PDA

View Full Version : கதவுகள் (திறந்து பாருங்கள் )



shiva.srinivas78
20-02-2011, 11:39 AM
கதவுகள்

http://www.colonialshutterworks.com/DOOR.JPG


ஒவ்வொரு வீட்டின் கதவுகளும்
ஒரு கதை சொல்லும்

மற்றவரிடம் இருந்து மட்டும் பெற்றுகொள்வதை போல
ஒரு பக்கம் மட்டும் திறந்தபடி

அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனதை போல
இரு கதவுகளும் விரிந்தபடி

உலகத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என
கதவுகள் முற்றும் மூடியபடி

வீட்டிற்கு காவல் கதவு
கதவிற்கு காவலாக மனிதன்

படிப்பினை ,உத்தியோகத்தை சொல்லியபடி பெயர்பலகையுடன்
செல்வ செழிப்பை கதவுகளிலேய காடும் !
தேவையே இல்லை இருந்தாலும் கதவுகள் !!

மக்கி போன மனதை போல மர கதவுகள்
இருகிப்ப் போன இதயம் போல இரும்பு கதவுகள்

வண்ணமயமாக செல்லும் வாழ்கையை காண்பிக்கும் கதவுகள்
வாழும் எண்ணமே இல்லை இதில் கதவுக்கெங்கே வண்ணம் ?

வர்ணங்கள் மனித மனங்களின் பிம்பம்
மங்களகரமாக , பகட்டாக ,
ஜாதி மத கொடி கம்பங்களாக .

மழை , வெயில் ,காற்று அனைத்தையும் தாங்கி கொண்டு
கதவுகள் நமக்கு சொல்லுவது

பலவிதங்கள் கதவுகளில் மட்டும் இல்லை
மனங்களிலும் தான்.

முரளிராஜா
20-02-2011, 11:42 AM
கதவை வைத்து கவிதை அருமை

Nivas.T
20-02-2011, 12:10 PM
அருமை சீனிவாஸ்

அழகான எடுத்துக்காட்டு
அருமையான ஒப்பீடு
எதார்த்தக் கவிதை
நல்லக் கருத்து

பாராட்டுகள்

shiva.srinivas78
20-02-2011, 01:24 PM
கவிதைன்னு ரெண்டுபேராவது ஒத்துகிட்டீங்களே நன்றி (திரு .முரளிராஜா ,திரு . நிவாஸ் )

ஜானகி
20-02-2011, 03:08 PM
கதவுகள் மூலம் உங்கள் மனக் கதவையும் திறந்து காட்டியிருக்கிறீர்கள். நன்று.

கீதம்
20-02-2011, 07:25 PM
சொல்லப்பட்ட கருத்து வெகு அருமை. வார்த்தைகளை சற்றே மெருகேற்றினால் கவிதை இன்னும் சிறக்கும். மனமாரப் பாராட்டுகிறேன். தொடருங்கள்.

உமாமீனா
21-02-2011, 02:29 AM
யதர்த்தமான உண்மை என்னன்னா - அழகான கவி - சும்மா சொல்லகூடாது - வாழ்க்கை = கதவு
கவிதைக்கு நன்றி

shiva.srinivas78
21-02-2011, 04:43 PM
உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி

அக்னி
21-02-2011, 05:26 PM
ஒற்றைக்காலில் ஊசலாடும் கதவில்
இத்தனை விடயங்களா...
சொன்னாற்தான் தெரிகின்றது...

நன்று நண்பரே...
கீதம்+அக்கா சொன்ன குறிப்பையே நானும் குறிப்புணர்த்துகின்றேன்...
பாராட்டு...

இரவை வாசலோடு நிறுத்தி
வைக்கும் கதவு
தைரியம் தரும்...

பகலை வரவேற்று உள்ளே
அழைக்கும் கதவு
ஆனந்தம் தரும்...

குழந்தைகள் தாண்டிச் செல்லல்
தடுத்துக் கதவு
காவல் செய்யும்...

தென்றல் வேகம் தணித்து
விசிறிக் கதவு
ஏவல் செய்யும்...

முட்டிப் பார்க்கும் கள்வரைத்
தடுக்கும் கதவு
வீரம் சொல்லும்...

எட்டிப் பார்க்கும் காதலை
மறைக்கும் கதவு
கவிதை சொல்லும்...