PDA

View Full Version : கோடி நன்றிகள்



ambi
17-02-2011, 05:10 PM
http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc3/17980_338646363031_572643031_4909407_5662969_n.jpg

உன்னை தாங்கும் என் இமைகளுக்கு தெரியாது நீ தொலைந்துபோனது.
இரவில் விழித்தும், பகலில் தூங்கியும் போகும், கனவில் மட்டும் வந்தபடியான ஒரு நிழல் தேசம்..

அழைக்கும் நபரின் குரலில் மட்டுமே தெரியும் உருவம், அது தந்த பெரும் வரம் எல்லாம் அழகானவை என்னும் ஒரு மாயத்தோற்றம் மட்டும் உண்மை என நினைக்கும் மனம், புத்தி சொல்லித்தானே அறியும் குணம்..

உலக அழகி போட்டி பார்க்கும் நண்பன் சொன்னான்
'அழகுகள் எல்லாம் ஆடையிலாமல் அசிங்கம்', என்று அவர் தம் வாய் திறந்து மலரும் பதில்களில் தான் அவர் அழகு(?) மிளிரக்காணும் பாக்கியம் இல்லாத பாக்கியம்..

இன்னும் இழிவாகி, இரந்து, மாண்டும் மரணபயம் போகாத மனிதரின் கண்ணீர்குரல் மட்டுமே கேட்கும் போது இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல் என்று எண்ணும் புத்தி அவர் படும் இன்னல் காணாமல் இருப்பது, கண்டும் ஒன்றும் செய்யவியலா மனிதரில் மேல் அன்றோ..

இன்னும் பிற இல்லாதவைகளும், இருக்கின்றவைகளும்..
நேற்றும், இன்றும், என்றும் இப்படி இருக்கவே ஏங்கும் மனம் சொல்லும் அம்மாவுக்கு நன்றி, இப்படி என்னைப்படைத்தற்க்கு கோடி நன்றிகள்.


குறிப்பு: சிவப்பு விளக்கில் காத்திருந்து, பச்சைக்கு மாறுமுன் சிரித்தபடியே பாதசாரிக்கடவையை கடந்த ஒரு மனக்"கண்" பார்வை உள்ளவரை பார்த்த போது தோன்றியது இது.