PDA

View Full Version : வந்தாள் வஞ்சி



ambi
17-02-2011, 05:05 PM
http://a6.sphotos.ak.fbcdn.net/photos-ak-ash1/v148/43/97/572643031/n572643031_351856_4658.jpg

கருமேகங்கள், வெள்ளை மேகங்களை தள்ளி இடம் பிடிக்க,
காற்று பலமாக வீசி மழைக்காக வழி தேடிகிறது..குளிர்மையாய் மனது.

காற்றின் துணை கொண்டு எங்கெல்லாமோ சாரலின் வரவை
அறிவித்த படி பறந்து வந்த காயந்த சருகு என் காலடியில்
தன் பறப்பை முடித்துக்கொள்ள..

அருகிலிருந்த மரமொன்றிலிருந்து மனிதரைபோல
நனைந்துவிடாமல் தப்பிக்க மேலெழுந்து பறந்தது குருவி..
மீண்டும் வருவாயா என்று கேட்டு கையசைத்து வழியனுப்பியது மரம்..

காலையில் பூத்த வெள்ளை ரோஜாவின் இதழில் மெல்ல
முத்தமிட்டது துளி..வானுக்கும் மண்ணுக்கும் நேரடி இணைப்பை ஏற்படுத்திய கீற்றுக்கள் ஆணித்தரமாக உறவை வளர்க்க..
மண் மணக்க, மலர் சிரிக்க, மீண்டும் சங்கமமாக வந்தாள் வஞ்சி.

முரளிராஜா
18-02-2011, 10:00 AM
வரிகளை வரிசைபடுத்தியிருந்தால் இன்னும் அழகாய் இருக்கும்.

ambi
18-02-2011, 04:55 PM
பதியப்பட்டபோது கவனிக்கவில்லை, மன்னிக்கவும்.