dellas
20-02-2011, 10:38 AM
பெண்களின் தோழமையில் நீ.- சற்றுத் தள்ளி
பொறாமையில் நான்.
அறிமுக நாளிலே நம்பிக்கை நீ.
அறிமுகப்பட வழி தோன்றாமல் நான்.
நண்பனாக சகோதரனாக பெண்களோடு நீ.
என்னையும் அதிலாக்கி விடுவாயோ என்ற பயத்தில் நான்.
அனுசரணையாக பெண்களுக்கு நீ.
உன் அனுபல்லவியாகும் நினைவில் நான்.
மொழியறிந்து உதவும் நீ.
என் விழியறிந்து கொள்ளாததேன்.?
பேசிப் பாழாகும் காதல் பல.
பேசாமல் வீணாகும் என் நாட்களும் பல.
என் பார்வையின் அர்த்தம் புரிந்து நீயா?-இல்லை
புரிய வைக்காத தோல்வியில் நானா?
பொறாமையில் நான்.
அறிமுக நாளிலே நம்பிக்கை நீ.
அறிமுகப்பட வழி தோன்றாமல் நான்.
நண்பனாக சகோதரனாக பெண்களோடு நீ.
என்னையும் அதிலாக்கி விடுவாயோ என்ற பயத்தில் நான்.
அனுசரணையாக பெண்களுக்கு நீ.
உன் அனுபல்லவியாகும் நினைவில் நான்.
மொழியறிந்து உதவும் நீ.
என் விழியறிந்து கொள்ளாததேன்.?
பேசிப் பாழாகும் காதல் பல.
பேசாமல் வீணாகும் என் நாட்களும் பல.
என் பார்வையின் அர்த்தம் புரிந்து நீயா?-இல்லை
புரிய வைக்காத தோல்வியில் நானா?