PDA

View Full Version : எனக்கோர் விளக்கம்



மீனலோஷனி
06-04-2003, 06:02 PM
தேடாத இடமில்லை
தேடியும் பலனில்லை
நான் தேடும் பதிலுக்கு
விளக்கமும் எங்குமில்லை


காமம் என்பார்
காதல் என்பார்
இரண்டும் வெவ்வேறு என்பார்
காமத்துள் காதலின் பங்குதான் என்ன
காதலுள் காமத்தின் பங்குதான் என்ன
இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்ததுதானா
இல்லை இணைந்தும் பிரிந்திருக்கும் பிரிவுகள்தானா


காதலுடன் காமம் தனிச்சுகம்
காதலிக்காதவர்களின் அறியாச்சுகம்
இவர்கள் அறிந்ததெல்லாம் அங்கச்சுகம்
காதலர்கள் அறிந்ததெல்லாம் முழுச்சுகம்
காதல் எய்தபின் காண்பார்
காமத்தின் முழு இலக்கியச்சுகம்


உண்மைக்காதல் தூண்மையானது
என்று சொல்வது வழக்கம்
உடம்புச்சுகம் அதில் இல்லை
என்று சொல்வதும் வழக்கம்
அப்படியானால் காளையவன்
காமத்தில் தொட்டுவிட்டால்
காதலிக்கு அவன் காதல் பொய்தானா
அவள் மேல் வைத்த பாசம் வேடம்தானா


தமிழ்மன்ற அன்பர்கள்
தமிழ் மேல் பக்தர்கள்
என் மனதின் சந்தத்தை
புரிந்து கொள்ளும் சித்தர்கள்


உங்காளால்தான் முடியும்
உண்மையை சித்தரிக்கத்தெரியும்
வாருங்கள் வாருங்கள்
வந்தொரு விளக்கம் தாருங்கள்

rambal
06-04-2003, 06:23 PM
இதற்கு மிகப்பெரிய விளக்கத்தோடு வருகிறேன்..

poo
06-04-2003, 06:31 PM
மீனா... பாராட்டுக்கள்...

ராம்... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

siva
06-04-2003, 06:51 PM
விளக்கம் தெரியவில்லை

இளசு
06-04-2003, 07:23 PM
உரியவர் விளக்கம் தரும் வரை..... மௌனம்!!

நல்ல கவிதை..நல்ல கேள்வி!
பாராட்டுகள் மீனா அவர்களே!

gans5001
07-04-2003, 03:37 AM
கண்களில் தொடங்கும் காதலென்பதால் காமம் நிச்சயமாக ஒரு பங்கு வகிக்கத்தான் செய்கிறது. சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" யில் சொல்லும் அறிவியல் விளக்கமான் அட்ரினலின் சக்தியும் அதுவே

Narathar
07-04-2003, 04:50 AM
மீனா கவிதை நன்றாக இருக்கிறது!!!
ராம், மீனா விளக்கம் தரச்சொன்னது இங்கு
தவராகப்புரிந்துகொண்டு கனடா சென்றுவிடாதீர்கள்............. நாராயனா

rambal
07-04-2003, 03:26 PM
காதல் என்பது பால் போன்றது..
காமம் என்பது டிக்காசன் போன்றது..
வெறும் பாலை மட்டும் குடிக்கலாம்..
உடலுக்கு கேடு இல்லை..
அளவாய் டிக்காசன் கலந்து
காபியாகவும் குடிக்கலாம்..
ஆனால்,
பால் இல்லாமல்
கடுங்காப்பி குடித்தால்
உடம்பிற்கு கேடு..
பால் கல்யாணமாய் பொங்கிய பிறகு
டிக்காசன் கலந்து குடித்தால்
சிறப்பாய் இருக்கும்..
பால் பொங்குவதற்குள்
டிக்காசன் கலந்து குடித்தால்
அவ்வளவு நன்றாய் இருக்காது..
இதைப் போன்றதுதான் காதலும் காமமும்..

poo
07-04-2003, 05:05 PM
என்ன ராம்... ஒரு டீக்கடை ரேஞ்சில் பதில் சொல்லிட்டியே..

நான் அபாரமா எதிர்ப்பார்த்தேன்பா..

எப்படியோ பாராட்டுக்கள் எளிமையாய் சொல்லி அழகாய் புரிய வைத்தமைக்கு!!!

இளசு
07-04-2003, 05:16 PM
மீனா ; பாராட்டுகள்
கன்ஸ் : முழுமையாக எடுத்துப் பதியுங்களேன்..
ராம் : நல்ல விளக்கம். நன்றி..
பூ : குசும்பூ!