PDA

View Full Version : மனம் ஒரு குழந்தை;பாகம்;2



ராஜாராம்
17-02-2011, 07:28 AM
நன்றி
******
டாக்டர்.கே.கோபாலக்கிருஷ்ணன்.(மனநல மருத்துவர்)திருச்சி.
டாக்டர்.என்.மணி.(மனநல மருத்துவர்)கும்பகோணம்.
டாக்டர்.ருத்ரன்(மனநல மருத்துவர்)சென்னை.
டாக்டர்.கே.ஜி.ரமோநாராயாணா(மனநல மருத்துவர்)கொச்சின்.
****************************************************************

மனோதத்துவத்தில்
"எண்ணங்களின் பொருளில் ஏற்படும் மாறுபாடு"-;(DISTURBED THOUGHT CONTENT)
----------------------------------------------------------

"நான் ஒரு இதிகாசம்...நான் எல்லாயிடத்திலும் நானாகவே இருக்கின்றேன்..
.நான் என்னுள் என்னைத் தேடி தேடி தொலைந்துபோனவன் அல்ல....எங்கும் பரிபூரணமாய் நிறைந்தவன்...",
என்றான் ராமன்,

"என்னங்க ,,,என்னா ஆச்சு உங்களுக்கு?...ஏதேதோ...தத்துவமெல்லாம் பேசுரிங்க...
எனக்கு பயமா இருக்குங்க....", என்று பதறினாள் அவன் மனைவி லதா.

(தன் மனைவியைக் கண்டு புன்னகை செய்தவன்னம்)
"புரிவது அறிவது எல்லாம் அவன் செயல்....,
வருகிற...8ம் தேதி,நீ உன் அன்னையை இழப்பாய்.....",மேலும் அவன் குழப்பினான்.

(அவன் கூறிய 8ம் தேதியும் வந்தது...அவன் கூறியபடியே...
அவன் மனைவியின் அன்னை இறந்துபோனாள்..)

"உன் புருஷனுக்கு அருள் வந்திருக்கு போல...அவன் சொன்னது அப்டியே நடந்துவிட்டதே...",
என்றாள் லதாவின் அக்கா,.

"காளிஅம்மன் அருள்...அதான் சொன்னவாக்கு அப்படியே பலிக்குது",
என்றாள் அடுத்த வீட்டு பாட்டி.

"இன்னிமே...அவரு ஞானி...நம்மைபோல மனுஷன் இல்லை",
என்றார்,ராமனின் அப்பா.

"என் பையனுக்கு எப்பக் கல்யாணம் ஆகும்னு,,உன் புருஷனிடம் கேட்டு சொல்ல்லுடி...ப்ளீஸ்",
என்று கேட்டாள்,லதாவின் தோழி.

(ஒரு வீட்டுக்குள்,நடந்த அந்த அதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக,வெளிஉலகிற்கு அரங்கேறியது)

"சாமியில்லை...ஞானியில்லை...அவன் மெண்டல் ஆகிட்டங்க...",
என்றான் ஒருவன்,

"கேரளாவுக்கு போயி ,சித்துவேலை,மந்திரம், தந்திரமெல்லாம் கத்துக்கிட்டு வந்திருக்கான் போல",
என்றான் மற்றொருவன்.

ஏன்?
எப்படி?
எதனால்?
இது சாத்தியமா?
உண்மையா?
பொய்யா?
பல கேள்விகள் எழத்தொடங்கின.

இதைத்தான் ராமகிருஷ்ணபரமஹம்சர்,மற்றும்,ஓஷோ,அணைவரும்,
"மெய்யுணர்வுவெய்தல்"(mystric experince)என்றனர்.
இதைதான் மனநோய் நூல்கள்,
"எண்ணங்களின் பொருளில் ஏற்படும் மாற்றம்",(distrubed thought content)என்கிறது.

இது,
1)உண்மையாக,மெய்யுணர்வுவெய்தவருக்கும் ஏற்படும்.
2)மனசிதைவு நோயினாலும்,எண்ணத்தின் பொருளில் பிறழ்வு ஏற்படுவதாலும் ஏற்படும்.
3)வியாபார நோக்கில் கண்கட்டுவித்தையாக செய்பவரிடமும் தென்படலாம்..(ஆனால் அது நிலையின்றி முராணகவும் அமையலாம்)
4)அதிகாமக,போதைமருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் இவ்வகை உணர்வு ஏற்படும்,.(இதில் உடல் சீர்கேட்டை சீரழிக்கும் வாய்ப்பு அதிகம்)

மெய்யுணர்வுவெய்தலுக்கான குணாம்சங்கள்:-(mystric experince)
-----------------------------
1)அந்நிலை அதை அனுபவிப்பவர்களின் விவரிப்பிற்கு அப்பாற்பட்டு இருக்கும்.
2)அவர்களது வார்த்தைகளில் வசீகரமும்,ஆழ்ந்த உள்ளடக்கமும்,தொனிக்கும்.
3)சிலமனி நேரங்களில் உணரப்படும் அந்நிலையில்,அதனைத் தொடர்பாய் வைத்து,
வாழ்வில் புது அர்த்தங்களும்,அனுபவங்களும் உண்டாகும்.
4)அதை வியாபரமாக ஆக்கும் எண்ணமோ,நான் கடவுள் என்ற எண்ணமும் அவர்களிடம் தோன்றாது.
5)அவர்களது பேச்சிலும்,சிந்தனையும்,ஏதோ ஒரு குழப்பமும்,தொடர்பில்லாமலும் இருக்கும்.
ஆனால் அதில் உண்மை இருக்கும்.
6)இறைபக்தி என்பதில் சற்றே மிகையாகவும்,இயல்பு வாழ்வில் சீராகவும் செயல்படுவார்கள்.

மனநல மருத்துவ நூலகள் கூறும்;
எண்ணங்களின் பொருளில் ஏற்படும் மாற்றத்தின் குணாம்சம்:,(distrubed thought experince)
----------------------------------------
1)உறக்கநிலையிலும்,..ஒருவிதமான அறைகுரை நினைவலைகளில்,நடக்கப்போவதை அறிவார்கள்..
2)ESP,....என்ற மனோவியலில் ஏற்படும்ரசாயண மாற்றத்திலும்,
T.L.E,...என்ற ஒருவகை வலிப்பு நோயிலும்,எண்ணத்தின் பொருளில் பிறழ்வு ஏற்பட்டு,
அதீத உணர்வும்,தன்னிலை மறந்து,நிகழப்போவதை அறியும், உணர்வு ஏற்படும்.
3)அவர்களது இயல்பு வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் நிகழாது.
4)எதிர்கால சிந்தனையில் பிறழும்,இவர்கள் மனதில்,
சிலசமயம் நிகழ்கால வேலைகளில், ஞாபகமறதி அதிகம் நிகழலாம்.
5)ஒருசிலருக்கு,இவ்வித உணர்வு அதுவாக குணமாகலாம்.
ஒருசிலருக்கு,மனநல மருதுவர்கள் தரும்,மருந்துகளாலும்,கலந்தாய்வுகளாலும்,குணமாகலாம்.

போதை மருந்துகளால் மெய்யுணர்வுவெய்தவரின் குணம்சம்:
----------------------------------------
சிலர் இதுபோன்ற நிலையை ,போதைமருந்துகளால் அடைவார்கள்.
அது மனநோயும் அல்ல,மெய்யுணர்வுவெய்தலும் அல்ல.....,
மெய்யுணர்வு அடைந்ததுபோன்று மக்களை ஏமாற்றுபவார்கள்.
1)இவர்கள் பேச்சில்,நான் கடவுள் என்ற தத்துவம் அடங்கியிருக்கும்.
2)தான் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்வார்கள்.
3)தான் செய்த அற்புதங்களை,பட்டியல் இட்டுக்காட்டுவார்கள்.
4)இவர்களது நோக்கம் காசு பணம் பறிப்பதிலே இருக்கும்...
5)இவர்களது கருத்துகளில்,தன்னைப்பற்றி உயர்வாகவே கூறுவார்கள்.

இதுபோன்று போதைமருந்துகளால்,மெய்யுணர்வுவெய்தவரிடம்,சென்று,ஏமாறும் மக்கள் நிறையபேர்.
அவர்ளிடம் அடைக்கலம் காண்போரின் மனநிலை,சிலநாட்களில்,
பாதிப்புகளுக்கோ,மனசிதைவுகளுக்கோ,,...ஆளாகவாய்புகள் அதிகம் உள்ளது.

(எனது இந்த படைப்பு,மனநல நோய்களைப்பற்றி,விளக்கும் கட்டுரை வடிவம் மட்டுமே...மனநோய்களுக்கான,ஆலோசனைகளுக்கோ,சிகிச்சைகளுக்கோ,இது உகந்தது அல்ல.)

(மனம் ஒரு குழந்தை..........தொடரும்)

முரளிராஜா
17-02-2011, 10:05 AM
ராஜாராம் தொடரட்டும் பகிர்வு

உமாமீனா
19-02-2011, 05:08 AM
"சாமியில்லை...ஞானியில்லை...அவன் மெண்டல் ஆகிட்டங்க...",
என்றான் ஒருவன்,

"கேரளாவுக்கு போயி ,சித்துவேலை,மந்திரம், தந்திரமெல்லாம் கத்துக்கிட்டு வந்திருக்கான் போல",
என்றான் மற்றொருவன்.



புரிகிறது?- மனம் - அறிய தகவல் - தொடருங்கள்