PDA

View Full Version : கண்ணாடியின் காதல்



கீதம்
17-02-2011, 09:05 PM
கொஞ்சநாளாகவே……..
அவள் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு
அவள்மீது காதல்!
அவளுக்குள்ளும் காதல் இருந்தது என்பதை
அவளது நடை உடை பாவனைகள்
சொல்லாமல் உணர்த்தின.

முன்னிலும் அழகாய்
வெளிப்பட்ட அவள் அழகை….
அதனிலும் அதிகமாய்க் காட்டி
அவளை மகிழ்வித்தது கண்ணாடி.

கண்ணாடி சொல்லத்தயங்கிய காதலை
அவளே கண்டுணர்ந்தவளாய்,
தினப்படி ஒப்பனைகளின் முடிவில்
தன் செவ்விதழ்களைக் குவித்து
அதன் மார்பில்
முத்தங்களைப் பதிக்கத் தொடங்கினாள்.
இங்குமங்குமாய் அவற்றை ஏற்று
ஏகக்களிப்பில் மிதந்தது கண்ணாடி.

பரபரவென விடியும் பொழுதுகளிலும்
பார்வையால் அதைத் தழுவிச் சென்றாள்.
கடக்கும் நொடிகளிலெல்லாம்
கண்சிமிட்டிக் கிளர்ச்சியூட்டினாள்.

கண்ணாடி தன்வசமிழந்தது.
அதீதக் காதலில் திளைத்த அது…
அவளைப் பிரதிபலித்த பிம்பங்களை
தன்னுள் ரகசியமாய்ப் பதுக்கத்தொடங்கியது.

அவளும் தன் பிம்பங்களை
பரிசெனத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தாள்
வித வித உடைகளிலும்,
வெவ்வேறு ஒப்பனைகளிலும்!

காதல் போதையில் கிறங்கிக்கிடந்தவேளை
கையோடு ஒருவனை அழைத்துவந்தாள்.
கண்ணாடிமுன் அவனைக் கட்டியணைத்துநின்று
பொருத்தம் எப்படி என்று
பெருமிதம் பொங்கிவழியக்கேட்டாள்.

முத்தங்கள் யாவும் ஒத்திகையென்று
உண்மை உணர்ந்த நொடி
உள்ளுக்குள் உடைந்து போனது கண்ணாடி!

அடுத்த நொடியே குரூரம் பெற்றுக்
குதறியது அவள் பிம்பங்களை!

அன்று முதல் அவளை …..
அகோரமாய்க் காட்டத்தொடங்கியது,
கண்ணாடி!

அமரன்
17-02-2011, 09:26 PM
நம் விம்பம் பட்டு
நொருங்கும் கண்ணாடிகளின்
ஒரு பக்கம் எப்போதும்
மறைக்கப்பட்டிருக்கும்.

அந்தப்பக்கதிலிருந்து
நேரடி ஒளிபரப்பு செய்கிறது
கவி மனசு..

இரசமிழந்த கண்ணாடிகள்
ஒளிபுக விட்டு வேறெங்கோ திரையில்
விம்பம் வீழ்த்துவதும்..

உள்ளுக்குள் உடைந்து
துண்டுகளால் அடுத்தவரைக் குத்திக் கிழித்தும்..

கீறுப்பட்டுப் பழுத்து
பயனற்றுப் போவதுமாய்..

கண்ணாடிக்குள் எத்தனை கண்ணாடி!!

ஒவ்வொரு மனிதனும் கண்ணாடிதான்;
அவனில் தெரிவது
எதிரில் நிற்பவன் விம்பங்களே.

அந்த வகையில்
கண்ணாடியின் காதல்
மன வலைப் பின்னல்.

மனப் பூச்சிகளைச் சிக்க வைக்கும் என்பதில் வியப்பில்லை;

பிரேம்
17-02-2011, 11:48 PM
கவிதை அருமை..மேடம்..
தங்களின் ரசனையை பிரதிபலிக்கிறது இந்த கண்ணாடி...
(எப்பூடி..நாங்களும் சொல்லுவோம்ல..):D

கீதம்
18-02-2011, 09:42 PM
நம் விம்பம் பட்டு
நொருங்கும் கண்ணாடிகளின்
ஒரு பக்கம் எப்போதும்
மறைக்கப்பட்டிருக்கும்.

அந்தப்பக்கதிலிருந்து
நேரடி ஒளிபரப்பு செய்கிறது
கவி மனசு..

இரசமிழந்த கண்ணாடிகள்
ஒளிபுக விட்டு வேறெங்கோ திரையில்
விம்பம் வீழ்த்துவதும்..

உள்ளுக்குள் உடைந்து
துண்டுகளால் அடுத்தவரைக் குத்திக் கிழித்தும்..

கீறுப்பட்டுப் பழுத்து
பயனற்றுப் போவதுமாய்..

கண்ணாடிக்குள் எத்தனை கண்ணாடி!!

ஒவ்வொரு மனிதனும் கண்ணாடிதான்;
அவனில் தெரிவது
எதிரில் நிற்பவன் விம்பங்களே.

அந்த வகையில்
கண்ணாடியின் காதல்
மன வலைப் பின்னல்.

மனப் பூச்சிகளைச் சிக்க வைக்கும் என்பதில் வியப்பில்லை;

உங்கள் விமர்சன வலைப்பின்னலில் சிக்கிவிட்டது என் கவிதைக்கருப் பூச்சி.

நன்றியும் பாராட்டும் அமரன்.

கீதம்
18-02-2011, 09:44 PM
கவிதை அருமை..மேடம்..
தங்களின் ரசனையை பிரதிபலிக்கிறது இந்த கண்ணாடி...
(எப்பூடி..நாங்களும் சொல்லுவோம்ல..):D

உங்கள் ரசிப்பைப் பிரதிபலிக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி பிரேம்.:)

அக்னி
14-03-2011, 03:33 PM
பாதரசக் கண்ணாடிக்குக்
காதல்ரசமா... :icon_b:

சரசமாடியது
அவளுக்குள்ளிருக்கும்
அவனைப் பார்த்து என்று,
அவனையும் சேர்த்துப்
பார்க்கும்வரைக்கும்
கண்ணாடிக்குப் புரியாதது
பரிதாபத்திற்குரியதுதான்...

உதடுகள் இட்ட முத்தங்களை
ஒத்தடங்களாக்கி
வலி தீர்க்கட்டும் கண்ணாடி...

அழகான ரசனை... :icon_b: :icon_b: :icon_b:

கீதம்
14-03-2011, 11:37 PM
பாதரசக் கண்ணாடிக்குக்
காதல்ரசமா... :icon_b:

சரசமாடியது
அவளுக்குள்ளிருக்கும்
அவனைப் பார்த்து என்று,
அவனையும் சேர்த்துப்
பார்க்கும்வரைக்கும்
கண்ணாடிக்குப் புரியாதது
பரிதாபத்திற்குரியதுதான்...

உதடுகள் இட்ட முத்தங்களை
ஒத்தடங்களாக்கி
வலி தீர்க்கட்டும் கண்ணாடி...

அழகான ரசனை... :icon_b: :icon_b: :icon_b:

ஒத்திய தடங்களே
ஒத்தடமென்றேற்க....
ஆடிய மனம் ஆறுமோ?
ஆடியின் மனம் மாறுமோ?

பின்னூட்டத்துக்கு நன்றி அக்னி.

அக்னி
15-03-2011, 07:28 PM
ஒத்திய தடங்களே
ஒத்தடமென்றேற்க....
ஆடிய மனம் ஆறுமோ?
ஆடியின் மனம் மாறுமோ?

:icon_b: :icon_b: :icon_b:

ஒப்பனை செய்கையில்
அவளுக்குத் தெரிந்தது அவள்...
முத்தங்கள் இடுகையில்
அவளுக்குத் தெரிந்தது அவன்...

இதற்குள் நீ எங்கே ஆடியே..?

அவள் உதடுகளின் ஸ்பரிசம்
போதும் உனக்கு...
அவள் அழகினை ரசிப்பதே
போதும் உனக்கு...

முக்கோணக் காதலில்
உண்மைக் காதல்
உனதுதான்...

நீ
துகள்களாய்ப் போனாலும்,
துகள்களிலும் முழுதுமுழுதாய்
உன்னில் அவளைப் பிரதிபலிப்பாய்..,
அவள்களாக...

ஆனால்,
முக்கோணக் காதலிற்
கோணற் காதலும்
உனதுதான்...

குரூரம் வேண்டாம்...
அவளின் ஓருருவின்
விம்பத்திற்காய்
நொருங்கிப் போனால்,
அவளின் ஓராயிரம்
விம்பங்களிற்கும்
என் செய்வாய்
தளவாடியே...

கீதம்
15-03-2011, 11:37 PM
ஆடி குளிரவில்லை,
ஆடிக் குழறவுமில்லை,
பேடியெனக் குமையவில்லை,
கோடி எண்ணங்கள் கொப்பளிக்க
குரூரங்கொண்டு குமுறுகிறது.

பொருத்தம் பற்றி
கருத்துக் கேட்டாள்,
வருத்தம் பற்றி
கவலை கொண்டாளா?

முத்தமிடுமுன் முனகலாயேனும்
ஒத்திகையிதுவென்று
ஒருவார்த்தை சொல்லியிருந்தால்....
ஒதுங்கியிருக்குமே ஆடி!

ஒய்யாரியதைச் செய்யாமல் விட்டதால்….
நவரசத்தில் ஒருரசம் உக்கிரமாக
பத்தாம்ரசமாம் பாதரசம் உருகியொழுக...

ஆடி காட்டும் அவள் பிம்பம்
அகோரமாயிருப்பதில்
ஆச்சரியம்தான் என்ன?

ஜானகி
16-03-2011, 02:58 AM
கண்ணாடிக்கும் ஏமாற்றமா..?

கண் ஆடியதால் தடுமாற்றமா ?

சிதறிய பிம்பமோ அகோரம் !

எதிரினில் உன் மனதிலோ சொரூபம் !

மாறிடும் பார்வைக் கோளாறு....

முகக் கண்ணிலா...அகக் கண்ணிலா..?

அக்னி
16-03-2011, 02:04 PM
ஒய்யாரியதைச் செய்யாமல் விட்டதால்….
நவரசத்தில் ஒருரசம் உக்கிரமாக
பத்தாம்ரசமாம் பாதரசம் உருகியொழுக...

ஆடி காட்டும் அவள் பிம்பம்
அகோரமாயிருப்பதில்
ஆச்சரியம்தான் என்ன?

மிகவும் மிகவும் மிகவும்... ரசித்தேன்...

ஆடி பார்த்தது அவளை...
அவள் பார்த்ததும் அவளைத்தானே...

அவளை ஆடி காதலித்தால்,
அவள் அவளையா காதலிப்பது...

பாதரசம் உருக்கிவிட்டால்,
உருக்குலைவாள் அவள்
என எண்ணும் ஆடியே,
அவள் உருக் குலைத்து
நீ பிரதிபலித்தால்,
உன் இருப்பு இல்லாமற்
போய்விடும்...

பாதரசம் கொட்டிவிட்டால்,
அவள் சுவரில் முட்டிவிடுவாள்
என எண்ணும் ஆடியே,
பாதரசம் இருக்கும் வரைக்கும்தான்
அவளை உன்னால் மறித்து
ரசிக்க முடியும்...
இல்லாவிட்டால்,
உன்னை ஊடுருவி
அப்பாற் சென்றுவிடுவாள்...

தாரம் ஆக்கிடலாம்
என எண்ணாதே...
சேதாரம் ஆகிடுவாய்...

அக்னி
16-03-2011, 02:12 PM
கண்ணாடிக்கும் ஏமாற்றமா..?

கண் ஆடியதால் தடுமாற்றமா ?

சிதறிய பிம்பமோ அகோரம் !

எதிரினில் உன் மனதிலோ சொரூபம் !

மாறிடும் பார்வைக் கோளாறு....

முகக் கண்ணிலா...அகக் கண்ணிலா..?

:icon_b: :icon_b: :icon_b:

பார்வைக் கோளாறல்ல...
ஆடிக்குப் பாவையில் வந்த
காதற் கோளாறு...

ஆடி மாறாவிட்டால்
ஆடி மாறிவிடும்...
என்பது
ஆடிக்குப் புரியவில்லை...

அகோரம் ஆக்குவதாய்க்
கோரமாகியது ஆடிதான்...

காதல் கிட்டவில்லை என்று
கீறல் போட்டுக்கொண்ட ஆடி,
ஆடிக்கொண்டுதானிருக்கும்,
ஓரம் ஒதுக்கப்படும்வரை...

சிவா.ஜி
16-03-2011, 02:14 PM
கண்ணாடிகளெல்லாம்
தன் நாடிகளாகிட முடியுமா
தன் நாடி துடிக்கும் இதயம்
கண்ணாடிக்குத் தெரியுமா
தெரிந்தால்...
முன்னாடி நிற்பவளை
மோகிக்க முடியுமா.....

அசத்துறீங்க தங்கையே.....உங்க எண்ண ஓட்டத்தின் பரப்பளவு.....பல நூறு காதம் பரந்து விரிந்திருப்பதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்ம்மா.

அக்னி
16-03-2011, 02:22 PM
கண்ணாடிகளெல்லாம்
தன் நாடிகளாகிட முடியுமா
தன் நாடி துடிக்கும் இதயம்
கண்ணாடிக்குத் தெரியுமா
தெரிந்தால்...
முன்னாடி நிற்பவளை
மோகிக்க முடியுமா.....


முடியும் என்றுதானே
முட்டிக்கொள்கின்றது ஆடி...

வெளிச்சம்
அவள் மேனி அணைக்க
வராத கோபம்..,
காதலன் அணைக்க
எங்கிருந்து வந்தது...

வெளிச்சத்தோடு கோபித்தால்
தனக்கு வெளிச்சமில்லை
என்பதால்,
காதலித்தவளை
வெளிச்சம் தடவக்
கண்டுகொள்ளாத
ஆடிக்குத் தேவையா
காதல்...

சிவா.ஜி...
ஆடிக்குமுன் ஒருதரம்
ஆடி,
ஆடியை ஆடிக்குக்
காட்டி விடுங்கள்...

அப்போதாவது,
ஆடி அடங்குதா என்று
பார்ப்போம்... :rolleyes:

ஆதவா
16-03-2011, 02:33 PM
நல்ல அருமையான கவிதை கீத்க்கா.. ஒரு குறுங்கதை படித்த உணர்வு ஏற்பட்டது

கவிதையின் பிரதானம் பிரதிபலிப்பை முன்னிருத்துகிறது. பிரதிபலிப்பில் மயங்கி நிற்பது அவள். கவிதையின் ஆரம்பத்தில் அவள் அவளாகவும் அது கண்ணாடியாகவும் இருக்க, முடிவில் அவள் கண்ணாடியாகவும் அது அவளாகவும் மாறிப்போய்விடுகின்றனர்... தனது உருமாற்றத்தை அவளால் அறிந்து கொள்ளமுடியவில்லை. அதனாலேயே கோரத்தை பிரதிபலித்துக் கொள்கிறாள். கண்ணாடி என்பதே ஒரு மேல் மனம்தான். ஒருவரை நாம் பார்ப்பது அவர்மீது விழும் ஒளியில்தான். கண்ணாடி அப்படியல்ல. அவர்களது நிலைமையைக் வெளிச்சமிடுகிறது. அவர்களது பொறாமையை, வஞ்சத்தை, சுயபச்சாதாபத்தை என எல்லாவற்றையும் கசியவிடுகிறது. இதனால்தான் கண்ணாடியும் மனதும் ஒன்றென ஆகிவிடுகிறது. மனதின் மையத்தில் விரிசல் வருவதை புறவடிவில் கண்ணாடியால் மட்டுமே காட்டவியலும்!!

அதனால்தானோ என்னவோ.... உடைந்த ஆடிகள் உருவங்களைக் கொச்சைப்படுத்துகின்றன.

அவள், அவன், கண்ணாடி என மூன்று பரிமாணங்களை (சொல்லப்போனால் இரண்டு) வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்திப் பார்க்க இயலுகிறது.

அமரன், அக்னி ஆகியோரின் பின்னூட்டங்கள் நன்று!!

அக்னி
16-03-2011, 02:37 PM
இதனை விடவும் கண்ணாடியையும் மனதையும் ஒப்பிட்டிட முடியாது ஆதவா...

மனம் காட்டும் கண்ணாடி
கண்ணாடி காட்டும் மனம்
தவிர்க்க மறைக்க முடியாது என்பதை அழகாகப் பதிவிட்டுள்ளீர்கள்...

பாராட்டு ஆதவா...

ஆதவா
16-03-2011, 02:41 PM
முடியும் என்றுதானே
முட்டிக்கொள்கின்றது ஆடி...

வெளிச்சம்
அவள் மேனி அணைக்க
வராத கோபம்..,
காதலன் அணைக்க
எங்கிருந்து வந்தது...

வெளிச்சத்தோடு கோபித்தால்
தனக்கு வெளிச்சமில்லை
என்பதால்,
காதலித்தவளை
வெளிச்சம் தடவக்
கண்டுகொள்ளாத
ஆடிக்குத் தேவையா
காதல்...

சிவா.ஜி...
ஆடிக்குமுன் ஒருதரம்
ஆடி,
ஆடியை ஆடிக்குக்
காட்டி விடுங்கள்...

அப்போதாவது,
ஆடி அடங்குதா என்று
பார்ப்போம்... :rolleyes:

அக்னி.... உங்களின் பதில் பின்னூட்ங்கள் கவனிக்கத்தக்கன!!

அவளை கண்ணாடியாக ஆக்கிக் கொள்ளும்பொழுது அது அவளாகப் பிரதிபலித்தது, அது அவளாக மாறியபின் கண்ணாடியை அகோரப்படுத்திக் கொச்சைப்படுத்தியது. அவளும் அதுவும் மாறிக் கொள்ள, இடையே உட்புகும் அவனின் பிரதிபலிப்பை அது ஏற்றுக் கொண்டிருக்கிறது. அது இப்பொழுது அவனாக மாறவழியில்லாமல் அவளாக மாறத்துவங்குகிறது. இப்போது அவளும் அதுவும் எங்கிருக்கிறார்கள் என்று அதற்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது!!

கண்ணாடியும் கண்ணாடியும் சந்தித்துக் கொண்டால் பிரதிபலிக்க என்ன இருக்கும்???

சிவா.ஜி
16-03-2011, 03:00 PM
ஆதவா சொன்னதை விடவா நான் அதிகம் சொல்லப்போகிறேன்......அக்னியின் பின்னூட்டக் கவிதை....பலவற்றைச் சொல்லிச் செல்கிறது....அசத்துங்க அக்னி.

Nivas.T
16-03-2011, 03:09 PM
கண்ணடிக்கும் கண்தெரியுமோ?
காதல் கொள்ளுமோ?
கவிதை பாடுமோ ?

பொறாமை பட்டுதான்
பொரிந்து தள்ளுமோ?
தனைத் தானே
உடைத்துக் கொள்ளுமோ?

அழகை சிதைத்துச் சொல்லுமோ ?

நல்ல கற்பனை

அழகான கவிதை

கீதம்
16-03-2011, 10:09 PM
மிகவும் மிகவும் மிகவும்... ரசித்தேன்...

ஆடி பார்த்தது அவளை...
அவள் பார்த்ததும் அவளைத்தானே...

அவளை ஆடி காதலித்தால்,
அவள் அவளையா காதலிப்பது...

பாதரசம் உருக்கிவிட்டால்,
உருக்குலைவாள் அவள்
என எண்ணும் ஆடியே,
அவள் உருக் குலைத்து
நீ பிரதிபலித்தால்,
உன் இருப்பு இல்லாமற்
போய்விடும்...

பாதரசம் கொட்டிவிட்டால்,
அவள் சுவரில் முட்டிவிடுவாள்
என எண்ணும் ஆடியே,
பாதரசம் இருக்கும் வரைக்கும்தான்
அவளை உன்னால் மறித்து
ரசிக்க முடியும்...
இல்லாவிட்டால்,
உன்னை ஊடுருவி
அப்பாற் சென்றுவிடுவாள்...

தாரம் ஆக்கிடலாம்
என எண்ணாதே...
சேதாரம் ஆகிடுவாய்...

நன்றி அக்னி...

ஆடிக்கொரு ஆற்றுப்படையோ?
அதனூடும் முன்னறிவிப்போ?
எதுவானாலும் ஏற்றுக்கொள்ளுமாயின்
ஆடி அடங்கிடும்...

அழகிய பின்னூட்டம்..வெகுவாய் ரசித்தேன்.:icon_b:

கீதம்
16-03-2011, 10:14 PM
கண்ணாடிக்கும் ஏமாற்றமா..?

கண் ஆடியதால் தடுமாற்றமா ?

சிதறிய பிம்பமோ அகோரம் !

எதிரினில் உன் மனதிலோ சொரூபம் !

மாறிடும் பார்வைக் கோளாறு....

முகக் கண்ணிலா...அகக் கண்ணிலா..?


:icon_b: :icon_b: :icon_b:

பார்வைக் கோளாறல்ல...
ஆடிக்குப் பாவையில் வந்த
காதற் கோளாறு...

ஆடி மாறாவிட்டால்
ஆடி மாறிவிடும்...
என்பது
ஆடிக்குப் புரியவில்லை...

அகோரம் ஆக்குவதாய்க்
கோரமாகியது ஆடிதான்...

காதல் கிட்டவில்லை என்று
கீறல் போட்டுக்கொண்ட ஆடி,
ஆடிக்கொண்டுதானிருக்கும்,
ஓரம் ஒதுக்கப்படும்வரை...

ஜானகி அவர்களின் பின்னூட்டமும், அக்னியின் பின் பின்னூட்டமும் வெகு அற்புதம். புள்ளி மட்டுமே வைத்தேன்... அழகிய கோலமாக்கிவிட்டீர்கள். நன்றி ஜானகி அவர்களே.. நன்றி அக்னி.

கீதம்
16-03-2011, 10:17 PM
கண்ணாடிகளெல்லாம்
தன் நாடிகளாகிட முடியுமா
தன் நாடி துடிக்கும் இதயம்
கண்ணாடிக்குத் தெரியுமா
தெரிந்தால்...
முன்னாடி நிற்பவளை
மோகிக்க முடியுமா.....

அசத்துறீங்க தங்கையே.....உங்க எண்ண ஓட்டத்தின் பரப்பளவு.....பல நூறு காதம் பரந்து விரிந்திருப்பதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்ம்மா.

நன்றி அண்ணா... மேலோட்டமாய்ப் பரந்திருக்கிறேன். ஆழச் செல்ல இன்னும் கற்கவேண்டும். மன்ற உறவுகளின் ஆதரவில் என் வளர்ச்சி அமோகமாய் இருக்கிறது. உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா.

கீதம்
16-03-2011, 10:24 PM
முடியும் என்றுதானே
முட்டிக்கொள்கின்றது ஆடி...


சிவா.ஜி...
ஆடிக்குமுன் ஒருதரம்
ஆடி,
ஆடியை ஆடிக்குக்
காட்டி விடுங்கள்...

அப்போதாவது,
ஆடி அடங்குதா என்று
பார்ப்போம்... :rolleyes:


அக்னி.... உங்களின் பதில் பின்னூட்ங்கள் கவனிக்கத்தக்கன!!

கண்ணாடியும் கண்ணாடியும் சந்தித்துக் கொண்டால் பிரதிபலிக்க என்ன இருக்கும்???

இப்படி சிவாஜி அண்ணாவை மறைமுகமாய்த் தாக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... (ஆகா... அக்னியைப் பத்தவைத்தாகிவிட்டது):D

கீதம்
16-03-2011, 10:31 PM
நல்ல அருமையான கவிதை கீத்க்கா.. ஒரு குறுங்கதை படித்த உணர்வு ஏற்பட்டது

கவிதையின் பிரதானம் பிரதிபலிப்பை முன்னிருத்துகிறது. பிரதிபலிப்பில் மயங்கி நிற்பது அவள். கவிதையின் ஆரம்பத்தில் அவள் அவளாகவும் அது கண்ணாடியாகவும் இருக்க, முடிவில் அவள் கண்ணாடியாகவும் அது அவளாகவும் மாறிப்போய்விடுகின்றனர்... தனது உருமாற்றத்தை அவளால் அறிந்து கொள்ளமுடியவில்லை. அதனாலேயே கோரத்தை பிரதிபலித்துக் கொள்கிறாள். கண்ணாடி என்பதே ஒரு மேல் மனம்தான். ஒருவரை நாம் பார்ப்பது அவர்மீது விழும் ஒளியில்தான். கண்ணாடி அப்படியல்ல. அவர்களது நிலைமையைக் வெளிச்சமிடுகிறது. அவர்களது பொறாமையை, வஞ்சத்தை, சுயபச்சாதாபத்தை என எல்லாவற்றையும் கசியவிடுகிறது. இதனால்தான் கண்ணாடியும் மனதும் ஒன்றென ஆகிவிடுகிறது. மனதின் மையத்தில் விரிசல் வருவதை புறவடிவில் கண்ணாடியால் மட்டுமே காட்டவியலும்!!

அதனால்தானோ என்னவோ.... உடைந்த ஆடிகள் உருவங்களைக் கொச்சைப்படுத்துகின்றன.

அவள், அவன், கண்ணாடி என மூன்று பரிமாணங்களை (சொல்லப்போனால் இரண்டு) வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்திப் பார்க்க இயலுகிறது.

அமரன், அக்னி ஆகியோரின் பின்னூட்டங்கள் நன்று!!

பின்னூட்டத்துக்கு நன்றி ஆதவா....

ஒவ்வொருவரின் பார்வையில் இக்கவிதையின் வேறுபட்ட பரிணாமங்களைப் பார்க்கையில் ஒரு தாயின் கர்வமே உண்டாகிறது...

நான் அறிந்திராத பல நுணுக்கங்களை உங்கள் விமர்சனத்தால் அறியமுடிகிறது... மிகவும் நன்றி ஆதவா...

கீதம்
16-03-2011, 10:36 PM
கண்ணடிக்கும் கண்தெரியுமோ?
காதல் கொள்ளுமோ?
கவிதை பாடுமோ ?

பொறாமை பட்டுதான்
பொரிந்து தள்ளுமோ?
தனைத் தானே
உடைத்துக் கொள்ளுமோ?

அழகை சிதைத்துச் சொல்லுமோ ?

நல்ல கற்பனை

அழகான கவிதை

பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்..(உங்கள் வீட்டுக் கண்ணாடியைக் கேட்டுப்பாருங்களேன்):)

Nivas.T
17-03-2011, 05:27 AM
பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்..(உங்கள் வீட்டுக் கண்ணாடியைக் கேட்டுப்பாருங்களேன்):)

எனக்கு எங்க வீட்டுக் கண்ணாடிய புடிக்காதுங்க

எப்பவுமே என்ன அது அசிங்கமாத்தான் காட்டும் அதனால் தான் :sprachlos020::traurig001::icon_rollout: :D

அக்னி
17-03-2011, 02:32 PM
இப்படி சிவாஜி அண்ணாவை மறைமுகமாய்த் தாக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... (ஆகா... அக்னியைப் பத்தவைத்தாகிவிட்டது):D

அவரே கண்டும் காணாமப் போறாரு. உங்களுக்கெதுக்கு இந்தக் கோர்த்துவிடுற வேலை... :mad:

Nivas.T
17-03-2011, 04:03 PM
அவரே கண்டும் காணாமப் போறாரு. உங்களுக்கெதுக்கு இந்தக் கோர்த்துவிடுற வேலை... :mad:

ஒரு...... பொதுசேவ...... :D:D:D

சிவா.ஜி
17-03-2011, 04:07 PM
இங்கையுமா......முடி...............................ல.....

Nivas.T
17-03-2011, 05:03 PM
இங்கையுமா......முடி...............................ல.....

அண்ணனுக்கு ரொம்ப நல்ல நேரம் போல
எங்க போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க :D:D:D

என்ன ஒரு கொலைவெறி :icon_rollout::icon_rollout:

இளசு
13-04-2011, 08:42 PM
ஆடிப்போய்ட்டேன் மக்கா...


கீதம் கவிதை என்ன..
அக்னியின் பிரளயம் என்ன..
ஆதவனின் ஆழ் அலசல் என்ன..


அமரன், சிவா, ஜானகி என எல்லாருமே இக்கவிதையை உச்சத்தில் வைத்துவிட்டீர்கள்..

அனைவருக்கும் பாராட்டுகள்..


-----------------------------------------------

மிக மிக உயர்ந்த தளத்தில் இக்கவிதை விமர்சிக்கப்பட்டுவிட்ட பிறகு
எனக்கு எட்டிய ( தாழ்)தளத்தில் நின்று கருத்து சொல்ல நாணுகிறேன்..

வாழ்த்துகள் கீதம்..

கீதம்
14-04-2011, 02:27 AM
ஆடிப்போய்ட்டேன் மக்கா...


கீதம் கவிதை என்ன..
அக்னியின் பிரளயம் என்ன..
ஆதவனின் ஆழ் அலசல் என்ன..


அமரன், சிவா, ஜானகி என எல்லாருமே இக்கவிதையை உச்சத்தில் வைத்துவிட்டீர்கள்..

அனைவருக்கும் பாராட்டுகள்..


-----------------------------------------------

மிக மிக உயர்ந்த தளத்தில் இக்கவிதை விமர்சிக்கப்பட்டுவிட்ட பிறகு
எனக்கு எட்டிய ( தாழ்)தளத்தில் நின்று கருத்து சொல்ல நாணுகிறேன்..

வாழ்த்துகள் கீதம்..

உங்கள் பார்வையையும் பதித்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன் இளசு அவர்களே...

நண்பர்களின் பின்னூட்டமே இக்கவிதையை உச்சாணிக்கொம்பில் உட்கார்த்திவைத்திருக்கிறது. உங்களுடையதும் இணைந்தால் உயரப் பறக்கவும் கூடும். (கூடவே எந்தன் மனமும்):)