PDA

View Full Version : சிறையில் உள்ள 136 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!



முரளிராஜா
18-02-2011, 12:23 PM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT7K8_BYU9dH4WNNVUpkYiZUo7HfigMjTuV56CVraP0yzr3a7CEVIPqaqu4dg
இலங்கை சிறையில் உள்ள 136 தமிழக மீனவர்கள் விடுவிக்குமாறு யாழ் நீதிமன்றத்துக்கு இலங்கை அரசு கடிதம் அனுப்பியதை அடுத்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் தமிழக மீனவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப இலங்கை ஏற்பாடு செய்து வருகிறது. முன்னதாக, தமிழக மீனவர்கள் 136 பேரை விடுவிப்பது குறித்து, இலங்கை அரசுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாகை மற்றும், காரைக்காலை சேர்ந்த மீனவர்கள், 18 படகுகளில் கடந்த 14ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இலங்கை மீனவர்கள் அன்றிரவே படகுகளை சுற்றிவளைத்து தமிழக மீனவர்கள் 136 பேர் மற்றும் 18 படகுகளை பிடித்து சென்றுள்ளனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தன. மேலும் மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வந்தன. மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.

தோடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 21 பேரையும் இலங்கை கடற்படையினர் நேற்று பிடித்து சென்றனர். அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் 136 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசு அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று தொலைபேசியில் பேசினார், இதையடுத்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு இலங்கை கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் 136 தமிழக மீனவர்கள் விடுவிக்குமாறு இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. இலங்கை அரசின் வேண்டுகொளை ஏற்ற யாழ்ப்பாணம் நீதிமன்றம் இலங்கை வடக்கு டி.ஐ.ஜியிடம் தமிழ மீனவர்கள் ஒப்படைக்கயிருக்கிறது. இதனையடுத்து விடுவிக்கப்பட்ட 136 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
நன்றி; தினகரன்

rajeshJ
18-02-2011, 02:00 PM
முரளி, தேர்தல் நேரத்துல அவங்க புடிக்கிறதும் இவங்க சொன்ன உடனே உடுறதும்...... நம்மை எல்லாம் லூசுன்னு நெனச்சிட்டனுங்க. அரசியல்ல இது எல்லாம் சகஜம்...

virumaandi
18-02-2011, 02:25 PM
வாழ்த்துக்கள்

ஆனால் நம்ம மீனவர்கள் இதை எதோ உள்நோக்கத்துக்காக அரசியலுக்காக செய்கிறார்களோ என்ற சந்தேகமும் இருக்கு

மீனவர்கள் தவறான தகவல்கள் தருகிறார்களோ என்ற சந்தேகமும் இருக்கு

அமரன்
18-02-2011, 05:00 PM
மீனவர்கµள் உயிருடன் வந்தது சந்தோசம்.

இனியும் இதே போல் காட்சிகள் அரங்கேறாவிட்டால் இன்னும் சந்தோசம்.