PDA

View Full Version : இரவுக் காலம்!



ரசிகன்
21-02-2011, 09:52 AM
பின்னிரவுகள்.,
ஒரு நாள் கணக்கு
நமக்கு!

நம்முலகை
இவ்விரவுகள் தத்தெடுத்திருப்பதாக
தொலைப்பேசிகள் பேசிக்கொள்கின்றன!

என்ன தொடங்கினோம்?
ஹ்ம்ம் என்பதாகவே
முடிவுறுகிறது உரையாடல்கள்!

பல
கணம் கடந்த காதலை
காமத்தின் ஒற்றை சொல்லில்
திணித்து வைத்திட
எண்ணமில்லை இருவருக்கும்!

காதல் தான்
நம்மை பேசிக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை காதலித்துக்கொண்டிருக்கிறது!

உன்னை
தூங்க வைப்பதாய் நானும்
என்னை
தூங்க வைப்பதாய் நீயும்
ஒவ்வொரு பின்னிரவிலும்
தோற்றுப்போகிறோம் சேவலின் கூவலில்!

Nivas.T
21-02-2011, 10:46 AM
இரவு இன்னும் நீளாதா
என்னும் ஏக்கம் தொனிக்கும்
பேசிமுடிக்கும் ஒவ்வொரு முறையும்

அனுபவத்தின் தொகுப்பு மிக அழகு ரசிகன்

ரசிகன்
24-02-2011, 08:35 AM
நன்றி நிவாஸ்! :):):)

உமாமீனா
06-04-2011, 09:01 AM
உண்மை தானே............அருமை

முரளிராஜா
06-04-2011, 09:57 AM
காதலிக்கும் பொழுது
இப்படித்தான் இருக்கும்
அப்புறம்தான்................................

ரசிகனின் ரசிக்கவைத்த கவிதை
வாழ்த்துக்கள்

உமாமீனா
06-04-2011, 10:41 AM
காதலிக்கும் பொழுது
இப்படித்தான் இருக்கும்
அப்புறம்தான்................................

ரசிகனின் ரசிக்கவைத்த கவிதை
வாழ்த்துக்கள்

எல்லோரும் காதலிக்கிறார்கள்

பின் ஒரு நாளில் வருத்தபடுகிறார்கள்

சிலர் சேர்ந்ததுக்ககாக சிலர் பிரிந்ததர்ககாக

அக்னி
06-04-2011, 01:44 PM
பற்றுச்சீட்டுக் கண்டதும்
பற்றுத் தொடர்ந்தால்
அது காதல்...
பற்றி எரிந்தால்
அது சும்மா டைம்பாஸ்...

*****
எத்தனை மெதுவாய்ப் பேசினாலும்
விளங்கிக் கொள்வேன்...
எவ்வளவு சூடாகிப் போனாலும்
தாங்கிக் கொள்வேன்...
ஆனால்,
படுக்கைக்கு முன்
பல்துலக்கா உன்
ஈரமுத்தத்தைத் தான்
சகித்துக்கொள்ள முடியவில்லை...
உன் காதல் அவசரத்துக்காக
அவஸ்தைப்பட
நான் என்ன உன் காத லனா/லியா...
‘இச்’சத்தத்தைக் காவிச்செல்லும்
‘அலைபேசி’தானே என்ற அலட்சியத்தை
தயைசெய்து இன்றோடு நிறுத்திவிடு... :D

முரளிராஜா
06-04-2011, 01:53 PM
எத்தனை மெதுவாய்ப் பேசினாலும்
விளங்கிக் கொள்வேன்...
எவ்வளவு சூடாகிப் போனாலும்
தாங்கிக் கொள்வேன்...
ஆனால்,
படுக்கைக்கு முன்
பல்துலக்கா உன்
ஈரமுத்தத்தைத் தான்
சகித்துக்கொள்ள முடியவில்லை...
உன் காதல் அவசரத்துக்காக
அவஸ்தைப்பட
நான் என்ன உன் காத லனா/லியா...
‘இச்’சத்தத்தைக் காவிச்செல்லும்
‘அலைபேசி’தானே என்ற அலட்சியத்தை
தயைசெய்து இன்றோடு நிறுத்திவிடு... :D


சொன்னது அக்னியின் அலைபேசி

காப்பி பேஸ்ட் வேண்டாம்னு சொன்னது மன்றத்தில் கருத்துபதிவுக்குதான்
அக்னி அத தப்பா புரிஞ்சிகிட்டு பல்லே தேய்ப்பதில்லை போல

பாவம் அவரது அலைபேசி:D:D

ஆமாம் யாருகிட்ட பேசினிங்க
இங்கே சொல்ல கூச்சமாக இருந்தால் தனிமடலில் தெரிவிக்கவும்

அக்னி
06-04-2011, 04:54 PM
நித்திரைக்கு முன்
அப்போதும் இப்போதும்
அணைக்கின்றேன்
அலைபேசியை...

அப்பொழுது
அவளைத் தேடி..
இப்பொழுது
அதனைத் தேடாதிருக்க...

முரளிராஜா... மேலே சொன்னது புரிஞ்சதா...
போற போக்கில கும்மியடிச்சுட்டுப் போயிடாதீங்க...

ஆமா... நீங்க எதால பல்லைத் தேய்க்கிறனீங்க...???

இளசு
08-04-2011, 06:50 AM
அன்னம் முதல்
அலைபேசி வரை

தூதர்கள் நிலையைப் பாடியவர்கள் எவர்?

ரசிகனின் கவிதையும்
அக்னியின் தொடர்படைப்பும் நன்று.


பாராட்டுகள்!

உமாமீனா
11-04-2011, 07:53 AM
முரளிராஜா...
ஆமா... நீங்க எதால பல்லைத் தேய்க்கிறனீங்க...???

அப்பு அவருதான் கேட்கிறாருள்ளே - பதிலை காணோம்?

பிரேம்
11-04-2011, 12:28 PM
நீங்காட்டி...ஒரு வார்த்த சொல்லு நைனா..அந்த சேவல கைமா பண்ணிடுவோம்..

ஷீ-நிசி
11-04-2011, 01:07 PM
கடைசி வரிகள் அழகு!

ரசிகன்
12-04-2011, 11:03 AM
உண்மை தானே............அருமை
நன்றி தோழி :):):)

ரசிகன்
12-04-2011, 11:03 AM
காதலிக்கும் பொழுது
இப்படித்தான் இருக்கும்
அப்புறம்தான்................................

ரசிகனின் ரசிக்கவைத்த கவிதை
வாழ்த்துக்கள்
காதலிக்கிற வரையிலும் அப்படித்தான் இருக்கும்! அது தான் காதல்! :)
நன்றி தோழர்! :)

ரசிகன்
12-04-2011, 11:08 AM
பற்றுச்சீட்டுக் கண்டதும்
பற்றுத் தொடர்ந்தால்
அது காதல்...
பற்றி எரிந்தால்
அது சும்மா டைம்பாஸ்...

*****
எத்தனை மெதுவாய்ப் பேசினாலும்
விளங்கிக் கொள்வேன்...
எவ்வளவு சூடாகிப் போனாலும்
தாங்கிக் கொள்வேன்...
ஆனால்,
படுக்கைக்கு முன்
பல்துலக்கா உன்
ஈரமுத்தத்தைத் தான்
சகித்துக்கொள்ள முடியவில்லை...
உன் காதல் அவசரத்துக்காக
அவஸ்தைப்பட
நான் என்ன உன் காத லனா/லியா...
‘இச்’சத்தத்தைக் காவிச்செல்லும்
‘அலைபேசி’தானே என்ற அலட்சியத்தை
தயைசெய்து இன்றோடு நிறுத்திவிடு... :D
அடடா... தோழர்!
என் ஒவ்வொரு படைப்புக்கும் நீங்கள் தரும் பின்னூட்டம் என் அடுத்த படைப்புக்கு ஒரு உந்துதலாகவே அமைகிறது....
நன்றி சொல்ல என்றும் கடமை பட்டிருக்கிறேன் உங்களுக்கு...

நன்றி அக்னி :)

ரசிகன்
12-04-2011, 11:09 AM
அன்னம் முதல்
அலைபேசி வரை

தூதர்கள் நிலையைப் பாடியவர்கள் எவர்?

ரசிகனின் கவிதையும்
அக்னியின் தொடர்படைப்பும் நன்று.


பாராட்டுகள்!
நன்றி தோழர்! :)

ரசிகன்
12-04-2011, 11:10 AM
நீங்காட்டி...ஒரு வார்த்த சொல்லு நைனா..அந்த சேவல கைமா பண்ணிடுவோம்..
:):):)

ரசிகன்
12-04-2011, 11:11 AM
கடைசி வரிகள் அழகு!
நன்றி நன்றி நன்றி ஷி நிசி :):):)