PDA

View Full Version : பாகப் பிரிவினை – குறுங்கவிதைகலையரசி
19-02-2011, 01:38 PM
எதை வாங்கி வந்தாலும்
’இது எனக்கு, அது உனக்கெ’ன்று
சண்டை போட்ட பையன்களிடம்
கோபமாகக் கேட்டார் அப்பா:

”எல்லாத்தையும் இப்பவே
பாகப்பிரிவினை செய்றீங்களே,
வளர்ந்தபிறகு இப்படித்தான்
அம்மாவையும் என்னையும்
பிரிச்சிக் கூறு போடுவீங்களோ?”

”இல்லப்பா,
நீங்களும் சித்தப்பாவும்
ஆளுக்கு ஒருத்தரா
தாத்தா ஆத்தாவைப் பிரிச்சது போல
பிரிக்க மாட்டோம் நாங்க;
ஒன்னாவே ஒங்க ரெண்டு பேரையும்
முதியோர் காப்பகம்
அனுப்பிடுவோம்,” என்றனர் குழந்தைகள்
ஒற்றுமையாக ஒரே குரலில்!

Nivas.T
19-02-2011, 03:02 PM
உண்மையின் ஒற்றுமைக் குரல்
வினை விதைத்தவன் வினையறுப்பான்

கருத்துசொல்லும் கவிதை அருமை

நீண்டநாள் கழித்து உங்கள் பதிப்பினை பார்க்கிறேன்

கீதம்
19-02-2011, 08:09 PM
வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்க்கமுடியுமா?

நல்லதொரு கருத்துச் சொல்லும் கவிதையுடன் மன்றம் வந்த உங்களைப் பாராட்டுகளுடன் இனிதே வரவேற்கிறேன் அக்கா.

உமாமீனா
20-02-2011, 04:40 AM
”ஒன்னாவே ஒங்க ரெண்டு பேரையும்
முதியோர் காப்பகம்
அனுப்பிடுவோம்,” என்றனர் குழந்தைகள்
ஒற்றுமையாக ஒரே குரலில்!

யதார்த்தமான இன்றைய நிலை சுடுகிறது நிஜம்

ஜானகி
20-02-2011, 04:44 AM
சுடும் உண்மையை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான்...

மதி
20-02-2011, 03:11 PM
நிதர்சனம்... பட்டபின் தெரியும்... பிரிவினை என்பது பற்றி..!

நல்ல கவிதைக்கா..!

கலையரசி
22-02-2011, 11:46 AM
உண்மையின் ஒற்றுமைக் குரல்
வினை விதைத்தவன் வினையறுப்பான்

கருத்துசொல்லும் கவிதை அருமை

நீண்டநாள் கழித்து உங்கள் பதிப்பினை பார்க்கிறேன்

மிகவும் நன்றி நிவாஸ்.
ஆமாம் நிவாஸ். தவிர்க்க முடியாத காரணங்களால் நீண்ட இடைவெளி விட்டு இப்போது தான் மறுபடி எழுதத் துவங்கியுள்ளேன்.

கலையரசி
22-02-2011, 11:47 AM
வினையை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்க்கமுடியுமா?

நல்லதொரு கருத்துச் சொல்லும் கவிதையுடன் மன்றம் வந்த உங்களைப் பாராட்டுகளுடன் இனிதே வரவேற்கிறேன் அக்கா.

உனது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் மிக்க நன்றி கீதம்!

கலையரசி
22-02-2011, 11:48 AM
யதார்த்தமான இன்றைய நிலை சுடுகிறது நிஜம்

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி உமா.

கலையரசி
22-02-2011, 11:49 AM
சுடும் உண்மையை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான்...

கருத்துக்கு மிக்க நன்றி ஜானகி.

கலையரசி
22-02-2011, 11:50 AM
நிதர்சனம்... பட்டபின் தெரியும்... பிரிவினை என்பது பற்றி..!

நல்ல கவிதைக்கா..!

கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மதி!

அமரன்
22-02-2011, 08:44 PM
மீண்டும் ஆக்கம் தரும் உங்களுக்கு என் ஊக்கங்கள்.

மேலைக் கலாச்சாரத்துக்கு நாம் பழக்கப்பட்டுச் செல்கிறோம். குழந்தைகள் வளர்ந்த பின் தனியாகப் போவதும், தாய், தகப்பனைத் தனி வீட்டில் ஒன்றாகத் தங்க வைப்பதும், அப்பப்போ அவர்களை போய்ப் பார்ப்பதும் மேலைத்தேசத்தார் கலாச்சாரம்.

வயோதிபர்களும் பக்குவத்துடன் திட்டமிட்டு வாழ்கின்றனர். இதைத்தான் ஜானகி அம்மா இப்படிச் சொல்கிறார் போலும்.

சுடும் உண்மையை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான்...

சாகும்வரை எம் வாழ்க்கை எம் கையில்தான். எனவே அந்திமம் வரை திட்டமிடுவோம்

சுடும் கவிதைதான்.

வடுவாகவும் புடமாகவும் பதியக் கூடியதாக உள்ளதே!

பாரதி
23-02-2011, 12:27 AM
”முற்பகல் இன்னா செய்யின்” என்ற வள்ளுவரின் குறளை நினைவூட்டும் நடைமுறையை சுட்டிக்காட்டும் கவிதை. ஒற்றுமை எப்படியெல்லாம் வளர்கிறது!?
தொடர்ந்து எழுதுங்கள்.

M.Jagadeesan
23-02-2011, 12:45 AM
சிறிய கவிதையில் பெரிய சிந்தனை!

பிரேம்
23-02-2011, 12:57 AM
கவிதை அருமை மேடம்..

அன்புரசிகன்
23-02-2011, 01:01 AM
அன்னையர் தினம் தந்தையர் தினம் என்று கொண்டாடும் போதே இந்த பிரிவையும் எதிர்பார்க்க வேண்டியது தான். வெள்ளையர் அன்று தான் தமது பெற்றோரை பார்க்கிறார்கள். வீட்டில் பெற்றோர் இருந்தால் இந்த தினங்கள் எதற்கு? இதுவரை எனது தந்தைக்கோ தாய்க்கோ எந்த வாழ்த்தும் சொன்னதில்லை. எல்லாம் என் அம்மா என் அப்பா என்ற ஒரு எண்ணம் தான். எப்போது வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறோமோ அன்றே பாசம் நீங்கி சம்பிரதாயம் பிறக்கிறது. (இது எனது எண்ணம்)

சுடும் உண்மைகள். தொடருங்கள்.:)

sarcharan
23-02-2011, 07:12 AM

இதை நானும் வழி மொழிகின்றேன்.

(ஆனா உங்கள் கையெழுத்து செய்தி இந்த பதிவோடு சற்று வேறுபட்டுள்ளது :frown:)

அன்புரசிகன்
23-02-2011, 09:44 PM
இதை நானும் வழி மொழிகின்றேன்.

(ஆனா உங்கள் கையெழுத்து செய்தி இந்த பதிவோடு சற்று வேறுபட்டுள்ளது :frown:)
சற்று புரியவைத்தால் என்னை மாற்றிக்கொள்வேன். வாழ்த்து சொல்வது வேறு. தாய் அல்லது மொழிமேல் உள்ள பாசம் வேறு.

கலையரசி
25-02-2011, 01:02 PM
மீண்டும் ஆக்கம் தரும் உங்களுக்கு என் ஊக்கங்கள்.

மேலைக் கலாச்சாரத்துக்கு நாம் பழக்கப்பட்டுச் செல்கிறோம். குழந்தைகள் வளர்ந்த பின் தனியாகப் போவதும், தாய், தகப்பனைத் தனி வீட்டில் ஒன்றாகத் தங்க வைப்பதும், அப்பப்போ அவர்களை போய்ப் பார்ப்பதும் மேலைத்தேசத்தார் கலாச்சாரம்.

வயோதிபர்களும் பக்குவத்துடன் திட்டமிட்டு வாழ்கின்றனர். இதைத்தான் ஜானகி அம்மா இப்படிச் சொல்கிறார் போலும்.சாகும்வரை எம் வாழ்க்கை எம் கையில்தான். எனவே அந்திமம் வரை திட்டமிடுவோம்

சுடும் கவிதைதான்.

வடுவாகவும் புடமாகவும் பதியக் கூடியதாக உள்ளதே!

ஆமாம் அமரன். முற்றிலும் நம் கலாச்சாரத்தை அப்படியே விட்டுவிட்டு மேல் நாட்டுக் கலாச்சாரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றத் துவங்கி விட்டோம்.
அதனுடைய விளைவுகள் இப்போதே கண்முன் தெரியத் துவங்கிவிட்டன.
எனவே அதற்கேற்றாற் போல் இப்போதிருந்தே நம் வாழ்வைத் திட்டமிட்டு நடந்து கொள்வது தான் நல்லது.
எதிர்பார்ப்பு இல்லையென்றால் ஏமாற்றம் இருக்காது தானே?

உங்களது ஊக்கமும் உற்சாகமும் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அமரன்!

கலையரசி
25-02-2011, 01:04 PM
”முற்பகல் இன்னா செய்யின்” என்ற வள்ளுவரின் குறளை நினைவூட்டும் நடைமுறையை சுட்டிக்காட்டும் கவிதை. ஒற்றுமை எப்படியெல்லாம் வளர்கிறது!?
தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாரதி அவர்களே!

கலையரசி
25-02-2011, 01:04 PM
சிறிய கவிதையில் பெரிய சிந்தனை!

மிகவும் நன்றி ஜெகதீசன்!

கலையரசி
25-02-2011, 01:05 PM
கவிதை அருமை மேடம்..

உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி பிரேம்!

அக்னி
25-02-2011, 01:08 PM
வயிற்றின் சுமை என நினைக்காத தாயையும்,
தோளின் சுமை என நினைக்காத தந்தையையும்,
வாழ்வின் சுமை என நினைத்தொதுக்கின்,
நாளை வாழ்வின் சுமையாக நாமும்...

சாட்டைக்கவிதைக்குப் பாராட்டு...

கலையரசி
25-02-2011, 01:09 PM
அன்னையர் தினம் தந்தையர் தினம் என்று கொண்டாடும் போதே இந்த பிரிவையும் எதிர்பார்க்க வேண்டியது தான். வெள்ளையர் அன்று தான் தமது பெற்றோரை பார்க்கிறார்கள். வீட்டில் பெற்றோர் இருந்தால் இந்த தினங்கள் எதற்கு? இதுவரை எனது தந்தைக்கோ தாய்க்கோ எந்த வாழ்த்தும் சொன்னதில்லை. எல்லாம் என் அம்மா என் அப்பா என்ற ஒரு எண்ணம் தான். எப்போது வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறோமோ அன்றே பாசம் நீங்கி சம்பிரதாயம் பிறக்கிறது. (இது எனது எண்ணம்)

சுடும் உண்மைகள். தொடருங்கள்.:)

ஆமாம் அன்புரசிகன். உங்கள் கருத்தில் நானும் உடன்படுகிறேன். அன்னையர் தினம், தந்தையர் தினம் என அந்த ஓரிரு நாட்கள் மட்டும் சம்பிரதாயமாக வாழ்த்துச் சொல்லிவிட்டு அவர்களை மறந்து விடும் மேல் நாட்டுக் கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது.
உங்களைப் போலவே நானும் இந்த நாட்களில் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்ததில்லை.
கருத்துக்கு மிக்க நன்றி.

கலையரசி
25-02-2011, 01:13 PM
வயிற்றின் சுமை என நினைக்காத தாயையும்,
தோளின் சுமை என நினைக்காத தந்தையையும்,
வாழ்வின் சுமை என நினைத்தொதுக்கின்,
நாளை வாழ்வின் சுமையாக நாமும்...

சாட்டைக்கவிதைக்குப் பாராட்டு...

உங்கள் பதில் கவிதை சூப்பர்.
பின்னூட்ட வித்தகன் என்ற அடைமொழி உங்களுக்குச் சாலப் பொருத்தம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி அக்னி!