PDA

View Full Version : பயணம் மட்டும் தொடரும்....



Nivas.T
16-02-2011, 11:55 AM
பாய்ந்தோடிய நீர்மத்தின்
நுண்மமாயிருன்தே
மற்றவைக்கு அறுதியிட்டு
போட்டியிட்டு
எல்லையோடி
எழும்பிவந்து
உயிர்ப்படைந்து
பிண்டமாகி
இருப்புக்கொண்டேன்
இருட்டினில்
காலம்
இழுத்துத் தள்ளியது
கண்ணீரில் கரைந்து
தொடர்ந்த பயணம்
இன்றும் தொடர
நானறியேன்
இலக்கு எதுவோ?
நிச்சயம் ஆகுவேன்
மீண்டும்
நீர்மமாகவோ
துகளாகவோ
காற்றாகவோ
கனலாகவோ
பயணம் மட்டும் தொடரும்....

முரளிராஜா
16-02-2011, 01:58 PM
பயணம் மட்டுமல்ல உங்கள் கவிதையும் தொடரட்டும்.

உமாமீனா
16-02-2011, 02:01 PM
உலகம் உருண்டை தானே நிவாசு. தொடருங்கள்

Nivas.T
16-02-2011, 03:33 PM
பயணம் மட்டுமல்ல உங்கள் கவிதையும் தொடரட்டும்.


உலகம் உருண்டை தானே நிவாசு. தொடருங்கள்

நன்றி முரளிராஜா
நன்றி உமாமீனா

கீதம்
16-02-2011, 07:30 PM
துளியின் பயணத்தில்
சங்கமிக்கும் கவித்துளிகள்!

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
17-02-2011, 04:36 AM
துளியின் பயணத்தில்
சங்கமிக்கும் கவித்துளிகள்!

பாராட்டுகள் நிவாஸ்.

மிக்க நன்றி கீதம் அவர்களே

ambi
17-02-2011, 05:13 PM
தொடருங்கள் நண்பரே.

Nivas.T
18-02-2011, 05:54 AM
தொடருங்கள் நண்பரே.

நிச்சயமாக

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அம்பி

ஜானகி
18-02-2011, 06:24 AM
ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்து, மீண்டும் அந்தப் புள்ளியையே சென்றடைவதுதான் வாழ்க்கை.... நடுவில் தான் எத்தனை நெளிவு, சுளிவு, ஏற்றம், இறக்கம்....வாழ்க்கையின் சாராம்சமே அதில் தான் இருக்கிறது...இதனை ரசிக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தமே....

Nivas.T
18-02-2011, 06:36 AM
ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்து, மீண்டும் அந்தப் புள்ளியையே சென்றடைவதுதான் வாழ்க்கை.... நடுவில் தான் எத்தனை நெளிவு, சுளிவு, ஏற்றம், இறக்கம்....வாழ்க்கையின் சாராம்சமே அதில் தான் இருக்கிறது...இதனை ரசிக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தமே....

உணமைதான் துன்பமும் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான் என்று உணர்ந்துகொண்டால் வாழ்வே இன்பமயம்

மிக்க நன்றி ஜானகி