PDA

View Full Version : என் அன்பிற்குரிய!



ரசிகன்
21-02-2011, 09:49 AM
வெள்ளோட்டமாய்
தொடங்கிய தனிமை...

எவ்வுயிர்கள் குழுமியிருப்பினும்
நாற்சுவர்களுக்குள்
அடைபட்டிருந்த ஒரு உலகம்!

விட்டம் அதன் வானம்..
மௌனம் அதன் காற்று..
தனிமை அதன் மக்கள்!
பரபரப்புகள் அற்ற
நினைவுகள்
என் அன்பிற்குரிய
இவ்வுலகத்தின் பிரதிவாதிகள்!

வந்த எல்லோருக்கும்
ஆளுக்கொரு கோப்பையென
பகிர்ந்தளித்து விட்டேன்...

சூடு தணிவதற்குள்
பருகியாக வேண்டும்
தேநீரை!

பிரேம்
21-02-2011, 10:44 AM
எனக்கொரு கப் கிடைக்குமா..??!!

ராஜாராம்
21-02-2011, 10:58 AM
எனக்கொரு கப் கிடைக்குமா..??!!

என்னா ஒரு நக்கலு!!!!!? :mad:
ஒருமனுஷன் சீரியஸா....சொல்றதைக்கேட்க்காமல்...
காமெடி பன்னுறீங்க.... :sauer028:
பிரேம் ,உங்களைச் சொல்லி குத்தம்மில்லை...
உங்க சேர்க்கை அப்படி.... :lachen001:
(முரளிராசா கூட்டணி வெச்சா அப்படித்தான்...இருக்கும்.. :lachen001:)

முரளிராஜா
21-02-2011, 11:02 AM
ரசிகனின் ரசிக்க படவேண்டிய கவிதைகளில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள்

முரளிராஜா
21-02-2011, 11:04 AM
எனக்கொரு கப் கிடைக்குமா..??!!
நான் தரேன் பிரேம் :food-smiley-008:

பிரேம்
21-02-2011, 11:09 AM
என்னா ஒரு நக்கலு!!!!!? :mad:
ஒருமனுஷன் சீரியஸா....சொல்றதைக்கேட்க்காமல்...
காமெடி பன்னுறீங்க.... :sauer028:
பிரேம் ,உங்களைச் சொல்லி குத்தம்மில்லை...
உங்க சேர்க்கை அப்படி.... :lachen001:
(முரளிராசா கூட்டணி வெச்சா அப்படித்தான்...இருக்கும்.. :lachen001:)

பொறாமை..!!!

உமாமீனா
21-02-2011, 11:09 AM
பீருக்கும், தேனிருக்கும் இப்படியா அலைவார்கள்

sarcharan
21-02-2011, 11:17 AM
ஆபீஸ் பார்டிகள் ஞாபகத்துக்கு வருகுது..

ரசிகன்
24-02-2011, 08:32 AM
:):lachen001::aetsch013:

கலாசுரன்
25-02-2011, 07:36 AM
சூடு தணியும் முன் வாசிக்கவேண்டிய கவிதை...!!!
அருமை சதீஷ் ....:)

கலாசுரன்
26-02-2011, 06:35 AM
விட்டம் அதன் வானம்..
மௌனம் அதன் காற்று..
தனிமை அதன் மக்கள்!
பரபரப்புகள் அற்ற
நினைவுகள்
என் அன்பிற்குரிய
இவ்வுலகத்தின் பிரதிவாதிகள்!


சிந்தனையை அதீதமாய்த் தூண்டிய வரிகள் சதீஷ் ..!!
வாழ்த்துக்கள்..:)

ரசிகன்
28-02-2011, 09:08 AM
நன்றி
கலாசுரன்...

எல்லாம் உங்க வழிகாட்டுதல் தான் :):):):):):):):):)

அக்னி
08-03-2011, 11:12 AM
தனிமை ரசிக்கத்தக்கதுதான்...
தினம் தினம் வெள்ளோட்டமாகவே
ரசிக்கலாம்...
ஆனால்,
எல்லாம் இருக்குமிடத்தில்
தனிமையும் இருந்தால் மட்டுமே
ரசிப்பிற்குரியதாகும்...

எதுவுமே இல்லாமல்,
தனிமை மட்டும் இருந்தால்,
அது பைத்தியமாக்கிவிடும்...

தேநீர்க் கோப்பையோடு தனிமையாயிருத்தல்
இனிக்கலாம்...
அதற்காகத்
தேநீர்க் கோப்பைக்குள் தனிமையாயிருத்தல்
இயலுமா...

பாராட்டு ரசிகனுக்கு...

ரசிகன்
13-03-2011, 08:38 AM
தனிமை ரசிக்கத்தக்கதுதான்...
தினம் தினம் வெள்ளோட்டமாகவே
ரசிக்கலாம்...
ஆனால்,
எல்லாம் இருக்குமிடத்தில்
தனிமையும் இருந்தால் மட்டுமே
ரசிப்பிற்குரியதாகும்...

எதுவுமே இல்லாமல்,
தனிமை மட்டும் இருந்தால்,
அது பைத்தியமாக்கிவிடும்...

தேநீர்க் கோப்பையோடு தனிமையாயிருத்தல்
இனிக்கலாம்...
அதற்காகத்
தேநீர்க் கோப்பைக்குள் தனிமையாயிருத்தல்
இயலுமா...

பாராட்டு ரசிகனுக்கு...
மிக நுணுக்கமாய் ... ஒரு ஊக்குவித்தலை போலவே இருக்கிறது உங்கள் பின்னூட்டம்! நன்றி :)

ஜானகி
13-03-2011, 10:15 AM
தனிமைத் தேநீர் குடித்த பிரதிவாதி நினைவுகள் மீண்டும் வருவார்கள் கவிதை மலர்களோடு... உங்கள் காயத்தை ஆற்ற....பகிர்ந்து கொள்வதால் குறைவது, தனிமையிலும், துக்கத்திலும் மட்டும் தான்...

ரசிகன்
27-03-2011, 07:31 PM
தனிமைத் தேநீர் குடித்த பிரதிவாதி நினைவுகள் மீண்டும் வருவார்கள் கவிதை மலர்களோடு... உங்கள் காயத்தை ஆற்ற....பகிர்ந்து கொள்வதால் குறைவது, தனிமையிலும், துக்கத்திலும் மட்டும் தான்...
நன்றி ஜானகி :-)