PDA

View Full Version : மேடை தேடும் கவிஞன்........



Nanban
02-12-2003, 04:53 PM
மேடை தேடும் கவிஞன்........

வேஷம் கட்டி
ஆடுவதில்
நீ சமத்து.....

நேருக்கு நேராய்
மைதானத்தில்
மோதுவது
மட்டும் தான்
நான்.....

களத்தில்
கோல் அடித்த பொழுது
கை தட்டுவாய் நீ....

மேடையில்
நீ
வரும் பொழுது
கூச்சலிடத் தான்
தெரியும் எனக்கு.....

கண்ணீருடன்
நீ போய் விட்டாய்...

உனக்குத் தெரியாது -
இன்று
நான் கண்ணீருடன்
மேடைகளைத் தேடுவது......

இளசு
02-12-2003, 09:37 PM
பாராட்டுகள் நண்பனே.

உத்வேகம் தந்து உயரவைத்த
காதலியைத் தேடுகிறீர்களா?
மணமேடை வராத அவளை
மனமேடையில் தேடுங்கள்..

Nanban
03-12-2003, 04:08 AM
மணமேடையில் காதலியைத் தேடவா?

கண்டாலும், கண்டு கொள்ளாமல் இருப்பதே, நல்லது..........

rambal
08-04-2004, 05:08 PM
நன்றி நண்பன் அவர்களே..

இந்தக் கவிதை தரும் பொருளை நீங்கள் இந்தக் கவிதையைப் பதிந்த அன்றே புரிந்தேன்..

விளக்கிச் சொல்ல ஏனோ தயக்கம்..

நீங்களே மறந்து போயிருக்கும் இந்தக் கவிதையை தூசு தட்டி
எடுத்தமைக்காக மன்னிக்கவும்..

Nanban
10-04-2004, 04:01 PM
மன்னிப்பது எதற்கு?

தூசு தட்டி
தும்ம வைத்தீர்
சில நினைவுகளைத்
தட்டி எழுப்பி.....

தும்முவதால்
சொல்வார்கள்
யாரோ நினைப்பதாக....

நன்றி....