PDA

View Full Version : மலேசிய வாசுதேவன் இயற்கை எய்தினார்.



Mano.G.
20-02-2011, 08:17 AM
சில காலம் நோய்வாய் பட்டிருந்த
பிரபல திரைபின்னனி பாடகரும நடிகருமான
மலேசிய வாசுதேவன் இன்று மதியம் இந்திய
நேரப்படி ஏறக்குறைய 1.30 அளவில் இயற்கை
எய்தியதாக மலேசிய வானொலியின் அறிவிப்பு
மக்களை அதிர்ச்சியுர செய்தது,

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்.





மனோ.ஜி

leomohan
20-02-2011, 09:40 AM
அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கீதம்
20-02-2011, 09:41 AM
கணீர்க்குரலால் நம்மை வசப்படுத்திய இனிய பாடகர் உடல்நலம் குன்றி, பேசவும் சிரமப்பட்டதைப் பத்திரிகைகளில் படித்து மனம் கனத்தது. அவருக்கு என் அஞ்சலி.

அக்னி
20-02-2011, 10:29 AM
தமிழிசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தித்து அஞ்சலிக்கின்றேன்.
அவரது இழப்பாற் துயருறும் குடும்பத்தாருக்கும், அவர்தம் ரசிகர்களுக்கும்
மன ஆறுதல் கிட்ட இறைவன் துணையிருக்கட்டும்...

முரளிராஜா
20-02-2011, 11:37 AM
அவர் மறைந்தாலும் அவர் பாடிய பல பாடல்கள் என்றும் நம் மனதில் நிலைத்து இருக்கும்.

Nivas.T
20-02-2011, 01:03 PM
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்

பாரதி
20-02-2011, 02:12 PM
வருத்தம் தரும் செய்தி.
அவரது சில பாடல்களை என்னால் என்றைக்கும் மறக்க இயலாது.
அவரை பிரிந்து துன்புறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

aren
21-02-2011, 10:21 AM
அன்னாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஒரு திறமையான பாடகரை தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது.

sarcharan
21-02-2011, 10:43 AM
வருத்தமான செய்தி தான். ஒரு திறமையான பாடகரை தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது.

அவரை பிரிந்து துன்புறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

நல்ல பாடகர்.அவர் பாடுன பாட்டுக்கள் எல்லாம் இன்னிக்கும் மக்கள் ரசிச்சு கேக்குறாங்க...

அவரது பாடல்களை என்னால் என்றைக்கும் மறக்க இயலாது.
முதல் மரியாதை, தர்மயுத்தம் போன்றவை சில..

சிவாஜிக்கும் ரஜினிக்கும் அவரது குரல் கனகச்சிதமாக பொருந்தியது..

அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கௌதமன்
21-02-2011, 02:14 PM
இதுவரை எனக்குத் தெரிந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்கு இணையான குரல் இல்லையென்றே கூறலாம்.

எஸ்.பி.பி யைப் போல் மனோ!

யேசுதாஸைப் போல் மது பாலகிருஷ்ணன் முதற்கொண்டு பலர்!

உன்னி கிருஷ்ணன், ஹரிஹரனை பின்பற்றும் இளம் பாடகர்கள்!

எனப்பலர் இருந்தாலும் ‘ ஆகாய கங்கை’, ‘பூங்காற்று திரும்புமா’ போன்ற பாடல்களில் ஒலித்தக் குரல் மீண்டும் வரப்போவதில்லை.

அவரின் மறைவு தமிழ்த் திரைப்பாடல் ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்பு!

அவர் மறைந்தாலும் ஆண்டாண்டு காலம் அவர் கானம் என்றும் நிலைத்து நிற்கும்.

அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அமரன்
21-02-2011, 05:03 PM
பூங்காற்றுத் திரும்புமா..

ஏங்க வைத்த இசைவயல் பரப்பு.

மௌன கீதாஞ்சலி.