PDA

View Full Version : துளி நம்பிக்கை! (தொடர் கவிதை)



lenram80
16-02-2011, 05:34 PM
இன்று
நல்ல பொழுதாய் இருக்கப் போவதில்லை!
எண்ணிக் கொண்டான் இந்த தம்பிப் பிள்ளை!

முதன் முதலாய் பகல் இரவாகப் பட்டது!
பாதியில் விட்டுப் போவது இவனைச் சுட்டது!

இது தொடக்கமா? முடிவா?
இல்லை புது விடிவா?

அத்தனை தியாகமும் வீண்!
அத்தனை காயமும் வீண்!

ஆண்டாண்டாய் வளர்ந்த மரம்
அரை நொடியில் அடியோடு அறுந்தது காண்!

கால் நூற்றாண்டாய் கட்டிய கோட்டை
கால் நொடியில் அழிந்தது காண்!

வருடக்கணக்கில் வளர்பிறை!
தினக் கணக்கில் தேய்பிறை!
என்ன நியாயம்?

வளர்ந்து மரமாகாமல்
மீண்டும் விதை ஆனது
என்ன நீதி?

சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை!
தானாகத் தரப்படுவது!

தடுக்கப்பட்ட நிலை வந்ததால்
எடுக்கப்பட வேண்டிய நிலையும் வந்தது!

சுதந்திரம் என்பது பிறப்புரிமை!
அதைப் பிடுங்க எவருக்கும் இல்லை உரிமை!

அறவழியில் கேட்டோம்!
அரக்க வழியில் விடை வந்தது!
அமைதியாய் கேட்டோம்!
அடக்கப் படை வந்தது!

அடித்த சத்தம் கேட்டதே தவிர
எங்கள் அழகைச் சத்தம் கேட்டதில்லை!

எங்கள் சிசுக்கள் பசிக்கு அழுததே தவிர
ஒருநாளும் பயந்து அழுததில்லை!

விழுந்த ஒவ்வொரு அடியும்
அவனே அறியாமல் -
அவனே போட்ட எங்களின் அடித்தளம்!

பறந்து வந்த ஒவ்வொரு செல்லும்
குண்டுக் குழி மட்டும் போடவில்லை!
புலிகள் ஒன்று சேர
பிள்ளையார் சுழியும் சேர்த்துப் போட்டது!

வலியாய் பட்ட ஒவ்வொரு பழியும்
புலியாய் மாறி புத்துயிர் பெற்றது!

பயந்தது பாய்ந்தது!
பாய்ந்தது கை ஓங்கியது!
ஓங்கியது உயிர் வாங்கியது!

இப்படி
ஆண்ட இயக்கம் இத்தோடு மாண்டதா?
ஓங்கிய கை இத்தோடு ஓய்ந்ததா?


(புரட்சி இன்னும் படரும்!
கவி இன்னும் தொடரும்!....)

கீதம்
17-02-2011, 03:42 AM
துளி நம்பிக்கையென துளிர்த்தெழுந்த கவிதைக்குப் பாராட்டுகள். தொடரட்டும் நம்பிக்கைத்துளிகள் கவிவடிவெடுத்து!

Nivas.T
17-02-2011, 04:21 AM
காலம் மட்டும் பதில் சொல்லும்
கடமை மறவாது புலியதன் வழிச்செல்லும்
புயலுக்கு முன் அமைதி இயல்புதான்
அமைதி இப்பொழுது புயல்வரும்
பொழுது அறிவது...... நமிக்கையில்

பாராட்டுக்கள்

முரளிராஜா
17-02-2011, 05:33 AM
இன்று

பறந்து வந்த ஒவ்வொரு செல்லும்
குண்டுக் குழி மட்டும் போடவில்லை!
புலிகள் ஒன்று சேர
பிள்ளையார் சுழியும் சேர்த்துப் போட்டது!

வலியாய் பட்ட ஒவ்வொரு பழியும்
புலியாய் மாறி புத்துயிர் பெற்றது!



(புரட்சி இன்னும் படரும்!
கவி இன்னும் தொடரும்!....)

அருமையான வரிகள்

lenram80
12-05-2011, 01:23 PM
உணவுக்குப் பஞ்சம்!
உயிருக்குப் பஞ்சம்!
உணர்வுக்குப் பஞ்சம் என்றுமே இல்லை!

ஆடு மாடாய் பிறந்திருந்தால்
அண்டியே வாழ்ந்திருக்கலாம்!

மனிதனாய் பிறந்ததால்
மண்டியிட முடியவில்லை!

அதுவும் தமிழனாய் பிறந்ததால்
தலை குணிய முடியவில்லை!

அண்ணல் காந்தியின் வழியில்
உண்ணா விரதம் இருந்த திலீபன்
சொல்லா துயரம் கொண்ட வாலிபன் - யாரும்
செல்லா உயரம் போனது
அறப் பாதையை மறப் பாதையாய் மாற்றியது எனலாம்!

வீறு கொண்ட இளைஞர்கள் எனை நம்பி
கூறு போட வந்தார்கள்!

மிரண்டது சாது!
அரண்டது சூது!

தயக்கம் எதுவும் இன்றி அது
இயக்கமாக மாறியது!

பலியாகு இல்லை புலியாகு!
வலி கொள் இல்லை பழி கொல்!
அடிமை இல்லை ஆளுமை!
முன்னது கொண்டவன் வீட்டில் முடங்கினான்!
பின்னது கொண்டவன் என்னில் காட்டில் அடங்கினான்!

எனை நம்பி வந்த இந்த பெண்கள் ஆண்கள்!
தன்னலம் இல்லா கவரி மான்கள்!

குண்டு குவித்தது
கொள்ளை அடிக்க அல்ல!
உண்டு உடுத்தி வாழ!
ஒரே கொள்கை கொண்டு ஆள!

மொழி வேறுபட்டால் வரிகள் மாறிடலாமா?
ஆண்டவன் வேறுபட்டால் ஆள்பவன் கூறிடலாமா?

பிறப்பால் நானும் ஒன்று! அவனும் ஒன்று!
பிறகு எதற்கு
எனக்கு மட்டும் நூற்றி பதினொன்று?


தட்டிக் கேட்க என் பின்னே இந்த மறவர் கூட்டம்!
தாவும் அந்த கயவர்களின் தசைகள் ஆட்டம்!

தன்னினம் காக்க தன்னுயிர் தருவாள் என் தங்கை!
இடையில் வந்து இடைங்சல் செய்தால்
சங்கடப் படாமல் அறுப்பாள் அவன் சங்கை!

இனி
வெற்றி உறுத்தி எங்கள் விழி கண்ணீர் வரட்டும்!
பற்றி எரியும் பகையை எங்கள் செந்நீர் விரட்டும்!


(பகை பயந்து அலறும்!
கவி இன்னும் மலரும்!)