PDA

View Full Version : என் உயில்...........



Nanban
02-12-2003, 06:41 PM
என் உயில்...........

பழுத்துப் போன
காகித நினைவுகள்
மயக்க மருந்தைப் போல
மணக்கிறது......

நினைவு
சட்டென்று
திரும்பினால்
சுற்றி இருப்பவர்கள்
புலம்பக் கூடும்.....

திரும்பவும்
புதிதாய்
உயில் எழுத
ஆரம்பிப்பானோ என்று.......

யாருக்கும்
பிடிக்கிறதோ
இல்லையோ
உயில்கள்
எழுதப்பட்டுக் கொண்டே தான்
இருக்கும்.....

உயில்கள்
திருத்தப்படும் பட்சத்தில்
என் சம்பாத்தியம்
போகக் கூடும்
அனாதை இல்லங்களுக்கு.......

Nanban
03-12-2003, 04:55 AM
உயில்கள் விரும்பப் படுவது மரணத்திற்குப் பின்னர் தானவோ என்னவோ, யாரும் சீண்டவில்லை - உன்னை உயிலே............

puppy
03-12-2003, 05:45 AM
இந்தியாவில் உயில்களுக்கு அவ்வளவாக நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.....நாம் எனபது இங்கே நம்மை போனற நடுதரவர்க்கதினரையும் அதற்கு கீழே உள்ளவரையும் குறிக்கும்......அதனால் என்னவோ பலரும் பார்க்காத சூழ்நிலை......அதனால் இருக்கலாம் நண்பனே....

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இது ரொம்ப முக்கியம்.....Estate planning சொத்துகளை எப்படி யாருக்கு என சரியாக எழுதவிட்டால் அதை அனுபவிக்கவே ரொம்ப நாட்கள் ஆகிவிடும்...அதனால் அதன் முக்கியத்துவம் இங்கே அதிகம்......

Nanban
03-12-2003, 08:09 AM
நன்றி பப்பி அவர்களே - உயில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது சொத்து சேர்த்து வைத்தவர்களுக்காக இருக்கலாம்........

ஆனால் இங்கே பலர் - உண்டு, உடுத்து, உறங்குவதற்கே வழியில்லாமல் தவிக்கும் பொழுது எங்கிருந்து உயில் எழுதுவது........