PDA

View Full Version : தளிர் நடை..!!



பூமகள்
18-02-2011, 04:49 AM
குளிர் பாறை தொடும்
பனித்துளி நீர் ஓடை..!!

கரை மணல் தீண்டும்
அலை கடல் மேடை..!!

மலைப் பள்ளம் விழும்
கதிரவன் ஒளி மாலை..!!

இவையாவும் தரும்
இன்பம் தோற்க்கடிக்கும்
மலர் பொன்னுடல்
ஆடி வரும்
அன்பு மகளின்
அன்ன நடை..!!

பாலகன்
18-02-2011, 05:05 AM
மகளை வர்ணித்தவிதம் அருமை

முரளிராஜா
18-02-2011, 06:08 AM
உண்மைதானே, சிந்தனை அபாரம் வாழ்த்துக்கள்

Nivas.T
18-02-2011, 06:09 AM
தத்தித்தாவி ஓடும்
மான் கூட மயங்கிடுமே
தங்கமே உந்தன்
ததக்கா பிதக்கா நடையினிலே

பூ தளிர் நடை அழகு

அமரன்
18-02-2011, 05:04 PM
நடக்கட்டும்.. நடக்கட்டும்..

சந்தோசங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அலாதிதான்.

கீதம்
18-02-2011, 08:52 PM
தென்றலில் தவழ்ந்து தளிர்நடை பழகும் இளம்பூவைக் கண்டு துள்ளும் தாயின் கவிநடை அழகு. பாராட்டுகள் பூக்களுக்கு.

உமாமீனா
19-02-2011, 10:04 AM
ஆககா....ஆககா வரிகளில் மழலை நடை