பொறியில் அழகாக சேர்க்கவேண்டியதை எல்லாம் சேர்த்து, அருமையான வசனங்களின் மூலம் செதுக்கப்பட்ட படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால்........(அந்த படத்தில் ஈழத்தமிழர்களின் முழுப் பிரச்சனையும் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது...... அது தத்தெடுக்கப்பட்ட சிறுமியின் கதை அதில் எப்படி அந்த வரலாற்றை எதிர்பார்க்கமுடியும்).

என்னை பொறுத்தவரை ஒரு எழுத்தாளனின் சவாலே, ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்து எழுதுவது தான்..... அதில் என்ன கஷ்டம் இருக்க போகுது, நாமும் குழந்தையாக இருந்து வந்தவர்கள் தானே என்று கேட்டால்...... நாம் குழந்தையாக இருந்த காலகட்டம் வேறு, தொழில்நுட்பம் வேறு, நட்புறவு வேறு, விளையாட்டு வேறு, இப்படி வேறு காலகட்டத்தில் வாழ்ந்த நாம், இந்த காலகட்டத்தில் உள்ள குழந்தைகளின் மனவோட்டத்தை எப்படி கிரகித்துக் கொண்டு எழுத முடியும். ஆனால் அதிலும் சுஜாதா வெற்றி பெற்று இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை, என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தவர், சுஜாதா, அவரை படித்தபின் தான், ரசித்த பின் தான் வாழ்க்கை புரிய ஆரம்பித்தது... பல மாற்றங்களை என்னுல் விதைத்தவர் சுஜாதா...

சுஜாதாவைப் பற்றி தப்பாக பேசியதால், நான் பேசுவதை நிறுத்திக் கொண்ட நண்பன் இன்றும் எனக்கு கால் செய்துக் கொண்டும், மெயில் அனுப்பிக் கொண்டும் தான் உள்ளான்....... அவனிடம் சீக்கிரம் பேச வேண்டும்...... அவன் கருத்தை அவன் சொன்னான், ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும், என்னுடைய இஷ்டம்.... அதற்கு ஏன் அவனை வெறுக்க வேண்டும்....

ஒருமுறை தான் வாழப்போவது, அந்த வாழ்க்கையை நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோமே, இடைப்பட்ட காலத்தில் நாம் செய்யும் துரோகங்கள், பாவங்கள், சண்டைகள், துன்புறுத்தல்கள் இவை அனைத்தும் இப்போது நமக்கு நியாயமாக தெரியலாம்.......... ஆனால் காலம் போன காலத்தில் சாய் நாற்காலியிலோ, அல்லது படுக்கையிலோ அமர்ந்துக் கொண்டு இருக்கும் போது....... நாம் செய்த தீய செயல்களை நினைத்து பார்க்கையில், அதுவே நம்மை குற்ற உணர்ச்சியில் கொன்று விடும்......

நாம் செய்த தவறுகளுக்கு மனசாட்சியை விட பெரிய சாட்சி வேறு என்ன வேண்டும்....?

சுஜாதாவின் உடலை கடையில் தொட்டவன் நான்,(விவரம் சுஜாதாவின் நேர்மை திரியில் இருக்கிறது) என்ற பெருமை எனக்கு எப்போதும் இருக்கிறது.... வாழ்க்கையில் பல தெளிவுகள் பிறக்க காரணமாக இருந்த சுஜாதா இன்று நம்முடன் இல்லை, 27 ஆம் தேதியுடன் மூன்று வருடங்கள் முடியப்போகிறது....

கலைஞனுக்கு ஏது மரணம்...... என்னை பொறுத்தவரை, தினமும் ஒருமுறையாவது நான் சுஜாதாவை நினைக்காமல் இருந்ததில்லை, என் நண்பனிடம் சொன்ன கருத்தில் இன்றும் எனக்கு எந்த மாற்றமும் இல்லை,... கண்டிப்பாக நான் சுஜாதா மாதிரி ஒரு பெரிய எழுத்தாளனா வர வேண்டும்...... அப்படி முடியாவிட்டால் என் மகனையோ அல்லது மகளையோ அவரைப் போல ஆக்க வேண்டும்....... அல்லது என் பேரனையோ, பேத்தியையோ அவரைப் போல ஆக்க வேண்டும்........

அதுவும் முடியாவிட்டால், நான் இறந்தபின் சுஜாதாவிடம் சென்று அவர் கன்னத்திலாவது ஒரு முத்தமிட வேண்டும்........(பொறுப்பாளர்களே.... வரும் பிப்ரவரி 27 எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு தினத்தையொட்டி எதாவது கதை அல்லது கட்டுரை அல்லது கவிதைப் போட்டி வைக்கலாமே...... கதை, கவிதைப் போட்டிகள் நிறைய நடந்து விட்டன..... புதுசா கட்டுரைப் போட்டி வைக்கலாமே..... யோசித்து முடிவு சொல்லுங்கள்...)

கீதம்
22-02-2011, 07:09 AM
ரங்கராஜன்,

சுஜாதா அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது கட்டுரை. நான் உங்கள் அளவுக்கு சுஜாதாவின் தீவிர ரசிகை இல்லையென்ற போதும் உங்கள் எழுத்துகளின் ரசிகை என்ற முறையில் என்னை வசீகரிக்கிறது உங்கள் ஆழ்மனதின் பகிர்வுகள். அந்த நண்பனுடன் விரைவில் உங்கள் நட்பு புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

உமாமீனா
22-02-2011, 09:03 AM
சுஜாதா பாணியில் நல்லதோர் கட்டுரை - சுஜாதாவின் நேர்மை திரி படித்தேன் அதில் தாங்கள் கூறி உள்ளபடி 25 பேர் தான் மயானத்தில்,... அப்படி பட்டவருக்கு தங்களின் ஆதங்கம் மனதை பிழிந்தது - இது தான் உலகம் இப்படி இருக்கையில் உங்கள் நெருங்கிய நண்பர் என்ன பாவம் செய்தார்.அவர் மேல் கோபப்படுவதில் அர்த்தமே இல்லையே.

கலையரசி
22-02-2011, 11:42 AM
எழுத்தாளர் சுஜாதாவை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமலே போய்விட்டது. அவரது மரணச் செய்தி கேட்டு இரண்டு மூன்று நாட்கள் எனக்கு என்னவோ போல் இருந்தது.
ஆரம்பக் காலத்தில் அவர் எழுதிய கதைகளை ஒன்று விடாமல் வாசித்தவள் நான். அதற்குப் பிறகு ’கற்றதும் பெற்றதும்’ போன்ற அவரது கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அறிவியலை எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாக விளக்குவதில் கில்லாடி அவர். தமிழில் அறிவியல் கதைகளின் முன்னோடி அவர்.

அவரது சாவுக்கு 25 பேர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்பது வருந்தத்தக்க செய்தி.
சுஜாதாவின் நேர்மை என்ற உங்கள் கட்டுரையையும் இன்று தான் படித்தேன். மிகவும் நெகிழ்ச்சி தரும் அனுபவம். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

ஜானகி
22-02-2011, 01:15 PM
எழுத்தின் தாக்கமும், எழுத்தாளர் மேல் கொண்ட ஈர்ப்பும்.....இத்தனை சக்தி வாய்ந்ததா....?

சுஜாதா அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற நீங்கள் பாக்கியசாலிதான்...!

[ உங்களைப் போய் மற்ற எழுதாளருடன் ஒப்பிட்டது என் அறியாமையே....]

Nivas.T
22-02-2011, 01:27 PM
சுஜாத்தா ஒரு சரித்திரம்

நன்றி தக்ஸ்

கௌதமன்
22-02-2011, 03:41 PM
உங்களைப் போலவே சுஜாதாவின் வெறியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்.

உண்மையில் சுஜாதாதான் எனக்கு வாசித்தலின் சுகத்தை அறிமுகப்படுத்தியவர்.

அவர் எழுத்துலகில் தொடாத துறை என்று எதுவும் இல்லை.

அவர் பாதிப்பு இல்லாத, இன்று எழுதும் எழுத்தாளர்கள் இல்லை.

அவரின் பாதிப்பு இல்லாமல் இன்று எவரும் எழுத்தாளராக ஆக முடிவதில்லை.

அவரை விமர்சிக்கும் எழுத்தாளர்களும் அவரைப் படித்தே எழுத்தாளர்கள் ஆனார்கள்.

தமிழுலகம் உள்ளவரை சுஜாதாவின் பெயர் நிலைத்திருக்கும்.

அவர் நம்மைவிட்டு சென்று விட்டார் என்று எண்ண முடியவில்லை, கணேஷும் வசந்துமாக நம்மிடையேதான் இருக்கிறார்.

அமரன்
22-02-2011, 08:34 PM
ரொங்கராஜன்..

சுஜாதாவுக்கும் உங்களுக்கும் இடையிலான பந்தம் நீங்கள் மன்றம் வந்த நாள் முதலாக அறிந்ததே.

அனைத்தையும் கடந்து என்றும் நிலைக்கும் வல்லமை சுஜாதாவுக்கு அமைந்தமை நாம் செய்த பேறு.

சுஜாதா நினைவுப் போட்டி பற்றி முன் கூட்டியே திட்டமிட்டிருக்கலாம்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. சுஜாதா ஞாபகார்த்த போட்டியை ஆரம்பித்து விடலாம்.

பரிசாக என்ன வழங்கலாம்.. என்ன மாதிரிப் போட்டி நடத்தலாம் போன்றவற்றை ஆதனுடன் பேசுங்கள். முடிந்தால் நானும் உங்களுடன் அலைபேசுகிறேன்.

இம்முறை காலம் குறைவாக இருப்பதால் மன்ற நண்பர்கள் கருத்துகள் போட்டி அமைப்பில் எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தும் என்று சொல்ல முடியவில்லை. என்றாலும் உங்கள் கருத்துகளை ஓரிரு நாட்களுக்குள் எனக்கும் ஆதனுக்கும் அனுப்பிடுங்கள்.

மதி
23-02-2011, 05:15 AM
சுஜாதாவின் மீது உனக்கான காதலை அறிவேன் உன் கட்டுரையின் மூலம். சுஜாதா ஒரு சகாப்தம். அவரின் பல கதைகளை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரை மாதிரி எழுதுவதாய் நினைத்து சுட்டுக் கொண்டதும் உண்டு. நீ சொன்ன மாதிரி சுஜாதா நினைவு போட்டியினை நடத்த நான் வழிமொழிகிறேன். :)

ரங்கராஜன்
23-02-2011, 06:07 AM
ரங்கராஜன்,

சுஜாதா அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது கட்டுரை. நான் உங்கள் அளவுக்கு சுஜாதாவின் தீவிர ரசிகை இல்லையென்ற போதும் உங்கள் எழுத்துகளின் ரசிகை என்ற முறையில் என்னை வசீகரிக்கிறது உங்கள் ஆழ்மனதின் பகிர்வுகள். அந்த நண்பனுடன் விரைவில் உங்கள் நட்பு புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

நன்றி கீதம் அக்கா...

என்னது நீங்க சுஜாதாவின் தீவிர ரசிகையில்லையா...... ஆஆஆஆ.... உங்க மெயில் அட்ரஸை கொடுங்க, அவரின் எல்லா படைப்புகளையும் ஈ புக்கில் அனுப்பி வைக்கிறேன்.சுஜாதா பாணியில் நல்லதோர் கட்டுரை - சுஜாதாவின் நேர்மை திரி படித்தேன் அதில் தாங்கள் கூறி உள்ளபடி 25 பேர் தான் மயானத்தில்,... அப்படி பட்டவருக்கு தங்களின் ஆதங்கம் மனதை பிழிந்தது - இது தான் உலகம் இப்படி இருக்கையில் உங்கள் நெருங்கிய நண்பர் என்ன பாவம் செய்தார்.அவர் மேல் கோபப்படுவதில் அர்த்தமே இல்லையே.

என் பண்றும் பாவம் தான், உங்கள் கருத்துக்கு நன்றி.

எழுத்தாளர் சுஜாதாவை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமலே போய்விட்டது. அவரது மரணச் செய்தி கேட்டு இரண்டு மூன்று நாட்கள் எனக்கு என்னவோ போல் இருந்தது. ஆரம்பக் காலத்தில் அவர் எழுதிய கதைகளை ஒன்று விடாமல் வாசித்தவள் நான். அதற்குப் பிறகு ’கற்றதும் பெற்றதும்’ போன்ற அவரது கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அறிவியலை எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாக விளக்குவதில் கில்லாடி அவர். தமிழில் அறிவியல் கதைகளின் முன்னோடி அவர்.

அவரது சாவுக்கு 25 பேர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்பது வருந்தத்தக்க செய்தி.
சுஜாதாவின் நேர்மை என்ற உங்கள் கட்டுரையையும் இன்று தான் படித்தேன். மிகவும் நெகிழ்ச்சி தரும் அனுபவம். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

கலையரசி மேடம்

உங்களின் பாராட்டுக்கு நன்றி, நீங்கள் சுஜாதாவின் ரசிகரா, நீங்க அப்ப நம்மாளு....

எழுத்தின் தாக்கமும், எழுத்தாளர் மேல் கொண்ட ஈர்ப்பும்.....இத்தனை சக்தி வாய்ந்ததா....?

சுஜாதா அவர்களின் ஆசீர்வாதம் பெற்ற நீங்கள் பாக்கியசாலிதான்...!

[ உங்களைப் போய் மற்ற எழுதாளருடன் ஒப்பிட்டது என் அறியாமையே....]

நன்றி ஜானகி மேடம்...

சில வரிகளே பின்னூட்டம் இட்டாலும், அதில் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது... நீ எத்தனையாவது ரெங்க் வருவனு கேட்டால், குழந்தை கண்டிப்பா பஸ்டுனு தான் சொல்லும்...

அப்படித்தான் நானும் என்னை பொறுத்தவரை சுஜாதா நம்பர் ஒன்னு, அதற்காக மற்றவர்களை நான் குறைக்கவில்லை... அவர்களும் நம்பர் ஒன்னாக இருக்கலாம்... மற்றவர்களுக்கு...

இருந்தும் பழைய திரியில் என்னை நீங்கள் எழுத்தாளராக வரவேண்டும் என்று வாழ்த்தினீர்களே.. அதுவே போதும் மனமும், வயிறும் நிரம்பி விட்டது...

ஆத்மார்த்தமான நன்றிகள்..

சுஜாத்தா ஒரு சரித்திரம்

நன்றி தக்ஸ்

நன்றி பங்காளி....:aetsch013::aetsch013::aetsch013:

உங்களைப் போலவே சுஜாதாவின் வெறியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைக்கொள்கிறேன்.

உண்மையில் சுஜாதாதான் எனக்கு வாசித்தலின் சுகத்தை அறிமுகப்படுத்தியவர்.

அவர் எழுத்துலகில் தொடாத துறை என்று எதுவும் இல்லை.

அவர் பாதிப்பு இல்லாத, இன்று எழுதும் எழுத்தாளர்கள் இல்லை.

அவரின் பாதிப்பு இல்லாமல் இன்று எவரும் எழுத்தாளராக ஆக முடிவதில்லை.

அவரை விமர்சிக்கும் எழுத்தாளர்களும் அவரைப் படித்தே எழுத்தாளர்கள் ஆனார்கள்.

தமிழுலகம் உள்ளவரை சுஜாதாவின் பெயர் நிலைத்திருக்கும்.

அவர் நம்மைவிட்டு சென்று விட்டார் என்று எண்ண முடியவில்லை, கணேஷும் வசந்துமாக நம்மிடையேதான் இருக்கிறார்.

நன்றி கௌதமன்

நீங்களும் நம்ப ஆளுதான்... வாழ்த்துக்கள்...

ரொங்கராஜன்..

சுஜாதாவுக்கும் உங்களுக்கும் இடையிலான பந்தம் நீங்கள் மன்றம் வந்த நாள் முதலாக அறிந்ததே.

அனைத்தையும் கடந்து என்றும் நிலைக்கும் வல்லமை சுஜாதாவுக்கு அமைந்தமை நாம் செய்த பேறு.

சுஜாதா நினைவுப் போட்டி பற்றி முன் கூட்டியே திட்டமிட்டிருக்கலாம்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. சுஜாதா ஞாபகார்த்த போட்டியை ஆரம்பித்து விடலாம்.

பரிசாக என்ன வழங்கலாம்.. என்ன மாதிரிப் போட்டி நடத்தலாம் போன்றவற்றை ஆதனுடன் பேசுங்கள். முடிந்தால் நானும் உங்களுடன் அலைபேசுகிறேன்.

இம்முறை காலம் குறைவாக இருப்பதால் மன்ற நண்பர்கள் கருத்துகள் போட்டி அமைப்பில் எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தும் என்று சொல்ல முடியவில்லை. என்றாலும் உங்கள் கருத்துகளை ஓரிரு நாட்களுக்குள் எனக்கும் ஆதனுக்கும் அனுப்பிடுங்கள்.

அதெல்லாம் சரி அதுயாரு ரொங்கராஜன்

சரி அது யாரோ தெரியலை...

என் கோரிக்கையை ஏற்று, உடனடியாக போட்டி நடத்தலாம் என் ஒப்புக் கொண்டதற்கு நன்றிகள் அமரா...

அப்புறம் போட்டியை பற்றி ஆதன் கிட்ட பேசச் சொன்னாய், அதுக்கு நான் சுஜாதாவிடமே சென்று பேசி விடுவேன்... காரணம் அவன் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் மன்னு மாதிரி....... எப்ப பார்த்தாலும்

நான் ரொம்ப பிசிசி சிசிசிசிசிசிசசி... என்னு சொல்றான்... அலுவலகத்தில் எதாவது மவுஸ் மற்று கிபோர்ட்டை திருடி மாட்டிக் கொண்டு விட்டானா என்று தெரியவில்லை,.... ஆளே காணவில்லை,.. போன் போட்டாலும் எடுக்க மாட்றான்....

அவன் காலர் டியூனான

துஜே தெக்காகோயி ஜானா சனம்
பியாரு ஹோத்தா மெஹி

என்ற பாட்டை கேட்டு கேட்டு மண்டை குழம்பியது தான் மிச்சம்.... அந்த படத்தோட இசையமைப்பாளரை விட நான் அந்த பாட்டை அதிக முறை கேட்டு விட்டேன்......சில.அரசியல் வாதிகள் தமிழ் தமிழ்னு சொல்லிட்டு, பேரன்களை டெல்லியில் இந்தி படிக்க வைப்பாங்களே... அந்த மாதிரி இவன் தமிழ் தமிழ்னு சொல்லிட்டு, காலர் டியூன் பார்த்திங்களா...

இதைப்பற்றி நான் இதுவரை கேட்டதி்ல்லை, கேட்டால் என்ன சொல்லுவான் தெரியுமா....... இசைக்கு ஏதுடா மொழி.... அவனிடம் எல்லாத்துகும் ஒரு பதில் இருக்கும்.... சொல்லுவதுக்கு தான் நேரம் இருக்காது பாவம்....

அதனால் இந்த போட்டிகளை உடனடியாக அவசர அவசரமாக நடத்த வேண்டாம், பொறுமையாக யோசித்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டு, அப்புறம் கோலாகலமாக நடத்தலாம்..... வாழ்க்கையிலே தோற்காத மனிதனை, போட்டியின் என்ற பெயரில் யாரும் பங்கேற்காமல் தோல்வியடைய வைக்க நான் விரும்பவில்லை..

சுஜாதாவின் மீது உனக்கான காதலை அறிவேன் உன் கட்டுரையின் மூலம். சுஜாதா ஒரு சகாப்தம். அவரின் பல கதைகளை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரை மாதிரி எழுதுவதாய் நினைத்து சுட்டுக் கொண்டதும் உண்டு. நீ சொன்ன மாதிரி சுஜாதா நினைவு போட்டியினை நடத்த நான் வழிமொழிகிறேன். :)

நன்றி மச்சி,

பொறுமையா யோசித்து அதற்கான ஏற்பாட்டை செய்வோம்... நம் மன்றத்தில் நடக்கும் அடுத்த போட்டி அவரின் பெயரால் இருந்தால் சந்தோஷப்படுவேன்.

மதி
23-02-2011, 06:40 AM
நான் ரொம்ப பிசிசி சிசிசிசிசிசிசசி... என்னு சொல்றான்... அலுவலகத்தில் எதாவது மவுஸ் மற்று கிபோர்ட்டை திருடி மாட்டிக் கொண்டு விட்டானா என்று தெரியவில்லை,.... ஆளே காணவில்லை,.. போன் போட்டாலும் எடுக்க மாட்றான்....

அவன் காலர் டியூனான

துஜே தெக்காகோயி ஜானா சனம்
பியாரு ஹோத்தா மெஹி

என்ற பாட்டை கேட்டு கேட்டு மண்டை குழம்பியது தான் மிச்சம்.... அந்த படத்தோட இசையமைப்பாளரை விட நான் அந்த பாட்டை அதிக முறை கேட்டு விட்டேன்......
எனக்கும் அந்த சந்தேகம் உண்டு.. எப்போ பாத்தாலும் அந்த பழைய ஹிந்தி பாட்டே தானான்னு..?? என்ன காரணமோ? :icon_b:

ஆதி
23-02-2011, 06:47 AM
செய்துடலாம் டா..

டேய் இன்னைக்கு சாயுங்காலம் உனக்கு கால் பண்றேன் டா

ரங்கராஜன்
23-02-2011, 06:54 AM
செய்துடலாம் டா..

டேய் இன்னைக்கு சாயுங்காலம் உனக்கு கால் பண்றேன் டா

போடாங்க

நீ காலும் பண்ண வேணாம், கையும் பண்ண வேணாம், நீ கால் பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன்.....டேய் நாங்களும் உப்பு போட்ட கேஎஃப்சி சிக்கனும், பிசாவும் தான் சாப்பிடுறோம்....

நீ போன் பண்ணும் போது உடனே ஓடிவந்து எடுக்க நான் என்ன டெலிவரி பாயா....... அதனால நீ ஒரு வெங்காயத்திற்கும் போன் செய்ய வேண்டாம்...:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:

Nivas.T
23-02-2011, 06:54 AM
நன்றி பங்காளி....:aetsch013::aetsch013::aetsch013:

:D:D:D:D:D

Nivas.T
23-02-2011, 06:57 AM
அவன் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் மன்னு மாதிரி....... எப்ப பார்த்தாலும்

நான் ரொம்ப பிசிசி சிசிசிசிசிசிசசி... என்னு சொல்றான்... அலுவலகத்தில் எதாவது மவுஸ் மற்று கிபோர்ட்டை திருடி மாட்டிக் கொண்டு விட்டானா என்று தெரியவில்லை,.... ஆளே காணவில்லை,.. போன் போட்டாலும் எடுக்க மாட்றான்....:D:D:D:D:D:D

மதி
23-02-2011, 06:58 AM
போடாங்க

நீ காலும் பண்ண வேணாம், கையும் பண்ண வேணாம், நீ கால் பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன்.....டேய் நாங்களும் உப்பு போட்ட கேஎஃப்சி சிக்கனும், பிசாவும் தான் சாப்பிடுறோம்....

நீ போன் பண்ணும் போது உடனே ஓடிவந்து எடுக்க நான் என்ன டெலிவரி பாயா....... அதனால நீ ஒரு வெங்காயத்திற்கும் போன் செய்ய வேண்டாம்...:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:
ஆதன என்ன வேணா சொல்லு.. வெங்காயத்த பத்தி எழுதிய நீயே இப்படி தரக்குறைவாய் எழுதியதை வன்மையா கண்டிக்கறேன்..

ஆதி
23-02-2011, 07:01 AM
எனக்கும் அந்த சந்தேகம் உண்டு.. எப்போ பாத்தாலும் அந்த பழைய ஹிந்தி பாட்டே தானான்னு..?? என்ன காரணமோ? :icon_b:

உயிருருகி உயிருருகி கண்ணீராய் வழிகிறது
உள்ளத்தை உணர்வுகளை உன்நினைவு பிழிகிறது..

என்னைக்கோ நான் எழுதுனது, இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் நான் எழுதினதை, அப்படியே உணர்வேன்..

அது போல நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி..

இந்த பாட்டு கிடைக்கல இல்ல இததான் வைச்சிருப்பேன்...

ஏக் லடுகி கோ தேகா தோ ஹெசா லகா,

ஜெசே...

...................
........................

இந்த பாட்ட கூட தேடிட்டு இருக்கேன்..

சில பாட்டு பழய விசயங்கள இளமையா வச்சுக்கும், அப்படி பட்டவைகள் தான் இந்த பாடல்களும்...

ஆதி
23-02-2011, 07:03 AM
ஆதன என்ன வேணா சொல்லு.. வெங்காயத்த பத்தி எழுதிய நீயே இப்படி தரக்குறைவாய் எழுதியதை வன்மையா கண்டிக்கறேன்..

சப்போட் தான் பண்றீங்க னு பார்த்தேன் மதி..

ஆதி
23-02-2011, 07:05 AM
போடாங்க

நீ காலும் பண்ண வேணாம், கையும் பண்ண வேணாம், நீ கால் பண்ணாலும் நான் எடுக்க மாட்டேன்.....டேய் நாங்களும் உப்பு போட்ட கேஎஃப்சி சிக்கனும், பிசாவும் தான் சாப்பிடுறோம்....

நீ போன் பண்ணும் போது உடனே ஓடிவந்து எடுக்க நான் என்ன டெலிவரி பாயா....... அதனால நீ ஒரு வெங்காயத்திற்கும் போன் செய்ய வேண்டாம்...:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:

சரி மச்சி அப்ப நீயே ஃபோன் பண்ணு... :D

(கொஞ்ச நேரத்துக்கு இந்த திரி பக்கம் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்) :D :D :D

Nivas.T
23-02-2011, 07:10 AM
கொஞ்ச நேரத்துக்கு இந்த திரி பக்கம் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் :D :D :D

:eek::D:Dஅச்சச்சோ......... ரொம்ப நேரமா....நான் இங்கதானே... இருக்கேன்:aetsch013::aetsch013::aetsch013::D:D:D

sarcharan
23-02-2011, 07:15 AM
போடாங்க

நாங்களும் உப்பு போட்ட கேஎஃப்சி சிக்கனும், பிசாவும் தான் சாப்பிடுறோம்....

ஐயோ தக்சு நீர் புலால் உண்பவரா.. கோழிகள் பாவமாயிற்றே :p

கீதம்
23-02-2011, 08:01 AM
நன்றி கீதம் அக்கா...

என்னது நீங்க சுஜாதாவின் தீவிர ரசிகையில்லையா...... ஆஆஆஆ.... உங்க மெயில் அட்ரஸை கொடுங்க, அவரின் எல்லா படைப்புகளையும் ஈ புக்கில் அனுப்பி வைக்கிறேன்.

ரங்கராஜன்,

அவரைப் படிக்கக்கூடாதுன்னு எதுவும் இல்லை. எனக்கு வாய்ப்பு அமையவே இல்லை. கதைகள் படிக்க ஆர்வமுடன் அலைந்த காலத்தில் எங்கள் வீட்டில் கதைப் புத்தகங்களுக்கு பெரும் தடை. சிறு வயதில் அம்புலிமாமா படித்ததோடு சரி, பல வருடங்களுக்குப் பிறகு எனக்குப் படிக்கக் கிடைத்தவை ஜெயகாந்தனின் படைப்புகள். அதனாலே அவர்மீது ஒரு ஈர்ப்பு இன்றளவும் இருக்கிறது. மற்றவர்களுடைய படைப்புகளை ஓரளவுதான் வாசித்திருக்கிறேன். இப்போதுதான் என் வாசிப்புப் பசிக்கு இணையவழியாக தீனிபோட்டுக்கொண்டிருக்கின்றேன். :icon_b:அதெல்லாம் சரி அதுயாரு ரொங்கராஜன்

நானே கேட்கலாம்னு நினைச்சேன். நீங்க கேட்டுட்டீங்க.:D

அப்புறம் போட்டியை பற்றி ஆதன் கிட்ட பேசச் சொன்னாய், அதுக்கு நான் சுஜாதாவிடமே சென்று பேசி விடுவேன்... காரணம் அவன் மண்ணு மாதிரி.......

அடப்பாவமே.... இது எப்போதிலிருந்து?:lachen001:

sarcharan
23-02-2011, 08:04 AM
சுஜாதாவின் உண்மையான பேரு ரங்கராஜன்
அதுதான் நம்ம தக்சின் புனைபெயர்...
ஹீ ஹீ சரிதானா தகஸ்?

சத்யராஜின் இயற்பெயரும் ரங்கராஜன் தானாம்

அமரன்
23-02-2011, 11:07 AM
நயாகரா நினைவுகளில் சுஜாதா ஒருவரைப் பற்றிச் சொல்லி இருப்பார். அவர் சுஜாதாவை ரொங்கராஜன் என்றுதான் அழைத்தாராம். சுஜாதா நினைவிழையில் அதனை நினைவுகூரும் விதமாக ....

மதி
23-02-2011, 11:59 AM
நயாகரா நினைவுகளில் சுஜாதா ஒருவரைப் பற்றிச் சொல்லி இருப்பார். அவர் சுஜாதாவை ரொங்கராஜன் என்றுதான் அழைத்தாராம். சுஜாதா நினைவிழையில் அதனை நினைவுகூரும் விதமாக ....
நல்ல சமாளிஃபிகேஷன்.. அதென்ன புதுமாப்பிள்ளை எட்டிபாத்துட்டு இருக்காரு..?

செல்வா
23-02-2011, 11:59 AM
சுஜாதாவை எனக்கு அறிமுகப் படுத்தியது ஒரு விதத்தில் சொல்லப்போனால் தக்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். சுஜாதாவைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்ததில்லை. தக்ஸின் சுஜாதாவின் நேர்மை திரியும், சுஜாதாவின் அஞ்சலித் திரியில் இளசு அண்ணாவின் வரிகளும் அவர் படைப்புகளைத் தேடத்தூண்டின. இப்போது நானும் சுஜாதாவின் வாசகனே.

மீண்டும் சுஜாதாவின் நினைவுகளை மலர வைத்த திரியிது ரங்கராஜன்.

சுஜாதா நினைவுச் சிறப்பு போட்டியினூடு கூட தமிழ் மன்றத்தில் சுஜாதா விருதுப் பதக்கம் ஒன்றை உருவாக்கி ஆறுமாதத்திற்கொருமுறை பல துறைகளிலும் சிறப்பாகப் பங்களிக்கும் உறுப்பினருக்கு அதை வழங்கலாம்.

இது போல இன்னும் பல விருதுகளையும் மன்றில் அறிமுகப் படுத்தலாம்.

மதி
23-02-2011, 12:01 PM

வாங்கைய்யா..
சுஜாதான்னதும் நினைவுக்கு வருவது அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான்.. ஏன் போட்டியும் அறிவியல் சம்பந்தமா வைக்கக்கூடாது?

ரங்கராஜன்
23-02-2011, 12:46 PM
சுஜாதாவை எனக்கு அறிமுகப் படுத்தியது ஒரு விதத்தில் சொல்லப்போனால் தக்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். சுஜாதாவைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்ததில்லை. தக்ஸின் சுஜாதாவின் நேர்மை திரியும், சுஜாதாவின் அஞ்சலித் திரியில் இளசு அண்ணாவின் வரிகளும் அவர் படைப்புகளைத் தேடத்தூண்டின. இப்போது நானும் சுஜாதாவின் வாசகனே.

மீண்டும் சுஜாதாவின் நினைவுகளை மலர வைத்த திரியிது ரங்கராஜன்.

சுஜாதா நினைவுச் சிறப்பு போட்டியினூடு கூட தமிழ் மன்றத்தில் சுஜாதா விருதுப் பதக்கம் ஒன்றை உருவாக்கி ஆறுமாதத்திற்கொருமுறை பல துறைகளிலும் சிறப்பாகப் பங்களிக்கும் உறுப்பினருக்கு அதை வழங்கலாம்.

இது போல இன்னும் பல விருதுகளையும் மன்றில் அறிமுகப் படுத்தலாம்.

வாய்யா புதுமாப்பிள்ளை

வாழ்க்கை எப்படி போகுது... உன்னுடைய ஐடியா நல்லா இருக்கே அப்படியே செய்யலாமே......

சூரியன்
23-02-2011, 02:32 PM
சுஜாதாவை எனக்கு அறிமுகப் படுத்தியது ஒரு விதத்தில் சொல்லப்போனால் தக்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். சுஜாதாவைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்ததில்லை. தக்ஸின் சுஜாதாவின் நேர்மை திரியும், சுஜாதாவின் அஞ்சலித் திரியில் இளசு அண்ணாவின் வரிகளும் அவர் படைப்புகளைத் தேடத்தூண்டின. இப்போது நானும் சுஜாதாவின் வாசகனே.

மீண்டும் சுஜாதாவின் நினைவுகளை மலர வைத்த திரியிது ரங்கராஜன்.

சுஜாதா நினைவுச் சிறப்பு போட்டியினூடு கூட தமிழ் மன்றத்தில் சுஜாதா விருதுப் பதக்கம் ஒன்றை உருவாக்கி ஆறுமாதத்திற்கொருமுறை பல துறைகளிலும் சிறப்பாகப் பங்களிக்கும் உறுப்பினருக்கு அதை வழங்கலாம்.

இது போல இன்னும் பல விருதுகளையும் மன்றில் அறிமுகப் படுத்தலாம்.இந்த யோசனையை செயல்படுத்தலாமே.