PDA

View Full Version : என்னைத் தேடி.....

Nivas.T
20-02-2011, 03:38 PM
ஞானம் தேடி
ஞானியை அடைந்தேன்
நீ யாரென? கேட்டார் ஞானி

பெயரை சொன்னேன்
அது உன் பெயர்
நீ யார்? என்றார்

ஊரைச் சொன்னேன்
அது உன் ஊர்
நீ யார்? என்றார்

தொழிலை சொன்னேன்
அது உன் தொழில்
நீ யார்? என்றார் மீண்டும்

தெரியவில்லை என்றேன்
அதைத் தேடு என்றார்

திரும்பி வந்தேன்
என்னைத் தேடி.....

ஜானகி
20-02-2011, 03:52 PM
உன்னுள் இருக்கும் ' உன்னைக் ' கண்டுகொண்டால்... தேடல் முடியும்....என்று சொல்கிறார்கள்...

Nivas.T
20-02-2011, 04:09 PM
உன்னுள் இருக்கும் ' உன்னைக் ' கண்டுகொண்டால்... தேடல் முடியும்....என்று சொல்கிறார்கள்...

அதே தான்

நன்றி ஜானகி

பிரேம்
20-02-2011, 11:41 PM
கவிதை அருமை..
ஆமா...நீங்க யாரு..?:confused:

ஜானகி
21-02-2011, 12:24 AM
உண்மையில், நான் யார் என்பது ஒரு கேள்வியே இல்லையாம், அது இருப்புணர்வைக் குறிப்பிடும், விடையாகுமாம்... ஏதும் புரிபடுகிறதோ...?

உமாமீனா
21-02-2011, 02:27 AM
நானும் அதை தான் தேடுகிறேன் ...நான் யார்????

M.Jagadeesan
21-02-2011, 04:30 AM
" நான்' என்பது உயிரைக் குறிக்கிறதா? அன்றி
ரத்தமும் சதையும் சேர்ந்த ஊனைக் குறிக்கிறதா? அன்றி
மறுபிறப்புக்குக் காரணமான ஆன்மாவைக் குறிக்கிறதா?

ஜானகி
21-02-2011, 05:27 AM
வேதங்களின் கூற்றுப்படி, ' நான் ' என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
என்னுடையதும், என்னால் புரிந்துகொள்ளமுடிவதும் ' நான் ' ஆகாது.
இதைத் தவிர, பரமாத்மாவின் சாட்சியாக மற்றொரு ஆத்மாவும் நம்முள் உள்ளது.
வினைகளின் பலனாக ஏற்பட்டுள்ள இந்தப் பிறவியில், நாம், மாயையிலிருந்து விழித்துக்கொண்டு, ஆத்ம தத்துவத்தை உணர்ந்துகொண்டு, பரமாத்மாவுடன் ஐக்கியமாகவேண்டும்.
இல்லையேல், பிறப்பும் இறப்பும், நம்மைத் தொடரும்.

ஏதேனும் புரிந்ததா....?

Nivas.T
21-02-2011, 05:51 AM
கவிதை அருமை..
ஆமா...நீங்க யாரு..?:confused:

நன்றி பிரேம்

யாரக் கேக்றீங்க உங்களையா இல்ல என்னையா?:D:D:D:D:D

Nivas.T
21-02-2011, 05:57 AM
உண்மையில், நான் யார் என்பது ஒரு கேள்வியே இல்லையாம், அது இருப்புணர்வைக் குறிப்பிடும், விடையாகுமாம்... ஏதும் புரிபடுகிறதோ...?

நான் யார்? என்பது பொருளையோ, அடையாளத்தையோ குறிப்பதில்லை
கரைந்தது, கலந்தது, வெற்றிடம், வெளி
இயற்க்கை, ஆன்மா எதில் எதுவாக வேண்டுமானாலும் இருப்பதை உணரலாம்
ஆனால் இல்லை என்பது மட்டுமே
உணரப்படும்

Nivas.T
21-02-2011, 05:59 AM
நானும் அதை தான் தேடுகிறேன் ...நான் யார்????

தேடுங்க தேடுங்க கண்டுபுடுச்சா சொல்லுங்க
நானும் முயற்சி பண்றேன்

Nivas.T
21-02-2011, 06:04 AM
வேதங்களின் கூற்றுப்படி, ' நான் ' என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்.
என்னுடையதும், என்னால் புரிந்துகொள்ளமுடிவதும் ' நான் ' ஆகாது.
இதைத் தவிர, பரமாத்மாவின் சாட்சியாக மற்றொரு ஆத்மாவும் நம்முள் உள்ளது.
வினைகளின் பலனாக ஏற்பட்டுள்ள இந்தப் பிறவியில், நாம், மாயையிலிருந்து விழித்துக்கொண்டு, ஆத்ம தத்துவத்தை உணர்ந்துகொண்டு, பரமாத்மாவுடன் ஐக்கியமாகவேண்டும்.
இல்லையேல், பிறப்பும் இறப்பும், நம்மைத் தொடரும்.

ஏதேனும் புரிந்ததா....?

" நான்' என்பது உயிரைக் குறிக்கிறதா? அன்றி
ரத்தமும் சதையும் சேர்ந்த ஊனைக் குறிக்கிறதா? அன்றி
மறுபிறப்புக்குக் காரணமான ஆன்மாவைக் குறிக்கிறதா?

நான் என்பது இறைநிலையில் ஏற்றுக்கொள்ளப் படாதது. யாம் என்பதே முதல் நிலை. இங்கு நாம் விடை காண வேண்டியது யாம். இது நிச்சயம் அழியும் உடலை குறிப்பதில்லை. உயிர் ஆன்மா இரண்டும் சமநிலைதான். அழிவில்லா ஆன்மாவின் பொருளே யாம் என்பதாகும். அதனை அறிவது இறைநிலை அடைவதாய் பொருள்

M.Jagadeesan
21-02-2011, 07:34 AM
நான்,யாம் இரண்டும் ஒன்றுதான்.சங்ககாலத்தில் " நான்" என்ற சொல்
லாட்சி கிடையாது."யாம்" அல்லது "யான்" என்பது " நான்" என்ற பொரு
ளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.திருக்குறளில் "யாம்" என்ற சொல்லையே திருவள்ளுவர் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறார்.
பாரதியாரும் "யாமறிந்த மொழிகளிலே" என்று கூறுகிறார்."யாம்" என்ப
தற்கு தாங்கள் கூறும் விளக்கமும் புரியவில்லை.

Nivas.T
21-02-2011, 08:49 AM

நான் என்பதில் இருக்கும் திமிரும் தலைக்கணமும்

யாம் என்பதில் இருக்காததை உணரமுடியும்

எப்பொழுது நான் நான் என்று நினைக்கிறோமோ
அப்பொழுது இருக்கும் நிலையை நாம் முன்னோக்கி நகர்த்த இயலாது
நாம்மை யாரென்று உணரும் நிலை முழுவது முடங்கிவிடும் இறைநிலையை நெருங்க இயலாது

ஜானகி
21-02-2011, 09:07 AM
புரிகிறது.......ஆனால் புரியவில்லை....?

காலம் வரும்வரை காத்திருப்போம்.......பொறுத்திருப்போம் !

இறைவன் அருள் புரிந்தால்....எதுவும் புரியும் !

ஆதி
21-02-2011, 09:33 AM
நான்நாகரா அவர்களின் சிந்தனைகளை வாசித்ததில்லையோ நீங்கள் ?

யாம், நாம், யான், நான், நாங்கள், நீ, நீங்கள், அவர், அவர்கள், இவர், இவர்கள், இது, அது, உது, உங்கள், எங்கள், எல்லாம் ஒன்று..

யாம் என்பதே இறைநிலை என்பதை எப்படி சொல்றீங்க, எல்லாம் நானாய் இருக்கிறது என்று கீதையில், விவிலியத்தில், குர்*ஆனில், தோராவில், தனாக்கில், ஜென்னில், தாவ்வில், சூஃபி, இன்ன பிற வற்றிலும் சொல்லப்படுகிறது..

கடவுள் தாமாய் இருக்கிறார்.. நீ நீயாய் இரு என்பதற்கும் இதுக்கும் எதோ ஒரு நூல் இருக்கு இல்லையா ?

நீ யார் ? என்று கேட்டார் ஞானி..

அவருக்கிட்ட..

நீ யார் ? என்று நீங்க கேட்டு பார்த்தீங்களா ?

கேட்டுப்பாருங்க நிவாஸ், சொல்லுவார்...............

வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர் தான்
எல்லாம் புரிந்துவிட்டால்........

Nivas.T
21-02-2011, 12:08 PM
நான்நாகரா அவர்களின் சிந்தனைகளை வாசித்ததில்லையோ நீங்கள் ?

யாம், நாம், யான், நான், நாங்கள், நீ, நீங்கள், அவர், அவர்கள், இவர், இவர்கள், இது, அது, உது, உங்கள், எங்கள், எல்லாம் ஒன்று..

யாம் என்பதே இறைநிலை என்பதை எப்படி சொல்றீங்க, எல்லாம் நானாய் இருக்கிறது என்று கீதையில், விவிலியத்தில், குர்*ஆனில், தோராவில், தனாக்கில், ஜென்னில், தாவ்வில், சூஃபி, இன்ன பிற வற்றிலும் சொல்லப்படுகிறது..

கடவுள் தாமாய் இருக்கிறார்.. நீ நீயாய் இரு என்பதற்கும் இதுக்கும் எதோ ஒரு நூல் இருக்கு இல்லையா ?

நீ யார் ? என்று கேட்டார் ஞானி..

அவருக்கிட்ட..

நீ யார் ? என்று நீங்க கேட்டு பார்த்தீங்களா ?

கேட்டுப்பாருங்க நிவாஸ், சொல்லுவார்...............

உண்மைதான் ஆதன்,

ஆனால் இவையனைத்திலும் "யாதும் நானே" என்று சொல்வது கடவுள், மனிதன் இல்லை,
கடவுள் ஞானம் தேட வேண்டாம். மனிதன் தான் ஞானம் தேட வேண்டும் இறைநிலை அடைய.

"அஹம் பிரம்மாஸ்மி" என்றால் உங்களுக்கு தெரியும் என்று நினைகிறேன். "நானே கடவுள்" இதைக்கூற தான் யாரென்று உணர்ந்தவனால் ஞானம் அடைந்தவனால் மட்டுமே கூறமுடியும்.

"அனைத்தும் நானாக இருக்கிறேன்"
"நானே அனைத்துமாக இருக்கிறேன்"

இவையிரண்டும் வேறுபட்டவை
இந்த வேறுபாட்டை உணர்ந்தால்

நான், யாம் புரியும்

ஞானம் அடைந்தவன் - நான் எனலாம்
ஞானம் வேண்டுபவன் - நான் என்பதை விடுத்து யாம் என்பதை உடுத்துவது முதல் நிலை

ஆதி
21-02-2011, 05:10 PM
நான் சொன்னதை அப்படியே நேரர்த்தம் செய்து கொண்டீங்க போல நிவாஸ்...

ஞானம் என்பதற்கு அளவை இருக்கா என்ன ?

அளக்க முடிந்தது ஞானமென்றால் அளத்தல் கண்டுப்பிடிச்சுடலாம்..

கண்டுபுடிக்கிற இடத்தில் தான் அளவை இருக்கென்றால் ஞானம் பெரியவிடயமில்லை...

எல்லாம் ஒன்றில் அடக்கமென்றால் எல்லாம் ஒன்று அவ்வளவே, நீங்க வேறு என்று சொன்னால் வேறு..

அத்வைதம், துவைதம் இரண்டுக்கும் இருக்க வேறு பாடு இது..

பரமாத்மா, ஜீவாத்மா ஒன்று, பரமாத்மா ஜீவாத்மா வேறு..

இது போல நுண்ணிய வேறுப்பாட்டால் உண்டானவைதான் பரிநிர்வானமும், வைகல்யமும்...

சூஃபிக்கும், ஜென்னுக்கும் இது போல சின்ன சின்ன வேறுபாடுகளே உண்டு..

ஞானிக்கிட்ட கேட்க வேண்டியதுதானே என்று நான் சொன்னதில் ஒரு புதிர் இருக்கு அதை நீங்கள் அறிந்துணரவில்லை என்று நினைக்கிறேன்..

ஞான ஒன்றே ஒன்று மட்டும் கிடையாது நிவாஸ் அது பெரிசு...

முதல்முற்றற்ற விடயத்தில் என்ன முதல்நிலை கடைநிலை நிவாஸ்...

இந்த கவிதையை போல பல கதைகளை படிச்சாச்சு நிவாஸ், இதில் உள்ள அடிப்படை தவறு என்ன தெரியுமா ? ஞானம் தேடி ஞானிக்கிட்ட போனது, ஒரு ஞானியால ஞானம் தந்துட முடியுமா ? அப்படி னா அது ஞானமில்லை..

கடைசியா ஒன்றே ஒன்று ஒரு ஜென் கதையில் இருந்து, "எம்டி யுவர் கப்"

Nivas.T
22-02-2011, 05:01 AM

அழகான விளக்கம் ஆதன்

முற்றிலும் உண்மை

ஓஷோவின் - விளக்கங்களும் இதுபோலவே

ஆனால் இங்கே ஞானி ஞானம் தந்துவிட வில்லை வழி மட்டும் தான் கூறுகிறான், ஒரு குருவினால் அனைத்தும் தந்துவிட முடியாது வழிகாட்டவே முடியும். அல்லது குருவை பின்பற்றி நாம்தான் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

ஒரு தத்துவம் " எ கப் ஆப் எம்ப்ட்டிநெஸ் இஸ் யுஸ்புல் டு பில் சம்திங்"