PDA

View Full Version : உன் முதல் புன்னகை



திவ்யா
18-02-2011, 01:26 PM
நாம் சந்தித்த முதல் நாளில்
உன் முகத்தில் பூத்த புன்னகை
இன்றும் என் இதயத்தில்
புதிதாய் பூத்த பூ போல

உன்னை பார்க்காத நாட்களில்
என் இதயம் சுவாசிப்பது
அந்த புன்னகையால் தான் :)

முரளிராஜா
18-02-2011, 01:47 PM
பொன் நகையை விட சிறந்தது அல்லவா புன்னகை.
அருமை. வாழ்த்துக்கள்

கீதம்
18-02-2011, 08:18 PM
பார்க்காத நாள் வருமென்றுதான் முன்பே சேமித்துக்கொண்டீர்களோ முதல் புன்னகையை?

பாராட்டுகள் திவ்யா.

உமாமீனா
19-02-2011, 04:55 AM
புன்னகை இருந்தாலே அதிக நாள் வாழலாமாம்?!வாழ்த்துக்கள்

dellas
20-02-2011, 10:13 AM
சந்தித்த நாளில் உங்களைப்பற்றி அறியாமல் சிரித்து இருக்கக்கூடும்.
வாழ்த்துக்கள்.

திவ்யா
23-02-2011, 10:46 AM
அனைவருக்கும் நன்றி :)