PDA

View Full Version : ...அன்புள்ள அம்மாவுக்கு...பிரேம்
19-02-2011, 03:36 AM
நலமா என நான் கேட்க..
நலமே என நீ சொன்னாலும்..
பார்த்து ரசித்திட..நீ என்
பக்கம் இல்லையேம்மா..

பிரிகையில் நீ சிந்திய கண்ணீர்
இன்னும் என் மனிதில்
ஈரமாய் இருக்க..
கண்டு வந்த கடலும் உன்
கண்ணீர்முன் கடுகானதம்மா..

மழைன்னாலும் இடின்னாலும்..
மார்கழியில் குளிருன்னாலும்..- உன்
மடி இல்லையேன்னு நினைக்கிறப்ப..
மனசெல்லாம் பதறுதும்மா..

காசு பணம் பார்த்தாலும்..உன்
கை சத்துணவு இங்கில்ல..
காய்ச்சல்ன்னு நான் படுத்தா..
கையால... பத்து போட நீயுமில்ல..

என்னைகண்டா ஒளிஞ்சிக்கும்..
உன்னைகண்டா ஓடிவரும்... - நீ
ஆசையா வளர்க்கிற
ஆட்டுக்குட்டி நலமாம்மா..

தண்ணி ஊத்த முடியாதுன்னு..
அலுப்பு பார்த்த நேரத்தில..
இடுப்பொடிய நீர் பாய்ச்சி..
கைப்பட்டு வளர்ந்துறிச்சி தென்னம்பிள்ள..- உன்
கைக்காக வாடுதிங்க இந்த பிள்ள..

கண் படக்கூடாதுன்னு
கைதீண்டி நீ கட்டி விட்ட கருப்பு கயிறு..
கனமா சொல்லுது உன் பாசத்த..
கடல் தாண்டி வந்தாலும் மறப்பேனா உன் நேசத்த..

வந்தது போனதெல்லாம் நிலைக்காதும்மா ..உன்
வாசம் மட்டும் என்னை விட்டு போகாதும்மா..
வாழ்க்கையில் வசந்தம் உயிர் பெறுமா.. நீ
வா-ன்னு கூப்பிடும் நாள் வருமா..

உமாமீனா
19-02-2011, 03:52 AM
அம்மா உருக்கமான உண்மை கவிதை

Nivas.T
19-02-2011, 04:28 AM
பிரமாதம் பிரேம்

பாராட்டுகள்

கலையரசி
19-02-2011, 09:19 AM
’காசு பணம் பார்த்தாலும்..உன்
கை சத்துணவு இங்கில்ல..
காய்ச்சல்ன்னு நான் படுத்தா..
கையால... பத்து போட நீயுமில்ல..’

இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன். தாய்ப்பாசத்தை உருக்கமாக வெளிப்படுத்தும் கவிதை. பாராட்டுக்கள் பிரேம்!

ராஜாராம்
19-02-2011, 09:40 AM
நலமா என நான் கேட்க..


மழைன்னாலும் இடின்னாலும்..
மார்கழியில் குளிருன்னாலும்..- உன்
மடி இல்லையேன்னு நினைக்கிறப்ப..
மனசெல்லாம் பதறுதும்மா..

காசு பணம் பார்த்தாலும்..உன்
கை சத்துணவு இங்கில்ல..
காய்ச்சல்ன்னு நான் படுத்தா..
கையால... பத்து போட நீயுமில்ல

நெஞ்சை நெகிழவைத்துவிட்டீங்க....பிரேம்..
அட்டகாசமான அருமையான...அம்மா படைப்பு.

முரளிராஜா
19-02-2011, 10:37 AM
தாயை பற்றிய உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை பிரேம்.

p.suresh
19-02-2011, 11:04 AM
அருமை... அருமை...

பிரேமின் ஃபிரேம் பண்ணவேண்டிய படைப்பு.

ஜானகி
19-02-2011, 12:22 PM
அம்மாவின் அருமை பெருமை தெரிந்த உங்களை மகனாகப் பெற்ற உங்கள் தாய் மிகவும் பாக்கியசாலிதான்.

கீதம்
19-02-2011, 08:12 PM
இளைய தலைமுறையிடமிருந்து இப்படி ஒரு பாசப்பொழிவு. சிலிர்க்கவைக்கிறது. பாராட்டுகள் பிரேம்.

பிரேம்
20-02-2011, 11:46 PM
அம்மாவின் அருமை பெருமை தெரிந்த உங்களை மகனாகப் பெற்ற உங்கள் தாய் மிகவும் பாக்கியசாலிதான்.

:icon_ush:கண்ணு பட்டுட போறாங்க..!!:icon_ush:

பிரேம்
21-02-2011, 05:53 AM
இளைய தலைமுறையிடமிருந்து இப்படி ஒரு பாசப்பொழிவு. சிலிர்க்கவைக்கிறது. பாராட்டுகள் பிரேம்.

நன்றி மேடம்..
(எல்லாருக்கும் பாசம் இருக்கும்...எங்கள நம்புங்க மேடம்..!):frown:

பிரேம்
21-02-2011, 10:13 AM
:)நன்றி...umameena ..நிவாஸ் தல....கலையரசி..ராரா..முரா..suresh சார்..ஜானகி மேடம்..(என் கிறுக்கல்கள் கூட நீங்க படிக்கும்படி இருக்குன்னா ரொம்ப சந்தோசம் தான்...)

முரளிராஜா
21-02-2011, 10:17 AM
எங்களுக்கு மட்டும் நன்றி ரொம்ப தாமதமாவருது.
ராரா வுக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமில்ல?

பிரேம்
21-02-2011, 10:30 AM
எங்களுக்கு மட்டும் நன்றி ரொம்ப தாமதமாவருது.
ராரா வுக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமில்ல?

நமக்குள்ள எதுக்கு இந்த நன்றியெல்லாம்-ன்னு நினைச்சிட்டேன் மச்சி..
இந்த மேட்டர் நமக்குள்ளேயே இருக்கட்டும் ராரா-கிட்டெல்லாம் போக வேணாம்.:icon_ush: ஒன்னும் கோவம் இல்லியே..:fragend005:

முரளிராஜா
21-02-2011, 10:35 AM
சரி ஆனா ஒன்னு
இந்த ராராவை மல்லி மன்றம், முல்லை மன்றம், சாமந்தி மன்றம், ரோஜா மன்றம்
எந்த மன்றத்துல பார்த்தாலும் அவன ஓடஓட விரட்டனும்
டீலா நோ டீலா

பிரேம்
21-02-2011, 10:38 AM
சரி ஆனா ஒன்னு
இந்த ராராவை மல்லி மன்றம், முல்லை மன்றம், சாமந்தி மன்றம், ரோஜா மன்றம்
எந்த மன்றத்துல பார்த்தாலும் அவன ஓடஓட விரட்டனும்
டீலா நோ டீலா

டீல்...!!!ராரா என்னை மன்னிச்சிருங்க..

ராஜாராம்
21-02-2011, 10:46 AM
ஆஹா...நம்மளை வெச்சு காமெடி புரோகிரம்தான் நடத்திக்கிட்டு இருந்தாய்ங்க....
இப்ப....டீலா...நோடீலா....வும் நடத்த ஆரம்பிச்சுட்டாய்ங்களா!!!!,

நடக்கட்டும்.....நடக்கட்டும்...
ஒரு குரூப்பாதான்யா இருக்காய்ங்க.... :confused: