PDA

View Full Version : தாயுமானவள்..!



பூமகள்
21-02-2011, 01:52 AM
http://1.bp.blogspot.com/-WgHu69nDCsU/TWHR5VlM-mI/AAAAAAAACt0/0UPbHbVigYI/s400/mom_child.jpg (http://1.bp.blogspot.com/-WgHu69nDCsU/TWHR5VlM-mI/AAAAAAAACt0/0UPbHbVigYI/s1600/mom_child.jpg)




அதிகாலை என்றுமே
அப்படித் தான் ஆரம்பிக்கும்..

கண் மலர்ந்ததும்
மலரும் உன்னில்
என் பெயர்…

அழைப்பின் வேர்கள்
சமையல், தேடல்
என எதுவாகினும்
எனை அழைப்பதன்றி
முற்றுபெறாது உன் கேள்விகள்..

மிரட்டி, உருட்டி
காலை உணவு கொடுத்து
மதிய சாதம் வரை கட்டி
பையிலிட்டு அவசரகதியிலும்
அரவணைத்து வழியனுப்ப..

முதுகுச்சுமை பற்றி
பள்ளிக் குழந்தையாய்
நீ நடக்க..

ஒவ்வொரு காலையிலும்
முதல் நாள் பள்ளியனுப்பும்
மழலையின் தாயாய்
கண்ணில் நீர் தெறிக்க
உன் தாயானேன் நான்..!!

பிரேம்
21-02-2011, 02:59 AM
கவிதை அருமை..கொடுத்து வைத்த குழந்தை..:)
எங்க அம்மா என்னை அனுப்பிட்டு..
எங்கேயும் ஓடிருவேனொன்னு
புளியங்குச்சிய..கையில் எடுத்துட்டு வருவாங்க..:eek::traurig001:

கீதம்
21-02-2011, 05:02 AM
இப்படி நீங்கள் உணர்வதை அந்த வளர்ந்த குழந்தையின் தாயறிவாரா?

புன்னகைத்தேன் பூமகள்.:) பாராட்டுகள் பூவுக்கும் வேருக்கும்.

பூமகள்
21-02-2011, 09:18 AM
நன்றிகள் பிரேம். :)

--
ஹா ஹா.. அதை நானறியேன் அக்கா. ;)

நன்றிகள் அக்கா.

அக்னி
21-02-2011, 10:31 AM
தரிக்காமல் சுமக்காமல்
தாயுமாகும் தன்மை
மனைவிக்கு மட்டுமே
சாத்தியம்...
கணவனுக்கோ பெரும்
பாக்கியம்...

நகராத கடிகார முட்களில்
முறைப்பு...
பசியாத போதும் உணவுத்
திணிப்பு...
அ‘சதி’த் தூக்கம்,
அழைக்காத மணியின்
ஓசையிற் குலைய,
பதறியெழுந்து பார்த்தால்
இன்னும் சொற்ப நேரம்
இருக்கும்,
அதிக நேரமாய்...

அன்பு என்றும் நிலவட்டும்...

அமரன்
24-02-2011, 05:23 PM
உங்கள் உள்ளம் பளிச்சிடுகிறது பூமகள்.

அது சரி... முதல் நாள் பள்ளி போகும் பிள்ளையைப் பார்த்து அம்மா என் அழுகிறார்?

பூமகள்
25-02-2011, 05:48 AM
தரிக்காமல் சுமக்காமல்
தாயுமாகும் தன்மை
மனைவிக்கு மட்டுமே
சாத்தியம்...
கணவனுக்கோ பெரும்
பாக்கியம்...

அன்பு என்றும் நிலவட்டும்...
உண்மை தான்..

இக்கருத்தை எவரேனும் நிச்சயம் சொல்வார்கள் என்றே எண்ணியிருந்தேன்.. அக்னி அண்ணா சொன்னதில் பெருமகிழ்ச்சி..
நன்றிகள் அக்னி அண்ணா.. :)

பூமகள்
25-02-2011, 06:05 AM
உங்கள் உள்ளம் பளிச்சிடுகிறது பூமகள்.
அது சரி... முதல் நாள் பள்ளி போகும் பிள்ளையைப் பார்த்து அம்மா என் அழுகிறார்?
நன்றி அண்ணா..
அதுவரை காலைச் சுற்றிக் கொண்டிருந்த குழந்தையின் பிரிவுத் துயர் தாக்குவதாலோ??!!:icon_rollout:

Nivas.T
25-02-2011, 07:16 AM
பாசத்தின் தொகுப்பாய்
பா வரைந்தால்
படிக்காமல் போகத்தான்
மனம் விழைந்திடுமா

அழகான கவிதை பூ

அதுவும் அந்த இறுதி வரிகள்
அற்ப்புதம்

கலாசுரன்
25-02-2011, 07:39 AM
வலிகொண்ட அழகு..!!!

அக்னி
25-02-2011, 01:13 PM
அது சரி... முதல் நாள் பள்ளி போகும் பிள்ளையைப் பார்த்து அம்மா என் அழுகிறார்?
ஆனந்தக்கண்ணீர் ஒரு கண்ணில்...
பிரிவுக்கண்ணீர் மறு கண்ணில்...

அமரன்
28-02-2011, 07:42 PM
நன்றி அண்ணா..
அதுவரை காலைச் சுற்றிக் கொண்டிருந்த குழந்தையின் பிரிவுத் துயர் தாக்குவதாலோ??!!:icon_rollout:

தனிமடலில் ஒரு கருத்து வந்துச்சு..

என்னையே இந்தப் பாடு படுத்துறானே.. டீச்சரை என்ன பாடு படுத்துவானோ என்று அம்மா அழுகுறாங்களாம்..

அக்னி
28-02-2011, 08:14 PM
டீச்சரை என்ன பாடு படுத்துவானோ என்று அம்மா அழுகுறாங்களாம்..
ஆமா...ஒரு டவுட்டு...
இங்க டீச்சர் யாரு...???

ஷீ-நிசி
06-03-2011, 12:36 PM
ஆனா இந்த பசங்க படுத்தற பாடு இருக்கே... ஒரொரு குழந்தையையும் பள்ளிக்கு அனுப்பற சோகத்தை டன் கணக்குல சொல்வாங்க...

ஆனா பிள்ளை பள்ளிக்கு போயிட்ட பின்னாடி வீட்டில் இருக்கும் ஒரு நிசப்தம் இருக்கும் பாருங்க... அது கொடுமை.. வீடே களை இழந்தது போல இருக்கும். அதை விட அந்த பிள்ளைங்க செய்யற எல்லா வால்த்தனமும் பெற்றோர்கள் ரசிக்கவேண்டிய அவஸ்தைகள் தான்.

நல்ல கவிதை தோழி