PDA

View Full Version : தப்பிப் பிழைக்க வழியுண்டா?



M.Jagadeesan
21-02-2011, 04:04 PM
மதுவிலே விழுந்து
மயங்கிக் கிடப்பவனுக்குக் கூட
மனம் திருந்தினால்
மறுவாழ்வு உண்டு.

கடமையை மறந்து
காதலில் விழுந்து
தோல்வி கண்டவன் கூட
கடைத்தேற வாய்ப்புண்டு.

நோயிலே விழுந்து
பாயிலே படுத்து
மரணம் வரை சென்றவன் கூட
மறுபடியும் வாழ வழியுண்டு.

நட்டமடைந்து
நடுத்தெருவுக்கு வந்த
வியாபாரிக்குக் கூட
விடிவுகாலம் உண்டு.

கடலிலே விழுந்த
கதிரவன் கூட
காலையில் கிழக்கில் உதிப்பதுண்டு.

ஆனால்
தமிழ்க் கடலிலே விழுந்தவனுக்குத்
தப்பிப் பிழைக்க வழியேதும் உண்டா? எனத்
தயவுடனே செப்பிடுவீர்!

அக்னி
21-02-2011, 04:15 PM
தமிழ்க்கடலில் விழுந்தவன் மூழ்கிப்போகமால்
இன்பத்தெப்பத்தில் மிதக்கும்வரையில்
முயற்சியே இராதே...

ஆனாலும்,
இதே தெப்பத்தில்,
இக்கடலைத் தாண்ட
நினைப்போரும்
இருக்கத்தானே செய்கின்றனர்...

வித்தியாசமான பார்வை. பாராட்டு...

M.Jagadeesan
21-02-2011, 04:22 PM
அக்னி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கீதம்
21-02-2011, 07:40 PM
தமிழ் ஒரு மாக்கடல்!
எவரையும் மூழ்கடிக்கா சாக்கடல்!
தமிழ் இன்பப் பாக்கடல்!
கடையக் கடைய அமுதம் அளிக்கும் பாற்கடல்!

உண்மை விளம்பினீர்கள். பாராட்டுகள்.

M.Jagadeesan
22-02-2011, 12:51 AM
நன்றி! கீதம் அவர்களுக்கு!

உமாமீனா
22-02-2011, 02:32 AM
ஆகா...அழகாக வர்ணித்து உள்ளீர்கள் சரியான எடுத்துக்காட்டுகளுடன் - உமது வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள் - தமிழ் தமிழ் தமிழ் வாழ்க தமிழ்

M.Jagadeesan
22-02-2011, 02:40 AM
உமாமீனாவுக்கு நன்றி!

அக்னி
22-02-2011, 06:29 AM
தமிழ் ஒரு மாக்கடல்!
எவரையும் மூழ்கடிக்கா சாக்கடல்!
தமிழ் இன்பப் பாக்கடல்!
கடையக் கடைய அமுதம் அளிக்கும் பாற்கடல்!

உண்மை விளம்பினீர்கள். பாராட்டுகள்.

நன்றே விளம்பினீர்கள் அக்கா...
பாராட்டு...

கீதம்
22-02-2011, 06:39 AM
நன்றே விளம்பினீர்கள் அக்கா...
பாராட்டு...

நன்றி அக்னி.

நதி
22-02-2011, 06:41 AM
அந்த அந்தப்பந்தி
நொந்தவன் புலம்பலோ?
கற்றது தமிழானால்
பெற்றது தமிழனால்...??

நன்றே சொன்னீர்.

உப்புக் கரிக்கும் அளவில்
கொட்டுகிறது கண்ணீர் இன்னும்.

Nivas.T
22-02-2011, 06:55 AM
அழகான கவிதை
வித்யாசமான கண்ணோட்டம்
பாராட்டுகள் அன்பரே