PDA

View Full Version : மூன்றுகால் முயல்கள்கீதம்
15-02-2011, 11:32 PM
தற்செயலாகவோ, திட்டமிடப்பட்டோ
நிகழும் நிகழ்வுகளுக்கெல்லாம்
மூலகாரணமொன்று இருந்தேயாகவேண்டுமென்கிற
உன் தீவிர நம்பிக்கையை மறுதலிக்க
என்னிடம் காரணம் எதுவுமில்லை.

நீ பற்றிய மூலகாரணத்தின்
மூலாதாரம் பற்றி மட்டுமே
பிசிர் தட்டிய பேதலிப்புகள் என்னிடம்!

காரணங்களைக் கண்டறிவதைக் கைவிட்டு
நீயாகவே அர்த்தமற்ற யூகங்களை விதைக்கிறாய்!
முன்னதினும் பின்னது வெகு எளிதாய்
கைவருகிறது உனக்கு!
விதைத்த யூகங்களுக்கு
உன் விவேகமற்ற விவரணைகளை
ஊட்டி ஊட்டி விருட்சமாக்குகிறாய்!

ஆணித்தரமான நம்பிக்கையோடு
ஆலமரமென கிளைத்து வளர்ந்து
தன்னை நிலைநிறுத்த முயலும் வேளையில்....
பரிதவிப்புடன் எடுத்தியம்பப்படும்
பலதரப்பட்ட நிதர்சனங்களை
பரிசீலிக்கவும் நீ தயாராயில்லை.

தாறுமாறாய்ப் பயணிக்கும்
உன் மனதின் தறிகெட்டப் போக்கைத்
திசை திருப்பும் முயற்சிகள் யாவும்
முறிந்த பாய்மரமென
பயனற்று வீழ்கின்றன.

குறைகூறும் உன் விநோதப்போக்கை.....
குரோதமிகுந்த குதர்க்கத்தை....
வீணில் சுமத்தப்படும் பழிகளை....
வெறுப்பு மேலிட வேடிக்கை பார்த்தபடி
விரக்தியுடன் வீற்றிருக்கும் என்னையும்
உனக்காதரவாய் ஈர்க்க முனைகிறாய்!

நீ பிடித்த முயல்களுக்கு
மூன்றுகாலென்பதை நிரூபிப்பதற்காகவே
ஒற்றைக்காலொடித்து
முடமாக்கிக் கூண்டிலடைக்கிறாய்!

உன் அறிவீனத்தை காணச்சகியாது
உன் காரண கற்பிதங்களை
கடுகளவும் ஆட்சேபணையின்றி ஏற்கிறேன்,
கையறு நிலை காரணமாய்!

இதைக் கண்டுணரும் சாமர்த்தியமற்று
இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே
கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!

கௌதமன்
16-02-2011, 04:30 AM
தற்செயலாகவோ, திட்டமிடப்பட்டோ
நிகழும் நிகழ்வுகளுக்கெல்லாம்
மூலகாரணமொன்று இருந்தேயாகவேண்டுமென்கிற
உன் தீவிர நம்பிக்கையை மறுதலிக்க
என்னிடம் காரணம் எதுவுமில்லை.வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கும், ஆழிப்பேரலையின் கொந்தளிப்புக்கும் முடிச்சுப்போடும் கேயாஸ் விதி, பிரபஞ்ச நிகழ்வுகளை இணைப்பதாக பௌதிகலாளர்கள் முன்வைக்கும் ஸ்ட்ரிங் தியரி, ஐன்ஸ்டீன் விவரிக்கும் காலத்தையும் - வெளியையும் இணைக்கும் இழை என்று விஞ்ஞானமும், தன் பாணியில் நிகழ்வுகளுக்கு காரணம் கற்பிக்க முயல்கிறது.

தலைசுற்ற வைக்கும் பௌதிக சமன்பாடுகளும், தேற்றங்களும் புராணத் தொன்மங்களைப் போல் நம்ப வைக்கப் படுகிறது. சில சமயம் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. நாம் வாழும் காலத்திலேயே உண்மை உணர்ந்து கொள்ளப்படுமா?

கீதம்
16-02-2011, 06:01 AM
வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கும், ஆழிப்பேரலையின் கொந்தளிப்புக்கும் முடிச்சுப்போடும் கேயாஸ் விதி, பிரபஞ்ச நிகழ்வுகளை இணைப்பதாக பௌதிகலாளர்கள் முன்வைக்கும் ஸ்ட்ரிங் தியரி, ஐன்ஸ்டீன் விவரிக்கும் காலத்தையும் - வெளியையும் இணைக்கும் இழை என்று விஞ்ஞானமும், தன் பாணியில் நிகழ்வுகளுக்கு காரணம் கற்பிக்க முயல்கிறது.

தலைசுற்ற வைக்கும் பௌதிக சமன்பாடுகளும், தேற்றங்களும் புராணத் தொன்மங்களைப் போல் நம்ப வைக்கப் படுகிறது. சில சமயம் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. நாம் வாழும் காலத்திலேயே உண்மை உணர்ந்து கொள்ளப்படுமா?

நாம் வாழும் காலத்திலேயே உண்மை அறியப்படவேண்டும் என்று விரும்புகிறோம். அப்படியான முயற்சியில் சில உண்மைகளும் அறியப்படலாம். அவற்றை உண்மையென்றே நம் வாழ்நாளில் நம்பிக்கை கொள்கிறோம். இன்று நாம் கண்டறிந்த, நம்பிய உண்மைகள் யாவும் பின்னொருநாள் பொய்யாக்கப்படுகின்றன, அப்போது சில உண்மைகள் கண்டறியப்படுகின்றன....தொடரும் நிகழ்வுகள்!

பின்னூட்டத்துக்கு நன்றி கெளதமன். உங்கள் அளவுக்கு எனக்கு அறிவியல் அறிவில்லை. வாழ்க்கைச் சிக்கலுக்கு வழிதேடுகிறேன் நான்! நீங்களோ பிரபஞ்சச் சிக்கலுக்கு பதில் தேடுகிறீர்கள்!

ராஜாராம்
16-02-2011, 07:32 AM
நாம் வாழும் காலத்திலேயே உண்மை அறியப்படவேண்டும் என்று விரும்புகிறோம். அப்படியான முயற்சியில் சில உண்மைகளும் அறியப்படலாம். அவற்றை உண்மையென்றே நம் வாழ்நாளில் நம்பிக்கை கொள்கிறோம். இன்று நாம் கண்டறிந்த, நம்பிய உண்மைகள் யாவும் பின்னொருநாள் பொய்யாக்கப்படுகின்றன, அப்போது சில உண்மைகள் கண்டறியப்படுகின்றன....தொடரும் நிகழ்வுகள்!

அருமையான அற்புதமான படைப்பு,,....பாராட்டுக்கள் :icon_b:

முரளிராஜா
16-02-2011, 09:07 AM
உணர்ந்து படிக்க வேண்டிய கவிதை, வாழ்த்துக்கள்

கீதம்
19-02-2011, 10:33 AM
அருமையான அற்புதமான படைப்பு,,....பாராட்டுக்கள் :icon_b:

நன்றி ராஜாராம்.

கீதம்
19-02-2011, 10:34 AM
உணர்ந்து படிக்க வேண்டிய கவிதை, வாழ்த்துக்கள்

நன்றி முரளிராஜா.

கலையரசி
19-02-2011, 10:49 AM
இப்படிப்பட்ட மனிதர்கள் அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பதைத் தான் ’அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்ற பேச்சு வழக்கு நீரூபிக்கிறது.
இப்படிப்பட்ட மனிதர்களிடம் பேசிப்பயனில்லை. வேறு வழியில்லை, வாய் மூடி மெளனமாய் இருப்பதைத் தவிர!
வீணில் சுமத்தப்படும் பழிகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளும் நபரின் உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்தும் கவிதை. பாராட்டுக்கள் கீதம்!

உமாமீனா
19-02-2011, 11:02 AM
தற்செயலாகவோ, திட்டமிடப்பட்டோ
நிகழும் நிகழ்வுகளுக்கெல்லாம்
மூலகாரணமொன்று இருந்தேயாகவேண்டுமென்கிற
உன் தீவிர நம்பிக்கையை மறுதலிக்க
என்னிடம் காரணம் எதுவுமில்லை.

நீ பிடித்த முயல்களுக்கு
மூன்றுகாலென்பதை நிரூபிப்பதற்காகவே
ஒற்றைக்காலொடித்து
முடமாக்கிக் கூண்டிலடைக்கிறாய்!
!

இதை விட வேறு என்ன வேணும் நிகழ காலத்தில் சில பல விசயங்களை ஒப்பிடுகையில்

கீதம்
26-02-2011, 10:22 AM
இப்படிப்பட்ட மனிதர்கள் அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பதைத் தான் ’அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்ற பேச்சு வழக்கு நீரூபிக்கிறது.
இப்படிப்பட்ட மனிதர்களிடம் பேசிப்பயனில்லை. வேறு வழியில்லை, வாய் மூடி மெளனமாய் இருப்பதைத் தவிர!
வீணில் சுமத்தப்படும் பழிகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ளும் நபரின் உணர்ச்சிகளை நன்கு வெளிப்படுத்தும் கவிதை. பாராட்டுக்கள் கீதம்!

விமர்சனப்பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா.

கீதம்
26-02-2011, 10:23 AM
இதை விட வேறு என்ன வேணும் நிகழ காலத்தில் சில பல விசயங்களை ஒப்பிடுகையில்

பின்னூட்டத்துக்கு நன்றி உமாமீனா அவர்களே.

ஜானகி
26-02-2011, 11:37 AM
குட்டக் குட்டக் குனிகிறோமா....?

குனியக் குனியக் குட்டுகிறார்களா....?

எது எப்படியோ....வட்டமான சுழலில்.... சிக்கலில்.... நாம்.....!

நிமிர்வதும், பதிலடி கொடுப்பதும் அவரவர் சாமர்த்தியம்....

Nivas.T
26-02-2011, 11:44 AM
பழகிய பழக்கத்திற்காக சிலரின் குறைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் கரணம் சூழ்நிலைக் கைதியாகிறோம்

இப்படிப் பட்டவர்களுக்கு நன்றி சொல்வது கடமை நமக்கு சகிப்புத்தன்மையை வளர்ப்பதினால்

நல்ல எண்ணோட்டம்
கருத்தான கவிதைங்க

கீதம்
01-03-2011, 10:58 PM
குட்டக் குட்டக் குனிகிறோமா....?

குனியக் குனியக் குட்டுகிறார்களா....?

எது எப்படியோ....வட்டமான சுழலில்.... சிக்கலில்.... நாம்.....!

நிமிர்வதும், பதிலடி கொடுப்பதும் அவரவர் சாமர்த்தியம்....

பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
01-03-2011, 10:59 PM
பழகிய பழக்கத்திற்காக சிலரின் குறைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் கரணம் சூழ்நிலைக் கைதியாகிறோம்

இப்படிப் பட்டவர்களுக்கு நன்றி சொல்வது கடமை நமக்கு சகிப்புத்தன்மையை வளர்ப்பதினால்

நல்ல எண்ணோட்டம்
கருத்தான கவிதைங்க

மாறுபட்ட கண்ணோட்டம். நன்றி நிவாஸ்.

ஷீ-நிசி
06-03-2011, 01:34 AM
குட்டக் குட்டக் குனிகிறோமா....?

குனியக் குனியக் குட்டுகிறார்களா....?

எது எப்படியோ....வட்டமான சுழலில்.... சிக்கலில்.... நாம்.....!

நிமிர்வதும், பதிலடி கொடுப்பதும் அவரவர் சாமர்த்தியம்....

இது யாரோ யாருக்கோ சொன்னது போல இருக்கே.... :)

கவிதைகூட தற்கால நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாய் தோன்றுகிறது..

கீதம் வாழ்த்துக்கள்....

கீதம்
07-03-2011, 06:54 AM
இது யாரோ யாருக்கோ சொன்னது போல இருக்கே.... :)

கவிதைகூட தற்கால நிகழ்வுகளுக்கும் பொருந்துவதாய் தோன்றுகிறது..

கீதம் வாழ்த்துக்கள்....

நன்றி ஷீ-நிசி அவர்களே.

தாமரை
07-03-2011, 07:09 AM
:lachen001::lachen001::lachen001:

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே!!!

கீதம்
07-03-2011, 07:14 AM
:lachen001::lachen001::lachen001:

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே!!!

அப்போ அது நீங்கதானா?:)

தாமரை
07-03-2011, 08:13 AM
அப்போ அது நீங்கதானா?:)

அப்போ மட்டுமில்லை.. இப்பவும்தான்!!!:lachen001:

கீதம்
07-03-2011, 10:54 PM
அப்போ மட்டுமில்லை.. இப்பவும்தான்!!!:lachen001:

அப்படியென்றால் உங்களிடம் நிறைய மூன்றுகால் முயல்கள் இருக்கக்கூடும். அதில் எத்தனைக்குப் பிறவிப்பயன் கிட்டியதோ? :lachen001:

அக்னி
09-03-2011, 11:50 AM
தெரியாதவன்/ள்
எனச் சீண்டும்போதுதான்
இந்த் மூன்றுகால் முயல்
நான்குகால் பாய்ச்சலில்
நமக்குள் வந்துவிடுகின்றது.

சீண்டல்கள்
பிடித்தவர், பிடிக்காதவரென
யாரிடமிருந்து தூண்டப்பட்டாலும்
இந்த முயல்
நமக்குட் திரியத் தொடங்கிவிடும்.

தெரிந்தே, புரிந்தே
எதிர்க்கின்றோம்..,
எதற்கெனத்
தெரியாமல், புரியாமல்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
என்பது பிடிவாதம்...
இருந்துவிட்டுப் போகட்டும்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
ஆக்குவது வக்கிரம்...
வேண்டாமே...

வாழ்க்கைத் தேடலில்,
மூன்றுகால் முயல் முடிச்சுப்போடும்...

விஞ்ஞான, பிரபஞ்சத் தேடலில்
மூன்றுகால் முயல் முடிச்சவுக்கும்...

எதுவுமே உண்மைதான் பொய்யாகும்வரை...
எதுவுமே பொய்தான் உண்மையாகும்வரை...

பாராட்டு கீதம்+அக்காவுக்கு...

கீதம்
15-03-2011, 12:17 AM
தெரியாதவன்/ள்
எனச் சீண்டும்போதுதான்
இந்த் மூன்றுகால் முயல்
நான்குகால் பாய்ச்சலில்
நமக்குள் வந்துவிடுகின்றது.

சீண்டல்கள்
பிடித்தவர், பிடிக்காதவரென
யாரிடமிருந்து தூண்டப்பட்டாலும்
இந்த முயல்
நமக்குட் திரியத் தொடங்கிவிடும்.

தெரிந்தே, புரிந்தே
எதிர்க்கின்றோம்..,
எதற்கெனத்
தெரியாமல், புரியாமல்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
என்பது பிடிவாதம்...
இருந்துவிட்டுப் போகட்டும்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
ஆக்குவது வக்கிரம்...
வேண்டாமே...

வாழ்க்கைத் தேடலில்,
மூன்றுகால் முயல் முடிச்சுப்போடும்...

விஞ்ஞான, பிரபஞ்சத் தேடலில்
மூன்றுகால் முயல் முடிச்சவுக்கும்...

எதுவுமே உண்மைதான் பொய்யாகும்வரை...
எதுவுமே பொய்தான் உண்மையாகும்வரை...

பாராட்டு கீதம்+அக்காவுக்கு...

உங்கள் அழகிய அழுத்தமான பின்னூட்டத்துக்காகவே நிறைய எழுதலாம் போலுள்ளது, அக்னி. ரசிக்கச் செய்த வரிகளுக்கு என் நன்றி.